Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது என்ன கொடுமையடா

Featured Replies

இது என்ன கொடுமையடா? துரோகிகள் வரிசையில் இன்று முழுத் தமிழினமும் வெடகி தலைகுனிய வேண்டும்! பொய் பொய் பொய் இன்னும் எத்தனை பொய்கள்? போதும் உங்கள் பசப்புகள்.. மாவீரர்களை நாம் வணங்க இந்த சில்லறை பொறுக்கிகளிடம் போவதை விட ஒரு தேவாலயத்திலோ அல்லது கோயிலிலோ சென்று வணங்குவதே சாலச்சிறந்தது...

இன்று மெயிலில் வந்த ஒரு பிரச்சாரம்...

எச்சரிக்​கை - எக்ஸல் மண்டபத்தில் இலங்கை அரசு ஒழுங்கு செய்து நடாத்தும் மாவீரர்தின நிகழ்வு

தேசப்பற்றுடன் எத்தனையோ தியாகங்கள், அர்ப்பணிப்புகள் செய்த நாம், எமது விடுதலைப் போரட்டத்தில் ஏற்பட்டுள்ள பின்னடவின் சந்தர்ப்பத்தை பாவித்து எமக்குள் இருக்கும் பணம், பொருள், பெண மற்றும் பதவி ஆசைகொண்ட பலர் இப்போதுதான் தமது ஆட்டத்தைக் காட்டவெளிக்கிட்டிருக்கிறார்கள்

. ஆனால் அவர்கள் தமது ஆசைகளை நிறைவேற்ற அடகுவைத்து , உருக்குலைத்திக்கொண்டிருப்பது மக்களின் பேராளிகன் எத்தனையோ தியாகங்களால் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியம். தயவு செய்து உங்கள் எல்லோரிடமும் பணிவன்புடன் கேட்டுக்கொள்வது இங்கே நான் குறிப்பிடும் செய்தியை, நீங்கள் விளங்கிக்கொள்வதோடு, வரும் நவம்பர் 27 ஆம் திகதிக்கு முன் உங்களால் இயன்றளவு ஆட்களுக்கு இச்செய்தியை சொல்லி அவர்களுக்கும் தெளிவை ஏற்படுத்துங்கள். இது எமது போராட்டத்தின் தற்போதைய நிலையில் எம்மை தக்கவைத்துக்கொள்வதற்கு நீங்கள் ஆற்றும் அளப்பரிய தொண்டு.

எமக்கு கிடைத்துள்ள ஆதாரங்களின்படியும், முக்கியமான இடங்களுக்குள் வேலைசெய்துகொண்டு எமக்கு தகவல் தருபவர்களின் தகவல்களின் படியும், கே.பி எமது விடுதலை இயக்கத்தின் துரோகியாக 2003 அல்லது அதற்கு முன்னமே மாறவிட்டார் ஆனால் எல்லோரிலும் நம்பிக்கை வைத்தியங்கும் எம் தலைமையினால் இதனை கண்டுபிடிக்க முடியவில்லை. எமது போராட்டத்தை வெளியிலிருந்து முழுத்தகவல்கைளயும் இலங்கை அரசிற்கும், அமெரிக்க புலனாய்வுப் பிரிவிற்கும் வழங்கிவந்த கே.பி எத்தனை மக்கள் செத்தாலும் தலைவரையும், போராட்டத்தையும் அழிப்பதற்கு உறுதிபூண்டுசெயற்பட்டு அழித்தார். இது தமிழரின் வரலாறு. எத்தனையோ வீரம்செறிந்த தமிழ் மன்னர்கள் மற்றும் போராட்டங்கள் எல்லாம் அழிக்கப்பட்டது போரினால் அல்ல துரோகத்தினால்தான்.. அதேபோன்றுதான் எமதுபோராட்டத்திற்கும் நடந்திருக்கிறது. ஆரம்பகாலகட்டங்களிலிருந்தே தலைவரைவிட கே.பியில் அதி விசுவாசம் வைத்து இயங்கிய உருத்திரகுமார் அமெரிக்க அரசாங்கம் மற்றும் அமெரிக்கப் புலனாய்வு அறிவுறுத்தல்களுக்கேற்பவே எமது போராட்டத்திற்குள் உள்நுழைந்தார். இந்தத் துரோகிகள் எமது வெளிநாட்டுக் கட்டமைப்புகளையெல்லாம் காட்டிக்கொடுத்து, நாட்டில் இருந்த எமது போராட்டத்தை அழித்துவிட்டு இப்போதுத எஞ்சியுள்ள மண்பற்றுள்ள தமிழர்களையும் கட்டமைப்புகளையும் முற்றுமுழுதாக அடக்கி அழிக்கும் ; வேலையை இலங்கை மற்றும் ஏனைய அரசுகளுக்கு செய்துகொடுத்துக்கொண்டு இருக்கிறாரகள். சங்கீதன், பாண்டியன், விநாயகம், உருத்திரகுமாரன், அநோஜா, சீர்மாறன் போன்றோர் முற்றுமுழுதாக இலங்கை இந்திய அரசுகளின் ஆலோசனைப்படி கே.பியின் வழிநடத்தலில் எமது தலைவர் கிட்டு அண்ணன் காலத்தில் இருந்து கட்டியமைத்த புலம்பெயர் கட்டமைப்புகளை அழித்து தமது கைக்குள் எடுக்கும் வேலைக்காகத்தான் தலைமைச் செயலகம் என்ற ஒரு பெயரில் ஒரு கட்டமைப்பை புகுத்தி, தாம் போராளிகள் என்றும், நாம் எல்லாம பொதுமக்கள் என்றும், போராளிகளுக்கே அதிக உரிமை உண்டு என்றும் சில மாயைகளை ஏற்படுத்துகின்றனர். ஏற்கனவே இங்கு இருந்த அனைத்துலகச் செயலகத்தின்கீழ் இருந்த முக்கியமானவர்கள் நிதி கணக்குகள் ஒழுங்காக காட்டவில்லை எனப் பிழைகூறி எம் மக்களுக்குள் பிளவை ஏற்படுத்தி எமது சமுதாய கட்டமைப்பையே உடைத்துக்கொண்டிருக்கிறார்கள். மாவீரர்தினம் மிகவும் முக்கியமான ஒரு நிகழ்வு என்ற காரணத்தினால் அதனை தாம் இம்முறை கொண்டாடினால் புலிகளின் வெளிநாட்டுக் கட்டமைப்பு முழுவதையும் தமது கைக்குள் எடுத்துவிடலாம் என நம்பித்தான் இலங்கை அரசு பெருந்தொகை பணத்தை கொடுத்து விநாயகம், பாண்டியன், சங்கீதன், அநோஜா, உருத்திரகுமார், கே.பி போன்றோரை கள்தில் இறக்கி, தனது புலனாய்வுப் பிரிவின் முழுப் பலத்தையும் இதற்குப் பாவித்துக்கொண்டிருக்கிறது.

நீங்கள் விளங்கவேண்டியதும், எனையவர்களுக்கு விளங்கப்படுத்தவேண்டியதுமான விடயத்தை சுருக்கமாகச் சொல்லுகிறேன். இம்முறை இலண்டனில் வழமையாக மாவீரர்தினம் நடக்கும் மண்டபமான எக்ஸல் கோலை இலங்கை அரசாங்கம் பணத்தை கொடுத்து முன்கூட்டியே ஒதுக்கிவைத்துவிட்டு, தலைமைச் செயலகம் என்ற பெயரில் இயங்கும் இந்த பச்சைத் துரோகிகளைக்கொண்டு இம்முறை மாவீரர் தினத்தை நடாத்த முற்படுகிறது. இதற்கு உடந்தையாக ஐ.பி.சி மற்றும் ஜி.ரி.வி ஆகிய ஊடகங்களும் மும்முரமாக செயற்படுகின்றன. இவ்விரு ஊடகங்களும் புதினம் என்ற இணையத்தளம் சென்ற வழியில் 2009 மே மாதத்துடன் அரச கைக்கூலிகளாக மாறியது யாவரும் அறிந்ததே. தேசப்பற்றுள்ள, தேச விடுதலைக்காக உறவுகளை இழந்த, சிங்கள அரசால் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்ட மானமுள்ள எந்தத் தமிழரும் இந்தச் சுழ்ச்சி வலைக்குள் விழுந்துவிடக்கூடாது. சுருக்கமாக சொல்வதானால் இலங்கை அரசாங்ம் எமக்குள் இருந்த எட்டப்பர் கூட்டத்தை பாவித்து மாவீரர் தினத்தை நடாத்துவதாக படம்காட்டி முழு கட்டமைப்புகளையும் உடைக்கிறது. இதற்கு நீங்கள் ஒருவரும் பலியாகாது தெளிவாக இருப்பதுடன் உங்களால் இயலுமானவரை பலருக்கு இதனை தெளிவு படுத்தவேண்டும். இதுவே எங்களுக்காகவே தங்களை அழித்த மாவீரர்களுக்காக நாம் செய்யும் குறைச்தபட்ச நன்றிக்கடனாகும்.

வழமையாக மாவீரர் தினத்தை ஒழுங்குபடுத்தும் தலைவர் உருவாக்கிய கட்டமைப்பான அனைத்துலகச் செயலகத்தின் மக்கள் கட்டமைப்புக்கள் இம்முறையும் நிகழ்வுகளை ஒழுங்குசெய்துள்ளன. ஆனால் பொருளாதார மற்றும் இடப் பற்றாக்குறை காரணமாக ஒரு மண்டபத்தில் என்றிலலாமல் பிரித்துப் பிரித்து இலண்டனில் ஒவ்வொரு பகுதிக்கும் மண்டபம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அதுபற்றிய அறிவித்தல்;கள் சம்பந்தப்பட்டவர்களால் மிக விரைவில் மக்களுக்கு அறிவிக்கப்படும் என அறிகிறோம். உங்களுக்கு கிட்ட உள்ள அனைத்துலகச் செயலகத்தால் ஒழுங்கு செய்து நடாத்தப்படும் மாவீரர் தின நிகழ்வுக்கு சென்று மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துங்கள். இல்லையேல் உங்கள் வீட்டிலேயே செய்யுங்கள். தயவு செய்து எக்சல் மண்டபத்தி;ல் இலங்கை அரசாங்கம் நடாத்துவிக்கும் வைபவத்திற்கு போகாதீர்க்ள். அந்தக் கைக்கூலிகள் வழமையானவர்கள் என்ற பெயரில் ஈடுபடும் பண வச10லிப்பிற்கும் ஆதரவு கொடாதீர்கள். அவ்வாறு செய்;தால் ஏதோ ஒரு வகையில் நீங்களும் சிங்களவனின் இந்தத் தமிழத்தேசியச் சிதைப்பு முயற்சிக்கு உடந்தையாகிவிடுவீர்கள்;. எத்தனையோ மக்கள் மிகவும் தெளிவுடன் எமது போராட்டத்திற்கு பங்குசெய்திருந்தாலும், தற்போதய குழப்பகரமான கட்டத்தில் ஒரு தெளிவு நிலையினை ஏற்படுத்துவதற்காகவே இந்தக் கட்டுரையினை எழுதுகிறேன்.

மாதவன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பகாலகட்டங்களிலிருந்தே தலைவரைவிட கே.பியில் அதி விசுவாசம் வைத்து இயங்கிய உருத்திரகுமார் அமெரிக்க அரசாங்கம் மற்றும் அமெரிக்கப் புலனாய்வு அறிவுறுத்தல்களுக்கேற்பவே எமது போராட்டத்திற்குள் உள்நுழைந்தார்.

உருதந்திரகுமாரின் அப்பா முன்னாள் மேயர் விசுவாநாதனும் அமேரிக்காவின் திட்டத்தால்தான் ஈழம் கேட்டவர் என்று கட்டுரையாளர் எழுதாமல் விட்டதை நினைத்து சந்தோசப்படுவோம்

  • கருத்துக்கள உறவுகள்

உருத்திரகுமார் யாரில் நம்பிக்கை வைத்துள்ளார் என்பதை நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம். நீங்கள் யாரில் நம்பிக்கை வைத்து இது போன்ற கட்டுரைகளை விதைக்கின்றீர்கள் என்று சொன்னால் நாங்களும் பின்னால வர ஏதுவாக இருக்கும்.

இதை தமிழ் தேசியத்தில் அக்கறை கொண்டவர்கள் தான் எழுதுகிறார்கள் என்று நினைத்துவிடாதீர்கள்.சிறீலங்கா புலனாய்வத்துறை தான் சில கைக்கூலிகளுக்கு பணத்தைகொடுத்து இவ்வாறு எழுத வைக்கிறது.தேசியத் தலைவரின் வழிகாட்டலில் வந்தவர்கள் யாரும் இப்படி எழுதமாட்டார்கள்.அது விடுதலைப்புலிகள் இயக்க மரபும் அல்ல. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து குழப்பங்களுக்கு ஒரு முடிவு கட்டுவதற்கு தயவு செய்து இவ்வாறான மின்னஞசல் எங்களுக்கு வந்தால் இதில் சொல்லப்பட்டவை உண்மையா என்பதை இதை எழுதியவர்களை கண்டுபிடித்து உறுதிப்படுத்தி தரும்படி ஒரு முறைப்பாட்டையும்

எழுதி தயவு செய்து இந்த முகரிக்கு அனுப்பி வையுங்கள்.இது பாரிசிலுள்ளது; லண்டனில் உள்ள நண்பர்கள் அங்குள்ள முகவரியை கண்டுபிடித்து தாருங்கள். புhரிசிலுள்ள இந்த முகவரி ஐரொப்பியன் சைப்ர் கிறைம் பிரிவுக்குரியதுதான்

l'OCLTIC, l'Office Central de Lutte contre la Criminalité liée aux technologies de l'information et de la comunication.

B.E.F.T.I. - 163 avenue d'Italie - 75 013 Paris

Tél. : 01 40 79 67 50

0000

l'OCLTIC, l'Office Central de Lutte contre la Criminalité liée aux technologies de l'information et de la comunication.

101 rue des Trois Fontanot 92000 Nanterre Tel: 0149274927

0000

O.C.L.C.T.I.C - cybercriminalité

MINISTERE DE L'INTERIEUR

Direction Centrale de la Police Judiciaire

Sous-Direction des Affaires Economiques et Financières

11, Rue des Saussaies

75800 Paris Cedex 08

Téléphone : 01.40.07.69.49

Télécopie : 01.40.07.29.76

E-mail : oclctic@interieur.gouv.fr

ou formulaire sur le site du Ministère de l'intérieur

அகா என்ன அருமையான கட்டுரை, இந்த கட்டுரையை பார்த்ததும் தன்ம் & கோவுக்கு தலை கால் புரியாத மகிழ்ச்சியா இருக்கும், ஏனென்றால் எழுதியதே அவர்களில ஒருத்தர்தானெ?

சரி அப்ப எக்ஸ்.எல்ல இலங்க்கை அரசாங்கத்தின்ர கைகூலிகள் மாவீரர் தினத்தை நடாத்து என்றால்!!!

பிரித்தானிய இளையோர் அமைப்பும் இலங்கை அரசாங்கத்தின் கைகூலியாக மாறிவிட்டதா தனம் அவர்களே?

மற்றும் பிரித்தானியவில் இயங்க்ம் முக்கிய தமிழ் அமைப்புக்களும் மாறீவிட்டார்களா? எனென்றால் அவர்களும் இனைந்து தானே நடாத்துகிறார்கள்.

சரி நீங்கள் நல்லவர்கள் என்று வைத்துகொள்வோம், நீங்கள் தான் தமிழீழ தேசிய தலைவரின் விசுவாசி என்று வைத்துகொள்வோம், இதுவரை ஒரு கலந்துரையாடலை பிரித்தானிய வாழ் தமிழ் மக்களுடன் நடாத்தீர்களா?

எக்ஸ் எல் மண்டபத்தை ஒழுங்கு பன்னினவர்கள் வைத்தார்கள், மக்களுடன் கதைத்தார்கள் (கடந்த மாதம் கிங்க்ஸ் பெரியில்)மக்களுக்கு விளக்கம் அளித்தார்கள், ஜீரிவி என்ற ஊடகத்தை அழைத்தார்கள், மக்களுக்கு தெரியப்படுத்தினார்கள்,

ஆனால் நீங்கள் செய்த்தது என்ன? அந்த கலந்துரையாடலை குழப்ப 10 குண்டர்களை உங்கள் பக்கத்தில் இருந்து அனுப்பினீர்கள், சம்பந்தமே இல்லாமல் கேள்வி கேட்டு அதை குழப்ப நினைத்து இறுதிய்ல் மூக்க்குடை பட்டு வெளியேறியதை ரசித்தமே நாம?

இந்த முறையும் எக்ஸ்.எல் மண்டபத்தில் மாவீரர் நாள் வெகு சிறப்பாக நடைபெறும், தயவு செய்து உங்களின் குன்டர்களை அங்கே அனுப்பி குழப்பம் விழைவிக்காதீர்கள் மிஸ்டர் தனம் அவர்களே.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது நீங்கள்தான் இப்படியான கட்டுரைகள் கதைகள் விட்டு மக்களை குழப்புகின்றீர்கள்,

மக்கள் நல்ல தெளிவாக இருக்கின்றார்கள் அவர்களுக்கு தெரியும் என்ன முடிவு எடுக்கவேண்டும் எப்போது எடுக்கவேண்டும் என நீங்கள் பேசாமல் இருந்தால் போதும்.

இந்த கட்டுரையை இலங்கை புலனாய்வு துறை எழுதியாத நினைத்தால் தவறு, தெரியும் தானே நம் தமிழினத்தை பற்றி, ஒன்றாக வாழத்தெரியாத இனம், போட்டி பொறாமை, இதுதான் லண்டனிலும் இம்முறை நடைபெற்று இருக்கிறது. பூனை இல்லாத வீட்டுக்கு எலி ராசா மாதிரி, இவர்களை கட்டிபோட ராஜா இல்லாததால் தங்கள் பாட்டுக்கு ஆடுகிறார்கள்,

இங்கே இரண்டு பிரிவாக பிரிந்து நிற்கிறார்கள், தனம் என்று ஒருவரின் கீழ் ஒரு பிரிவும், சங்கீதன், இளையோர் அமைப்பு, மற்றும் சில முக்கிய அமைப்புக்கள் ஒரு பிரிவாகவும் இருக்கிரார்கள், இதில் தனம் என்பவரின் கடந்த கால பிழையான செயற்பாட்டினால்த்தான் அப்படி பிரிய வேண்டி வந்ததாக கடந்த கால கலந்துரையாடல் ஒன்றிலிருந்து அறியகூடியதாக இருந்தது, அதை நிருபிப்பது போன்று அவரின் விசுவாசிகள் இந்த கலந்துரையாடலை குழப்ப நினைத்து மூக்குடைபட்டர்கள்.

பாருங்கள் எங்கள் ஒற்றுமையை, எக்ஸ்.எல் க்கு மக்கள் போவதை தடுக்கும் பொருட்டு வேறு சில 10க்கும் மேற்பட்ட இடங்களில் மாவீரர் தினத்தை கொன்டாடுகிறார்கள்,இவர்களும் ஒரு இடத்தில் நடாத்தினால் பப்பு வேகாது என்று தெரிந்து, 10 இடத்தை தேர்வு செய்து வாக்கு வங்கியை பிரிப்பது போன்று மக்களை பிரித்து எக்ஸ்.எல் மண்டபத்தில் மக்களின் வருகையை குறைக்க பார்க்கின்றார்கள், இதற்கு பின்னாடி தனம் அன்ட் கோ இருக்கிறார்கள், யாருக்கு தெரியும் இவர்கள் தான் இலங்கை அரசாங்கத்தின் சொல்லுக்கு ஆடுகிறார்களோ என்னமோ.

  • தொடங்கியவர்

உண்மையான தேசிய வாதிகள் இந்த சண்டையால் நிச்சயம் ஒதுங்கிவிடுவார்கள் என்பதற்கு கட்டுரை உதாரணம்!

சரிந்து போகும் நெடியவன் தலைமையிலான புலிகளின் செல்வாக்கு

ரொரான்ரோவில் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் 2500 – 3000 வரையான மிகக் குறைந்தளவு பேர்களே பங்கு பற்றியது நெடியவன் தலைமையிலான எல்.ரீ.ரீ.ஈ பகுதியினருக்கு விழுந்த பலத்த அடியாகும்.

டி.பி.எஸ் ஜெயராஜ்

ஒக்டோபர் 29ல் நெடியவன் தலைமையிலான எல்.ரீ.ரீ.ஈ சார்பான பகுதியினர் ரொரான்ரோவில் அரங்கேற்றிய பொங்கு தமிழ் நிகழ்வில் 3000க்கும் குறைவானவர்களே பங்கு பற்றியிருந்தனர். கனடியத் தரங்களைப் பொறுத்தவரை இந்தக் கூட்டம் பெரிது என்று கணிக்கப்பட்ட அதேவேளை முன்னர் நடைபெற்ற எல்.ரீ.ரீ.ஈ யினரின் நிகழ்வுகளில் இதே இடத்தில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இம்முறை எண்ணிக்கையில் மிகப் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதே இடமான குயின்ஸ் பாக்கில் 2004ம் ஆண்டு நடைபெற்ற ஒரு பொங்கு தமிழ் நிகழ்வில் 35,000 பேர்கள் வரை கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

பொங்கு தமிழ் போன்ற பொது நிகழ்ச்சிகள் தமிழீழ விடுதலைப் புலியினரின் அனுசரணையுடன் நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சி என்று பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. 2011 ஒக்டோபர் 29ல் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்ச்சிக்கு 2500 – 3000 வரையானவர்களே சமூகமளித்திருந்த போதிலும் “ரொரான்ரோ சண்” பத்திரிகை அங்கு கிட்டத்தட்ட 5000 பேர் வரை கலந்து கொண்டதாக தெரிவித்திருந்தது.

எல்.ரீ.ரீ.ஈ சார்பான பெரும்பாலான இணையத்தளங்கள் எண்ணிக்கையை குறிப்பிடாமல் ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டார்கள் என்றும், அதேவேளை சில ஊடகங்கள் ரொரான்ரோ சண் பத்திரிகையின் பெருப்பிக்கப்பட்ட தொகையான 5000த்தை மேற்கொள் காட்டியும் குறிப்பிட்டிருந்தன.

பொங்கு தமிழ் என்பதன் கருத்தான தமிழர்களின் எழுச்சி என்பதனை தமிழர்களின் விடுதலைப் பேரணி என சில ஊடகங்கள் வருணித்திருந்தன, இருந்தாலும் தமிழ் ஊடகங்களின் மிகைப்படுத்தல்களுக்கு அப்பால் அது எல்.ரீ.ரீ.ஈ யினருக்கு ஒரு தோல்வியே.

இந்த நிகழ்ச்சி கனடிய தமிழர் தேசிய பேரவை(என்.சீ.சீ.ரி), மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் (ரி.ஜி.ரி.ஈ) ஜனநாயக குழுவினராலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவை இரண்டுமே நோர்வேயை தளமாகக் கொண்ட நெடியவன் என அழைக்கப்படும் பேரின்பநாயகம் சிவபரன் என்பவரின் ஒட்டு மொத்த தலைமைத்துவத்தின் கீழ் இயங்குபவை.

நெடியவன் தலைமையிலான எல்.ரீ.ரீ.ஈ சார்பான சக்திகள் மிகவும் குறைவான ஒரு சுயவிபரத்தை பின்பற்றி; சகல தமிழர் சமூகங்களினதும் மற்றும் இளையோர்களினதும் சார்பாக இதில் கலந்து கொள்ளும்படி கனடாவில் வாழும் தமிழர்களை அழைத்திருந்தது.

நெடியவன் விசுவாசிகளின் பொங்கு தமிழ் நிகழ்ச்சி நடத்தும் முயற்சியினை மற்றொரு எல்.ரீ.ரீ.ஈ சார்பான சக்திகளின் பிரிவினரால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. இந்தப் பிரிவினர், தற்போது பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியில் இருந்து இயங்கிவரும் வினாயகம் என்று அழைக்கப்படும் எல்.ரீ.ரீ.ஈயின் சிரேட்ட புலனாய்வுத் தலைவர் சேகரப்பிள்ளை வினாயகமூர்த்திக்கு விசுவாசமானவர்கள்.

எல்.ரீ.ரீ.ஈ தலைவர் பிரபாகரன் பகிரங்கமாக வெளிவந்ததின் பின்னரே பொங்கு தமிழ் நிகழ்ச்சி நடத்தப்படவேண்டும் என்று கூறித்தான் வினாயகம் விசுவாசிகள் நெடியவன் விசுவாசிகளை எதிர்த்தனர்.

கனடாவில் ஏற்பட்ட இந்த பொங்கு தமிழ் உராய்வு, வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ பிரிவுகளின் தலைவர்களான நெடியவன் மற்றும் வினாயகம் ஆகியோரிடையே தற்போது நடந்துவரும் அதிகாரப் போராட்டத்தின் ஒரு வெளிப்பாடுதான்.

வினாயகம் பகுதியினர் தமிழர்களை இந்த பொங்கு தமிழ் நிகழ்வினைப் புறக்கணிக்கோரி துண்டுப் பிரசுங்களை வினியோகித்தும் மற்றும் சுவரொட்டிகளை ஒட்டியும் வேண்டிக் கொண்டனர். நெடியவன் பகுதியினர் இதற்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழுவினர் கனடாவுக்கு வருகை தருவதையொட்டி அவர்கள் இந்நிகழ்வில் பேசுவதற்கு வசதியாக நெடியவன் பகுதி எல்.ரீ.ரீ.ஈயினர் இந்நிகழ்விற்கான திகதியாக ஒக்டோபர் 29யை நிச்சயித்திருந்தனர்.

ரி.என்.ஏ யின் சம்பந்தன், சேனாதிராஜா, மற்றும் சுமந்திரன் ஆகியோர் பேரணியில் பேசுவதைக் கேட்க கூட்டம் பெரியளவில் கூடும் என்று பொங்கு தமிழ் ஏற்பாட்டாளர்கள் கணக்குப் போட்டார்கள்.

எல்.ரீ.ரீ.ஈ யை உத்வேகப்படுத்தும் ஒரு கூட்டத்தில் பங்குபற்றுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மறுத்துவிட்டதுடன் ரொரான்ரோவுக்கு அவர்கள் வருகை தரும் நேரத்தை அந்த நிகழ்ச்சியை சாமர்த்தியமாக தவிர்க்கும் வகையில் 29ந்திகதி நள்ளிரவாக மாற்றிக் கொண்டனர்.

எல்.ரீ.ரீ.ஈ சக்திகளின் அழுத்தங்கள் இருந்தபோதும் கூட்டமைப்பு பொங்கு தமிழ் நிகழ்வில் பங்கேற்பதிலிருந்து ஒதுங்கிக் கொண்டது. கூட்டமைப்பினரின் கவர்ச்சி இல்லாதபடியால் நிகழ்ச்சிக்கான வரவு குறைந்து விட்டது.

எல்.ரீ.ரீ.ஈ யின் இராணுவம் மே 2009ல் தோல்வியுற்றதிலிருந்து, கனடாவில் புலிகள் சார்பான நிகழ்வுகளுக்கு வருகை தரும் கூட்டத்தினரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது.

பெரியதோர் கூட்டத்தைக் கூட்டும் ஆவலான முயற்சியாக எல்.ரீ.ரீ.ஈ சக்திகள் உள்ளுர் தமிழ் ஊடகங்களை இயன்றவரை பயன்படுத்தின. இலவச போக்கு வரத்து சேவையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டிருந்தாலும், நிகழ்ச்சிக்கு வரவு தந்தவர்களின் எண்ணிக்கை 2500 – 3000 ஆக மட்டுமே இருந்ததால், நிகழ்ச்சி ஒரு புஸ் வாணம் போலாகி விட்டது.

“ரொரான்ரோவை ஆக்கிரமி” எனும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த அநேக தமிழர் அல்லாத எதிர்ப்பாளர்களும், பார்வையாளர்களாக இதில் கலந்து கொண்டதால் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்பட்டது.

கலந்து கொண்டவர்களில் பலர் எல்.ரீ.ரீ.ஈயின் நிறங்களான சிவப்பு மற்றும் மஞ்சள் ஆடைகளை அணிந்திருந்தனர். பிரபாகரனின் படம் பதித்த பதாதைகள் மற்றும் தமிழ் ஈழக் கொடிகள் எனப்படும் புலிகளின் கொடிகளையும் காணக்கூடியதாக இருந்தது.

ரொரான்ரோவில் நடந்த பொங்கு தமிழ் நிகழ்வில் கலந்து கொண்டோரின் எண்ணிக்கை மிக மோசமாக இருந்தது கனடியத் தமிழ் புலம் பெயாந்தவர்களின் இடையே எல்.ரீ.ரீ.ஈ யின் செல்வாக்கு சரிவடைந்துள்ளது என்பதற்கு ஒரு சாட்சியாக காணப்படுகிறது.

வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ யினரிடத்து வினாயகம் பிரிவினரின் கை, படிப்படியாக நெடியவன் பிரிவினரை விட உயர்ந்து கொண்டே போகிறது என்பதையும் இந்தத் தோல்வி மேலும் வெளிப்படுத்துகிறது.

தமிழில்: எஸ்.குமார்

Edited by மொட்டை மனிதன்

இந்த கட்டுரையை இலங்கை புலனாய்வு துறை எழுதியாத நினைத்தால் தவறு, தெரியும் தானே நம் தமிழினத்தை பற்றி, ஒன்றாக வாழத்தெரியாத இனம், போட்டி பொறாமை, இதுதான் லண்டனிலும் இம்முறை நடைபெற்று இருக்கிறது. பூனை இல்லாத வீட்டுக்கு எலி ராசா மாதிரி, இவர்களை கட்டிபோட ராஜா இல்லாததால் தங்கள் பாட்டுக்கு ஆடுகிறார்கள்,

இங்கே இரண்டு பிரிவாக பிரிந்து நிற்கிறார்கள், தனம் என்று ஒருவரின் கீழ் ஒரு பிரிவும், சங்கீதன், இளையோர் அமைப்பு, மற்றும் சில முக்கிய அமைப்புக்கள் ஒரு பிரிவாகவும் இருக்கிரார்கள், இதில் தனம் என்பவரின் கடந்த கால பிழையான செயற்பாட்டினால்த்தான் அப்படி பிரிய வேண்டி வந்ததாக கடந்த கால கலந்துரையாடல் ஒன்றிலிருந்து அறியகூடியதாக இருந்தது, அதை நிருபிப்பது போன்று அவரின் விசுவாசிகள் இந்த கலந்துரையாடலை குழப்ப நினைத்து மூக்குடைபட்டர்கள்.

பாருங்கள் எங்கள் ஒற்றுமையை, எக்ஸ்.எல் க்கு மக்கள் போவதை தடுக்கும் பொருட்டு வேறு சில 10க்கும் மேற்பட்ட இடங்களில் மாவீரர் தினத்தை கொன்டாடுகிறார்கள்,இவர்களும் ஒரு இடத்தில் நடாத்தினால் பப்பு வேகாது என்று தெரிந்து, 10 இடத்தை தேர்வு செய்து வாக்கு வங்கியை பிரிப்பது போன்று மக்களை பிரித்து எக்ஸ்.எல் மண்டபத்தில் மக்களின் வருகையை குறைக்க பார்க்கின்றார்கள், இதற்கு பின்னாடி தனம் அன்ட் கோ இருக்கிறார்கள், யாருக்கு தெரியும் இவர்கள் தான் இலங்கை அரசாங்கத்தின் சொல்லுக்கு ஆடுகிறார்களோ என்னமோ.

சிறீலங்கா அரசுகேபியை தன்னுடன் சேர்த்து வைத்துக்கொண்டு அவருக்கு புறம்பாக கேபி கேபி கேபி குழு- துரோகிகள் என்று கூவி கூவி பரப்புரை செய்வதற்காகவும் அதன் மூலம் பலத்தில் மகக்ள் மத்தயில் பிளவுகளை ஏற்படுத்தி மோதல்களை உண்டாக்கவும் மற்றொரு குழுவை களம் இறக்கியிருக்கிறது. இதில் பாரிசில் ஒரு ஊடகவியாபாரிக்கு மாதம் 5 ஆயிரம் யுரோவும் லண்டனில் ஒரு தேசிய வியபாரிக்கு 4ஆயிரம் பவுண்சும் வழங்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது; இதைவிட அச்சடிக்க பணம் இல்லாமல் நின்று போய் மீண்டும் மல்ரிக் கலரில் வரும் ஒரு பத்திரிமையின் நிழல் நிர்வாகிக்கு பேர்த்துக்கல் வழியாகவும் கிறீஸ் வழியாகவும் பெருந்தெகை பணம் கைமாறப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இந்தியாவில் சிறைப்பிடிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறையின் துணைப் பொறுப்பாளரை இந்திய அரசு நாடுகடத்திவிட்டதாக ஒரு பரபரப்பு செய்தி வெளிவந்ததை அனைவரும் அறிந்திருப்பிர்கள்.

கடைசியில் இந்தச் செய்தி பொய் என்றும் கறிப்பிட்ட அந்தப் போராளி இந்தியச் சிறையிலேயே இருப்பதாகவும் உறுதிப்படுத்தப்பட்டது.

இந்தச் செய்தியின் பின்புலம் என்ன என்பதை தமிழகத்திலுள்ள தமிழ்தேசிய அக்கறையுள்ள சட்டவாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் தொடர்பு கொண்டு வினவியபோது அது சிறீலங்கா புலனாய்வத்துறையும் தமிழக உளவுத்துறை கூட்டும் (கியுபிராஞ் ஐபி ரோ) இணைந்து உருவாக்கியதே இந்தச் செய்தி என்பதை அறிய முடிந்தது.

அதாவது தமிழகத்தில் விடுதலைப்புலிகளின் இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட தளபதிகள் சிலர் தங்கியிருப்பதாக சிறீலங்கா அரசு நம்பியது.அவர்களை கண்டு பிடிக்க இந்திய அரசின் உதவியை நாடியது.

இந்திய அரசு தனதுபுலனாய்வுத் துறைக்கு உத்தரவிட்டதன் பேரில் வெளிநாடுகளில் இருந்த தமிழகத்துக்கு வரக்கூடிய தொலையேசி அழைப்புகள் மற்றும் சமூக வலைத் தள தொடர்புகளை கண்காணிக்கும் பொறிமுறையை தயார் நிலையில் வைத்துக் கொண்டு இந்தச் செய்தி கசிய விடப்பட்டது. இந்தச் செய்தி புலத்தில் பரவும்; போது இங்குள்ள விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் தமிழகத்தில் உள்ள தங்களது சகாக்களின் பாதுகாப்பு தொடர்பாக தொடர்பு கொண்டு வினவுவார்கள் என்றும் அதன் மூலம் அவர்கள் இருக்குமிடத்தை கண்டுபிடிக்கலாம் என்றும் திட்டமிடப்பட்டதாக தெரியவந்தது.

ஓரு நிமிடம் ஆறஅமர இருந்து சிந்தித்துப்பாருங்கள் எப்படி எங்கள் எதிரிகள் எங்கள் விரல்களை கொண்டு எங்கள் கண்களை குத்துகிறார்கள் என்று புரிpயும் ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.