Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“அமெரிக்க நீதிமன்றத்தில் மோதத் தயார்“ – சவால் விடுகிறார் சவீந்திர சில்வா

Featured Replies

[ ஞாயிற்றுக்கிழமை, 25 செப்ரெம்பர் 2011, 01:26 GMT ] [ கார்வண்ணன் ] shavendra%20silva.jpgஅமெரிக்க நீதிமன்றத்தில் தனக்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள வழக்கை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றங்கள் தொடர்பாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக நீதிமன்றத்தில் முன்னிலையாகி பதிலளிக்குமாறு மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு நியுயோர்க்கின் தெற்கு மாவட்டத்தில் உள்ள மன்ஹாட்டன் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அழைப்பாணை அவரது தனிப்பட்ட வதிவிடத்துக்கு (அபாட்மென்ட்) அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது அவர் அங்கிருக்கவில்லை.

வீட்டில் இருந்த ஒருவரே அந்த அழைப்பாணையை பெற்றுக் கொண்டுள்ளார்.

அழைப்பாணை அனுப்பிய அமெரிக்க நீதிமன்றத்துக்கு மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா 21 நாட்களுக்குள் பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே, தன் மீதோ தனது கட்டளையின் கீழ் இருந்தவர்கள் மீதோ சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக உலகின் எந்த நீதிமன்றத்திலும் வழக்கை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா கூறியுள்ளார்.

எவரும் தன் மீது குற்றசாட்டுகளை சுமத்த முடியும் என்றும் அவற்றை எதிர்கொள்ளத் தயாராகவே இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா இது தொடர்பாக நியுயோர்க்கில் தங்கியுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை நேரடியாக சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நியுயோர்க்கில் தங்கியுள்ள நேரம் பார்த்து- அவருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளதாக நியுயோர்க்கில் உள்ள சிறிலங்கா இராஜதந்திரிகள் கூறியுள்ளனர்.

கடந்த வெள்ளியன்று சிறிலங்கா அதிபர் ஐ.நாவில் உரையாற்றுவதற்கு சற்று முன்னதாகவே மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு நியுயோர்க்கில் அளிக்கப்பட்டுள்ள இராஜந்திரப் பாதுகாப்புக் காரணமாக அவரைக் கைது செய்யவோ, தடுத்து வைக்கவோ, அவர் மீது குற்றவியல் வழக்குத் தொடுக்கவோ முடியாது.

ஆனால் குடியியல் நடவடிக்கை எடுக்கபடலாமா என்பது தொடர்பாக தெளிவாகத் தெரியவில்லை.

அதேவேளை, இராஜதந்திரி ஒருவருக்கான பாதுகாப்பு அவர் பணியத்தில் இருக்கும் போதே செல்லுபடியாகும் என்றும், அவர் பணியாற்றும் இடத்துக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டால் அது செல்லுபடியாகாது என்று மனிதஉரிமைகள் சட்டவாளர் அலி பேடன் தெரிவித்துள்ளார்.

இதனாலேயே மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு அவரது வசிப்பிடத்துக்கே அழைப்பாணை அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஐ.நாவுக்கான இராஜதந்திரப் பதவியில் உள்ள ஒருவருக்கு எதிராக அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ள இந்த விவகாரத்தை ஐ.நா பொதுச்செயலரின் பணியகத்திடம் கொண்டு செல்வது குறித்து நியுயோர்க்கில் உள்ள சிறிலங்கா இராஜதந்திரிகள் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு அழைப்பாணை அனுப்புவதை அல்-ஜெசீரா தொலைக்காட்சிக் குழுவினர் படமாகியுள்ளனர்.

இதற்கிடைய இதுபற்றி கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, விடுதலைப் புலிகளின் கொடூரச் செயல்கள் குறித்து அமெரிக்க நீதிமன்றத்தில் விபரிக்க இது நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகக் கூறியுள்ளார்.

கேணல் ரமேஸ் ஒரு மோசமான பயங்கரவாதி என்றும், அவர் சரணடைந்த நூற்றுக்கணக்காக காவல்துறையினரையும், அரந்தலாவவில் பௌத்த பிக்குகளையும், முஸ்லிம் கிராமவாசிகளையும் படுகொலை செய்தவர் என்றும் குற்றம்சாட்டியுள்ள கோத்தாபய ராஜபக்ச, அவரது மனைவியும் இந்தக் கொடூரச் செயல்களில் தொடர்புபட்டிருந்தவர் என்றும் கூறியுள்ளார்.

http://www.puthinappalakai.com/view.php?20110925104753

இது ஒரு சமூக வழக்காகவே தாக்கல் செய்யப்படுள்ளது. இங்கே முக்கிய நோக்கமாக சிங்களம் மீது தொடர் அழுத்தத்தை பிரயோகிப்பதே எனப்படுகின்றது.

இதனாலேயே மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு அவரது வசிப்பிடத்துக்கே அழைப்பாணை அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

எம்மைப்பொறுத்தவரையில் இவர்மீது எந்த வழக்குகளும் தாக்கல் செய்ய தேவை வராது, அவராகவே எல்லாத்தையும் தானாகவே ஒப்புக்கொண்டுவருகிறார்:

இதற்கிடைய இதுபற்றி கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, விடுதலைப் புலிகளின் கொடூரச் செயல்கள் குறித்து அமெரிக்க நீதிமன்றத்தில் விபரிக்க இது நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகக் கூறியுள்ளார்.

[ ஞாயிற்றுக்கிழமை, 25 செப்ரெம்பர் 2011, 01:26 GMT ] [ கார்வண்ணன் ]

இதற்கிடைய இதுபற்றி கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, விடுதலைப் புலிகளின் கொடூரச் செயல்கள் குறித்து அமெரிக்க நீதிமன்றத்தில் விபரிக்க இது நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகக் கூறியுள்ளார்.

http://www.puthinapp...?20110925104753

இது தருஸ்மன் அறிக்கைக்கு பதிலாக ஐ.நாவிற்கு அனுப்பிவைக்கபட்ட "Lies Agreed Upon" ஆக இருக்கமுடியாது. இவர்களின் பதிலை ஐ.நாவே ஏற்றுக்கொள்ளமுடியாத விடயங்கள் உள்ளிருப்பத்தாக கூறிவிட்டது. அமெரிக்க பிரசையான கோபத்தபயாவுக்கு என்ன காத்திருக்கிறது என்பது தெரியும். இருந்தும் சவேந்திர சில்வா நாட்டிற்கு தப்பி ஒடிவராமல் வழக்கை எதிர்கொள்ள பண்ணுகிறார். இதிலிருந்து தான் அமெரிக்கவுக்கு திரும்பி வந்தால் என்ன நடக்கும் என்பதை பரிசோதிக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

25 செப்டம்பர் 2011

மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் அழைப்பாணை

உலகின் எந்தவொரு நீதிமன்ற விhரணையையும் சந்திக்கத் தயார் என ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார்.

தமக்கும், தமது படையணியைச் சேர்ந்த படையினருக்கும் எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பதிலளிக்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நியூயோர்க் மாவட்ட நீதிமன்றில் ஆஜராகுமாறு சவேந்திர சில்வாவிற்கு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சவேந்திர சில்வாவின் தனிப்பட்ட இருப்பிடத்திற்கு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த சந்தர்ப்பத்தில் அவர் வீட்டில் இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

21 நாட்களுக்குள் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சவேந்திரா சில்வா பதிலளிக்க வேண்டுமென அழைப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு நபரினாலும் குற்றச்சாட்டுக்களை சுமத்த முடியும், அவ்வாறான குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நியூயோர்க் விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், சவேந்திரா சில்வா நேரடி ஆலோசனைப் பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தளபதிகளில் ஒருவரான கேணல் ரமேஷின் மனைவியும், புதுக்குடியிருப்பைச் சேர்ந்த சீதாராம் சிவம் என்வரின் மகளும் அமெரிக்க நீதிமன்றில், சவேந்திர சில்வாவிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு நெருக்கடி நிலைமை ஏற்படுத்தும் நோக்கில் இந்தத் தருணத்தில் இவ்வாறான வழக்குகள் தொடுக்கப்டுவதாக இலங்கை இராஜதந்திரிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனிடம் முறைப்பாடு செய்ய இலங்கை இராஜதந்திரிகள் திட்டமிட்டுள்ளனர்.

அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்ட சந்தர்ப்பத்தை அல்ஜசீரா தொலைக்காட்சி ஒளிப்பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை, இந்த வழக்கின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்க நீதிமன்றில் தெளிவுபடுத்த முடியும் என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கேணல் ரமேஸ், ஓர் பாரிய குற்றவாளி எனவும், பாரிய மனித படுகொலையுடன் தொடர்புடையவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

காவல்துறையினர், பௌத்த பிக்குகள், அப்பாவி பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை ரமேஸ் படுகொலை செய்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

24-09-2011 - 18:15

ஐநாவுக்கான இலங்கையின் நிரந்தர துணை வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா, மனித குலத்துக்கு எதிரான குற்றங்களைப் புரிந்துள்ளதாக தெற்கு நியுயோர்க்கிலுள்ள மன்ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சிவில் வழக்கு தொடர்பிலேயே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இறுதிக்கட்டப் போரின் போது படையினரிடம் சரணடைந்த பின்னர் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படும் விடுதலைப் புலிகளின் தளபதிகளின் ஒருவரான கேர்ணல் ரமேஷின் மனைவி இந்த வழக்கைத் தொடுத்துள்ளவர்களில் ஒருவர்.

2009 February 3ம் திகதி புதுக்குடியிருப்பு மருத்துவமனையின் மீது படையினர் மேற்கொண்ட ஷெல் தாக்குதல்களில், அங்கு சிகி்ச்சை பெற்றுவந்த தனது தந்தை கொல்லப்பட்டதாக குற்றஞ்சாட்டும் ஒருவர் இந்த வழக்கை தொடுத்துள்ள இரண்டாவது நபர் ஆவார்.

அமெரிக்காவில் நடைமுறையிலுள்ள Alien Tort Claims Act அதாவது வெளிநாட்டவர்களுக்கான தீங்கியல் இழப்பீட்டுச் சட்டத்தின் படி இழப்பீடு கோரி இந்த சிவில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி விளக்கம்

இந்த வழக்கை விசாரிக்க அமெரிக்க நீதிமன்றத்துக்கு எப்படி அதிகாரம் வருகின்றது என்பதை வழக்கைத் தாக்கல் செய்துள்ள சட்டத்தரணி அலி பெய்தூன் தமிழோசையிடம் விளக்கினார்.

"அமெரிக்க பிரஜை அல்லாத ஒருவர், அமெரிக்காவுக்கு வெளியில் நடந்த தீங்கியல் சம்பவத்துக்காக வழக்குத் தாக்கல் செய்ய இந்த சட்டத்தின்படி இடமிருக்கிறது.இந்தசட்டத்தின்படி, வழக்கொன்றின் எதிராளி, அமெரிக்காவில் இருப்பாரானால் அவருக்கு எதிரான வழக்குக்கு அமெரிக்க நீதிமன்றத்துக்கு நியாயாயாதிக்கம் - அதாவது வழக்கை விசாரிப்பதற்கான அதிகாரம் இருக்கிறது." என்று அவர் கூறினார்.

இறுதிக்கட்டப் போர்க்காலத்தில், அங்கு பொதுமக்களுக்கு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இராணுவத்தினரை மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா வழிநடத்தியமைக்கான ஆதாரங்கள் இருப்பதாக கூறிய சட்டத்தரணி அவற்றை நீதிமன்றத்தில் சமர்பிக்க இருப்பதாகவும் சட்டத்தரணி அலி பெய்தூன் கூறினார்.

தமது சிவில் வழக்கு மூலம் இழப்பீட்டை கோருவதற்கு மட்டுமே வசதி இருக்கின்றது என்ற நிலையில், மனித குலத்துக்கு எதிரான குற்றச்செயல்கள் தொடர்பான நடவடிக்கையை அமெரிக்க அரசு மட்டுமே எடுக்கமுடியும் என்றும், அதற்காக அரச திணைக்களங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் சட்டத்தரணி அலி பெய்தூன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

வழக்கில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பற்றிய தனது பதிலை ஷவேந்திர சில்வா நீதிமன்றத்துக்கு அறிவிக்க வேண்டுமென்று அழைப்பாணையில் கோரப்பட்டுள்ளது. நன்றி பீபீசி

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/67706/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.