Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலம்பெயர் தளங்களிலும், சிங்கள தேசத்தின் ஆள ஊடுருவும் படையணிகள்!

Featured Replies

உலகம் முழுவதும் ஆவிகள் தினம் கொண்டாடப்பட்டு வரும் தினமான அக்ரோபர் 31 அன்று அதிகாலை பாரிஸ் நகரில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாள் பொறுப்பாளரும், தமிழ்த் தேசிய விடுதலைத் தளத்தின் முக்கிய செயற்பாட்டாளருமான திரு. பருதி அவர்கள் படு மோசமான தாக்குதல்களுக்குள்ளாகி, ஆபத்தான் நிலையில் வைதிதயசாலை அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிதிச்சையளிக்கப்பட்டு வருகின்றார்.

ஆவிகள் தினத்தன்று முகமூடிகள் அணிந்து வீதிகளில் செல்வது சாதாரணமான விடயமாகவே மக்கள் கருதும் சூழலைப் பயன்படுத்தி மூன்று ஆயுததாரிகள் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இந்தத் தாக்குதலைத் தடுக்க முயற்சித்த பருதியுடன் கூடச் சென்ற இருவரும் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். பொல்லுகள், இரும்புக் கம்பி, வாள் ஆகியவற்றால் பருதி மீது தாக்குதல் நடாத்தப்பட்டபோது இவர்கள் அதனைத் தடுத்து அவரைக் காப்பாற்றியுள்ளார்கள். இந்தத் தாக்குதல் சம்பவம் பற்றிய விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.

புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் குழப்பங்களையும், பிளவுகளையும் உருவாக்கும் முயற்சியில் தோல்வியைத் தழுவிய சிங்களப் புலனாய்வாளர்கள், தமிழ்த் தேசிய சிதைவுக்கான உச்ச இலக்காக மாவீரர் தினத்தைக் குறி வைத்துள்ளனர். அந்த சிங்களச் சதியினை களத்தில் நின்று எதிர்த்துப் போராடும் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தி, அதிலிருந்து அகற்றும் முயற்சியாகவே இந்தத் தாக்குதல் முயற்சி நோக்கப்படுகின்றது.

ஏற்கனவே, பிரித்தானிய தமிழ்த் தேசிய ஒருங்கிணைப்பாளர் தனம் மீது இதே பாணியில் தாக்குதல் நடாத்தப்பட்டது. இதைவிட, ஜெர்மனியிலும், பிரித்தானியாவிலும் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள இருவர் தாக்கப்பட்டுள்ளார்கள். பாரிசில் இருந்து வெளிவரும் ஈழமுரசு பத்திரிகையின் ஊடகவியலாளர் ஒருவர் தாக்குதல் முயற்சியிலிருந்து புத்திசாலித்தனமாகத் தப்பித்துக்கொண்டுள்ளார்.

இந்தத் தாக்குதல்கள் எவையும் தனிப்பட்ட காரணங்களுக்காகவோ, உள் முரண்பாடுகளாலோ இடம்பெற்றவை அல்ல. மாறாக, திட்டமிட்ட வகையில், தகவல்கள் திரட்டப்பட்டு, தாக்குதலுக்குரிய நபரின் நடமாட்டங்கள் கண்காணிக்கப்பட்டு, வெகு நேர்த்தியாக நடாத்தப்பட்டுள்ளன.

தமிழீழப் பகுதியில் ஆழ ஊடுருவும் படையணிகளில் உள்வாங்கப்பட்ட ஒட்டுக்குழு உறுப்பினர்களால் விடுதலைப் புலி உறுப்பினாகள் படுகொலை செய்ததற்கு ஒப்பிடக் கூடியதாக இந்தத் தாக்குதல்களை அடையாளப்படுத்தலாம். புலம்பெயர் தேசங்களிலும், சிங்களப் புலனாய்வாளர்கள் தமிழ்க் கூலிக் குழுக்களின் உதவியுடன் இந்தத் தாக்குதல்களை மேற்கொள்கின்றனர் என்றே நம்பப்படுகின்றது.

இவர்களது இலக்கு, தனி நபர்கள் குறித்தது அல்ல. தமிழ்த் தேசிய தளமே இவர்களது இலக்கு. அந்த இலக்கை அடைவதற்குத் தடையாக இருப்பவாகளாகத் தெரிவு செய்யப்பட்டவர்கள் மீதே தாக்குதல்கள் தொடர்கின்றது. இத்தகைய தாக்குதல்கள் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

முள்ளிவாய்க்காலில் சிங்கள தேசம் பெற்ற வெற்றியை நிரந்தரமாக்கவும், தக்க வைத்துக்கொள்ளவும் தடையாக இருக்கும் புலம்பெயர் தமிழர்களது பலத்தைச் சிதைப்பதை நோக்காகக் கொண்டே சிங்கள தேசம் நகர்வுகளை மேற்கொண்டுள்ளது. அதன் உச்சக்கட்டமாகவே, மாவீரர் தினம் குறி வைக்கப்பட்டுள்ளது. மாவீரர் தினத்தைச் சிதைப்பதன் மூலம், புலம்பெயர் தமிழர்களது உணர்வுபூர்வமான அணி திரள்தலையும், எழுச்சியையும் வீரியமற்றதாக மாற்ற முடியும் என்று சிங்கள அரசு நம்புகின்றது. இது, மாவீரர் துயிலும் இல்லங்களையும், அவர்களது நினைவு இடங்களையும் அழித்து நிர்மூலமாக்கும் சிங்கள தேசத்தின் நிகழ்ச்சி நிரலுடன் ஒத்துப்போவதை உணர்ந்து கொள்ளலாம்.

எனவே, மாவீரர் தினத்தை அண்மித்த நாட்களில் இது போன்ற பல தாக்குதல்களும், படுகொலைச் சம்பவங்களும் கூட அரங்கேற்றம் பெறலாம். ஆனாலும், மாவீரர் கனவுகளுடன் தங்களை இணைத்துக்கொண்ட புலம்பெயர் தமிழர்கள் இந்த சிங்களச் சதிகள் அத்தனையையும் முறியடிப்பார்கள் என்பது திண்ணம்.

http://www.pathivu.com/news/19037/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியான செயல்களை வெளிநாட்டு உளவுத்துறையும், காவல் துறையும் விரும்பாது. பிச்சைக்கார நாட்டு உளவுத்துறை எல்லாம் மேற்கு நாடுகளில் கோலோச்சுவது பிடிக்காது.

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பிரிவுகளுக்கு இடையில் இன்று எற்பட்டிருக்கும் முரண்பாடு ஒன்றும் பகை முரண்பாடு கிடையாது. அது தீர்க்கப்பட முடியாததும் அல்ல.ஏனெனில் விடுதலைப்புலிகள் இயக்கம் ஊடகங்களில் ஆய்வெழுதியும் மேடைகளில் வீரவசனம் பேசியும் உருவாக்கப்பட்டதல்ல.அது 48 ஆயிரத்துக்கு மேற்பட்ட அப்பழுக்கற்ற அர்ப்பணிப்பாலும் ஈகத்தாலும் உருவாக்கப்பட்டது.விடுதலைப்புலிகளின் வரலாற்றின் ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு மாவிரனின் உயிராலும் இரத்தத்தாலுமே எழுதப்பட்டிருக்கிறது.

போராளிகளுக்குள்ளும் தளபதிகளுக்குள்ளும் முரண்பாடுகளும் கருத்துவேறுபாடுகளும் மோதல்களும் இருந்த வரலாறுகள் உலகின் எல்லாவிடுதலை இயக்கங்களிலும் இருந்திருக்கிறது.அது விடுதலைப்புலிகள் இயக்கத்திலும் இருந்தது.அதேவேளை தங்களோடு முரண்பட்ட மோதிய சகபோராளிகளை போர்களத்திலே காப்பாற்றச் சென்று விரச்சாவடைந்த எத்தனையோ மாவிரர்களின் வரலாறு விடுதலைப் புலிகள் இயக்கத்திலே இருக்கிறது.

ஓரு விடுதலைப் போராளிக்குரிய முதல் பண்பு சக போராளியை நேசிப்பது.ஒரு போராளிக்கும் சராசரி மனிதனுக்கும் உள்ள வேறுபாடு என்பதே தன்னை ஒறுப்பது தன்னை அர்ப்பணிப்பது தன்னுடைய தோழனுக்கு தோள் கொடுப்பது என்பதில் இருந்து தான் ஆரம்பிக்கிறது.

'ஓ மரணித்த வீரனே உன் காலணிகளை எனக்குத்தா! உன் ஆயுதங்களை எனக்குத் தா! உன் சீருடைகளை எனக்குத் தா ' என்ற பாடலை அல்லது மாவீரர் துயிலும் இல்லப்பாடலை ஒரு சில நிமிடம் கண்கணை மூடிக் கொண்டு கேட்டுப்பாருங்கள்;

ஓரு போராளி மண்ணில் வீரச்சாவை தழுவி விழுகிற போது அடுத்த போராளி அவனது பொறுப்பை எடுத்துக் கொண்டு அவனது இடத்தை நிரப்புகிறான்.இதனால் தான் போராளிகள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகிறார்கள் என்கிறோம்.

முள்ளிவாய்கால் போர் களத்திலே ஏற்பட்ட தோல்வி என்பது நினைத்துப்பார்க்க முடியாத ஒன்று.அந்த போர்களத்திலே நின்ற போராளிகள் சரணடைந்தது சரியா பிழையா? அவ்வாறு சரணடைந்தபின் கிடைக்கக் கூடிய சந்தர்ப்பங்களை பயன்படுத்தி தப்பி வந்தவர்கள் துரோகிகளா? என்பதை தீர்மானிக்கும் பொறுப்பு தேசித்தலைவருக்குத்தான் உண்டு.இது தான் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மரபு. விடுதலைப்புலிகளின் எந்த ஒரு போராளியும் எந்த ஒரு பிரிவும் அடுத்த போராளிக்கு அல்லது பிரிவினருக்கு துரோகி என்று முத்திரை குத்தும் உரிமை கிடையாது.

அடுத்து விடுதலைப்புலிகள் இயக்கம் முள்ளிவாய்காலில் சிதைக்கப்பட்டதே தவிர வேரறுக்கப்படவில்லை. விடுதலைப்புலிகள் இயக்கம் படைத்துறை அரசில் துறை புலனாய்வுத்தறை நிதித்துறை நீதி நிர்வாகத்துறை காவல்துறை என்ற 6 கட்டமைப்புகளைக் கொண்டது.

இந்த 6 கட்டமைப்பக்களில் காவல்துறையை தவிர மற்ற அனைத்து துறைகளும் நீண்டகாலமாக தாயகத்துக்கு வெளியிலும் இயங்கி வந்தன.அவற்றில் அரசியல் துறையின் ஒரு உப பிரிவான அனைத்துலகத் தொடர்பகம் மட்டும் தான் மக்களுக்கு இனங்காட்டி வேலை செய்த அனுமதிக்கப்பட்டது.

இதிலே இப்போது அனைத்தலகத் தொடர்பகத்துக்கும் விடுதலைப்புலிகளின் ஏனைய பிரிவினரை உள்ளடக்கிய தலைமை செய்லகத்துக்குள் இடையில் ஏற்பட்டிருக்கும் முரண்பாடு விடுதலைப்புலிகள் இயக்கத்துக்குள் எற்பட்டிருக்கும் முரண்பாடு. ஆது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டியவர் தேசியத்தலைவர்.தலைமைச்செயலகத்தில் இருப்பவர்களை துரோகி என்று சொல்வதற்கு அனைத்தலக செயலகத்தினரும் அனைத்துலகச் செலகத்தில் உள்ளவர்களை துரோகி என்று சொல்லவதற்கு தலைமை செயலகத்தில் பணி புரிவர்களும் உரிமை கிடையாது.அதை கண்டறிவது விடுதலைப்புலிகளின் புனாய்வுத்தறையின் வேலை. புலனாய்வுத்துறை கண்டுபிடுத்து அறிவித்தபின்னர் அது பற்றி தேசியத தலைவர் முடிவெடுத்து அறிவித்த பின்னர் தான் ஒரு போராளி துரொகியா துரொகிகளுக்கு துணை பேவபனா என்பது மக்களுக்கு அறிவிக்கப்படும். ஆதையும் அரசியல் துறைதான் அறிவிக்கும்.

ஆனால் இப்போது முள்ளிவாக்காலுக்குப் பின்னர் எல்லாம் தலைகீழாக மாறி இருக்கிறது.துரோகிப் பட்டம் கொடுப்பது தான் தேசிய செயற்பாடு என்ற நிலை என்று ஆகிவிட்டது.

உண்மையில் விடுதலைப்பலிகள் இயக்கத்துக்குள் எற்பட்டிருக்கின்ற நட்பு முரண்பாட்டை ஊதிப் பெருக்கி பகை முரண்பாடாக மாற்றும் வேலையை போராளிகள் அல்லாத சிலர் தேசியச் செயற்பாட்டாளர்கள் என்ற பெயரில் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இவர் முள்ளிவாய்க்காலோடு முன்னணிக்கு வந்த இவர்கள் போராளிகளை விட அதிகளவு தேசியம் பேசியும் ஊடகங்களில் எழுதியும் இந்த முரண்பாட்டை பகை முரண்பாடாக வளர்த்துவிடுவதற்கு படாத பாடு பட்டக் கொண்டிருக்கிறார்கள்.

விடுதலைப்புலிகள் தங்களுக்குள் தாங்களே மோதக் கொள்ளும் ஒரு புறச் சூழ்நிலையை திட்டமிட்டு உருவாக்குவது அதை ஊதிப் பெருக்கிவிடுவது என்பது இவர்களது பிரதான நோக்கமாக இருக்கிறது.

உதாரமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கிருபாகரன் அவர்கள் மிக நீண்டகாலமாக வேலைசெய்து வருகிறார்.அதே போல கரன்பார்ககர் போன்றவர்களும் நீண்டகாலம் வேலை செய்துவருவருகிறார்கள்.ஆனால் அவர்கள் யாரும அங்கே மோதிக் கொண்டது கிடையாது. புலவிடயங்களில் அவர்கள் இணைந்து தான் வேலை செய்தார்கள். இப்போது புதிதாக இந்தக் கும்பல் அதற்குள் புகுந்து கிருபாகரனை அங்கிருந்து ஓரங்கட்டும் நரிவேலைகளைச் செய்ததுடன் தமிழ் ஒத்த கருத்தில்லாமல் பிரிந்து நிற்கிறார்கள் என்ற தோற்றப்பாட்டை மனித உரிமை ஆர்வலர்களிடம் ஏற்படுத்துவதிலும் சிறீலங்கா அரசுக்கு எதிரான ஒருங்கிணைந்த செயற்பாட்டை மேற்கொள்வதை தடுப்பதிலும் வெற்றிகண்டிருக்கிறார்கள்

இப்போது மாவிர்நாளை முன்வைத்து குழப்பங்களையும் மோதல்களையும் ஏற்படுத்துவதிலும் தாங்கள் தான் புனிதமான முறையில் மாவிரர்நாளை செய்ப்போகிறோம் மற்றவர்கள் செய்வது சிறலங்கா அரசின் மாவிரர் நாள் என்று தங்களை உச்சகட்ட சக்தியை பயன்படுத்தி பல்வேறு வழிகளிலும் முரண்பாட்டுக்குள் பிளவுக்குமாக வழிகளை கூர்மைப்படுத்தி வருகிறார்கள்.

இந்த நபர்களை இனங்காண்பதும் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தின் ஒற்றுமைக்கும் இருப்புக்கும் இவர்களால் ஏற்படும் அச்சுறுத்தல் தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு எற்படுத்துவதும் தேவைப்பட்டால் இந்த நபர்களை ஆதாரத்துடன் சட்ட நடவடிக்கை உட்படுத்துவதும் இன்றைய காலத்தின் கட்டாயமாகும் இது ஒன்று தான் நாங்கள் எங்கள் இனத்தின் விடுதலைக்காக தங்களை ஆகதியாக்கிய மாவீரகளுக்கு செலுத்தம் உண்மையாக வீர வணக்கமாக இருக்கும்

(மாவீரர் நாள் தொடர்பான இன்னொரு பதிவை அடுத்து எழுதுகிறேன்)

இது பெரியளவில் வெற்றியை சிறீலங்கா அரசுக்கு கொடுக்காது மாறாக எதிர்வினைகள் மோசமாக அமையும் சில வேளை சிறீலங்கா தேசத்தை உலகில் தனிமை படுத்தி தண்டிக்ககூடும்

அகத்தியன் பலதடவைகள் சிறீலங்கா புலனாய்வுத்துறையினர் பற்றிய தகவலை தெரிவித்து வருவதால் பிரெஞ்சு காவல்துறை அவரை அழைத்து அவை தொடர்பான ஆதாரங்களை தந்துதவுமாறு கேட்கவுள்ளது.அதே போல அவர் அண்மையில் சிறீலங்கா தூதரகம் நடத்திய இரகசிய சந்திப்பில் பாஸ்கோவுடன் கலந்து கொண்டது பற்றியும் விசாரிக்கப்படலாம் என்றும் தெரியவருகிறது.

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பிரிவுகளுக்கு இடையில் இன்று எற்பட்டிருக்கும் முரண்பாடு ஒன்றும் பகை முரண்பாடு கிடையாது. அது தீர்க்கப்பட முடியாததும் அல்ல.ஏனெனில் விடுதலைப்புலிகள் இயக்கம் ஊடகங்களில் ஆய்வெழுதியும் மேடைகளில் வீரவசனம் பேசியும் உருவாக்கப்பட்டதல்ல.அது 48 ஆயிரத்துக்கு மேற்பட்ட அப்பழுக்கற்ற அர்ப்பணிப்பாலும் ஈகத்தாலும் உருவாக்கப்பட்டது.விடுதலைப்புலிகளின் வரலாற்றின் ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு மாவிரனின் உயிராலும் இரத்தத்தாலுமே எழுதப்பட்டிருக்கிறது.

தலைவர் கருணா அம்மான் கூட பேசியும் தீர்த்து இருக்கலாம்.

இது பெரியளவில் வெற்றியை சிறீலங்கா அரசுக்கு கொடுக்காது மாறாக எதிர்வினைகள் மோசமாக அமையும் சில வேளை சிறீலங்கா தேசத்தை உலகில் தனிமை படுத்தி தண்டிக்ககூடும்

மோட்டுச் சிங்களவனை தனிமை படுத்துவது இலகுவானது......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.