Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உடையார் மிகவும் நன்றி.நானும் எத்தனையோ தடவை முயற்சி செய்து விட்டுவிட்டேன்.

நிர்வாகத்திடமும் உதவி கோரியிருந்தேன்.வேலைப்பழு போல கண்டு கொள்ளவேயில்லை.

Posted

ஈழப்பிரியன்,

ஆட்கள் கூடிய இடங்களில் தான் பிரச்சனைகள். உங்கள் இடத்தில் எல்லாம் உணர்வுபூர்வமாக நடக்கட்டும். நாமும் மனத்தால் உங்களுடன் இணைந்திருப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய

சந்தனப் பேழைகளே! - இங்கு

கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா?

குழியினுள் வாழ்பவரே!

உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள்

உறவினர் வந்துள்ளோம் - அன்று

செங்களம் மீதிலே உங்களோடாடிய

தோழர்கள் வந்துள்ளோம்.

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை

இங்கே திறவுங்கள்.

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே

மறுபடி உறங்குங்கள்.

நள்ளிரா வேளையில் நெய்விளக்கேற்றியே

நாமும் வணங்குகின்றோம் - உங்கள்

கல்லறை மீதிலெம் கைகளை வைத்தொரு

சத்தியம் செய்கின்றோம்

சாவரும் போதிலும் தணலிடை வேகிலும்

சந்ததி தூங்காது – எங்கள்

தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின்

தாகங்கள் தீராது.

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை

இங்கே திறவுங்கள்.

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே

மறுபடி உறங்குங்கள்.

உயிர்விடும் வேளையில் உங்களின் வாயது

உரைத்தது தமிழீழம் - அதை

நிரை நிரையாகவே நின்றினி விரைவினில்

நிச்சயம் எடுத்தாள்வோம்

தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும்

தனியர(சு) என்றிடுவோம் - எந்த

நிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின்

நினைவுடன் வென்றிடுவோம்.

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை

இங்கே திறவுங்கள்.

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே

மறுபடி உறங்குங்கள்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மேலுள்ள பாடல் குறுவட்டு யாரிடமாவது இருந்தால் தந்துதவவும்.நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தகவலுக்கு நன்றி உடையார்.

இது வரை காலமும் இப்படியான காணொளிகளில் இருந்து தான் மாவீரருக்கு பூ தூவும் போது இசைக்கப்படுகின்றன.இப்போது சில வேளைகளில் மக்கர் பண்ணிவிடும்.கனடாவில் இருக்கும் வர்ணராமேஸ்வரன் தான் இப்பாடலை பாடியவர்அவரிடமிருந்து ஒறியினல் சிடி வெளியாட்களிடம் உள்ளதாக கேள்வி அதனாலேயே கேட்டிருந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஈழப்பிரியன், உங்களது ஆர்வமும் முயற்சியும் பாராட்டுக்குரியது.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.