Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திராவிடக்கழகம் வீரமணியுடன் பேட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திராவிடர் கழகத்தின் தலைவர் டாக்டர் வீரமணி அவர்கள் தமிழினம் அறிந்த தலைவர். தந்தை பெரியார் அவர்களுக்கு பிறகு திராவிடர் கழகத்தின் தலைவராக பணியாற்றி வருபவர். ஆரம்பம் தொட்டு இன்று வரை ஈழத் தமிழர்களின் விடிவுக்காக குரல் கொடுத்து வருபவர். சென்ற 29 டிசம்பர் அன்று சென்னையில் ஈழத்தமிழர் பாதுகாப்பு மாநாட்டை நடத்தி மீண்டும் தமிழ்நாட்டில் ஈழத்தமிழர் ஆதரவு நிலை வருவதற்கு வழிவகுத்தவர். இனவிடுதலையும் பகுத்தறிவும் இரு கண்கள் என வாழும் தலைவர் வீரமணி அவர்களை பேட்டி காண வெப்ஈழம் விரும்பியது. தன்னுடைய வேலைப்பளுக்களின் மத்தியிலும் வெப்ஈழம் மின்னஞ்சல் மூலம் அனுப்பிய கேள்விகளுக்கு தன்னுடைய பதிலை வீரமணி அவர்கள் தந்திருக்கிறார். முகம் சுளிக்கக்கூடிய கேள்விகள் என்று கருதப்பட்டவைகளுக்கும் வீரமணி அவர்கள் தயங்காது பதிலளித்திருக்கிறார். டாக்டர் வீரமணி அவர்களுக்கு வெப்ஈழத்தின் நன்றிகள்.

வெப்ஈழம்: பெரியார் வாழ்ந்த மண்ணில் இன்று மதவாதம் பெருகி வருகின்றது. திராவிடப் பாராம்பரியத்தில் வந்த கட்சிகளான திமுகவும் அதிமுகவும் அதிலிருந்து விலகிச்செல்கின்றன. அதிமுக கட்சியினர் வேல்குத்தி வழிபடுகின்றனர். ஆதன் தலைமை கூட யாகங்கள் நடத்துவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. திமுகவின் முக்கிய தலைவர்கள் பூமிபூஜை நடத்துகின்றார்கள். இவைகளை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள். இவைகளை திராவிடக் கொள்கைகளின் தோல்வியாகக் கொள்ளலாமா?

வீரமணி: தந்தை பெரியார் ஒரு முழுப் பகுத்தறிவுவாதி, மனிதநேயர். ஜாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, கடவுள் மறுப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, "அனைவர்க்கும் அனைத்தும்" எனும் தத்துவம், சுயமரியாதை - இவை அனைத்தும் பெரியார் அவர்களுடைய சமூகப் புரட்சிச் சிந்தனைகள் - அவரது மானுடப் பற்றிலிருந்து மலர்ந்தவை.

இவைகளை நாம் அடைய வேண்டுமானால், அதற்கு நாம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்க இடையறாத பிரச்சாரம், போராட்டம் மூலமே முடியும்.

அரசியலில் இருப்பவர்களுக்கு நாம் அழுத்தம் கொடுத்து இக் கொள்கைகளை சாதிக்கலாம். அதற்காக நாம் அரசியலுக்கு, பதவிக்குப் போனால் இவற்றை மெல்ல மெல்ல விட்டு - பதவிக்கு வருவது எப்படி, அதனை தக்க வைப்பது எப்படி அதனைக் காப்பாற்றிக் கொள்வது எப்படி என்பதையே சதா சர்வ காலமும் சிந்தித்து, வாக்கு வங்கிக்கு ஏற்ப, மக்களை நாம் வழி நடத்திச் செல்வதிற்க பதில், நாம் மக்களின் பின்னால் செல்ல வேண்டி வந்துவிடும். இதனாற்தான் 1939இலேயே தனக்கு வந்த முதலமைச்சர் பதவியை உதறித் தள்ளினார் தந்தை பெரியார்.

1949இல் திமுக பிரிந்தது. 1957இல் அரசியலில் நேரடியாக ஈடுபடுவதென தீர்மானித்தது. 1972 இல் அதிமுக பிரிந்தது. (எம்ஜிஆர்). இவை இரண்டு திராவிட முத்திரை பெற்ற திராவிட மண்ணின் கட்சிகள் என்றாலும், பதவிக்கு வருவதற்கு அவர்கள் பகுத்தறிவுக் கொள்கைகளில் இருந்து பெரிதும் தடம் புரண்டுவிட்டனர். அவர்கள் "அரசியல் மோகினியின்" பின்னால் சென்றதன் விளைவு இது

திராவிடர் கழகம் என்பது தாய்க்கழகம். உண்மையில் அதன் பணியை துவக்கத்திலிருந்த நிலையிலேயே செய்து வெற்றி பெற்றுள்ளது. இந்து பாசிச மதவெறிக் கட்சியான பிஜேபி போன்றவைகள் இராமனை வைத்து வட நாட்டில் பதவிக்கு வந்தது போல் இங்கே அது எடுபடாத நிலை.

ஆகவே திராவிடக் கொள்கைகள் தோற்றுப் போகவில்லை. திராவிடக் கொள்கைகளில் கிளைத்த அரசியல் கட்சிகளால் அப்படி ஒரு புறத்தோற்றம். அவ்வளவுதான்.

வெப்ஈழம்: வரவிருக்கும் தமிழ்நாட்டின் சட்டசபைத் தேர்தல் குறித்து உங்கள் கழகத்தில் நிலைப்பாடு என்ன? உங்களின் கணிப்பின்படி எந்தக் கட்சி வெல்லும் என எதிர்பார்க்கின்றீர்கள்?

வீரமணி: நாங்கள் அரசியல் கட்சி அல்ல; தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை, இன்னும் எங்களுக்கென்ன ஆத்திரம், அவசரம்?

பிறகு அறிவிக்க வேண்டிய நேரத்தில் யாரை ஆதரிக்க வேண்டுமா அதை அறிவிப்போம்!

மதவெறிக் கட்சிகளையோ அவர்களுடன் கூட்டுச் சேருபவர்களையோ ஒருபோதும் திராவிடர் கழகம் ஆதரிக்காது.

வெப்ஈழம்: சில காலங்களின் முன்னர் நீங்கள் பகவக்கீதை சம்பந்தமாக ஒரு புத்தகம் வெளியிட்டதாகக் கேள்விப்பட்டோம். அதிலிருந்து சில தகவல்களை எமக்கு சொல்லுவீர்களா?

வீரமணி: கீதை - ஒரு வர்ணாசிரமப் பாதுகாப்பு நூல்.

ஜாதி தர்மத்தை - ஆத்மா புரட்டு மூலம் கர்ம வினைப் பயன் என்று காட்டி ஒடுக்கப்பட்ட மக்களை அடிமையாக்குகிறது. பெண்களை இழிவுபடுத்தி `பாபயோனியிலிருந்து பிறந்தவர்கள்’ என்று கூறுகிறது.

இப்படிப் பலப்பல. கீழே உள்ள வடமொழி சமஸ்கிருத சுலோகங்களைப் படியுங்கள்.

``நான்கு வருணங்கள் என்னால் உண்டாக்கப்பட்டவை. அவரவர்களுக்குரிய கருமங்களை அவரவர் மீறாமல் செய்யவேண்டும். அதனை மாற்றிச் செயல்பட வைக்க அந்த வர்ண தர்ம .உற்பத்தியாளனாகிய என்னால் முடியாது.’’

``சாதுர் வர்ண்யம் மயாஸ்ருஷ்டம் கண கர்ம விபாகச:

தஸ்ய கர்த்தாரமபிமாம் வித்யகர்த்தார மவ்யயம்’’

(அத்தியாயம் 4, சுலோகம் 13)

இந்த உலகத்தில் மட்டும்தான் இத்தகைய நான்கு வகை வர்ண தர்மம் உண்டு. மறு உலகத்தில் இது இல்லை.

``காங்கஷ்ந்த்: கர்மணாம் ஸித்திம் யஜந்த இஹ தேவதா

க்ஷிப்ரம் ஹி மானுஷே லோகே ஸித்திர்ப் பவதி கர்மஜா’’

(அத்தியாயம் 4, சுலோகம் 12)

பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவயோனியிலிருந்து பிறந்தவர்கள் (Born out of the womb of sin)

``மாம் ஹி பார்த்த வ்யபாச்ரித்ய யே பி ளுயு பாப யோனய

ஸ்த்ரியோ வைச்யாஸ் ததா சூத்ராஸ்தேளு

பி யாந்தி பராங்கதிம்

(அத். 9 சுலோகம் 32)

கீதையின் மறுபக்கம்: பக்கங்கள்: 83,84,85

வெப்ஈழம்: விஞ்ஞானம் மிகவும் வளர்ந்துள்ள இந்த மேற்கத்தேய நாடுகளில்கூட எமது தமிழர்கள் கோயில்களைக் கட்டி அலகு குத்தி காவடி எடுக்கின்றார்கள். நிறைய செலவு செய்து யாகங்கள் செய்கின்றார்கள். மனிதர்களை கடவுள் என்று வழிபடுகிறார்கள். இவர்களுக்கு உங்கள் புத்திமதி என்ன?

வீரமணி: படிப்பறிவு வேறு, பகுத்தறிவு வேறு. மூடநம்பிக்கை, அறியாமையைவிட கொடுமையான நோய் மனிதர்களுக்கு வேறு கிடையாது!

காலங் காலமாக கடவுள் வழிபாட்டால் மனிதர்கள் அடைந்த துன்ப, துயரத் தடுப்பு உண்டா?

ஈழத் தமிழர்களை புலம் பெயர வைத்த கதிர்காமக்கந்தனும், யாழ்ப்பாண சிவனும் என்ன செய்தார்கள் - `தமிழன் மாமிசம்’ இங்கே கிடைக்கும் என்று சிங்கள இனவெறி ஓங்காரக் கூச்சல் இட்டபோது?

`சுனாமி’யில் இலங்கை மக்கள் கொல்லப்பட்டார்களே, கருணையே வடிவான, எங்கும் நிறைந்த, எல்லாம் வல்லவனாக் கூறப்படும் கடவுள் தடுத்தாரா?

இல்லாத ஒன்றுக்கு இவ்வளவு இழப்பா? சிறப்பா? ஈழ விடுதலைக்கு அப்பொருளைச் செலவழித்தால் மனித உரிமையாவது பாதுகாக்கப்படுமே!

வெப்ஈழம்: திராவிடர் கழகத்தில் இருந்து அண்ணா பிரிந்த பொழுது அவரைக் கடுமையாக விமர்சனம் செய்த பெரியார் பின்பு பொதுநலநோக்கில் அவரை ஆதரித்தார். நீங்களும் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுடன் நட்புடன் இருந்து வருகின்றீர்கள். பொதுநலனுக்காய் இணைந்து போராடியும் இருக்கின்றீர்கள். இதே போன்று தற்பொழுது உங்களுடன் இருந்து பிரிந்து தனிக் கழகங்களை நடத்தி வரும் கொளத்தூர் மணி போன்றவர்களுடன் ஈழத்தமிழர்களுக்காக நீங்கள் இணைந்து போராட தயாராக இருக்கின்றீர்களா?

வீரமணி: ஈழ தமிழர்களுக்காகப் போராடுவது எங்களது வேலைத் திட்டம்! மற்றவர்களுடன் இணைந்துதான் போராட வேண்டும் என்பது அவசியமில்லை.

ஈழத்தில் கருணா குழுவினருடன் தலைவர் பிரபாகரனை இணைந்து போராடுங்கள் என்று கேட்பீர்களா?

எனவே துரோகத்தோடு சமரசம் செய்ய முடியாது. அதனால் லட்சியப் பணி குன்றாது.

வெப்ஈழம்: ஈழப்போராட்டத்திற்கான ஆதரவு தமிழ்நாட்டில் என்ன நிலையில் தற்பொழுது உள்ளதாக நீங்கள் நினைக்கின்றீர்கள்?

வீரமணி: நீறு பூத்த நெருப்பு - அணையாத நெருப்பு - அதனை டிசம்பர் 29ஆம் (2005) தேதி பெரியார் திடலில் நடந்த ஈழத் தமிழர் பாதுகாப்புக் கூட்டத்தின் மூலம் அறிய முடிந்தது. அதன் தாக்கம்தான், தமிழக முதல்வரை சிங்கள அதிபரைச் சந்திக்காமல் செய்ய வைத்தது!

- வெப் ஈழம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலுக்கு நன்றி கந்தப்பு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.