Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தூக்குத்தண்டனை : நிறுத்த இரண்டு தெரிவுகள் கைவசம்

Featured Replies

தூக்குத்தண்டனை விதிப்பதற்கு இன்றிலிருந்து இரண்டு வாரங்கள்! நிறுத்த இரண்டு தெரிவுகள் கைவசம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் எதிர்வரும் செப்டம்பர் 09ம் திகதி வெள்ளிக்கிழமை தூக்கிலிடப்படுவர் என வேலூர்ச் சிறை அதிகாரிகள் அவர்களிற்கு நேரடியாத் தெரிவித்துள்ளனர்.

வேலூர்ச்சிறைச்சாலை ஜனாதிபதியின் ஆணையைப் பெற்றுள்ளது. எனவெ அவர்கள் தூக்குத் தண்டனைக்கு தேவையான ஆயத்தங்களைச் செய்வதற்கான “கறுப்புப் பிடிவிராந்து” என்ற செயற்பாட்டில் ஈடுபடுவர் என பாதுகாப்புத்துறை அதிகாரியொருவர் ஊடகமொன்றிற்குத் தெரிவித்துள்ளார்.

இருந்தும் தற்போது இவர்களிற்கு இரண்டு தெரிவுகள் கைவசம் உள்ளன.

முதலாவதாக தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராமை அணுகி சட்ட மன்றத்தின் உதவியை இவ்விவகாரத்தில் நாடுவது.

மற்றையது கருணை மனுச் செய்து ஜனாதிபதி 11 ஆண்டுகளின் பின் அதனை நிராகரித்தது செல்லுபடியற்றது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வது என்பதாகும்.

இக் கருணை மனு 11 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்ட பொழுதில் நாண்கு ஜனாதிபதிகள் பதிவியிலிருந்திருக்கிறார்கள். எனவே எதற்காக இவ்வளவு காலம் இந்த மனுவிற்குத் தேவைப்பட்டது என்பது ஒரு நியாயமான விவாதப் பொருளாகக் காட்டப்படும் இடத்தே இந்த வழக்கை விசாரிக்க சென்னை நீதிமன்றம் முன்வரலாம்.

முன்னரும் உச்சநீதிமன்றம் இவர்களின் மனுக்களை இரத்து செய்த போது ஒக்டோபர் 05, 1999ம் திகதி இவர்கள் மூவரும் தூக்கிலிடப்படுவதற்கான திகதியாக சிறைச்சாலையால் நிர்ணயிமாகியிருந்தது. எனினும் ஜனாதிபதிக்கு கருணை மனுச் செய்யப்பட்டதையடுத்து ஜனாதிபதியின் முடிவு வரை அது இரத்து செய்யப்பட்டது.

1999ம் ஆண்டு இவர்களின் மரண தண்டனையை நிறுத்தக் கோரும் நடவடிக்கைகளிற்காக இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் மத்தியூஸ் பெர்னான்டஸ் மற்றும் பழ. நெடுமாறன் தலைமையில் 26 பேர் கொண்ட குழுவொன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

அக்குழுவின் செயற்பாட்டிற்காக தமிழகத்திலுள்ள தமிழுணர்வு மிக்க பெண்கள் தங்கள் நகைகளையே அன்பளிப்பாக அப்போது வழங்கியிருந்தனர். இருந்தும் தெரியாத சில காரணங்களிற்காக மேற்படி குழு செயலற்றுப் போய்விட்டது.

தற்போது சென்னை உச்சநீதிமன்றத்தில் ஜனாதிபதியின் முடிவையெதிர்த்து வழக்குத் தாக்கல் செய்யும் அனுகூலம் இருந்தால் அதற்கான குழுவொன்றை பாரதிராஜா, சீமான், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் இணைந்து ஓரிரு நாட்களிற்குள் அமைப்பதே சாலச் சிறந்த முடிவாகும்.

அதேவேளை தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இது தொடர்பான சட்டமன்றத் தீர்மானத்திற்காக அணுகுவது அவரோடிணைந்த கட்சித் தலைவர்களின் கடமையாகும்.

http://www.facebook.com/?sk=lf#!/notes/suresh-kumar/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95/1897282801797

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது தெரிவிக்கு சில வேளை சட்டமன்றம் பின் வாங்கினாலும்,

இரண்டாவது தெரிவு நியாயமாக வெல்லக் கூடிய சந்தர்ப்பம் உள்ளது.

இந்தியச் சட்டவல்லுனர்கள்தான் சரியான வழியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அவர்களின் பூரண உதவியினைத் தமிழுணவாளர்கள் நாடுதலே தற்போதைய நிலையில் சரியானது என நான் கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அகூதா இணைப்பிற்கு, வக்கில்கள் போராட்டத்தில் குதித்துள்ளார்கள், இவர்கள் மூவருக்கும் நல்ல முடிவு கிட்டும்

  • தொடங்கியவர்

முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோரின் தூக்குத் தண்டனைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை மனுத்தாக்கல்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், பேரறிவாளன் மற்றும் சாந்தன் ஆகிய மூவரையும் காப்பாற்ற சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மூவருக்கும் எதிர்வரும் 9ஆம் திகதி தூக்கு தண்டனை விதிக்கப்படும் என்று அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் வேலூர் சிறைச்சாலையில் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், இம்மூவரின் சார்பில் வாதாடி வரும் வழக்குரைஞர் புகழேந்தி, தூக்குத் தண்டனைக்கு எதிரான தடைக் கோரிக்கை மனுவுடன் ஜனாதிபதி கருணை மனுவை நிராகரித்ததை எதிர்த்து நாளை (29.08.11) சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவ்வழக்கில் மூத்த வழக்குரைஞர் ராம் ஜெத்மலானி நீதிமன்றத்தில் சமூகமளித்து வாதாடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

'தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கருணை வைத்தால் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை இரத்துச் செய்ய முடியும். அதற்கான அதிகாரம் அவருக்கு இருக்கின்றது.

தங்களின் தூக்குத் தண்டனையை இரத்துச் செய்யுமாறு பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் வேலூர் மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளர் மூலமாக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மனு அனுப்பியுள்ளனர்.

தூக்குத் தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் இம்மூவரும் தங்கள் உயிரைக் காப்பாற்ற முதலமைச்சர் ஜெயலலிதாவை தான் நம்பியுள்ளனர். இந்திய ஜனாதிபதியால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பிறகும் கூட, தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க அரசியல் சட்டத்தின் 161வது பிரிவு மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கிறது.

அதன்படி முதலமைச்சர் ஜெயலலிதா தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பதற்கு அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்து அதை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பலாம்.

இதற்கு முன்னரும் இந்திய ஜனாதிபதி கருணை மனுவை நிராகரித்த பிறகும் கூட மாநில அரசுகள் தூக்குத் தண்டனையை இரத்துச் செய்துள்ளது.

கேரளாவைச் சேர்ந்த பாலன் என்பவரின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பிறகு அவரது தூக்குத் தண்டனையை மாநில அரசு ஆயுள் தண்டனையாக குறைத்தது. அப்போது வி.ஆர்.கிருஷ்ண அய்யர் சட்ட அமைச்சராக இருந்தார்.

பேரறிவாளன், முருகன், சாந்தனின் அனுப்பி வைத்த மனு தொடர்பில் தமிழக அரசு எத்தகைய நடவடிக்கையை எடுக்கும் எனத் தெரியாததால், அவர்களின் தூக்குத் தண்டனையை நிறுத்தக் கோரி நாளை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்படவுள்ளது.

இம்மூவரின் கருணை மனுக்களை நிராகரிக்க இந்திய ஜனாதிபதி நீண்ட கால அவகாசம் எடுத்துக் கொண்டதைக் காரணமாகக் முன்வைத்து இம்மனு தாக்கல் செய்யப்படவுள்ளது.

இந்திய ஜனாதிபதி கருணை மனுக்களை நிராகரிக்க இரு ஆண்டுகளுக்கு மேல் காலஅவகாசம் எடுத்தால் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் தூக்குத் தண்டனையை குறைத்தமைக்கு முன் உதாரணங்கள் உள்ளன.

1965ஆம் ஆண்டு அப்போதைய பஞ்சாப் முதல்வரை கொலை செய்த வழக்கில் தயா சிங்கிற்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவரது கருணை மனு இரண்டறை ஆண்டுகள் கழித்து நிராகரிக்கப்பட்டது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்திய ஜனாதிபதியின் உத்தரவை இரத்துச் செய்து தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. அத்துடன், நீண்ட காலத்திற்கு பின்னர் கருணை மனு நிராகரிக்கப்பட்ட ஒருவரின் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற சமீபத்தில் கவுகாத்தி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

ஆகையால், இம்மூவரின் தூக்குத் தண்டனையைக் குறைக்கும் அதிகாரம் சென்னை உயர் நீதிமன்றத்திற்கும் உள்ளது. இது தொடர்பில் இம்மூவரும் நாளை மனுத் தாக்கல் செய்தால் சிறைச்சாலை அதிகாரிகள் அவர்களின் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற முடியாது' என வழக்குரைஞர் புகழேந்தி மேலும் தெரிவித்துள்ளார்.

http://ponguthamil.c...95-6D6F52ECCEF7}

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

ஆரியரான ஜெத்மலானிய கூப்பிடாது நாம திராவிடர்களுக்கு இழுக்கு என்று ஒரு திராவிட கழக கோஸ்டி அதுக்குள்ள அலையுதுகள்.. இவனுக பி.ஏ பி.எல் படிச்சிருகாணுவ இல்ல.. வக்கீல் தொழில் செய்யலாமே.. அப்படியே இவனுங்க கோர்ட் படியேறிட்டாலும் .. கண்டிப்பா அடிச்சி சொல்லலாம் இவனுங்க ஆஜாராகிற கேசு ஊத்திக்கும்..

டிஸ்கி:

சட்டத்தரணி வைக்கோவே இது சிக்கலான விடயம் உயிர் சம்ப்ந்தபட்ட விடயம் என ஒதுங்கி இருக்கார்..மழைக்கு கூட ஒதுங்க கோர்ட்பக்கம் செல்லாதவனுங்க. ரவுசு பெரிய ரவுசாக இருக்குப்பா.. <_< <_<

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.