Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரணிலும் மகிந்தவும் ஒரே இலக்கை நோக்கியே பயணிக்கின்றனர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலும் மகிந்தவும் ஒரே இலக்கை நோக்கியே பயணிக்கின்றனர்:-

24 அக்டோபர் 2011

mahinda_ranil_CI.jpg

நாட்டின் ஆட்சித் தலைவரான மகிந்த ராஜபக்கவும், எதிர்கட்சித் தலைவரான ரணில் விக்ரமசிங்கவும் ஒருவரை ஒருவர் குறைகூறி வந்தாலும் அவர்கள் இருவரும் ஒரே இலக்கை நோக்கியே பயணிக்கின்றனர். உலக ஒப்பாசாரத்துக்காக தாம் மோதிக் கொள்வதுபோல் காட்டிவருகின்றனரே தவிர அவர்கள் இருவருக்கும் இடையில் இறுக்கமான நட்பும், ஒற்றுமையும் உள்ளது. இருவருமே தமது கட்சிக்குள் தீவிர ஜனநாயகம் வேண்டி நிற்பவர்களை ஓரம் கட்டி வருகின்றனர். பாரதலக்ஸ்மன் பிரேமச்சந்திரா இன்று இல்லாதது ஒழிக்கப்பட்டுள்ளார். மகிந்த ராஜபக்ஸவிற்கு சவாலாக விளங்கிய ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஆட்சியாளரின் நவ தாராளவாத கொள்கைகளுக்கு எதிர்ப்பு வெளியில் இருந்து மாத்திரம் வரவில்லை உள்ளே இருந்தும் வெளிக்கிழம்பத் தொடங்கியுள்ளது. எனவே பாராதலக்ஸ்மன பிறேமச்சந்திரா ஏதோவிதத்தில் மகிந்த ஆட்சிக்கு தடையாக இருந்துள்ளார். எனவே அவர் இல்லாமல் போய் உள்ளார். மறுபக்கத்தில் ஐக்கியதேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்காவும் தமது கட்சியில் அதிக ஜனநாயக மாற்றங்களை வலியுறுத்துபவர்களை ஓரம் கட்டிவருகின்றார். பலரை வெளியேற்றியும் வருகின்றார். ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோகணேசன் இவைகாரனமாகவே ஐக்கியதேசியக் கட்சியின் உறவை முறிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

இன்று சர்வதேச நாணயநிதியத்தின் கொள்கைகளுக்கு எதிராக யார் செயற்பட்டாலும் அவர் தண்டிக்கப்படும் நிலை காணப்படுகின்றது. நவ தாராளவாத பொருளாதார கொள்ளைகளுக்கு எதிராக செயற்படுகின்றவர்களுக்கே இந்த நிலை இன்று ஏற்பட்டுவருகின்றது. நவ தாராளவாத பொருளாதார அடித்தளத்தின் அம்சங்கள் எவை? சர்வாதிகாரம் மிக்க அரசியல் தலைமை, சகல அதிகாரங்களையும் சர்வாதிகாரிகளுக்கு வழங்குகின்ற அரசியல் அமைப்பு, நாடு முழுவதும் இராணுவமய மாக்கப்படும் நிலை, 18வது திருத்தம் போன்ற அரசரை பலப்படுத்தும் நிகழ்வுகள், 13வது அரசியல் திருத்தம் கரைந்து போகக்கூடிய சூழ்நிலை உருவாக்கம், அரசபயங்கரவாதம் என பல அம்சங்கள் இதன் பின்னே ஒழிந்து காணப்படுகின்றன. நாடு முழுவதும் பாதாள உலகத்தினரை ஒழிக்கப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆனால் அரச பாதாள உலகம் அப்படியே பலமான நிலையில் உள்ளது பாரதலக்ஸ்மன் பிறேமச்சந்திராவை சுட்டது பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த ஒருவரே, கிறீஸ்பூதங்கள் எனப்படும் மர்மமனிதர்களின் வேடத்தை பூண்டவர்களும் பாதுகாப்புத் தரப்பினரே யாழ்பல்கலைகழக மாணவர் தலைவரை தாக்கியவர்களும் புலனாய்வு பிரிவைச் சேர்ந்தவர்களே.எனவேஅரசபயங்கரவாதம் சீரும் சிறப்புடனும் அதிக பலத்துடன் செயற்பட்டு வருகின்றது.

தமிழ் தேசிய பிரச்சினைக்கு தீர்வை வழங்கு என்று உலகமே ஒன்றுபட்டு கூறுகின்றது. ஆனால் மகிந்த ராஜபக்ஷ ஆட்சியாளர்கள், பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போல்' வடக்கு கிழக்கு நிலங்களை கபளீகரம் செய்வதில் குறியாக இருக்கின்றனர். இது தமிழர் அடையாளத்தை சிதைக்கும் செயல் முறையாகவே காணப்படுகின்றது பொறுமைகாத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு வவுனியா நகரத்தில் மிகப்பெரிய மக்கள் போராட்டத்தை நடத்தும் அளவுக்கு நிலைமைகள் கட்டுமீறிச் சென்றுள்ளன. இந்த போராட்டத்தில் தமிழ் மக்களின் முக்கிய தலைவர்கள் அனைவரும் பங்கேற்றுள்ளனர். அமெரிக்கா தீர்த்துவைக்கும், இந்தியா தீர்த்துவைக்கும் என்ற நம்பிக்கைகளை புறத்தொதுக்கிவிட்டு வீதிக்கு வந்துள்ளனர்;. சரணாகதியுடன் கூடிய சமாதானத்தைவிட போராடுவதன் மூலம் கிடைக்கும் இழப்புக்கள் குறைவாகவே இருக்கும் என்பது கார்ல்மாக்ஸ்சின் கருத்தாகும் எனவே போராட்டங்களின் மூலம் தமது உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்ற நம்பிக்கையை நோக்கி தமிழ் தலைவர்கள் மாறியிருப்பது தமிழ் தேசியப் பிரச்சினைக்காக போராடுகின்றவர்களுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி என்றே கூறவேண்டும்.

இன்று நவ தாராளவாத சக்திகள் நாட்டின் வளங்களை தம்வசப்படுத்துவதில் பேராசை கொண்டு அலைகின்றனர். வடக்கு கிழக்கு மாத்திரம் அல்ல நாடுமுழுவதும் அவர்களின் வேட்டைக்கு இரையாகின்றது. இதில் உள்ளூர் முதலாளிகளும் ஓரம் கட்டப்படுகின்றனர். இன்று கிராமங்களில் உள்ள நிலங்களை பெரும் நிறுவனங்கள் வாங்கி வருகின்றன. எனவே நாட்டில் எதுவும் எஞ்சி இருக்காத நிலை காணப்படுகின்றது.

எனவே இத்தகைய சவாலை எதிர் கொள்வதற்கு பலமான ஜனநாயக கட்டமைப்பு ஒன்று அவசியமாகின்றது. இது வடக்கு கிழக்கு தெற்கு என்ற இணைப்புடன் கூடிய பலமான அணியாக அமையவேண்டும். அண்மைய தேர்தலில் எமது அணிபெற்ற வெற்றி எதிரணிக்கு பாரிய அச்சுறுத்தலை தோற்றுவித்துள்ளது. நாட்டில் பதிலீடான மூன்றாவது சக்தி ஒன்றின் உதயம் பிரதான இரண்டு கட்சிகளுக்கும் கிலியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல பத்தி எழுத்தாளர் த. மனோகரன் மீது கொலை அச்சுறுத்தல் விடப்பட்டுள்ளது தமிழ் மக்களுக்குரிய பல தகவல்களை தமது கட்டுரைகள் மூலமாக அவர் வெளிப்படுத்தி வந்தார். உண்மைகளை ஜீரணிக்க முடியாதவர்கள் அவரின் வீட்டுக்குச் சென்று இருமுறை அச்சுறுத்தலை விடுத்துள்ளனர். அவரது எழுதும் பணியை நிறுத்துமாறும் மிரட்டி விட்டுச் சென்றுள்ளனர். பயத்தின் அறிகுறி பலாத்காரம் என்பது போல் ஆட்சியாளரின் போக்கு காணப்படுகின்றது எனது வெற்றியை கூட அவர் தர்க்கரீதியாக மிக அழகாக வெளிப்படுத்தி இருந்தார்.

தேர்தல் காலத்திலும் தேர்தலுக்கு பின்பும் எமது அணியான ஜனநாயக மக்கள் முன்னணி மீது பல்வேறு விதமான வதந்திகள் பரப்பப்பட்டு வரப்பட்டது. ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் நாம் பெற்ற 30,000வாக்குகள் அவர்களுக்கு வேம்பாய் கசக்கின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் பெற்ற வெற்றியும் எமது அணிக்கு கிடைத்த 8ஆசனங்களும் பலரது இருப்புக்கு உலை வைப்பதாய் அமைந்துள்ளதால் எம்மீது தீராதபகைமை பாராட்டத் தொடங்கியுள்ளனர் ஆனாலும் தென் இலங்கையில் முற்போக்கு சக்திகள் மிகவும் மகிழ்வடைந்தவர்களாக காணப்படுகின்றனர். இந்த நாட்டிற்கு உண்மையான இறுக்கமான ஒரு ஜனநாயக சக்தியின் தேவைப்பாட்டை அவர்கள் எமது வெறியின் மூலம் அடையாளம் காண்கின்றனர்.

தமிழ் தலைவர்கள் தேசிய தலைவர்களாக மாறுவதை பெருந்தேசிய கட்சிகள் இரண்டுமே வெறுகின்றன. ஜனநாயக மக்கள் முன்னணி அந்த நிலையை நோக்கி நகர்வது அவர்களுக்கு பெரும் சோதனையாக மாறியுள்ளது. ஒடுக்கப்பட்டவர்கள் ஒன்றினைவது அவர்களுக்கு சவாலாக அமையும் என்பதில் அவர்கள் கவனமாக உள்ளனர். எனவே எம்மை மேலும் பலப்படுத்தி இந்த சவால்களை எதிர் கொள்ளத் தயாராவோம்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/69072/language/ta-IN/article.aspx

மேற்குலகில் நன்மதிப்பை இன்னும் தக்க வைத்துள்ள சிங்களப் பயங்கரவாதிகளான ரணில், சந்திரிகா, சஜித் போன்றவர்களின் சிங்கள வெறித்தனத்தையும் தமிழர்கள் வெளிப்படுத்துவதுடன், இவர்களையும் நம்பத் தயார் இல்லை என்பதை தெளிவாக கூறவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலும் மகிந்தவும் ஒரே இலக்கை நோக்கியே பயணிக்கின்றனர்:-

24 அக்டோபர் 2011

mahinda_ranil_CI.jpg

உண்மை நிலை இது தான், நுணா!

dsc00079hx8.jpg

இந்த போராட்டத்தில் தமிழ் மக்களின் முக்கிய தலைவர்கள் அனைவரும் பங்கேற்றுள்ளனர். அமெரிக்கா தீர்த்துவைக்கும், இந்தியா தீர்த்துவைக்கும் என்ற நம்பிக்கைகளை புறத்தொதுக்கிவிட்டு வீதிக்கு வந்துள்ளனர்;. சரணாகதியுடன் கூடிய சமாதானத்தைவிட போராடுவதன் மூலம் கிடைக்கும் இழப்புக்கள் குறைவாகவே இருக்கும் என்பது கார்ல்மாக்ஸ்சின் கருத்தாகும் எனவே போராட்டங்களின் மூலம் தமது உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்ற நம்பிக்கையை நோக்கி தமிழ் தலைவர்கள் மாறியிருப்பது தமிழ் தேசியப் பிரச்சினைக்காக போராடுகின்றவர்களுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி என்றே கூறவேண்டும்.

கூட்டமைப்பின் உண்ணாவிரத போராட்டமானது மக்களை ஒன்று சேர்க்கும், அணி திரட்டும், விழிப்புணர்வு ஊட்டும் நீண்ட பயணத்தின் ஒரு கன்னி முயற்சி. ஆனால் அங்குள்ள இராணுவமும், புலனாய்வையும் மீறி இதைச்சாதிப்பது சவாலே. அதைவிட மக்கள் உளரீதியாக எந்த போராட்டத்திற்கும் தயங்குவதற்கு நிறையவே காரணங்கள் உள்ளன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.