Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தன் தலைமையிலான குழுவினரை விமான நிலையத்தில் கைது செய்ய வேண்டும்

Featured Replies

வெளிநாடு சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவினர் நாடு திரும்புகையில் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட வேண்டும். அது மட்டுமின்றி அவர்களின் பாராளுமன்ற உறுப்புரிமைகளை பறிப்பதற்கான நடவடிக்கையினை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாஸ அமரசேகர குறிப்பிட்டார்.

அரசியலமைப்பின் 6 ஆவது சரத்திற்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டுள்ளமை ஆதாரபூர்வமாக வெளிப்பட்டுள்ளது. எனவே வெளிநாடுகளுடன் சேர்ந்து நாட்டிற்கு எதிரான திட்டங்களை முன்னெடுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

சர்வதேசம் நாட்டிற்கு எதிரான சதியினை மிகவும் பரந்தளவில் முன்னெடுக்கின்றது.

லிபியாவிற்கு ஏற்பட்டுள்ள சூழ்நிலை இலங்கைக்கும் ஏற்படலாம். எனவே அரசாங்கம் அடிபணியாது தனது நிலைப் பாட்டை வெளிப்படுத்த வேண்டும். இல்லை யென்றால் நாடும் போய் இறுதியில் உயிரும் போய் விடும் என்றும் அவர் எச்சரிக்கையும் விடுத்தார்.

அமெரிக்கா மற்றும் கனடா உட்பட மேற்குலக நாடுகளுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினன் நடவடிக்கை குறித்து அரசாங்கம் கடும்போக்குடன் செயற்பட வேண்டும். கூட்டமைப்பினர் நாட்டிற்கு எதிரான செயற்பாடுகளையே மேற்குலக நாடுகளில் முன்னெடுத்து வருகின்றனர். குறிப்பாக அமெரிக்கா மற்றும் இந்தியாவுடன் இணைந்து நாட்டை துண்டாக்கவும், அரசாங்கத்தை போர்க் குற்றச்சாட்டுக்களில் சிக்க வைக்கவுமே கூட்டமைப்பினர் செயற்படுகின்றனர்.

எனவே கூட்டமைப்பினர் நாடு திரும்பும் போது அவர்களை விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய வேண்டும். அரசாங்கம் மேற்குலக நாடுகளை சந்தோஷப் படுத்துவதற்காக செயற்படக் கூடாது.

கடாபி கொலை செய்யப்பட்டபோது அரசாங்கம் என்ற வகையில் அனுதாபச் செய்தியொன்றைக் கூட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிடவில்லை. ஆனால் லிபிய தலைவர் கடாபி உயிருடன் இருக்கையில் இலங்கை அரசிற்கு இன்னோரன்ன உதவிகளை செய்தார். அந்த நன்றியையும் நாம் மறந்து விட்டுள்ளோம்.

இன்று லிபியாவிற்கு நடந்தது சியா, வட கொரியா, யேமன் எனத் தொடரும் இந்த நிலையில் இலங்கையும் வரலாம். எனவே அரசாங்கம் ஒபாமாவை சந்தோஷப் படுத்துவதற்காக பின் வாங்கும் போக்குடன் செயற்படக் கூடாது. அமெக்காவின் ஆக்கிரமிப்பு இலங்கையை நோக்கியே உள்ளது. போர் குற்றத்தின் அடிப்படையில் இலங்கை அரசை மண்டியிட வைப்பதுடன் மாத்திரம் அன்றி நாட்டை துண்டாடவும் சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது.

இதன் வெளிப்பாடே கூட்டமைப்பினர் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் விஜயமாகும் எனக் கூறினார்.

http://akkinikkunchu.com/new/

உங்களின் சேவை மிகவும் தேவை

தயவு செய்து தாமதமின்றி இந்த மனிசரின் பரிந்துரைகளை மகிந்த செய்யவேண்டும்.

கொட்டமைபால் விளங்கப்படுத்த முடியாத பல விடயங்களை இவர்களின் துணையுடன் எளிதாக விளங்கப்படுத்தலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாஸ அமரசேகர குறிப்பிட்டார்.

ஒரு கலாநிதிக்கே இப்படியான சிந்தனை என்றால் சாதாரணமனிதனுக்கு எப்படி இருக்கும்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.