Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுநலவாய விளையாட்டு போட்டி இலங்கைக்கு கிடைக்காமை பாக்கியம் - தேசப்பற்றுள்ள இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாஸ

Featured Replies

பொதுநலவாய விளையாட்டுப்போட்டி இலங்கைக்கு கிடைக்காமை மகிழ்ச்சியளிக்கின்றது. இது நாட்டு மக்களுக்கு கிடைத்த பாக்கியமாகும் என்று தேசப்பற்றுள்ள இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாஸ அமரசேகர தெரிவித்தார்.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் மூன்றாம் உலகப்போர் உருவாகும். இதனால் இலங்கையில் “பஞ்சம்' ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாஸ அமரசேகர மேலும் கருத்து தெரிவிக்கையில், நாட்டு மக்கள் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்கின்றனர். இவ்வாறானதோர் சூழ்நிலையில் அரசாங்கம் களியாட்டங்களையும் விளையாட்டுப் போட்டிகளையும் நடத்தி கோடிக் கணக்கான பணத்தை வீண் விரயம் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை இலங்கையில் நடத்துவதால் எதுவிதமான நன்மையும் கிடைக்கப் போவதில்லை. மாறாக மக்கள் பட்டினிச்சாவை எதிர் நோக்கும் நிலையே உருவாகும்.

எனவே எமக்கு இது கிடைக்காமல் போனமை மகிழ்ச்சியளிப்பதோடு நாட்டு மக்களுக்கு கிடைக்க பெரும் பாக்கியமாகும்.அதேவேளை, ஈரான் மீது இஸ்ரேல், தாக்குதல் நடத்த தயாராகிக் கொண்டு வருகிறது. இத்தாக்குதல் ஆரம்பமானால் மூன்றாவது உலகப்போர் ஆரம்பமாகும். இதனால் இலங்கையில் பஞ்சம் உருவாகும் ஆபத்தும் உள்ளன.

எனவே அரசாங்கம் விளையாட்டுப் போட்டிகள், களியாட்டங்கள், ஆடம்பரமான நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு கோடிக் கணக்கான ரூபாய்கள் செலவிடுவதை நிறுத்த வேண்டும்.

எதிர்கால சவால்களுக்கு முகம் கொடுக்கவும் மக்களை பாதுகாக்கவும் திட்டங்களை தயாரிக்கவேண்டும்.அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தேவைகளை நிறைவேற்றும் ““சேவகனே'' நோர்வேயாகும். எனவே அந்நாட்டுடன் மீண்டும் அரசாங்கம் உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள முனைவது ஆபத்தையே ஏற்படுத்தும்.

ஏற்கனவே நோர்வேயின் அனுசரணைக் காரணமாகவே பிரிவினைவாத புலிப் பயங்கரவாதம் பலமடைந்தது. இன்று பயங்கரவாதத்தை இல்லாதொழித்த நிலையில் மீண்டும் நோர்வேயின் உறவை நாட முனைவது ஆபத்தையே ஏற்படுத்தும் என்றார்.

http://akkinikkunchu.com/new/

  • கருத்துக்கள உறவுகள்

கிடைத்தாலும் பாக்கியம்!

கிடைக்கா விட்டாலும் பாக்கியம்!

தேசப் பற்றுள்ள தேசிய இயக்கமே சிங்களத்தின் பாக்கியம்!

இந்தப் பக்கம் நீங்கள் பாக்கியம் பாட, அந்தப் பக்கத்தால உங்கட சீனி ஆலைகளை, நாங்கள் குத்தகைக்கு எடுத்திட்டம்! :D :D :D :D :D

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் மூன்றாம் உலகப்போர் உருவாகும். இதனால் இலங்கையில் “பஞ்சம்' ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

பிழையான ஆட்சி முறையால் வரப்போகும் பஞ்சத்தை இஸ்ரேல் - ஈரான் யுத்தம் நிகழ்ந்தால் அதன் தலைமேல் போட்டு தப்பிவிட எண்ணப்படுகின்றது :rolleyes:

இந்தப் பாக்கியத்தை இப்ப சொன்னால் சில நாட்டுச் சிங்களவன் கேட்பான்.

புத்திசாலிச் சிங்களவனோ இதை ஏன் முன்னமே எதிர்க்கவில்லை என்று யோசிபானா?

எனக்கென்னமோ சி ச்சி இந்தபழம் புளிக்கும் எண்ட கதைதான் நினைவுக்கு வருது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.