Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர்தாயகத்தில் காலூன்றதுடிக்கும் இந்தியா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Oct 11, 2011 / பகுதி: முக்கியச் செய்தி /

அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர்தாயகத்தில் காலூன்றதுடிக்கும் இந்தியா!

வடக்கு கிழக்கில் தமிழ்மக்கள் வாழ்இடங்களில் பலஅபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளும் நோக்கில் நீண்டகாலஅடிப்படையில் பலஅபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளவுள்ளது.

வடக்கில் 79 பாடசாலைகளை புனரமைப்பதற்கு இந்தியா உதவியளிக்கவுள்ளது. 160 மில்லியன் சிறீலங்கா ரூபா செலவில் இப்புனரமைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக இந்திய வெளிவிவகார செயலாளர் ரஞ்சன் மாதாய் இன்று தெரிவித்துள்ளார்.

3 நாள் பயணம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார செயலளார் கொழும்பிலுள்ள இந்திய செய்தியாளர்களை சந்தித்தபோதே இத்தகவலை தெரிவித்தார்.

வவுனியா முல்லைத்தீவு கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இந்த பாடசாலைகள் அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை மன்னாரிலுள்ள திருக்கேதீஸ்வரம் கோவிலை புனரமைக்கும் பணியை இந்தியா ஏற்கவுள்ளதாகவும் சம்பூரிலுள்ள மற்றொரு பழைமையான ஆலயத்தை புனரமைப்பத

வடக்கு கிழக்கில் தமிழ்மக்கள் வாழ்இடங்களில் பலஅபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளும் நோக்கில் நீண்டகாலஅடிப்படையில் பலஅபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளவுள்ளது

வடக்கில் 79 பாடசாலைகளை புனரமைப்பதற்கு இந்தியா உதவியளிக்கவுள்ளது. 160 மில்லியன் சிறீலங்கா ரூபா செலவில் இப்புனரமைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக இந்திய வெளிவிவகார செயலாளர் ரஞ்சன் மாதாய் இன்று தெரிவித்துள்ளார்

3 நாள் பயணம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார செயலளார் கொழும்பிலுள்ள இந்திய செய்தியாளர்களை சந்தித்தபோதே இத்தகவலை தெரிவித்தார். வவுனியா முல்லைத்தீவு கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இந்த பாடசாலைகள் அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

அதேவேளை மன்னாரிலுள்ள திருக்கேதீஸ்வரம் கோவிலை புனரமைக்கும் பணியை இந்தியா ஏற்கவுள்ளதாகவும் சம்பூரிலுள்ள மற்றொரு பழைமையான ஆலயத்தை புனரமைப்பத்றகும் இந்தியா உதவும் எனவும் இந்திய வெளிவிவகார செயலாளர் ராஜன் மாதாய்தெரிவித்துள்ளார்

இன்று காலை மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த இந்திய வெளிவிவகார செயலாளர் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு உட்பட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடினார். மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசிப்பதாக ராஜன் மாதாய் தெரிவித்தார்.

இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து கூறுகையில் அமைதியான சூழலொன்று நிலவுவதுடன் இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான வழிகள் குறித்து ஆராய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். இரு தரப்பையும் சேர்ந்த மீனவர்களுக்கிடையில் கிரமமான சந்திப்களை நடத்துவது இதில் ஒரு பகுதியாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் வீடமைப்புத் திட்டம் குறித்து கூறுகையில் இந்நடவடிக்கைகள் மெதுவாக இடம்பெறுவதாக அவர் ஒப்புக்கொண்டார்.

முதற்தொகுதி வீடுகள் எதிர்வரும் சில மாதங்களில் பயன்பெறுநர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.pathivu.com/news/18763/57//d,article_full.aspx

இன்று ஒரு அரசியல் தீர்வை இந்தியா உட்பட்ட சர்வதேச ஆதரவுடன் தமிழர் தரப்பு பெறவேண்டிய அவசரதேவை உள்ளது.

சீனா, அபிவிருத்தி/உதவி என்ற பெயரில் சிங்கள நாட்டில் ஆழமாக கால் ஊன்றி வருகின்றது. சிங்களவர்கள் சீனாவின் பண உதவியுடன் தமிழர் தாயகம் எல்லாம் குடியேற்றப்படுகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அரசியல் தீர்வு விரைவில் வரத்தான் போகிறது..! ஆனால் இந்தியா வந்து போனபின் சிங்களவன் மீண்டும் அந்தத் தீர்வை உடைப்பான்..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் நிலை எண்ணை சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்த கதையாகவிட்டால் சரி :huh:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அரசியல் தீர்வு விரைவில் வரத்தான் போகிறது..! ஆனால் இந்தியா வந்து போனபின் சிங்களவன் மீண்டும் அந்தத் தீர்வை உடைப்பான்..!

சிங்களவன் அந்த தீர்வை உடைத்த பின்....

இந்தியாவின் வேறோரு புதிய வெளிவிவகார அமைச்சர், வேறொரு தீர்வுடன் ஸ்ரீலங்கா ஜனாதிபதியை சந்திக்க கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வந்து இறங்குவார்.

சுத்திச், சுத்தி... சுப்பற்றை கொல்லை விளையாட்டாய் இருக்கப் போகுது.

ஒரு அரசியல் தீர்வு விரைவில் வரத்தான் போகிறது..! ஆனால் இந்தியா வந்து போனபின் சிங்களவன் மீண்டும் அந்தத் தீர்வை உடைப்பான்..! :rolleyes:

இந்திய மேற்குலக நாடுகளின் ஆதரவுடன் செயல்பட்டால், அந்த தீர்வை நிராகரிக்க சிங்களம் தயங்கும். காரணம் - பொருளாதார தடைகள் விதிக்கப்படலாம் என்ற பயம்.

ஆனால், எந்த தீர்வையும் ஐ,நா.வின் முத்திரை பதிப்பதே நமக்கு பாதுகாப்பாக அமையும்.

சீனா, அபிவிருத்தி/உதவி என்ற பெயரில் சிங்கள நாட்டில் ஆழமாக கால் ஊன்றி வருகின்றது. சிங்களவர்கள் சீனாவின் பண உதவியுடன் தமிழர் தாயகம் எல்லாம் குடியேற்றப்படுகின்றனர்.

அகூதா...........

தமிழர்தாயம் எல்லாம் சிங்களவர் குடியேற்றப்படுறாங்க என்னு செய்தி இருந்தாலும்,

அவங்க அங்கயே நிலைச்சு இருக்குறதுக்கு,, சிங்களவன் காரணம் இல்லை!

ஏன்னா,, தமிழர்தாயகம் எங்கிறது,, அங்கு வாழ்பவர்களூக்கே,,, ஒவ்வொரு விடயத்திற்கும், போராடவேண்டி இருக்கும்,

இல்லைனா,, ஏதோ ஒருவிடயத்துல தங்கிவாழ வேண்டி இருக்கும்!

ஏன்னா, வளங்கள் பெரிசா கொட்டிகிடக்காத , கடின உழைப்பை மட்டுமே மூலதனமாக கொண்ட வரண்டபூமிதானே அது!

அங்கு போய் எப்படி ,

எந்தவிதத்திலும் அங்கு தாக்குபிடிக்கமுடியாத சிங்களவன்,,(மொழியுட்பட ) ,,

சட்டுன்னு வந்து உலகம் எங்கும் பிச்சை எடுக்குற அரசாங்க ஆதரவோட குடியேறினாலும், தொடர்ந்து நின்னு நிலைக்க , பொருளாதாரபலம் பெறுகிறான்!/?

மலிவுவிலை பொருட்கள் அவனிடம் வாங்க முண்டியடிக்கும் , எம் மக்களே!

ஆகவே , சிங்களவனது குடியேற்றத்தை நிரந்தரமாக்குவது ,, தமிழர்களே!

இல்லைனா,,

மூணுமாசம்கூட தாக்குபிடிக்க முடியாம, வந்தவழி நோக்கி மூட்டை கட்டிடுவான்!

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மேற்குலக நாடுகளின் ஆதரவுடன் செயல்பட்டால், அந்த தீர்வை நிராகரிக்க சிங்களம் தயங்கும். காரணம் - பொருளாதார தடைகள் விதிக்கப்படலாம் என்ற பயம்.

ஆனால், எந்த தீர்வையும் ஐ,நா.வின் முத்திரை பதிப்பதே நமக்கு பாதுகாப்பாக அமையும்.

அவன் தானா உடைக்கமாட்டான்..! :rolleyes: அதுக்கென்றுதான் (அ)நீதிமன்றம் இருக்கே..! :icon_mrgreen:

இதை அமுல்படுத்துவது, ஆதாவது சிங்களவனிடம் பொருட்களை வேண்டாமல் விடுவது என்பது இலகுவானது அல்ல.

- சிங்களவன் ஒரு நன்றாக திட்டமிட்ட தனது இராணுவம் சார்ந்த பொருளாதார குடியேற்றத்தை நடாத்துகின்றான்.

- இந்த விடயத்தில் எமது மக்களில் ஒரு பகுதியினரே பணம் உள்ளவர்களாக உள்ளார்கள். பெரும்பாலானவர்கள் ஏழைகளாக உள்ளாதால் 'மலிவு பொருட்களை' நாடுகின்றனர்.

- முழு உலகமுமே சீனாவின் மலிவான பொருட்களை நாடியவண்ணம் உள்ளது. சீனா புதிய சந்தைகளை தேடிய வண்ணம் உள்ளது. ஆசியாவில் தனது காலை அகல பதித்து வருகின்றது.

அவன் தானா உடைக்கமாட்டான்..! :rolleyes: அதுக்கென்றுதான் (அ)நீதிமன்றம் இருக்கே..! :icon_mrgreen:

முன்னதாக இந்திய உடன்படிக்கையின் 13 வது சரத்துக்கு கீழாக இருந்த உடன்படிக்கைகளை சிங்கள நீதிமன்றம் மறுத்தமை போன்று மீண்டும் நடக்காத ஒரு வழியில் இனி வரும் உடன்படிக்கை அமைய வேண்டும்.

எனவே அந்த உடன்படிக்கையில் ஐ.நா.வை/மேற்குலகத்தை உள்வாங்க வேண்டும். வேறுவழிகள் இல்லை.

இந்திய மேற்குலக நாடுகளின் ஆதரவுடன் செயல்பட்டால், அந்த தீர்வை நிராகரிக்க சிங்களம் தயங்கும். காரணம் - பொருளாதார தடைகள் விதிக்கப்படலாம் என்ற பயம்.

ஆனால், எந்த தீர்வையும் ஐ,நா.வின் முத்திரை பதிப்பதே நமக்கு பாதுகாப்பாக அமையும்.

சிங்களம் இப்போது தயங்குவதில்லை. காரணம் அது சீனாவின் ஆதரவில் இருப்பதால்.

சீனாவின் ஆதரவு இப்போது மேற்குலக நாடுகளுக்கும் அவசியம். ஏனெனில் மேற்குலக வங்கிகளுக்கு கடன் கொடுப்பதில் சீனா முன்னிற்கிறது.

பிரித்தானிய அமைச்சர் லியம் பாக்ஸ் கூட ராஜபக்ஷவை ரகசியமாக சந்திக்கிறார்.

ஐ.நா.வின் செயல்கள் பற்றித்தான் நாம் அறிவோமே!

- இந்த விடயத்தில் எமது மக்களில் ஒரு பகுதியினரே பணம் உள்ளவர்களாக உள்ளார்கள். பெரும்பாலானவர்கள் ஏழைகளாக உள்ளாதால் 'மலிவு பொருட்களை' நாடுகின்றனர்.

நீங்க சொன்னதில எந்த தவறுமே இல்ல,, ஆனா யதார்த்தம் எங்கிறது எது எங்கிறத நீங்களூம் தெரிஞ்சுதானே வைச்சிருக்கிங்க ,, என்னு கேட்டேன் நானு!

ஒரு பிராந்தியத்திலுள்ள பொருளாதார பலவீனமே ,, குடியேற்றவாசிகள் ,,அவர்களுக்கே எஜமானாக ........வழிவிடுகிறது!

சிங்களம் இப்போது தயங்குவதில்லை. காரணம் அது சீனாவின் ஆதரவில் இருப்பதால்.

சீனாவின் ஆதரவு இப்போது மேற்குலக நாடுகளுக்கும் அவசியம். ஏனெனில் மேற்குலக வங்கிகளுக்கு கடன் கொடுப்பதில் சீனா முன்னிற்கிறது.

சிங்களம் மீண்டும் மேற்குகலம் நோக்கியும் வரலாம்.

உலகில் ஏற்பட்டுவரும் பொருளாதார நெருக்கடிகளில் சீனாவும் பாதிப்படையும், ஆனால் அது மீண்டும் மீழெழுமா? என்பது சந்தேகமே. காரணம் மேற்குலகத்தை நம்பியே அதன் வளர்ச்சி உள்ளது. சீனாவும் அண்மையில் மேற்குகலகம் தரவேண்டிய கடனில் ஒருபகுதியை மன்னித்துவிட்டது. அங்கோ பொருளாதாரம் பெரிதாக வளர இடமில்லை. அத்துடன் மீண்டும் தாமே பொருட்களை உற்பத்தி செய்ய தொடங்குகின்றனர். எனவே சீனாவின் வளர்ச்சியும் கேள்விக்குறியே.

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் 79 பாடசாலைகளை புனரமைக்க இந்தியா 187 மில்லியன் நிதியுதவி

india%20china.jpgவட மாகாணத்தில் 79 பாடசாலைகளை புனரமைக்கவென இந்திய அரசாங்கம் நிதியுதவி அளித்துள்ளது.

கிளிநொச்ச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் சேதமடைந்த 79 பாடசாலைகளை புனரமைக்கவே இந்நிதியுதவி வழங்கப்படுவதாக இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்த்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான ஒப்பந்தத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ்வும் இந்திய உயர்ஸ்த்தானிகர் அசோக் கே காந்தாவும் நேற்று கைச்சாத்திட்டனர்.

இத்திட்டத்தின் கீழ் இந்திய அரசு இலங்கைக்கு 187 மில்லியன் ரூபா நிதியுதவி அளித்துள்ளது.

9 மாதங்களுக்குள் குறித்த 79 பாடசாலைகளையும் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

http://www.eeladhesam.com/index.php?option

ஒரு பிராந்தியத்திலுள்ள பொருளாதார பலவீனமே ,, குடியேற்றவாசிகள் ,,அவர்களுக்கே எஜமானாக ........வழிவிடுகிறது!

உண்மை. ஆனால் சிங்களம் பல வழிகளிலும் மக்களை ஏமாற்றி நாட்டை விற்றே இன்றையை நிலைமையை சமாளிக்கின்றது. நாளை வேறு ஒரு கட்சி ஆட்சி அமைக்கும்பொழுது மட்டுமே உண்மை தெரியும், மக்கள் எவ்வளவு (சீனாவுக்கு) கடனாளிகளாக ஆக்கப்பட்டுள்ளனர் என.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.