Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னிமக்களின் சொத்துக்கள் மீள ஒப்படைக்குமாறு ரணில் கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ranil-wic-140x140.jpg

வன்னி மக்களுக்கு சொந்தமான பணத்தையும் சொத்துக்களையும் அவர்களிடமே திரும்ப ஒப்படைக்கவேண்டும் என எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரியுள்ளார்.

இந்த சொத்துக்கள் யாவும் அரச மாளிகையில் வசிக்கும் கே.பி.யிடமே உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பு மாவட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர்களது மனைவியர் மற்றும் அவர்களது சகோதரிகளுக்கென ஐக்கியதேசியகட்சியின் ஐக்கிய மகளிர் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனை தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றுகையில், மத்திய வகுப்பினரது வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக விளங்குகின்ற திட்டங்களை முடக்கும் நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது.

எரிபொருட்களின் விலை அதிகரிப்பால் முச்சக்கர வண்டி ஓட்டுனர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜே.ஆர்.ஜயவர்த்தன கீழ் மட்டத்து மக்களுக்கு ஏணியாக அமைந்திருந்தார். ஆனால் மஹிந்த ராஜபக்ச அதற்கு மாறாக நடக்கிறார்.

சொத்துக்களை பறிமுதல் செய்யும் வகையிலான சட்டமூலம் ஒன்ற கொண்டு வருவதற்கு அரசாங்கம் முயற்சித்துவருகிறது. சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு பதிலாக அதனை மக்களின் உடமையாக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டால் நன்றாக இருக்கும்.

யுத்தகாலத்தில் வன்னிமக்களிடம் கொள்ளயடிக்கப்பட்ட சொத்துக்களை கே.பி. வைத்துள்ளார். அவற்றை மக்களிடம் ஒப்படைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.

சொத்துக்களை இழந்த மக்கள் இடம்பெயர்ந்து அவலப்படும்போது கே.பி.யோ அரச மாளிகையில் சுகபோகம் அனுபவிக்கிறார்.

எனவே மக்களின் சொத்துக்கள் மக்களிடமே ஒப்படைக்கப்படவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

http://www.vanakkamn...m/ranil-spaeec/

எல்லாவற்றையும் (இரும்பை நிறைக்கு) முஸ்லிம் தரகர்கள் ஊடாக இராணுவத்தினர் விற்று விட்டார்கள் இனி என்னத்தை மீள் அழிப்பது கிண்டல் பண்ணாதீர்கள் ரணில் :(

Edited by அலைஅரசி

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெறுமதியும் இல்லாத, எதிர்க்கட்சித் தலைவர் என்றால்... ரணில் தான்.

எப்போதோ... தனது பதவியைப் பாவித்து, உலக நாடுகள் முன் இந்தக் குரலை எழுப்பியிருக்கலாம்.

இப்போது, இந்தக் குரல், தூசிக்கு சமனானது.

ரணில் இனிமேல்... இப்படியான ஜோக் அடிப்பதை, தவிர்ப்பது ஐ.தே.க. வுக்கு நல்லது. :huh:

இங்கே இரணிலின் குறி மகிந்தாவே. குறிப்பாக சிங்கள மக்களுக்கு சொல்லப்பட்ட செய்தி இது.

மற்றும்படி வன்னி மக்கள் மீதோ இல்லை தமிழர்கள் மீதோ எந்த அக்கறையும் கிடையாது.

வன்னிமக்களின் சொத்துக்கள் மீள ஒப்படைக்குமாறு ரணில் கோரிக்கை

குள்ளநரி ஊளையிடுகிறது ஊ..................................................................

  • கருத்துக்கள உறவுகள்

ரணில், ஹோமர் சிம்சன், நரி , இவை மூன்றும் ஒரே விதமான மரபணுக்களைக் கொண்டவை! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.