Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மாவீரர் சூதாட்டம் சம்பியன்லீக் 2011

Featured Replies

மறுஆய்வு : 14-Oct-2011

மாவீரர் சூதாட்டம் சம்பியன்லீக் 2011

‘கேட்கிறதா மணி ஓசை கேட்கிறதா நெஞ்சுருக்கும் பாடல்’ – ஒவ்வொரு கார்த்திகை 27இலும் இப்படித்தான் நமக்காக மரணித்தவர்களின் நினைவுகளை நாம் மனதில் நிரப்பிக் கொள்வதுண்டு. 1982இல் இருந்து இதனையொரு புனிதக் கடமையாகவே நாம் பேணிப் பாதுகாத்துக் கொண்டு வந்திருக்கிறோம். தன்னலமற்று வீழ்ந்தவர்கள் எவரும் மற்றவர்களின் போற்றுதலுக்காக வீழவில்லை. அது தன்னலமற்ற உயிர்நீர்ப்பு. நமது அடுத்த தலைமுறையின் சுதந்திரச் சுவாசத்திற்காக தங்கள் மூச்சை நிறுத்திக் கொண்டவர்களின் பரித்தியாகமது. ஆனால் 2009 மே.19 உடன் எல்லாமும் தலைகீழானது. முள்ளிவாய்காலுடன் நெருப்பணைந்து போன தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் எஞ்சிய சிறு தணல்கள் புலம்பெயர் தேசங்களெங்கும் கொஞ்சம் கொஞ்சமாக அணைக்கப்பட்டன. இப்போது அந்த உட்சமர் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. முள்ளிவாய்க்காலில் நமது போராட்டத்தின் தீ நாக்குகளின் மூலத்தை வேரறுத்தவன் சிங்களவன் என்றால் புலம்பெயர் தேசங்களில் அதனைச் செய்துகொண்டிருப்பவர்கள் சதா பிரபாகரன் நாமம் ஓதிய அவரின் விசுவாசிகள் என்பதுதான் நமது அவலத்திலும் பெரிய அவலமாகும்.

இதுவரைக்கும் விசுவாசி – துரோகி போராட்டம் – கைக்கூலித்தனம் என்றெல்லாம் நமக்குள் பிளவுபட்டுக் கொண்ட நாம், இப்போது தன்னலமற்று வீழ்ந்த மாவீரர்களின் தியாகத்தை கூறுபோடும் அரசியலுக்குள் பிரவேசித்திருக்கிறோம். இது ஒன்றுதான் இதுவரை நம்மை பிரிக்காமல் இருந்த ஒன்று. நம்மை வெற்றி கொண்ட சிங்களப் படைகள் துயிலும் இல்லங்களை சின்னாபின்னப்படுத்திய போதும்கூட அவர்களை நமது நினைவுகளின் ஏதோ ஒரு மூலையில் வைத்துக் கொள்ள முடிந்ததேயென்ற ஆறுதலாவது எஞ்சியது. இப்போது அந்த அவசியத்தைக் கூட இல்லாமலாக்கும் கைங்கரியத்தை அவர்களது பெயரால் விசாபெற்று வாழ்பவர்களே செய்து முடிக்கப் போகின்றனர்.

மாவீரர் பாகப்பிரிவினை சூதாட்டம்- இது ஓர் பலப்பரீட்சை

இம்முறை இரு மாவீரர் தினக் கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளதாக இருவேறு போட்டி அறிவிப்புக்கள் வந்தவண்ணமுள்ளன. இணைய வசதியுள்ளவர்கள் தவிர ஏனைவர்கள் இது குறித்து அறிந்துகொள்ள வாய்ப்பில்லை. அந்த மாவீரர்கள் எந்த மண்ணில் வீழ்ந்து உரமானார்களோ அந்த மண்ணில் இது பற்றியெல்லாம் எவரும் பேசும் நிலையில் இல்லை. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பதுபோல் மாவீரர் தினத்தையும் எப்படிக் காசாக்கலாம் என்று ஒரு கூட்டம் தங்களுக்குள் குத்துவெட்டுப் பட்டுக்கொண்டிருக்கிறது. இவை எல்லாவற்றையும் பார்த்தவாறு தங்களுக்குள் சிரித்தவாறு இருக்கும் கொழும்பின் ஆட்சியாளர்கள், தாங்கள் செய்ய நினைத்ததை எந்த செலவும் இல்லாமல் பிரபாகரனின் விசுவாசிகளே செய்வது கண்டு ஒருகணம் அவர்கள் திகைத்தும் இருக்கக் கூடும். இந்தப் பூனைகளை வேட்டையாடவா இத்தனை கடினப்பட்டோம். சரியாக கணித்திருந்தால் இப்படித் தேவையில்லாமல் போர்க் குற்றச்சாட்டுக்களில் அகப்பட்டிருக்க வேண்டியதில்லையே! இவர்களைக் கொண்டே பிரபாவின் கதையை முடித்திருக்கலாமே! அவசரப்பட்டுவிட்டோமோ என்று அவர்கள் கவலைப்பட்டிருக்கவும் கூடும். எல்லோரும் நம்மை அண்ணார்ந்து பார்த்த காலம் போய் இப்போது எல்லாப்பக்கமும் சிரிப்புச் சத்தம் மட்டுமே கேட்கிறது. எத்தனை தியாகங்கள் எத்தனை அழுகுரல்கள் மனதைக் கல்லாக்கிக் கொண்டு வீழ்ந்தவர்களைத் தாண்டிச் சென்ற அந்தப் பொழுதுகள் – இப்போது எல்லாமும் சில சுயநலவெறிகொண்ட மனிதர்களால் ஒப்பற்ற தியாகங்கள் தமிழ் நாட்டு சினீமா போலாகிவிட்டது.‘மாவீரர்கள் நினைவு தினம்’ என்னும் படத்திற்கான இரு திரையரங்குகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. விரைவில் அதனை புலிக்கொடி பட்டொளிவீச மஞ்சல் சிகப்பு கொடியுடன் ஈஸ்மன் கலரில் எல்லோரும் கண்டு களிக்கலாம்.

amma1-259x300.jpg

புலிகள் இருந்த காலத்தில் மாவீரர்தின நிகழ்வுகளை ஒழுங்கு செய்யும் பொறுப்பு அனைத்துலக செயலகத்திடமே இருந்தது. அனைத்துலக செயலகம் என்பது புலம்பெயர் தேசங்களெங்கும் பேராட்டத் தேவைகளுக்காக உருவாக்கப்பட்டிருந்த கிளைகள் என்று அழைக்கப்பட்டவர்களாலேயே முன்னெடுக்கப்பட்டுவந்தன. மேற்படி அனைத்துலக பிரிவு, 2003 வரைக்கும் கேபியின் கீழும் அதற்கு பிந்திய வெறும் 5 வருடங்கள் கஸ்ரோவின் உத்தரவில் இயங்கிய அனைத்துலகப் பிரிவின் கீழும் இயங்கி வந்திருக்கிறது. முன்னர் கேபிக்கு கீழ் பணியாற்றியவர்களில் பலர் இன்றும் இந்த கஸ்ரோ பிரிவுடன் இயங்கி வருகின்றனர். ஆனால் புலிகளின் அழிவைத் தொடர்ந்து புலம்பெயர் நாடுகளில் புகைந்துகொண்டிருந்த பணப்பட்டுவாடா விடயங்கள் பல்வேறு போட்டிக் குழுக்கள் உருவாகக் காரணமாகியது. பினாமிகளாக இருந்தவர்கள் இறுதிக்காலத்தில் வீதி ஊர்வலங்களை ஒழுங்கு செய்தவர்கள் சில மாதங்கள் தமிழ்த் தேசியம் பேசியவர்கள் என்று ஒரு சிறு கூட்டம் இப்போது புலிப் போர்வைப் போர்த்தியிருக்கிறது. உண்மையான புலிப் போராளிகள் என்போர் வாழ்வியல் நெருக்கடிகளாலும் விரக்தி மனப்பான்மையாலும் ஒதுங்கிக் கொண்டனர். இன்றைய சூழலில் புலம்பெயர் நாடுகளில் தமிழீழம் காண்போம் என்று உளறிக் கொண்டிருக்கும் இவ்வகை ஆசாமிகள் அனைவரும் பஞ்சத்துப்புலிகளே ஆவர். பணபலம் இவர்களிடம் இருப்பதால் நிஜப் போராளிகள், உண்மையாகவே மக்கள் குறித்து சிந்திக்கும் தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள் என்போரால் இவர்களை எதிர்த்து நிற்க முடியவில்லை. இந்த பின்புலத்தில்தான், சரணடைந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் ஒரு வேளை உணவுக்கே அல்லாடிக் கொண்டிருக்கின்ற நிலையில் அது குறித்து எந்தவிதமான குற்றவுணர்வுமற்று உயிர்நீத்த போராளிகளைப் பாகப்பிரிவினை செய்யும் போராட்டம் புலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

உண்மையில் இரண்டு மாவீரர்தினத்திற்கான பின்னனி என்ன? ஏன் இதுவரை இல்லாதவொரு விடயம் இப்போது மேலெழுந்திருக்கிறது. கஸ்ரோவின் அனைத்துலகப் பிரிவின் செல்வாக்கு படிப்படியாக குறைந்து தலைமைச் செயலகத்துடன் உடன்பாடு காண்போரின் செல்வாக்கு படிப்படியாக அதிகரித்துக் கொண்டு செல்கிறது.. உருத்திரகுமாரனை தலைமையாகக் கொண்ட நாடுகடந்த அரசை ஆதரிப்பவர்களும், 2009 மே 19இற்குப் பின்னர் கேபியின் தலைமையை ஏற்றும் நிராகரித்தும் இப்போது முரண்பட்டும் நிற்கும் தரப்பினர் என அனைவரது உடன்பாட்டிலும் உதயமானதே தலைமைச் செயலகம் ஆகும். காஸ்ரோ தரப்பினரின் செல்வாக்கு படிப்படியாக விழ்ந்து கொண்டு செல்லும் பின்னனியிலேயே இவ்வகை போட்டிவாதம் தலைதூக்கியிருக்கிறது. புலம்பெயர் தேசங்களெங்கும் தலைமைச் செயலகத்தினர் கால்பதித்துவரும் சூழலிலேயே மாவீரர்தினப் பாகப்பிரிவினையில் அனைத்துலக பிரிவினர் இறங்கியிருக்கின்றனர். தங்களது செயலுக்கு நியாயம் கற்பிக்கும் வகையிலேயே தலைமைச் செயலகத்திற்குள் கே.பியின் ஆட்கள் ஊடுருவிட்டனர் அரச உளவுப்பிரிவு ஊடுருவிவிட்டது ‘றோ’ (RAW) ஊடுருவிட்டது போன்ற பழைய பஞ்சாங்கத்தை திரும்பத் திரும்பச் சொல்லிவருகின்றனர். கடந்த 35 வருடங்களாக தமிழ் மக்களுக்குப் பழக்கப்பட்டுப் போன ‘துரோகி’ வாதத்தை மீண்டும் உசுப்பிவிடுவதன் மூலம் தங்கள் காரியத்தைச் சாதிக்க முடியுமென்று அனைத்துலகப் பிரிவினர் எண்ணியதன் விளைவே இத்தனை துரோக மற்றும் அரச உளவுப்பிரிவுக் கண்டுபிடிப்புகள் எல்லாம்.

ஆனால் இணையப் பிரச்சாரங்களை தொடர்ச்சியாக அவதானித்தால் இங்கு எந்த உளவுப்பிரிவும் இல்லை இருப்பது அதிகாரம் பறிபோய்விடுமே என்னும் அச்சம் ஒன்றுதான் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். கடந்தகாலங்களில் மற்றவர்களை ஓரங்கட்டுவதிலேயே குறியாக இருந்த காஸ்ரோவின் தொண்டரடிப்பொடிகள் தமது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக இம்முறை தெரிவு செய்திருக்கும் துருப்புச் சீட்டு மாவீரர் தினமாகும். தங்களுக்கு பிடிக்காத, தங்களுக்கு உடன்படாத போக்குடையவர்களை ஓரங்கட்ட ஒன்றில் துரோகியென்று முத்திரை குத்துவது இல்லாவிட்டால் குறித்த நபரின் குடும்பம் மனைவி பிள்ளைகளை சந்திக்கு இழுத்து அவமானப்படுத்துவதன் மூலம் அவர்களை அரங்கிலிருந்து வெளியேற்றுவது. கடந்த இரண்டு வருடங்களாக, இதனையே அனைத்துலக பிரிவு தமது எதிர்ப்பிரச்சார யுக்தியாக செய்து வருகின்றது. இதற்கு அண்மைய உதாரணம், பிரித்தானிய தமிழ் போரத்தின் முக்கிய உறுப்பினரும் பிரித்தானிய மாவீரர் ஏற்பாட்டுகுழுவைச் சேர்ந்த ஸ்கந்தா என்பவரை துரோகியாக்கியதுடன், அவரது மகள் குறித்து வெளியிட்ட மலினத்தனமான செய்தியை கறுப்பு என்ற தமது மின்னஞ்சல் மூலம் வெளியிட்டதை குறிப்பிடலாம். இதன் மூலம் எவ்வளவு வக்கிர எண்ணங்கொண்டவர்கள் புலிகளில் இருந்திருக்கிறார்கள் என்று வெளிப்பார்வையில் உணரமுடிகிறது அல்லவா?

——

புலிகளின் அழிவுக்கு பின்னர் இடம்பெற்ற மாவீரர்தின நிகழ்வுகள் அடிப்படையிலேயே குழப்பமானவைதான். புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணித்துவிட்டதை அறிந்தும் அதனை உரிய முறையில் மக்களுக்கு தெளிவுபடுத்தாது மக்களை முட்டாள்கள் ஆக்கும் நடவடிக்கையொன்றையே முன்னெடுத்தனர். விமர்சனங்களுக்கு அப்பால் மண்ணிலிருந்து இறுதிவரை ஓடித்தப்ப நினைக்காத அந்தத் தலைவனுக்கு தனது குடும்பத்தையே பலிகொடுக்கத் தயங்காத தலைவனுக்கு அவரை நேசித்த மக்கள் ஒரு சுடரேற்றி தங்கள் மரியாதையைச் செய்ய முடியாதவகையில் முடமாக்கப்பட்டு இருக்கின்றனர். பிரபாவுடன் இறுதிவரை களமாடி வீழ்ந்த சூசை,பொட்டு ,பாணு , ஜெயம்,லக்ஸ்மன் மற்றும் சரணடைந்தவர்களான யோகி ,புதுவை, கரிகாலன், பாலகுமாரன் ஆகியோரின் மாவீரர் அந்தஸ்த்து எத்தகையது என்பதை வெளிப்படையாகச் சொல்ல முடியாதவர்களாகவே இந்த இரு பிரிவுகளும் இருக்கின்றனர். சரணடைந்தும் கொல்லப்பட்ட நடேசன், புலித்தேவன் ,ரமேஸ் போன்றவர்களை எந்த பட்டியலில் இணைப்பது என்று இன்னும் முடிவாகவில்லை போலும். ஒருவேளை துரோகிப் பட்டியலிலும் இணைக்கப்படலாம். சூசை ,பாணு ,ஜெயம் போன்றோரின் உடல்கள் காண்பிக்கப்பட்ட போதும்கூட இன்னும் எவருமே அவர்களுக்காக சிடியோ பாடலோ வெளியிடவில்லை. எங்கும் ஒரு அஞ்சலியையும் காணவில்லை. இந்தப் பின்னனியில் தற்போது மாவீரர்தினத்தை பாகம் பிரித்து வியாபாரம் செய்யும் முயற்சியில் அ.உ.பிரிவு இறங்கியிருக்கிறது.

சிறிலங்கா அரசாங்க இணையத்தளம் இறுதி போரில் கொல்லப்பட்டதாக தங்களால் அடையாளங்காணப்பட்டதாக வெளியிட்ட பட்டியல்:

http://www.defence.lk/new.asp?fname=20090621_02_TerrList

இந்தப் பிரச்சனைகளின் ஆணிவேரைத் தேடிப்பார்ப்போமானால் ஒரு விடயம் நன்றாக விளங்குகின்றது. புலிகளின் அழிவைத் தொடர்ந்து புகைய ஆரம்பித்த புலம்பெயர் புலிப்பினாமிகளின் பலப்பரிட்சை இப்போது உச்சக்கட்டத்தை அடைந்திருக்கிறது. எவர் நடாத்தும் மாவீரர் தினத்தில் மக்கள் அதிகமாகக் கூடுகின்றனரோ அவர்களுக்கே புலத்தில் மக்கள் செல்வாக்கு அதிகம் என்பதைக் காண்பிப்பதுதான் இந்தப் பலப்பரிட்சையின் நோக்கம்.

இந்தவருடம் பிரான்சில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டியின் போதே இந்தப் பலப்பரிட்சை துளிர்விட்டது. இந்த விழாவை கே.பியின் ஆட்கள் நடாத்துகின்றனர் என்று குறிப்பிடும் பல்வேறு அறிக்கைகளை பிரான்ஸ் ரிசிசி குழுவினர் வெளியிட்டிருந்தனர். அத்துடன் அதனை புறக்கணிக்குமாறும் மக்கள் மத்தியில் பிரச்சாரங்களைச் செய்தனர் எனினும் மக்கள் அதனைப் பொருட்படுத்தாது பெருவாரியாக விளையாட்டுப் போட்டியில் பங்குகொண்டிருந்தனர். இதனால் வெருண்டுபோன ரிசிசி குழுவினர் ஆவேசத்தில் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்ட மக்களை மந்தைகளாக விபரித்து தங்கள் ஆவேசத்தை வெளிப்படுத்தினர்.

இதன் தொடர்ச்சியாகத்தான் இன்று மாவீரா தினமும் தங்கள் கையை மீறிப் போய்விட்டால் அனைத்துலக கட்டமைப்பு என்பது செல்லாக் காசாகிவிடும் என்ற பயம் அவர்களைத் தொற்றிக் கொண்டுள்ளது. இந்த அச்சமே இவ்வளவு அறிக்கைகளுக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் காரணம். எனினும் மக்கள் இதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளாதவர்களாக இருக்கின்றனர்.சிங்களவர்களை மொக்குச்சிங்களவன் என்று சொல்லிப்பழக்கப்பட்ட தங்களை மெத்தப்படித்த அறிவாளிகளாக காட்டும் டயஸ்போறா தமிழ் மக்களின் அறியாமையே இவர்களது பலமாகவும் இருக்கிறது.

மாவீரர் தினம் நவம்பர் 27 இல் நினைவுக்கூரப்படுவதாகும். ஆனால் எமது பஞ்சத்துப்புலிகளோ மாவீரர் தின திருவிழாவுக்கான உபயகாரருக்குரிய உருத்துக்கான 5ம்கட்ட போரை யூலை மாதமே ஊடகங்களில் தொடங்கிவிட்டனர். மறுஆய்வால் அவதானிக்கப்பட்டு பதிவுசெய்யப்பட்ட அந்த குப்பைகளை இங்கு அறிவுகொண்ட மக்களுக்காக மட்டும் ஒரு சேர தொகுத்துள்ளோம்.

http://www.tamilkathir.com/news/5326/57//d,view.aspx (சி. பாலச்சந்திரன்)

http://www.eutamil.com/?p=25331 (சிவகுரு பாலச்சந்திரன்)

http://www.eutamil.com/?p=25305 ( அகத்தியன்)

http://www.eutamil.com/?p=25354 ( இசைப்பிரியா)

http://www.tamilkathir.com/news/5366/58//d,view.aspx (இசைப்பிரியா)

http://www.tamilkathir.com/news/5280/57//d,view.aspx (இசைப்பிரியா)

http://www.tamilkathir.com/news/5163/57//d,view.aspx (இசைப்பிரியா)

http://www.tamilkathir.com/news/5182/57//d,view.aspx (தமிழ்ச்செல்வன்)

http://www.tamilkathir.com/news/5033/57//d,view.aspx (தமிழ்ச்செல்வன்)

http://www.tamilkathir.com/news/5169/57//d,view.aspx (அகத்தியன்)

http://www.tamilkathir.com/news/5168/57//d,view.aspx (சுவிசிலிருந்து கதிரவன்)

http://www.tamilkathir.com/news/5425/58//d,view.aspx (அகத்தியன்)

மேலே உள்ள‌ இணைப்பில் உள்ள 12பத்திகளையும் அறிவுகொண்ட தமிழர்கள் யாராவது வாசிப்பீர்களானால் ஒரே நபரே எழுதியுள்ளார் என்பது தெட்டத்தெளிவாக புரிவீர்கள்.இந்த குப்பைகளை கொட்டுவதற்கு தமிழ்செல்வன், இசைப்பிரியாக்களின் பெயர்களும் தேவைப்பட்டுள்ளது மக்களின் பிரதி நிதிக்கு. இந்தக்குப்பைகளின் உற்பத்தி டயஸ்போறா தமிழர்களின் புறக்கோட்டையான (பெற்றா) பாரீஸ் லாச்சப்பலில் இருந்தே தொடங்குகிறது.

http://www.eutamil.com/?p=25276 (ஈசன் குலசேகரம்- நா.க.அ(ஜ))

http://www.pathivu.com/news/18489/57//d,article_full.aspx (ஜெயானந்தமூர்த்தி)

http://www.tamilkathir.com/news/5395/58//d,view.aspx (TCC UK)

http://www.tamilkathir.com/news/5350/57//d,view.aspx (TCC uk)

http://www.tamilkathir.com/news/5398/58//d,view.aspx (அனைத்துலகத் தொடர்பகம்)

http://www.tamilkathir.com/news/5210/57//d,view.aspx ( Tcc)

http://www.tamilkathir.com/news/5307/57//d,view.aspx (கறுப்பு)

http://www.tamilkathir.com/news/5300/57//d,view.aspx (கறுப்பு)

http://www.eelampress.com/2011/10/37297/ (அனைத்துலக இரும்பொறை பிரிவு)

http://www.tamilkathir.com/news/5286/57/23/d,view.aspx (அதிர்வு)

http://www.tamilkathir.com/news/5354/57/GTV/d,view.aspx (அதிர்வு)

http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=874 (அதிர்வு)

http://tamilwhiteelephant.blogspot.com/2011/10/sostamils.html (சந்திரமௌலீசன் SOS)

http://www.yarl.com/forum3/index.php?showtopic=92668 (கருத்துதளம்)

http://www.ibctamil.fm/Vanni%20Kalam.html (இரட்டை நிலைத்தளம்)

http://www.ethirinews.com/?p=20027 (பொழுதுபோக்கு தளம்)

http://inioru.com/?p=23279 (மாற்றுகருத்தாளர்)

http://thesamnet.co.uk/?p=29789 (மாற்றுகருத்தாளர்)

http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8011:2011-10-04-103028&catid=343:2011(மாற்றுகருத்தாளர்)

http://sathirir.blogspot.com/2011/09/blog-post_25.html (ஒருபேப்பர்)

http://sathirir.blogspot.com/2011/10/27.html (ஒருபேப்பர்)

http://www.varudal.com/index.php?option=com_content&view=article&id=2245:2011-10-01-08-38-29&catid=4:2009-12-22-22-25-56 (தலைமைசெயலக ஆதரவு தளம்)

http://www.varudal.com/index.php?option=com_content&view=article&id=2255:2011-10-03-08-54-20&catid=13:2009-12-24-18-21-58

http://www.eelam5.net/news/index.php?mod=article&cat=esa&article=3403 (தலைமைசெயலக ஆதரவு தளம்)

http://www.eelam5.net/news/index.php?mod=article&cat=news&article=3428

(ஜீரிவி)

இதுவரைக்கும் மாவீரர்தினத்தை அடிப்படையாக் கொண்டு 50 பத்திகள் பல்வேறு பெயர்களில் எழுதப்பட்டிருக்கின்றன ஆனால் எதிலும் மாவீரர்கள் பற்றியோ அவர்களது அர்ப்பணிப்புப் பற்றியோ பதிவில்லை. அனைத்துமே அவர்களை வைத்துக் கொண்டு இடம்பெற்றுவரும் பிழைப்புவாதச் சண்டைகளின் எதிரொலிகள் மட்டுமே. அவற்றைக் கருத்தில் கொண்டே இதனை எனது 57வது பிறந்த நாளில் 57 வது பத்தி என்று அழைக்கின்றேன்.எனது 57வது பிறந்த இறந்த நாளை யார் கொண்டாடப்போகிறீர்கள்? யார் உரித்துக்கொண்டாடப்போகிறீர்கள்? இதன் பின்னர் மேலும் சில பிழைப்புவாத பத்திகள் வெளிவராது இருந்தால் 58வது பத்தியில் இன்னும் சில சுவாரசியமான தகவல்களைப் பார்ப்போம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாட்டைவிட்டு வெளிக்கிட்ட நாளிலையிருந்து......தேவையில்லாமல் நேரத்தையும் செலவழிச்சு.....உள்ளதையும் தட்டிக்குடுத்து.....தேவையில்லாமல் மற்ரவனோடை வாக்குவாதப்பட்டு......தேவையில்லாமல் வருத்தத்தையும் தேடி......தேவையில்லாமல் நிம்மதியிழந்து......ஓடோடி உழைச்சு கலோடாகிபோனதுதான் மிச்சம்.என்னைப்பொன்றவர்கள் அங்கேயும் அகதி....இங்கேயும் அகதி......இப்படி இராவணன் தலைமாதிரி இங்கேயும் பல தலைகள் வருமென்று கனவிலும் நினைக்கவில்லை....இன்று சாதரண புலம்பெயர்மக்களின் நிலை "பிச்சைவேண்டாம் நாயை பிடி"

  • கருத்துக்கள உறவுகள்

உந்த, நாயளின் இழுபாட்டை பார்ப்பதை விட...

அப்பனே..., சிவனே...., எண்டு சும்மா இருக்கலாம்.

தமிழன் வெட்கம் கெட்ட, மிருகக் கூட்டம்.

இங்கே மாவீரர்கள் தியாகத்தை நினைவாக்க சிலரும் செயற்பட்டு கொண்டுதான் உள்ளார்கள் :

http://www.ustpac.org/

http://www.tamilsagainstgenocide.org/

http://globaltamilforum.org/gtf/

:( :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.