Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எண் கணித வார பலன் 16-10-2011 முதல் 22-10-2011 வரை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1,10,19,28 திகதிகளில் பிறந்தவர்களுக்கு

உடன் பழகுபவர்களும் குடும்பத்தில் உள்ளவர்களும் கைராசிக்காரர் என்று உங்களை நினைப்பார்கள். எந்தக் காரியத்தை உங்கள் கையால் தொடங்கினாலும் அது நல்ல சக்சஸ் தரும் என்று அனைவரும் நம்பும் நிலையில் உங்களுக்கு என்று ஒரு காரியம், ஒரு முயற்சி தொடங்க நினைத்தால் அது மட்டும் சக்சஸ் கோமல் போவது ஆச்சரியத்தை, அதிர்ச்சியை அளிப்பதாக இருக்கும்.

தன்னால் பிற மனிதர்கள் எவ்வளவோ நல்ல பயனை அடையும்போது, தன் அதிஸ்டம் தனக்கு வேலை செய்யாமல் போகிறதே என்று ரொம் வருத்தப்பட்டு கொண்டிருப்பீர்கள். மற்ற ஒருவருக்காக ஒரு காரியத்துக்கு போகிறீர்கள்.

அக்காரியம் உடனே கைகூடுகிறது. உங்களுக்காக அதே காரியத்துக்கு போகிறீர்கள் உடன் முடியாமல் நாளை மறு நாள் என்று இழுபறி நிலையாகும். மற்றவர்களுக்கு இருநூறு வெள்ளி செலவில் செய்து முடிப்பீர்கள். இதே வி~யத்தில் உங்களுக்காக செய்யும் போது இருநூறு வெள்ளி செலவாகும்.

எளிதாக நடந்து முடிகிற விடயத்தைக்கூட கடின முயற்சியின் பெயரில் செய்து முடிக்க வேண்டி உள்ளதே என்று மனக்கவலை அடைவீர்கள்.

துவாதி, ஏகாதாசி, சதுர்தசி, திருவோணம் அனு~ம், ரேவதி நட்சத்திரம் வாக் கூடிய நாளில் முயற்சிகளை அடைத்து கொண்டால் முன்னேற்றம் உறுதியாக இருக்கும். வீட்டில் இருக்கும் சிறு குழந்தைகளை செவ்வாய் சஞ்சாரம் சற்று மட்டு படுத்தலாம். சரியாக சாப்பிடாமல் இருப்பது, இரவில் அழுவது தூங்காமல் சளி காய்ச்சல், இருமல் வாந்தி என்று திரு~;டி நிலை ஏற்பட்டலாம்.

குழந்தைகளுக்கு கையில் கறுப்பு வளையல் போட்டு காலடிமண், உப்பு, மிளகாய், ஆராத்தி தட்டில் போட்டு குளிக்கும் மஞ்சள், குங்குமம், வெற்றிலை, கற்பூரம் சேர்த்து சுற்றி பின் திருஸ்டி கழிக்க வேண்டும். வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் இந்த திருஸ்டி பரிகாரம் சிறந்த பலன் தரக்கூடும்.

2,11,20,29 திகதிகளில் பிறந்தவர்களுக்கு

தொழில் பிரச்சினை, பணப் பிரச்சினை, குடும்பபிரச்சினை ஆகிய மூன்றும் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருக்கும். நினைத்தபடி வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியாமலும் தற்போதைய வாழ்க்கை சூழ்நிலை ஏற்றுக்கொள்ளமுடியாமலும் தடுமாற்றம் ஏற்பட்டுக்கொண்டிருக்கும்.

எதிர்கால வாழ்க்கை மீது அதிக நம்பிக்கை அக்கறை கொண்டிருப்பதால் நமக்கும் ஒரு நல்ல காலம் வரும் என்று உள்ளுணர்வு நம்பிக்கையை ஏற்படுத்திக்கொண்டிருக்கும்.

வாழ்க்கையில் பெரும்பாலான சம்பவங்கள் உங்கள் உள்ளுணர்வில் நினைத்ததுதான் நடந்து வருகின்றன. ஒருவித புனித இறைசக்தி அவ்வப்போது சில உணர்வு சக்தியை உங்களுக்கு தந்து கொண்டிருக்கின்றன.

ஞானக்காரன் கேது சஞ்சாரம் ஆன்மீக இறைவழிபாடு தியானம் யோகா வி~யங்களில் அதீத ஈடுபாட்டை அதிகரிக்கச் செய்யும் தெய்வீக ஒளி முகத்தில் உள்ளத்தில் வாழ்க்கையில் வீசத்தொடங்கும். தனிமை இனிமையைத் தரும்.

குடும்ப உறவினர்கள், நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிவந்து கொண்டே இருப்பீர்கள். துறவியின் மனோபாவம்நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருவதை உணரமுடியும்.

உணவில் கராம் புளிப்பு அசைவ உணவுகளை இப்போது கூடுமானவரை தவிர்ப்பது நல்லது. அவல், கேழ்வரகு, சோளம், கம்பு, புதினா, மல்லி, இஞ்சி, மிளகு, சீரகம், எலுமிச்சைபழம் போன்றவற்றை தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்வது நல்ல பயனை அளிக்கும் கூடியதாக இருக்கும் புதிய தொழில் மீது நாட்டம் அதிகரிக்கும். முன்னேற்றப் பாதையில் செல்ல வாய்ப்பு.

புத்தாண்டு, கௌரவம், அந்தஸ்து, பொருளாதாரம் உயரும், ரொம்ப நாட்களாக கவலை தந்துக்கொண்டிருந்த வி~யங்களுக்கு முடிவு ஏற்படும். நீண்ட நாட்களாக பொறுமையோடு இருந்ததற்கு நல்ல பலன் கிடைக்கும். கை நழுவிப்போன வாய்ப்புக்கள்

மீண்டும்வரும். தொழிலை விட்டு விலகிப் போனவர்கள் திரும்ப வருவார்கள். பொருளாதார கவலைகள். குடும்பகவலைகள் குறையத் தொட ங்கும்.

3,12,21,30 திகதிகளில் பிறந்தவர்களுக்கு.

அந்த அந்த மாதம் ஆகக்கூடிய செலவுகளை சமாளிப்பதே பெரும் கவலையாக இருக்கும். வழ்வின் முன்னேற்றத்திற்கு எதையும் யோசிக்க முடியாத அளவுக்கு எதையும் செய்ய முடியாத அளவுக்கு சூழ்நிலை இருந்துவரும். ஓர் அனாதை போல பல கஸ்டங்களை இதுவரை சமாளித்துகடவுள் கருனையால் முன்னேறிக் கொண்டே வந்து கொண்டிருக்கும்போது இப்போதைய இடர்பாடுகள் எதிர்காலத்தைப் பற்றிய பயத்தை ஏற்படுத்தும்.

நண்பர்களாக பழகியவர்கள் பகைவர்களாக மாறி விடுவார்கள் கடன் வாங்காமல் நிலைமையை சமாளிக்கப்பார்ப்பீர்கள். ஆனாலும் திடீர் செலவுகள் வந்து பணத்தேவைகளை அதிகரிக்கச் செய்யக்கூடும். உங்களின் வருமானம் பொருளாதார நிலைக்கு தகுந்தாற்போல் குடும்பத்தினர்கள் நடந்து கொண்டால் கூட நீங்கள் வீண் க~;டத்திற்கு ஆளாகவேண்டிய அவசியம் இருக்காது.

உங்கள் நிலைமையை மற்றவர்கள் புரிந்து கொண்ளாமல் இருப்பது குறித்த பிரச்சினையே பெரிதாக இருக்கும். சுற்றியுள்ள சூழ்நிலையை புரிந்து கொண்டு மற்றவர்களோடு அனுசரித்து நடந்து கொண்டாலும் அவர்கள் முரண் பிடித்து பிரச்சினைகளை கிளப்பிக்கொண்டிருப்பார்கள்.

முக்கிய விடயம் ஒன்றில் இப்படிச் நடக்குமா? அப்படி நடக்குமா? என்று மதில்மேல் பூனை மாதிரி குழப்ப நிலை நீடிக்கும். பிற மனிதர்களின் எவ்வித ஆதாரமின்றி, உதவியின்றி, நல்ல மனிதர்கள் துணை இன்றி தன் சுயகாலில் நின்று இத்தனை காலம் வாழ்க்கையை எப்படி கடந்த வந்திருக்கிறோம்? என்று இப்போது உங்களைப்பார்த்து உங்களுக்கே வியப்பாக இருக்கும். இனி உள்ள மீதி காலத்தையும் இதே போல கடந்துவிட முடியுமா? என்று யோசிக்கவைக்கும். யாரிடம் இருந்;து விலகி இருக்கவேண்டும். என்று முடிவு செய்து வைத்தீர்களோ இப்போது அவர்களாகவே விலகிப் போவார்கள்.

4,13,22,31 திகதிகளில் பிறந்தவர்களுக்கு

உற்றார் உறவுகள் கைவிட்ட போது கலங்காத நீங்கள் உயிருக்கு உயிராக பழகிய நண்பர்கள் கைவிடும் போது கலங்கி நிற்பீர்கள். உறவுகளைவிட நட்புக்கு ரொம்ப மதிப்பு அளிப்பீர்கள் எந்த உறவினர்களிடமும் நெருங்கி பழக மாட்டீர்கள் நண்பர்களிடம் உறவினர்கள் போல் பழகுவீர்;கள். வேலை வேலை என்று பல மணி நேரம் கஸ்டப்பட்டாலும் உடன் பழகும் நண்பர்களைப்பார்த்து பேசினால் எல்லா கஸ்டங்களையும் மறந்துவிடுவீர்கள்.

இப்போதைய சந்திரன் சஞ்சாரம் தூய அன்பின் நட்பை பாதித்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சென்ற கால வாழ்வில் காயங்களும், சந்தோச நினைவுகளும் ஆழமானதாக உள்ளன. இன்றைய காலங்கள் உப்பு சப்பற்று ஒரு பிரயோசனமும் இல்லாத மாதிரி இருக்கின்றன. சென்ற காலங்கள் தான் ஒரு பயனும் இல்லாமல் சென்று விட்டது. இனிவரும் மிச்ச காலத்தையாவது அர்த்தமுள்ளதாக்கி கொள்ளவேண்டும். என்கிற சிந்தனை இப்போது மேலோங்கி இருக்கும்.

குடும்ப நன்மை எதிர்கால வாழ்க்கை வளர்ச்சிக்காக இப்போது புதிய யோசனை திட்டங்களுடன் செயற்படுவீர்கள். இப்போது நடக்கும் ஒரு சில நிகழ்வுகள் புதிய உற்சாகத்துடன் தைரியத்துடன் காரியங்களை செய்ய வைக்கும். அறிவார்ந்த செய்பாடுகள் அதிஸ்ட திசையை வந்த சேரும் தன் வாழ்க்கை சந்தோசங்களை தியாகம் செய்து தொழிலுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். இதுவரை சொன்ன பேச்சைக் கேட்காமல் இருந்தவர்கள் இப்போது கேட்டு நடப்பார்கள்.

5,14,23 திகதிகளில் பிறந்தவர்களுக்கு

முன்பிருந்த சுறுசுறுப்பு, வேகம் உறுதியான மனநிலை இப்போது சற்று குறைந்தது போல இருக்கும். மாறி மாறி வரும் வாழ்க்கை நெருக்கடி நிம்மதியை பாதிக்கக்கூடும். குளிர் காலம் வெயில் காலம், மழைக்காலம் இலையுதிர்காலம் இவை துளிர் விடும் காலம் என்று காலம் மாறிக் கொண்டே இருப்பது இயற்கை வகுத்த நியதி.

இந்த காலமாறுதல் சுழற்சி உலகம் தோன்றியதில் இருந்து வந்து கொண்டே இருக்கிறது. பருவகால மாற்றத்திற்கு தகுந்தாற் போல குளிர்காலத்தில் கம்பளி ஸ்வெட்டர் வெயில் காலத்தில் ஏயாக்கொண்டிசன் பயன்படுத்தி இயற்கையால் வரக்கூடிய பாதிப்புக்களை செயற்கையால் மாற்றிக்கொள்வது போல நம்மை நோக்கி வரக்கூடிய வாழ்வியல் பிரச்சினைக்கு எப்படி? எந்த மாதிரி தீர்வு காணவேண்டும் பிரச்சினையை நீக்கிவிட்டால் வாழ்க்கை பாதிக்கப்பட வாய்ப்பில்லை.

கன்னி ராசியில் இறுதிக் கட்டசனி சஞ்சாரம் துலாம் ராசி செல்வதற்குகுள் சிற்சில தீங்குகளை வீட்டிலோ தொழிலிலோ செய்யக்கூடும். என்பதால் எதையும் வரும் முன் யோசித்து செய்ய வேண்டும். மற்றவர்களிடம் உள்ள குறைபாடுகளைதான் அறிந்து இருந்தாலும் அதை மற்றவர்களிடம் வெளிப்படுத்தாமல் இருப்பது யாரை பற்றியும் யாரிடமும் குறை கூறாமல் இருப்பது இப்போது முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டியவை. பேச்சினால் வரக்கூடிய பெரும்பாலான பிரச்சினைகளை தவிர்க்க இது உதவக் கூடும். எப்போதும் எல்லோரிடத்திலும் எவ்வளவு பணிவாக நடந்துகொள்ள முடியுமோ சிறியவர்கள் எளியவர்களை கூட ரொம்ப மதித்து பழகுவது வாழ்க்கை பாதுகாப்புக்கு உகந்ததாக இருக்கும்.

சனியால் வரக்கூடிய தீங்குகளை வெல்லக்கூடிய உபாயமாக இருக்கும். தேவையற்ற வி~யங்களுக்காக நேரத்தையும் பணத்தையும் செலவிட வேண்டாம். நல்லது நடக்கிறவரை சேர்ந்து போராடி விட்டு இறுதியில் அவற்றில் இருந்து விலகிவிடுவீர்கள்.

6,15,24 திகதிகளில் பிறந்தவர்களுக்கு

சரியான நேரத்திற்கு சாப்பாடு சரியான நேரத்தில் தூக்கம் என்று இல்லாமல் அன்றாட பணிகள் காலத்தை எப்படி கடந்து செல்லப்போகிறோம். எப்படி கரை ஏறப்போகிறோம். என்று குழம்பி இரு வாழ்க்கை நிலையில் கருணை செய்து எளிதாக கரையேறக்கூடிய வழியை காண்பிப்பது புதியதாக குடும்பத்துக்கு வந்த உயிரால் அவர் வந்து சேர்ந்த நேரம் செல்வம் அருவியாய் கொட்ட தொடங்கும்.

தங்க குத்து விளக்காய் வாழ்க்கையை ஜொலிக்க உங்கள் வாழ்க்கை க~;டங்கள் குறைய ஏதுவானாலும் அவை ஒவ்வென்றுக்கும் தீர்வு நல்ல வழி வகை நிரைய நாட்களுக்கு பிறகு புத்தி தெளிவு பிறக்கும். வாழ்க்யையைப் பற்றி யோசிப்பீர்கள். பின் ஒரு நாள் சாதிப்பீர்கள்.பள்ளத்தாக்கில் இருந்தது வாழ்க்கை மேட்டை உயரர் தொடங்கப் போகிறது.

7,16,25, திகதிகளில் பிறந்தவர்களுக்கு

பணியாற்றம் இடத்திலும் நண்பர்கள் வட்டத்திலும் உங்கள் ஆலோசனையைக் கேட் காத்திரிபார்கள். மற்றவர்களுக்கு நீங்கள் கூறும் ஆலோசனை அவர்களுக்கு சிறந்த பயனை நல்ல மாற்றங்களை தருவதால் தேடி வருவோர். அதிகமாகிக் கொண்டே இருக்கும். பிற மனிதர்களுக்கு செய்யும் உதவிகள் ஆத்ம திருப்தியை தரக்கூடியதாக இருக்கும். ஆனால் தன் நிலை குடும்பநிலையும், யோசித்து இரக்கக் குணத்தை ஒரு கட்டுபாட்டுக்குள் எல்லைக்குள் வைத்துக்கொள்வது நல்லது.

சில சமயங்களில் உறவினர்கள் சிலருக்கு, இரக்கப்பட தகுதி இல்லாதவர்களுக்கு, உதவக்கூடாதவர்களுக்கு உதவிசெய்யப் போய் அவதியில் மாட்டிக் கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. வீட்டிலேயேயும், அலுவலகத்திலும் நிறைய நாட்களுக்குப்பிறகு இப்போதுதான். கொஞ்சம் அமைதி நிலவும். நட்பின் அருமை இப்பொழுது புரியத் தொடங்கும்.

தேவையில்லாமல் இருந்தவந்த தொல்லைகள் நொந்தரவுகள் அகலும். புதிய பொறுப்புக்கள், வாய்ப்புக்கள் வருவாயை சற்று அதிகப்படுத்தலாம். வாழ்க்கையில் பிடிப்பில்லாமல் இருந்து வந்தவர்களுக்கு பிடிப்பு ஏற்படுகிறமாதிரி சில புதிய அறி முகம் நட்ப உதவிகள் கிடைக்கும். ஆத்ம திருப்தியும் மன மகிழ்வும் ஏற்படும். படியான சூழல் நிலவக் கூடும். சம்பாதிப்பும் உழைப்பும் உருப்படியாய் இருக்கும்.

முன்பு போட்ட திட்டத்தை இப்போது திடீரென்று மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும். துணை வருமானங்கள் இடையில் தடைப்பட்டிருந்த வாய்ப்புக்கள் மீண்டும் வர வாய்ப்புக்கள் உண்டு. வருங்காலம் வளமாக அமைவதற்கு மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் நல்ல பலனைத் தரத் தொடங்கும்.

சத்து குறைவால் உடம்பு பாதிக்கப்படலாம். இரத்தக் குறைவு கல்சியக்குறைவு முழங்கால், கை மூட்டுகளில் வலியை ஏற்படுத்தலாம். அன்றாட அலுவல்கள் சுமை அதிகரித்து கொண்டே போகலாம். அன்றாட பணிகளை மாற்றிக்கொள்வது. நல்லது.

8,17, 26, திகதிகளில் பிறந்தவர்களுக்கு

வேலை, தொழில் செய்யுமிடத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு கவனமாக செயல்பட முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. பிறரிடம் பொறுப்புகளை தராமல் நேரடி கவனத்தில் செய்வது நல்லது.

பிறரால் நம்பிக்கைத் துரோகத்துக்கு, ஏமாற்றத்திற்கு, இழப்புக்கு ஆட்படக் கூடிய நிலை உள்ளதால் நிதானப்போக்கு தேவைப்படும். சுற்றத்தாருடன் சுற்றுலா செல்வது, தொழில் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வது, நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்வது நிறைய பணவிரயத்தை ஏற்படுத்தலாம். உழைப்பிற்கு கிடைக்க வேண்டிய மரியாதை, வெகுமதி கிடைக்காது. பாதகத்தில் சனி ஊரில் பகை ஏன்பார்கள் போகிற இடங்களில் நிழலாய்வம்புகள் வலியாகும்.

உடன் பிறந்தவர்கள் உறவினர்களுக்காக அதிக பணத்தை செலவு செய்தம் அவர்களுக்காக அதிக பிரயாசைப்பட்டும் கடைசியில் கெட்டப் பெயரோடு மன வருத்தத்தோடு வெளிவர வேண்டியிருக்கும் . பல முறை முயற்சி செய்தும். முன்பு நடக்காமல் போன காரியங்கள் இப்போது சிறிது முயற்சியிலே நடக்க வாய்ப்புண்டு. செவ்வாய் சஞ்சாரம் நீண்ட நாளைய மனகுறை ஒன்றை தீர்ப்பதற்கு உதவக்கூடும். பெற்றோர். குழந்தைகள் அல்லது கூட பிறந்தவர்கள் வகையில் கருத்து வேறுபாடுகள், சதா பிரச்சினைகள் செய்வதறியாது திகைத்து நிற்க வைக்கும். அன்பு பாசம். திசைமாறி போனது போல இருக்கும்.

புதன் சஞ்சாரம் பொருளாதார சம்பந்தமப்பட்ட வி~யங்களில் மேன்மையை ஏற்படுத்தும். முகப்பொலிவை, உடல் பலத்தை கூட்டும் உடலில் சற்று சதை போடவைக்கும். மனதில் யூகம் செய்தது வாழ்க்கையில் சில விடயங்களுக்கு அப்படியே நடந்து ஆச்சரியப்பட வைக்கும் பிறர் மனத்தில் நினைப்பதை உணர்கிற சக்தி ஏற்படும்.

9,18,27 திகதிகளில் பிறந்தவர்களுக்கு

முன்பில் யோசிக்காமல் பல பேர்களுக்கு பல விதமான நன்மைகளை, உதவிகளை செய்து தன் வாழ்;க்கையை தானே பாதிக்கச் செய்கிற செய்கைகளை இப்போது மாற்றிக் கொள்ள வேண்டும். இப்போது நிறைய பணச்செலவுகள் செய்தும் சில காரியங்கள் கைகூடி வராமல் இருப்பது குறித்து வருத்தம் இருக்கும்.

இயல்பான பழக்க வழக்கம் வாழ்க்கை சூழ்நிலையில் இருந்து எதிர்மறையான மாற்றங்கள் ஏற்டுதல் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் தடைகள் ஏற்படுதல் ரொம்ப சீக்கிரமாக நடந்து முடிய வேண்டிய சாதாரண சிறு காரியம் கூட தாமதத்தின் பெயரில் நடப்பது எளிதாக செய்து முடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். பூர்வ கர்மா என்கிற முன்ஜென்ம கர்மா இப்போது வாழ்வில் நடக்கும் முக்கிய நன்மை தீமைகளை முடிவு செய்யக் கூடிய நிலையில் உள்ளது.

தேகநலன் குடும்ப நலன் எந்த வகையிலும் பாதிப்புக்குள்ளாகாமல் பார்த்து நடந்து கொள்ள வேண்டும். பெரிய பெரிய திட்டங்கள் வைத்திருப்பீர்கள். பெரியளவில் காரியங்களை சாதிக்கவேணும் என்கிற ஆர்வம் அதிகமாக இருக்கும் ஆனால் சிறிய காரியங்களில் கவனக்குறைவில் சிறு தவறுகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக இருக்கும். தங்களுடைய திறமையை மட்டுமே நம்பி செய்யக்கூடிய காரியங்கள் மட்ம் எப்போதும் சிறப்பான பலத்தை தரக்கூடியதாக இருக்கும்.

மற்றவர்களுடன் இணைந்து மற்றவர்களின் உதவியை நாடி செய்யும் காரியம் உருப்படி இல்லாமல் போலாம். குடும்பத்தின் தேவைகள் செலவினங்கள் விதி தரும் நெருக்கடிகள், மதி தரும் மனக்கவலைகள் இத்தனையும் மீறி அவ்வப்போது நடக்கும் நன்னமைகள் இறைவன் தன் மீது கொஞ்சம் கருணை வைத்துக்கொண்டிருக்கிறார். என்கிற சந்தோசம் இருக்கத்தான் செய்யும்.

http://www.eelampress.com/2011/10/38169/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகம் “இது உனது போன பிறப்பின் கர்மபலன்”; என்று கூறுகிறது. இது போன பிறவியின் பலன் என்று, எவ்வாறு உங்களுக்கு தெரியும்? மக்களை தவறான பாதையில் இட்டுச் செல்பவர்களுக்கு இந்த உலகத்திலே குறைவே இல்லை.

ஒருவர் உண்மை சொல்கிறாரா அல்லது பொய் சொல்கிறாரா என்று மனிதனுக்கு தெரியாது.

சில விடயங்களை விற்க முடியாது. இன்று கலியுகத்திலே கடவுளையே விற்று காசாக்குகிறார்கள். “இந்த சிறிய கடவுளின் படத்தை, அல்லது சிலையை வாங்கி சட்டைப் பையிலே வைத்துக் கொள்ளுங்கள். எங்கு சென்றாலும் எடுத்துச் செல்லலாம்” என்று கூறுவார்கள். உங்களின் உள்ளே கடவுள் இருக்கும் பொழுது, உயிருடன் இருக்கும் பொழுது, ஏன் கடவுளை பணம் கொடுத்து வாங்க வேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் “இது உனது போன பிறப்பின் கர்மபலன்”; என்று கூறுகிறது. இது போன பிறவியின் பலன் என்று, எவ்வாறு உங்களுக்கு தெரியும்? மக்களை தவறான பாதையில் இட்டுச் செல்பவர்களுக்கு இந்த உலகத்திலே குறைவே இல்லை.

ஒருவர் உண்மை சொல்கிறாரா அல்லது பொய் சொல்கிறாரா என்று மனிதனுக்கு தெரியாது.

சில விடயங்களை விற்க முடியாது. இன்று கலியுகத்திலே கடவுளையே விற்று காசாக்குகிறார்கள். “இந்த சிறிய கடவுளின் படத்தை, அல்லது சிலையை வாங்கி சட்டைப் பையிலே வைத்துக் கொள்ளுங்கள். எங்கு சென்றாலும் எடுத்துச் செல்லலாம்” என்று கூறுவார்கள். உங்களின் உள்ளே கடவுள் இருக்கும் பொழுது, உயிருடன் இருக்கும் பொழுது, ஏன் கடவுளை பணம் கொடுத்து வாங்க வேண்டும்?

நன்றி தமிழ் அரசு இணைப்பிற்கு,

Quote:"உங்களின் உள்ளே கடவுள் உயிருடன் இருக்கும் பொழுது"

நான்றாக சொன்னீர்கள், எனக்கு தெரிந்த ஒருவர் காலையில் கண்ணாடிக்கு முன் நின்று தன் விம்பத்தை பார்த்து வணங்குகின்றவர்.

அகதி சில நாட்களா காணவில்லை, இப்போ உங்கள் எழுத்துகள் வசிக்க கூடியதாக இருக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.