Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்துமாக்கடலில் சீனா - தென்சீனக் கடலில் இந்தியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

China-india.jpg

[ புதன்கிழமை, 21 செப்ரெம்பர் 2011, 11:15 GMT ] [ நித்தியபாரதி ]

மிகப் பெறுமதி மிக்கதும் உலகின் முக்கியத்துவம் மிக்க கப்பல் பாதைகள் சிலவற்றைக் கொண்டுள்ளதுமான தென்சீனக்கடலில் இந்தியா தற்போது hydrocarbon ஆய்வை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முரண்பாட்டைத் தோற்றுவித்துள்ளது.

இவ்வாறு Time சஞ்சிகையின் இணையத்தளத்தில் ISHAAN THAROOR எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

அதன் முழுவிபரமாவது,

கடந்தவாரம் முக்கிய சர்ச்சையொன்று உலகின் கவனத்தை பெற்றிருந்தது.

அதாவது, தென் சீனக் கடலில் hydrocarbon ஆய்வை மேற்கொள்வதற்கான உரிமைகள் தொடர்பாக இந்திய அரசிற்குச் சொந்தமான எண்ணெய் மற்றும் இயற்கை வாயு கூட்டுத்தாபனமானது வியட்நாம் அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடாத்தியுள்ளது தொடர்பான செய்திகள் தற்போது கசிந்துள்ளன.

இவ்விரு நாடுகளும் பரஸ்பரம் தமது நாடுகளின் பொருளாதாரத்தில் அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்காகவே இவ்வாறானதொரு பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதாகவே பெரும்பாலான உலக நாடுகள் கருதுகின்றன.

ஆறு நாடுகளால் பகுதியளவில் உரிமை கோரப்படுகின்றதும் ஒட்டு மொத்தமாக சீனாவால் கட்டுப்படுத்தப்படுகின்றதுமான தென் சீனக்கடலில் எண்ணெய் வள நிறுவனம் ஒன்று தனக்கான சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் அதேவேளையில் ஏனைய பெரும்பாலான நாடுகள் பூகோள-அரசியல் நிலைப்பாடை மட்டுமே கவனத்திற் கொள்கின்றனர்.

சீனா, வியட்நாம் ஆகிய இருநாடுகளும் தென்சீனக் கடல் தொடர்பான பிராந்திய அமைவைப் பெற்றுக் கொள்வதிலும் இக்கடலின் மையப்பகுதியில் பெருமளவில் அமைந்துள்ள தீவுக்கூட்டங்களை உரிமை கோருவதிலும் தமக்கிடையே போட்டியிடுகின்றன.

சீனா மற்றும் வியட்நாம் ஆகிய இரு நாடுகளுக்கும் சொந்தமான படகுகள் இந்தக் கடலில் பயணிப்பது தொடர்பில் நீண்ட காலமாக முரண்பாடுகள் நிலவிவருகின்றன.

சீனாவானது ஆசியாவில் செல்வாக்குச் செலுத்துவதால் பெரும் சவாலை எதிர்கொண்டுள்ள ஒரேயொரு ஆசிய நாடான இந்தியாவானது தற்போது நிலவும் சீன, வியட்நாம் மோதலை மேலும் அதிகரித்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவின் இந்த நடவடிக்கையை எதிர்ப்பதாக, சீனத் தலைமையின் கருத்துக்களை வெளிப்படுத்துகின்ற சீன அரசின் வெளியீடான Global Times இன் ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

"தென் சீனக் கடலில் இந்தியாவானது தனது நடவடிக்கைகளை மேற்கொள்வதானது சீனாவைச் சீண்டும் நடவடிக்கையாக உள்ளது என்பதை இந்தியா தனது கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும். சீன - இந்திய உறவை சீனா மதிக்கின்றது. ஆனால் சீனா தனக்குச் சொந்தமானவற்றை இழக்கத் தயாராக உள்ளது என்பது இதன் கருத்தல்ல..... சீனாவானது தனது எல்லை நாடுகளை அதிகாரப்படுத்துகின்றதா என சில நாடுகள் சந்தேகம் கொண்டபோதிலும் சீனாவானது இது விடயத்தில் நீண்ட காலமாக பொறுமை காத்துள்ளது. இந்ந விடயத்தை எவ்வாறு கையாள்வது என்பது உண்மையில் சீனாவிற்குத் தெரியும்."

ஏகாதிபத்திய காலத்தில் எழுதப்பட்ட தூசி நிறைந்த ஆவணங்கள் மற்றும் வரைபடங்கள் மூலமாக, பீஜிங் மற்றும் கனோய் என்பன தமக்கான கடல்சார் உரிமைகள் தொடர்பாக வலியுறுத்திக் கூறுகின்றன.

தாய்வான், இந்தோனேசியா, பிலிப்பைன், புரூனே மற்றும் மலேசியா ஆகியனவும் தமது நாடுகளுக்கு உள்ள கடல் சார் உரிமைகள் தொடர்பாக உரிமைகோருகின்றன.

ஆனால் மிக ஆழமான மூலோபாய ரீதியில் மிகப் பெறுமதி மிக்கதும் உலகின் முக்கியத்துவம் மிக்க கப்பல் பாதைகள் சிலவற்றைக் கொண்டுள்ளதுமான தென்சீனக்கடலில் தற்போது hydrocarbon ஆய்வை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முரண்பாட்டைத் தோற்றுவித்துள்ளது.

ஆனால் தென்சீனக்கடலானது ஏனைய உலக சக்திகளின் கவனத்தை ஈர்த்துள்ளதென்பது ஆச்சரியப்படத்தக்க விடயமல்ல.

தென் சீனக்கடலில் நிலவும் முரண்பாடுகளைத் தவிர்த்து பாதுகாப்பான அனைத்துலக கப்பற் போக்குவரத்தை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என கடந்த ஆண்டில் அமெரிக்காவின் இராஜாங்கச் செயலர் கிலாரி கிளின்ரன் தெரிவித்தமையானது, தென் சீனக் கடலில் அமெரிக்கர்கள் தமது இராஜதந்திர ரீதியான தலையீட்டை மேற்கொள்ள முனைவதைக் குறிக்கின்றது.

இந்தியாவானது வியட்நாமுடன் பாதுகாப்பு ரீதியான உறவைக் கட்டியெழுப்புகின்றது. இந்தியாவானது வியட்நாமின் துறைமுகங்களில் தமது செல்வாக்கை நிலைநிறுத்தும் பொருட்டு வியட்நாமிற்கு ஒரு தொகுதி நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்கத் தயாராகியுள்ளது.

சீனாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பற் தொகுதியானது வைக்கப்பட்டுள்ள ஹைனான என்ற தீவுடன் வியட்நாமானது நெருக்கத்தை அதிகரிப்பதால் மட்டுமன்றி சீனாவானது வேறு சில காரணங்களாலும் வியட்நாமுடன் முரண்பாட்டைக் கொண்டுள்ளது.

வியட்நாமிற்குச் சொந்தமான கடற்கரையில் தரித்து நின்ற இந்தியாவின் போர்க்கப்பலான Airavat மீது சீனக் கப்பலொன்று முற்றுகையிட முற்பட்டதாக யூலை மாதத்தின் பிற்பகுதியில் வெளியான செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்தியப் போர்க்கப்பலான Airavat வியட்நாமின் Haiphong துறைமுகத்தின் வழமையான செயற்திட்டங்களை தலைமையேற்று நடாத்தியிருந்தது. இதற்கு முதல், சீனக் கடற்படைக் கலங்களுக்கும், வியட்நாமியக் கப்பல்களுக்கும் இடையில் எண்ணெய் ஆய்வு தொடர்பான குழப்பங்கள் நிலவியிருந்தன.

முரண்பாடுகள் இருந்த போதிலும், சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் இமயமலையை ஊடறுத்த எல்லைப் பிரதேசங்களைப் பாதுகாப்பதில் இராணுவமயப்படுத்தப்பட்ட வளங்களைப் பயன்படுத்துவதில் பங்குகொண்டுள்ளன.

ஆனால் இரு நாடுகளுக்கும் இடையில் பல பத்தாண்டுகளாக முறுகல் நிலை நிலவிவருகின்ற போதிலும், தென் சீனக் கடல் தொடர்பான முரண்பாடுகள் இதனை மேலும் வலுப்படுத்தியுள்ளன.

பிரபல ஆசிய எழுத்தாளரான Gwynne Dyer இது தொடர்பாகக் குறிப்பிட்டுள்ளாதவது: "நீங்கள் உண்மையில் விரும்பினால் நீங்கள் தரை ரீதியான தாக்குதலை மேற்கொள்ளலாம். ஆனால் யுத்தம் ஒன்றை பிரகடனப்படுத்துவதென்பது பெரியதொரு தீர்மானமாக உள்ளது. இவ்வாறானதொரு நடவடிக்கைக்குச் செல்வதற்கு முன்னர் எந்தவொரு அதிகாரம் மிக்க அரசாங்கமும் மிக ஆழமாக இது தொடர்பாக யோசித்தே தீர்மானம் எடுக்கும். ஆனால் அந்த அழமான சிந்தனையின் முடிவில் இவ்வாறான பெரியதொரு யுத்தத்திற்குள் செல்வதில்லை என்றே முடிவெடுக்கும். ஆனால் கடல்சார் இராணுவ நகர்வொன்றை மிக எளிதாக மேற்கொள்ள முடியும்"

ஆகவே சீனா- இந்தியாவிற்கு இடையிலான கடல் சார் மோதல்கள் என்பது காலப்போக்கில் சாத்தியமாகலாம். இந்து சமுத்திரத்தைச் சூழ குறிப்பாக இந்தியாவை அண்மித்து சீனாவானது திட்டங்களை மேற்கொள்ளத் தொடங்கியதன் பின்னரே தற்போது இந்தியா தென் சீனக் கடலில் பரீட்சார்த்த ஆய்வொன்றை மேற்கொள்ள முன்வந்துள்ளது.

அனுபவம் மிக்க சில இந்திய ஆய்வாளர்களின் கூற்றுப்படி, சீனாவானது பர்மாவிலிருந்து பாகிஸ்தான் வரை கடல்சார் வளங்களை உருவாக்கியுள்ளதுடன், மூலோபாய ரீதியாக சிறிலங்காவின் அம்பாந்தோட்டையில் ஆழ்கடல் துறைமுகம் ஒன்றை உருவாக்கிவருகின்றது.

லண்டனின் King's College இல் அனைத்துலக விவகாரத்தில் தேர்ச்சி பெற்ற Harsh Pant, இந்தியாவானது சீனா மேற்கொள்வதைப் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

"தென்சீனக் கடல் முழுவதும் தனக்கே சொந்தம் என்கின்ற சீனாவின் இறையாண்மைக் கொள்கையை இந்தியா மறுக்கின்றது. இந்திய மற்றும் அதன் பிராந்திய நலன்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை விளைவிக்கின்ற சீனாவின் பிராந்திய அதிகாரநிலையைத் தடுப்பதற்காக இந்தியாவானது ஏனைய பிராந்திய நாடுகளுடன் தற்போது நம்பகமான மூலோபாய ரீதியான உறவைக் கட்டியெழுப்ப வேண்டும்" என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறானதொரு நிலைப்பாட்டில் சீனாவோ அல்லது இந்தியாவோ தமது சொந்த நலன்களை விட்டுக் கொடுக்க முன்வரமாட்டார்கள். ஆனால் பொருளாதார ரீதியாக இரு நாடுகளும் வெவ்வேறு நாடுகளுடன் கட்டியெழுப்புகின்ற உறவானது சீனாவையும் இந்தியாவையும் முரண்பாட்டு நிலைக்குக் கொண்டு செல்லும்.

இவ்விருநாடுகளும் வெவ்வேறு பிராந்தியங்களில் அயல்நாடுகளுடன் கொண்டுள்ள உறவானது சிக்கலானதாக உள்ளது. உலக சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளதும், அணுவாயுதங்களைக் கொண்டதுமான சீனா, இந்தியா ஆகிய இரு நாடுகளும் மோதிக்கொண்டால் அதனால் ஏற்படவல்ல விளைவானது கணக்கிடமுடியாததாக இருக்கும்.

http://www.puthinapp...?20110921104730

ஆங்கிலத்தில் 'இவ்வாறா யுத்தங்கள் ஆரம்பிக்கும்' என தலைப்பிட்டிருந்தார் எழுத்தாளர்: http://www.yarl.com/...showtopic=91767

ஆசியாவில் இரண்டு வல்லரசுகள் இருக்க முடியாது என்ற சீனாவின் நிலைப்பாடு எதில் முடியும் என கூறமுடியாது. ஆனால், தமிழர்கள் அவர்கள் தலைவர்கள் விழிப்பாக இருந்தால் எமக்கென தேசங்களை உருவாக்கலாம்.

இந்துமாக்கடலில் சீனா - தென்சீனக் கடலில் இந்தியா

நடுக்கடலில் ஈழத்தமிழர்கள் நாம் தத்தலித்துக்கொண்று இருக்கின்றோம் கரை சேற வழி தெரியாமல்

இன்று அமெரிக்கா தாய்வானுக்கு பல நவீன ஆயுதங்களை வழங்க உறுதியளித்துள்ளது. இது சீனாவை மிகுந்த ஆத்திரம் அடைய வைத்துள்ளது.

பல பாதுகாப்பான தொழில்நுட்பங்களை அமெரிக்காவுக்கு தாய்வானே வழங்குகின்றது. அமெரிக்கா சீனாவில் (made in China) செய்த பல இலத்திரனிய உபகரணங்களை வாங்குவதில்லை, பயத்தினால்.

"இந்து சமுத்திரத்தைச் சூழ குறிப்பாக இந்தியாவை அண்மித்து சீனாவானது திட்டங்களை மேற்கொள்ளத் தொடங்கியதன் பின்னரே தற்போது இந்தியா தென் சீனக் கடலில் பரீட்சார்த்த ஆய்வொன்றை மேற்கொள்ள முன்வந்துள்ளது."

இப்படியொரு நிலைக்கு தாமே வித்திட்டவர்கள், இப்போது அதைக் கண்டு பயப்படுவதில் என்ன பயன்?

சீனாவுக்கு செக்!

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நீண்ட காலப் பகை இருக்கிறது. பொருளாதார உடன்பாடுகள் மூலமாகவும் நல்லிணக்கப் பயணங்கள் மூலமாகவும் எவ்வளவுதான் பூசி மெழுகினாலும் அவ்வப்போது இந்தப் பகை தலைதூக்கி விடுகிறது.

இந்தியாவுக்குச் சீனாவின் மீது எவ்வளவு கோபம் இருந்தாலும், பிராந்தியத்தின் பெரியண்ணன் என்பதால் அனுசரித்துப் போய்க் கொண்டிருக்கிறது.

அருணாசலப் பிரதேசத்தைத் தங்களுடைய பகுதி என்று சீனா அறிவித்துக் கொண்டபோது இந்தியாவால் எதிர்ப்பை மட்டுமே பதிவு செய்ய முடிந்தது. காஷ்மீரில் வசிப்பவர்களுக்கு தனித் தாளில் விசா நடைமுறையைக் கொண்டு வந்தபோதும் இந்தியாவால் எதுவும் செய்ய முடியவில்லை.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி கட்டுமானப் பணிகளைச் சீனா மேற்கொண்டு வருகிறது. எல்லைப் பகுதிகளில் அச்சுறுத்தும் வகையில் சாலைகள் போடப்பட்டு வருகின்றன.

காஷ்மீரின் லடாக் பகுதியிலுள்ள டெம்சோக் கிராமத்தில் நடந்து கொண்டிருந்த வேலைவாய்ப்பு உறுதித் திட்டப் பணிகள் சீனாவின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. இவற்றையெல்லாம் இந்தியா கண்டிக்கிறதே தவிர, அதிரடி நடவடிக்கை ஏதும் எடுத்ததாகத் தெரியவில்லை.

இந்தியாவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காகவே, மியான்மர், இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் சீனா நட்பைப் பலப்படுத்திக் கொண்டிருக்கிறது.

இந்த நாடுகளில் துறைமுகங்களை மேம்படுத்துவதாகக் கூறிக்கொண்டு கடலோரங்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க சீனா முயற்சித்து வருகிறது.

இந்திய-பாகிஸ்தான் இடையே போர் நடந்தபோது பாகிஸ்தானுக்கு இலங்கை உதவியதை வரலாறு பதிவு செய்திருக்கிறது. இதனால் சீனாவுக்கு ஆதரவாக இந்த இரு நாடுகளும் களத்தில் இறங்குவது என்பது எதிர்பார்க்கப்படும் ஒன்றுதான். தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் கூடங்குளம், கல்பாக்கம் அணு மின் நிலையங்கள் உள்பட பல முக்கிய இடங்கள் இப்போது சீனாவின் தாக்குதல் எல்லைக்குள் இருக்கின்றன.

இலங்கையின் அம்பணத் தோட்டத்தில் சீனா உருவாக்கியிருக்கும் அதி நவீன துறைமுகம் வெறும் சரக்குப் போக்குவரத்துக்கானது இல்லை என்பதை இந்தியாவும் அறியும். இதுபோல இந்தியாவின் எந்தப் பகுதியையும் தாக்கும் வகையில் சீனா தனது தளங்களை அமைத்திருக்கிறது.

இப்படிப் பல வகையிலும் இந்தியாவின் உள்விவகாரங்களுக்குள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தலையிடும் சீனாவை இந்தியாவால் இதுவரை எதுவும் செய்ய முடியவில்லை. அந்த அளவுக்கு இந்தியாவைச் சீனா மறைமுகமாக மிரட்டி வைத்திருக்கிறது.

சீனாவின் ஆயுத பலத்தைக் கண்டும், அதன் மூலம் உருவாக்கப்பட்ட ராஜதந்திர வலையைக் கண்டும் இந்தியா அஞ்சி வந்திருக்கிறது என்பதை நாம் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். சீனாவுக்கு எதிராகப் பேசும் துணிச்சல் இந்திய ஆட்சியாளர்களில் ஒரு சிலரைத் தவிர வேறு யாருக்கும் இருந்ததில்லை.

ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்றோர் சீனாவுக்கு எதிராகக் கடுமையான கருத்தைத் தெரிவித்தபோது, "ஏன் தேவையில்லாத சர்ச்சையை உருவாக்குகிறீர்கள்' என்று அவர்கள் மீதேதான் குறை கூறப்பட்டது. இதெல்லாம் அச்சத்தின் வெளிப்பாடுதான்.

இப்போது இந்தியாவின் முறை. வியத்நாம் வடிவில் நமது அச்சத்தைப் போக்குவதற்கு ஓர் அரிய வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. தெற்கு சீனக் கடலில் எண்ணெய், எரிவாயு எடுப்பதற்காக அந்த நாட்டுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் மூலம் சீனாவுக்கு அதிர்ச்சியளிக்க இந்தியா துணிந்திருக்கிறது.

இந்தியாவின் எண்ணத்தைப் புரிந்துகொண்ட சீனா, தெற்கு சீனக் கடல் முழுவதும் தங்களுக்கே சொந்தம் என்றும், இங்கு வேறு எந்த நாடும் எண்ணெய் எடுப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடக்கூடாது என்றும் எச்சரித்தது.

ஆனாலும் இந்தியா பின்வாங்கவில்லை. வியத்நாமுடன் ஓஎன்ஜிசி விதேஷ் மற்றும் எஸ்ஸôர் நிறுவனங்கள் செய்து கொண்டிருக்கும் ஒப்பந்தம் சர்வதேச விதிகளுக்கு உள்பட்டது என்று பதிலடி கொடுத்துவிட்டது.

நீண்ட காலமாகவே தெற்கு சீனக்கடலில் அமைதி இல்லை. வியத்நாம், பிலிப்பின்ஸ், புருனை, மலேசியா ஆகிய நாடுகள் தெற்கு சீனக் கடலில் தங்களுக்கும் உரிமை உள்ளது என்று கோருகின்றன. இதனால் சீனாவுடன் அவற்றுக்குப் பகைமை உண்டு. சர்வதேசக் கப்பல்கள் தெற்கு சீனக் கடலைக் கடந்து போகும்போது அவற்றைச் சீனா பல முறை தடுத்து நிறுத்தியிருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு வியத்நாம் சென்று கொண்டிருந்த இந்தியாவின் ஐஎன்எஸ் ஐராவதம் கப்பலையும் சீனா வழிமறித்ததாகக் கூறப்படுகிறது.

சர்வதேசக் கடல் பகுதியில் சீனா தொடர்ந்து அத்துமீறி நடந்து வருவதால், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள்கூட இந்த விவகாரத்தில் தலையிடப் போவதாகக் கூறியுள்ளன.

என்னதான் சீனா தனது ராணுவ, பொருளாதார பலத்தைக் காட்டினாலும் தெற்கு சீனக் கடல் விவகாரத்தில் அந்நாட்டுக்குச் சாதகமான நிலைமை இல்லை.

வியத்நாமில் எண்ணெய் எடுக்கும் திட்டம் என்பது வெறும் பொருளாதாரம் சார்ந்த விஷயம் கிடையாது. அதனுள் பாதுகாப்பு ராஜதந்திரங்கள் அடங்கியிருக்கின்றன. சாதகமான சூழல் கிடைத்தும் அதைச் சீனாவின் பாணியில் இந்தியா பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா உதவ முடியாமல் போனதற்கு முக்கிய காரணம் அங்கு சீனாவின் ஆதிக்கம் இருப்பதுதான் என்று கூறப்பட்டு வருகிறது.

தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா இறங்கினால் இலங்கைக்கு ஆதரவாகச் சீனாவும் களத்தில் இறங்கும். இந்தியாவைத் தாக்குவதற்கு இலங்கையைச் சீனா நேரடியாகவே பயன்படுத்திக் கொள்ளும் என்று நமது ஆட்சியாளர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

இதுபோன்றதொரு நிலைமைதான் இப்போது தெற்கு சீனக் கடலிலும் ஏற்பட்டிருக்கிறது. இந்த ஒரேயொரு விவகாரத்தை வைத்துக் கொண்டு சீனாவின் அத்துமீறல்களுக்கு எல்லாம் முடிவுகட்டிவிட முடியும் என்று கூற முடியாது.

இருந்தாலும், வியத்நாம், தைவான், பிலிப்பின்ஸ் உள்ளிட்ட நாடுகளின் ஒத்துழைப்புடன் சீனாவை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். அந்த வகையில், மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதப்படும் இலங்கையில், சீனாவின் செல்வாக்கைக் குறைப்பதற்கான முயற்சியில் இதுவே ஒரு தொடக்கமாக இருக்க வேண்டும். சீனாவைக் காட்டி இந்தியாவை மறைமுகமாக மிரட்டும் இலங்கையின் தந்திரத்துக்கு இதுவே முடிவாகவும் இருக்க வேண்டும்...

http://www.dinamani....tion/story.aspx?

Edited by வீணா

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூரில சோத்துக்கு வழியைக் காணம்.. இதில தென்சீனக் கடலில ஆய்வா? :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.