Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர் விடயத்தில் பிள்ளை யையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டும் சர்வதேசம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழர் விடயத்தில் பிள்ளை யையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டும் சர்வதேசம்

புலிகள் பயங்கரவாதம் என்று சொல்லி புலிகளை அடியோடு அழிக்க இலங்கை அரசிற்கு, உலக போர்விதிகளுக்கு அப்பாற்பட்டு முண்டு கொடுத்து உதவிய சர்வதேசம். தமிழர்களின் அபிலாசைகளையும், அவர்களது அடிப்படை உரிமைகளையும் போரின் பின்னாவது பெற்றுக்கொடுக்;கத் தவறிவிட்டது. போரின் பின்னான தமிழின அழிப்பில் இலங்கை அரசு தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றது.

தமிழர்களின் அபிலாசைகள் என்ன? அவர்களின் பிரச்சனைக்கு அடிப்படைத் தீர்வு என்ன? என்பதைப்பற்றி யாரும் வாய் திறந்ததும் கிடையாது.

புலிகளின் வளர்ச்சிப்பாதையானது எதிர்காலத்தில் சர்வதேசத்தில் பிரச்சனைகளை எற்படுத்தும் என்ற ஒரே நோக்கோடும், இந்தியாவைச் சுற்றிப்பின்னிப் பிணைந்திருக்கும் பிரச்சனை என்பதாலும் புலிகளை அழிப்பதால் இந்தியாவின் வருங்காலத்தைச் சிதைக்கலாம் என்ற தூரநோக்கோடும்தான் புலிகளை அழிக்க மேற்குலகமும் சேர்ந்து இலங்கை அரசாங்கத்திற்கு முண்டு கொடுத்து புலிகள் மீது கொத்தணிக்குண்டுகளும், பொஸ்பரஸ் போன்ற தடை செய்யப்பட்ட குண்டுகளும் இலங்கைக்கு வழங்கப்பட்டன.

ஆனால் இவர்களின் தூரநோக்குப்பார்வை, பிள்ளையார் பிடிக்கக் குரங்கு உருவானது போலாயிற்று. புலிகளை அழிக்க உதவி இலங்கையைத்தங்கள் கைக்குள் அடக்கலாம் என்ற கனவு தவிடு பொடியாயிற்று. இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளின் பலவீனத்தை நன்றாக உணர்ந்த இலங்கை அரசு இவர்களின் பலவீனத்தைத் தங்களுக்குச் சாதகமாகப்பயன்படுத்தி தமிழர்களைக் கொன்று குவித்தது, சமாந்திரமாக சீன அரசை இலங்கையின் காதுகாவலனாகத்தேர்ந்தெடுத்து போர் நடக்கும்போதே இலங்கையில் சீனரின் வருகையும் அவர்களின் இராணுவப்பலப்படுத்தலும் நடந்துவிட்டதால் அங்கு இந்தியாவினதும், மேற்குலகங்களினதும் ஆதிக்கம் ஆட்டங்கண்டுவிட்டது.

இவர்களது ஆட்டம் இலங்கையில் ஆட்டம் கண்டுவிடவே, தமிழர்கள் தங்கள் உறவுகள் அழிக்கப்பட்டபோது வீதிகள் எல்லாம் கூக்குரலிட்டு அழுதபோது செவிமடுக்காத வெட்கம் கெட்ட சர்வதேசம், இன்று தங்கள் ஆட்டம் இலங்கையில் ஆட்டம் கண்டுவிட, இலங்கை அரசுமீது போர்க்குற்றம் என்னும் மனு தயாரிதத்து இலங்கையை மிரட்டி அடியபணியவைக்கும் கைங்கரியத்தில் இறங்கியது. இலங்கையோ மசிந்து கொடுப்பதாக இல்லை. முடிந்தபோருக்குப்; போர்குற்றம் தயாரிக்கும் சர்வதேசம் என்றாவது தமிழர்கள் உரிமைபற்றி பேசியதுண்டா?

புலிகள் அழிந்துவிட்ட நிலையிலும் புலிகள் என்று சொல்லி பலர்மீது சட்டநடவடிக்கைகள் எடுக்குமளிவிற்கு, இலங்கைமீதான போர்க்குற்ற அழுத்தம் மிகவும் மெத்தனப்போக்குடன் தான் இருக்கின்றது. இதுவரை போர்க்குற்றம் என்பது விசாரணைக்கு எடுத்துககொள்ளப்படவில்லை. பதிலாக புலிகள் உறுப்பினர் என்று அவர்கள் மீத பாயும் சட்டம் காத்திரனமானதாகத்தான் இருக்கின்றது.

இலங்கைமீதான போர்க்குற்றம் விசாரணைக்கு எடுக்கப்படுமாயின், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் உலகநாடுகள் எல்லாம் கூண்டில் நிற்கவேண்டிவரும். உதாரணமாகப் பார்ப்போமானால், ராஜீவ் கொலைவழக்கில் பற்றறி விற்றவனுக்கும், பக்கத்தில நின்றவனுக்கும் தூக்குத்தண்டனை என்றால், தமிழர்களை அழிக்க ஆயுதங்கள், ஆலோசனைகள் போன்ற எல்லாவற்றையும் இலங்கை அரசிற்கு வழங்கியவர்களும் தண்டிக்கப்படவேண்டியது தான் நீதி. இந்த வகையில் இவர்களும் தண்டனைக்கு உரியவர்கள் தான். இந்த இரண்டு விடயங்களுக்கும் நிறை ஒற்றுமைகள் இருக்கின்றன.

சீனா வல்லரசு இலங்கையின் பின்னணியில் இருப்பதால் யாரும் எந்த நேரடியாக இலங்கையுடன் முண்டு கொடுக்கமாட்டார்கள்.

போர்க்குற்றவிசாரணை என்பது தமிழர்களை ஏமாற்றவும் இலங்கையை மிரட்டவும் ஒரு ப+ச்சாண்டி தான். சர்வதேசம் ஒரு புறம் பின்கதவால் இலங்கைக்கு உதவி வழங்கிக்கு கொண்டிருக்கின்றது.

ஒரு புறம் மனித உரிமைகளையும், ஜனநாயகத்தைப்பற்றிபேசும் இந்ந வல்லாதிக்க வல்லரசுகள் மறுபுறம் அரசபயங்கரவாதத்திற்கு உதவிகள் அளித்துக்கொண்டிருக்கின்றன.

தமிழர்களின் தேவை வரும்போது. தமிழர்களுக்குச் சார்பாகப்பேசுவதும், தேவை முடிந்ததும் தூக்கி பக்கத்தில் போடுவதையும் நம்பி தமிழர்கள் ஏமாறுவது வருத்தத்திற்கு உரியது. தமிழர்கள் தொட்டுக்கொள்ள ஊறுகாய்போல் ஆகிவிட்டார்கள்.

இன்றைய உலகத்தில் ஜனநாயகவிழுமியகங்கள் அரசியலாளர்களால் மதிப்பளிக்கப்படாமையினால் தான் மக்கள் தீவிரவாதத்தை நோக்கி ஓடுகின்றார்கள். ஜனநாயகப்போராட்டங்களுக்கு பவில் கிடைக்காமையினால் தான் தீவிரவாத பேராட்டம் என்னும் அடுத்தகட்டத்திற்கு தள்ளப்படுகின்றது. இதை ஆட்சியாளர்கள் உணரவேண்டும்.

கனடாவில் என்றும் தமிழர்களின் போராட்டங்களுக்கு செவிமடுத்து பதிலளித்தவர் என்டீபிஐ சேர்ந்த காலம் சென்ற ஜக்லெஐ;டன் தான். ஆவர் காலம் சென்றபோது தமிழர்கள் செலுத்திய அன்பு மரியாதையைக்கண்டு துவண்டு போன ஏனைய கட்சி அரசியலாளர்கள் இன்று கண்விழித்து செவிகொடுத்து தமிழனைத் திரும்பிப்பார்க்கின்றார்கள். இப்போது விடும் முதலைக்கண்ணிPரில் தமிழர்கள் நனைந்துபோகக்கூடாது. இதெல்லாம் வெறுமனே தமிழர்களின் வாக்குகளை தங்கள் பக்கம் திருப்பவே.

இவர்கள் இன்று கொடுக்கும் தமிழர்களுக்கு ஆதரவான குரல் எவ்வளவு காலத்திற்கு என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். அடுத்ததாக இது வெறும் குரல் மட்டும்தானா? அது ஏதாவது ஆக்கப+ர்வமான மனித உரிமைகளையாவது தமிழனுக்குப் பெற்றுத்தருமா? என்பது கேள்விக்குறிதான்

ஐ. நாவிற்கு முறகலுடன் சென்றவர்கள் அங்கு எதையும் சாதித்தார்களா? மௌனித்து வந்தார்கள்.

தமிழன் ஏன் உயிரையும் துச்சமென மதித்து பயங்கரப்பயணம் செய்து இன்னொரு நாட்டிற்கு வருகின்றான். அவன் பிறந்தநாட்டில் அவன் தனது உரிமைக்குப்போரட உரிமையில்லை. உரிமையும் இல்லை. என்றதால் இங்கு வருகின்றான். அதைத்தடுக்கச்சட்டம் போடும் இவர்கள். தமிழனுக்கு அவன் பிறந்தநாட்டில் உரிமையைப் பெற்றுக் கொடுத்தால் அவன் அகதியாகவும் வரமாட்டான். தடுக்கச்சட்டமும் தேவையில்லை.

இவர்களுடைய செயல், சாகும் வரை வாளா வெட்டியாக இருந்துவிட்டு செத்தபின் ஐயோ செத்துவிட்டானே என் செய்வேன் என்று செத்தவீடு கொண்டாடுவது போலத்தான்.

உங்களிடம் வாக்குக்கேட்டு வருபவர்களிடம் நாங்கள் கூக்கிரலிட்டபோது எங்கே இருந்தீர்கள் என்று அடித்துக்கேளுங்கள்.

மழைக்கு முளைத்த காளான்போல் திடீரென்று தமிழன்மேல் கரிசனை எப்படி வந்தது. தமிழனிடம் நல்ல வாக்குவங்கி இருக்கின்றது. அதைக்கொள்ளை கொள்ளத்தான். சோரம் போகாதீர்கள். எங்களுக்காகக் குரல் தந்த என்டீபிக்கு ஆதரவளியுங்கள்.

நன்றி இராஜ் லோகன்.

ஐப்பசி ஆறாம் திகதி நடக்க உள்ளது ஒன்ராறியோ மாநில தேர்தல். இதில் மூன்று முக்கிய கட்சிகள் போட்டியிடுகின்றன: ஆட்சியில் உள்ள லிபரல், எதிர்க்கட்சி கன்சவேட்டிவ் அடுத்து என்.டி.பி.

இதில் இரண்டு தமிழர்கள் போட்டியிடுகின்றனர். ஒருவர் இராதிகா சிற்சபேசன் அவரால் வென்றெடுக்கப்பட்ட தொகுதியில் அதே கட்சியின், என்.டி.பி., சார்பில்.

அடுத்தவர் மார்க்கம்- யூனியன்வில் தொகுதியில் கனேடிய மத்திய அரசை ஆளும் கன்சவேட்டிவ் கட்சியின் சார்பில்.

இந்த இருவரையும் வெல்ல வைப்பது எமது கடமை என்பது எனது கருத்து. இதன் மூலம் ஒட்டுமொத்த தமிழர் அரசியல் பலம் பெருக்கும். அது எமது அடுத்தடுத்த வெற்றிகளுக்கு வழி சமைக்கும்.

என்.டி.பி. அதிகளவு ஆதரவு, கடந்த இருபது வருடத்தில், கொண்டுள்ளதாக கணிப்புகள் கூறுகின்றன.

Ontario NDP enjoying highest support in two decades: poll

Andrea Horwarth’s New Democrats have made significant gains during the campaign for the Ontario election, but the race remains too close to call with just four days before voters go to the polls, a new survey suggests.

The New Democrats are enjoying their highest support in two decades, with 26.8 per cent of those polled saying they would vote for the party, according to a Nanos survey for CTV and The Globe and Mail.

http://www.theglobeandmail.com/news/politics/ontario-election/ontario-polls/ontario-ndp-enjoying-highest-support-in-two-decades-poll/article2188104/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.