Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொருளாதார வீழ்ச்சிக்குத் தயாராகிறதா இந்தியா?

Featured Replies

inflation_new.jpgநாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி (ஜி.டி.பி.) 7.7 சதமாக வீழ்ச்சி. கடந்த 18 மாதங்களில் மிகக் குறைந்த அளவு இது.

இந்தக் காலாண்டுக்கான தொழில் துறை வளர்ச்சி 3.3 சதமாகக் குறைவு. கடந்த 21 மாதங்களில் மிகக் குறைந்த அளவு இது.

கடந்த 17-ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தின்படி, உணவுப் பணவீக்கம் 9.13 சதவீதமாக அதிகரித்துள்ளது என்பது இன்றைய தகவல். பணவீக்கம் இரட்டை இலக்கத்தைத் தொடப்போவது தவிர்க்க முடியாததாகிறது.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு. கடந்த இரண்டு ஆண்டுகளில் மோசமான சரிவு இது.

- இப்படிப்பட்ட ஒரு சூழலில், ஒரு நிதியமைச்சர், "நாட்டின் பொருளாதாரத்தில் வளர்ச்சிக்கான நல்ல அறிகுறிகள் தோன்றுகின்றன," என்று சொன்னால் எப்படி இருக்கும்?

அண்மையில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி செய்தியாளர்களிடம் பேசியபோது இப்படித்தான் சொன்னார்.

உலகிலேயே பெட்ரோலை அதிக விலைக்கு விற்கும் நாடுகளில் ஒன்று இந்தியா. ஏறத்தாழ 98 நாடுகளில் இந்தியாவைவிட பெட்ரோல் விலை குறைவு.

இந்த ஆண்டில் 5-வது முறையாக, அண்மையில் பெட்ரோல் விலையை உயர்த்தியது மத்திய அரசு. மத்தியத் திட்டக் குழுத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவிடம் இதுகுறித்து கருத்து கேட்டால், "இந்த விலை உயர்வு மகிழ்ச்சி அளிக்கிறது," என்கிறார்.

அரசாங்கத்தின் பிரதிநிதிகள் சுய உணர்வோடுதான் பேசுகிறார்களா என்கிற கேள்வி உங்களுக்கு எழலாம். ஒட்டுமொத்த அரசாங்கத்தின் செயல்பாடும் சுய உணர்வு அற்ற நிலையில்தான் இருக்கிறது.

விலைவாசி உயர்வு மக்களைக் கொன்றுகொண்டு இருக்கிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பொறுப்பேற்ற இந்த 7 ஆண்டு ஆட்சிக் காலத்தில் டீ-யின் விலை மட்டும் 200 சதவிகிதம் ஏறி இருக்கிறது. மக்கள் நொந்துபோய் இருக்கிறார்கள். ஆனால், அரசின் நடவடிக்கைகளோ வெறுப்பேற்றுகின்றன.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை என்று கூறி, சமீபத்தில் வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை 25 ரெபோ புள்ளிகள் உயர்த்தியது ரிசர்வ் வங்கி. இதைத் தொடர்ந்து வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரிக்கத் தொடங்கின. கடந்த 18 மாதங்களில் இப்படி வட்டி விகிதம் உயர்த்தப்படுவது இது 12-வது முறை.

பொதுவாக, பணவீக்கம் திடீரென அதிகரிக்கும் சூழலில், அதைக் கட்டுக்குள் கொண்டுவர எடுக்கப்படும் அவசர சிகிச்சை வழிமுறை இது. நீண்ட காலப் பிரச்னைக்கு ஒருபோதும் தீர்வாகாது. மேலும், எதிர்மறையான விளைவுகளை உருவாக்கும். உதாரணமாக, தட்டுப்பாடு காரணமாக உணவுப் பொருள்கள் விலை உயரும்போது, உற்பத்தியைப் பெருக்காமல் வட்டி விகிதத்தை அதிகரிப்பது, மக்களின் பசிக்கு எப்படித் தீர்வாகும்?

பொருளாதார மந்தநிலையில் இருக்கும் ஒரு நாடு, வட்டி விகிதத்தை இப்படித் தொடர்ந்து உயர்த்துவது முதலீட்டாளர்கள் புதிய முதலீட்டுகளில் இறங்குவதைக் குறைக்கும். இதன் விளைவாக வேலைவாய்ப்புகள் குறையும். இதனால், உற்பத்தியில் தேக்கம் ஏற்படும். இதன் காரணமாக, பொருளாதார மந்தநிலை மேலும் வலுவடையும். நம் அரசு இப்போது அதைத்தான் செய்துகொண்டு இருக்கிறது.

அரசு இப்போது இன்னொரு நடவடிக்கையிலும் இறங்கப்போவதாகத் தகவல்கள் கசிகின்றன. அதாவது, ரூ.4 லட்சம் கோடி கடன் வாங்கி பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளில் இறங்குவது. அண்ணன் அமெரிக்காவின் பாணி இது. அமெரிக்கப் பொருளாதர வீழ்ச்சியைக் கடன்தான் தொடங்கிவைத்தது. ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் அடுத்தடுத்து வீழ்ச்சியைச் சந்திக்க இந்தப் பாதையே காரணமாக இருந்தது.

இதுபோன்ற சூழல்களில் ஓர் அரசு புதிய பொருளாதாரக் கொள்கைகளை வகுப்பது மிக அவசியமானது. நாடு பொருளாதார ரீதியாக வீழ்ந்துகொண்டு இருக்கிறது. ஆட்சியாளர்களுக்கோ அரசியலைத் தாண்டிக் கவலைப்பட நேரமே இல்லை. அது சரி, யாருக்குத்தான் நாட்டின் பொருளாதரத்தைப் பற்றி கவலைப்பட நேரம் இருக்கிறது என்கிறீர்களா?

http://news.vikatan.com/index.php?nid=4131

ஒரு பொருளாதார பாரிய வீழ்ச்சி இந்தியா பிளவுபடுதலை உருவாக்கிவிடும். ஏற்கனவே ஒரு சமச்சீர் அற்ற வளர்ச்சியே மாநிலங்களில் உள்ளது. இது ஏற்கனேவே மத்திய மாநில உறவுகளை பாதித்துள்ளது.

பொருளாதார வீழ்ச்சி என்பது அரசியல் மாற்றங்களை மட்டுமல்லாது நாட்டையே மாற்றிவிடும். எந்த மக்களும் தமது வளமான வாழ்க்கையை, வாழ்வியலை இழக்க தயார்படமாட்டார்கள். இதை கிறேக்கர்களில் இருந்து அமெரிக்கர்கள் வரை பார்க்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா உடைவதற்கு எது உதவினாலும் நான் ஆதரிப்பேன்

இதை எனது பிள்ளைக்கும் பேரனுக்கும் ஊட்டுவேன்

பணவீக்கம் வளர்ச்சிக்கு தேவையானது. மிதமான பணவீக்கம் சுகமான வளர்ச்சியை கொடுக்கும். பணவீக்கம் முன்னேறும் மாநிலங்களுக்கு சாதகமாயும், பின் தங்கும் மாநிலங்களுக்கு பாதகமாயும் இருக்கும். வட்டியை உயர்த்தினால் முதலீடுகள் பாதிக்கப்படும். இந்தியா மாதிரி ஜனநாயநாடுகள், தற்காலிகமாக இறக்குமதியை இளக்கி கொடுக்கலாம். இதனால் நாளடைவில் ஏற்றுமதிகள் உந்தபட்டு வேலை வாய்ப்பும் கூடும். உற்பத்தி தொழில்களில் ஈடுபட்டிருபோர் அதிகாரம் செலுத்தும் நாடுகளில் இறக்குமதிகளை இளக்குவது அரசியல் தற்கொலை.

மத்திய அரசு கையும் கணக்குமாக இருந்தால் பணவீக்கம் நாளாந்த பிரச்சனையாகாது. சோனியா ஏழைகளின் வாக்குகளை ஏய்க போடும் திட்டங்களினால் தான் இந்தியாவில் பணவீக்கம் மோசமடைகிறது. உலனின் திறமையான மூன்று நிதி அமைச்சர்கள் நடத்தும் அரசாங்கம், வீட்டு கணக்கை கூட சரியாக சமம் செய்ய தெரியாதவரின் அதிகாரதின் கீழ் ஆடுவதால், நிதி நிலைமையில் இப்படி ஒரு ஈடாட்டம் காண்கிறது. அரசன் எவ்வழி, அமைச்சர்கள் அவ்வழி.

எப்படியாயினும் சோனியாவின் பணிப்பின் பேரில் காங்கிரஸ் தன் தலையில் மண் அள்ளிக் கொட்டியே ஆகவேண்டுமென்றால், காங்கிரசுக்கு உதவ தொண்டர்களாகிய நாம் கூடையும் மண்வெட்டியுடனும் தயாராகவே நிற்கிறோம்.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

விலை வாசி உயர்வு பணவீக்கம் ஊழல் போன்ற காரணம்களினால் அடுத்து வரும் தேர்தலில் காங்கிரஸ்

கட்டாயம் தோல்வியை தழுவும்.. ஆனால் எதிர்கட்சியான p j p பலவீனமாக காணப்படுகின்றது அதன் பிரதமர் வேட்பாளராக வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நரேந்திரமோடிக்கு

சிறுபான்மையினரின் ஆதரவு இல்லை

3 ஆவது கூட்டணி அமையவேண்டுமாயின் ஜெயலலிதா மம்தா பானர்ஜி மாயாவதி இவர்களுடன் தான்

ஏற்படவேணும் அப்பிடி அமைந்தால் யாரை பிரதமர் வேட்பாளராக நிறுத்துவது என்பதில் பிரச்சினைகள் எழ கூடும்

நரேந்திரமோடி பிரதமராக வருவதை அமெரிக்கா விரும்புகிறது காங்கிரஸ் கடைசி நேரத்தில் பாவிக்கும் பிரம்மாஸ்திரமாக ராகுல் காந்தி இருப்பார் காங்கிரசின் பிரதமர் வேட்பாளராக நிச்சயமாக ராகுல் தான் அடுத்த தேர்தலில்..ஆனால் நரேந்திரமோடி இந்து மத வெறி பிடித்தவராக இருந்தாலும் தலை சிறந்த நிர்வாகி ,பூகம்பம் மதகலவரம்களால் பாதிக்கபட்ட குஜராத் ஐ இந்தியாவின் மிகச்சிறந்த மாநிலமாக..மாற்றிய பெருமைக்கு உரியவர்..

  • கருத்துக்கள உறவுகள்

விலை வாசி உயர்வு பணவீக்கம் ஊழல் போன்ற காரணம்களினால் அடுத்து வரும் தேர்தலில் காங்கிரஸ்

கட்டாயம் தோல்வியை தழுவும்.. ஆனால் எதிர்கட்சியான p j p பலவீனமாக காணப்படுகின்றது அதன் பிரதமர் வேட்பாளராக வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நரேந்திரமோடிக்கு

சிறுபான்மையினரின் ஆதரவு இல்லை

3 ஆவது கூட்டணி அமையவேண்டுமாயின் ஜெயலலிதா மம்தா பானர்ஜி மாயாவதி இவர்களுடன் தான்

ஏற்படவேணும் அப்பிடி அமைந்தால் யாரை பிரதமர் வேட்பாளராக நிறுத்துவது என்பதில் பிரச்சினைகள் எழ கூடும்

நரேந்திரமோடி பிரதமராக வருவதை அமெரிக்கா விரும்புகிறது காங்கிரஸ் கடைசி நேரத்தில் பாவிக்கும் பிரம்மாஸ்திரமாக ராகுல் காந்தி இருப்பார் காங்கிரசின் பிரதமர் வேட்பாளராக நிச்சயமாக ராகுல் தான் அடுத்த தேர்தலில்..ஆனால் நரேந்திரமோடி இந்து மத வெறி பிடித்தவராக இருந்தாலும் தலை சிறந்த நிர்வாகி ,பூகம்பம் மதகலவரம்களால் பாதிக்கபட்ட குஜராத் ஐ இந்தியாவின் மிகச்சிறந்த மாநிலமாக..மாற்றிய பெருமைக்கு உரியவர்..

நன்றி வீணா பகிர்வுக்கு, மோடி ஆட்சிக்கு வந்தால் நல்லது, காங்கிரஸ் எழும்ப முடியதபடி எல்லா மாநிலங்களிலும் அடி வாங்கனும், ராகுல் இன்னும் முதிர்ச்சியடைவில்லை, அவனை நிறுத்தினால் நல்லது அவர்களின் அழிவுக்கு, கன பிளவுகள் வரலாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.