Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடத்தப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவன் விடுவிக்கப்பட்டுள்ளார் :

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

GTN.special_CI.jpg

கடத்தப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவன் வேதாரணியம் லத்தீஸ் (வயது 27) நேற்றிரவு விடுவிக்கப்பட்டுள்ளார் யாழ்.பல்கலைக்கழகத்தையண்டிய சிவன்-அம்மன் கோவிலடியினிலேயே வெள்ளை வான் கும்பலால் இவர் கடத்தப்பட்டதாக தெரியவருகின்றது. பல்கலைக்கழக பாலசிங்கம் விடுதியிலிருந்து மோட்டார் சைக்கிளினில் பயணித்துக்கொண்டிருந்த இவனை குறித்த வெள்ளை வான் கும்பல் வழிமறித்து கடத்தியுள்ளது. கொழும்பு செல்வதாக கூறி அருகாக உள்ள வீடொன்றினுள் மோட்டார் சைக்கிளை நிறுத்த உத்தரவிட்ட இக்கும்பல் பின்னர் கண்களை கட்டி கடத்தி சென்றுள்ளது.எனினும் தன்னை தடுத்து வைத்த இடம் பற்றி எதனையும் கூற முடியாதவராகவே வேதாரணியம் லத்தீஸ் உள்ளார்.

இவர் மோசமாக அச்சுறுத்தப்பட்டுள்ளதால் பயந்த நிலையில் காணப்படுவதாக குடும்பத்தவர்கள் கூறுகின்றனர்;.குடும்பத்தவர்கள் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சாவகச்சேரி; பொலிஸார் அவரிடமிருந்து வாக்குமூலமொன்றை பெற்றுள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழக மாணவன் லத்தீஸ் கடத்தப்பட்டுள்ளார்

28-11-2011 - 05:43

யாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவபீட மாணவனான வேதாரணியம் லத்தீஸ் (27 வயது) கடத்தப்பட்ட சம்பவம் மாணவ சூழலிடையே பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.நேற்றிரவு யாழ்.திருநெல்வேலியிலுள்ள பாலசிங்கம் விடுதியிலுள்ள தனது சக நணபர்ளை சந்தித்து விட்டு கைதடியிலுள்ள தனது விடுதிக்கு திரும்பிக்கொண்டிருக்கையிலேயே இவர் கடத்தப்பட்டிருக்கலாமென குடும்பத்தவர்கள் சந்தேகிக்கின்றனர்.

வடமராட்சி கிழக்கு மருதங்கேணியை சொந்த இடமாக கொண்ட இவர் வன்னியில் படையினரால் பிடிக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையிலேயே பூஸா தடுப்பு முகாமிலிருந்து இழுபறிகளின் பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகையால் வழமை போல திருநெல்வேலியிலுள்ள பாலசிங்கம் விடுதியிலுள்ள தனது சக நண்பர்ளை சந்திக்க வந்து திரும்புவது இயல்பானதென நண்பர்கள் கூறுகின்றனர். நேற்று இரவு வரை இவர் தைடியிலுள்ள பல்கலைக்கழக சித்த மருத்துவபீட விடுதிக்கு திரும்பாததையடுத்து சக மாணவர்கள் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டுள்ளனர். அவ்வேளையினில் பலர் உரையாடும் சத்தங்கேட்டதாகவும் சிலர் சிங்கள மொழியிலும் கதைப்பதை கேட்டதாகவும் மாணவர்கள் தரப்பினில் கூறப்படுகின்றது. இவரை படையினரே கடத்தியுள்ளதாக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் உறுதியாக கூறுகின்றனர்.

நேற்று மாவீரர் தினங்கொண்டாட்டங்களில் மாணவர்கள் பாலசிங்கம் விடுதியில் ஈடுபட்டிருந்ததையடுத்து விடுதி சூழலில் படையினர் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்;. மாணவர்கள் அச்சம் காரணமாக அனைவரும் ஒன்று கூடி விடுதிகளுள் முடங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.

http://www.globaltam...IN/article.aspx

Edited by தமிழ் அரசு

மாணவர் விடுவிக்கப்பட்டது மகிழ்ச்சி தரும் செய்தி. ஆனால், கடத்தப்பட்டவர்கள் ஆட்சியில் உள்ளவர்கள் என்பதால் கவனமாக இருக்கவேண்டும்.

ஒரு அரசியல் தீர்வை எடுத்து சிங்கள இராணுவ புலனாய்வு கூட்டத்தை தாயகத்தை விட்டு அகற்றினால் மட்டுமே சுதந்திரமாக மக்கள் வாழலாம்.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஓர் அன்பு மடல்...

அன்புக்குரிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அநேக வணக்கம். அவசரமாக இக்கடிதம் எழுதப்படுகின்றது. கடிதம் எழுது வதன் நோக்கம் தமிழினத்தின் எதிர்காலம் பற்றியதாகும். நவம்பர் 27 என்றால் அது மாவீரர் நாள் என்பதை யாராலும் மாற்றமுடியாது. இருந்தும் அத்தகையதொரு நாளை அனுஷ்டிக்கக் கூடாது என்பதில் படைத்தரப்பு மிகவும் அவதானமாக இருக்கின்றது.

போராட்டத்தில் தங்கள் உயிரை அர்ப்பணித்தவர்களை வணங்கு கின்ற நடைமுறை உலகு முழுவதிலும் உள்ளது. எதிரியாக இருந் தாலும் அவன் போர்க்களத்தில் உயிர்த் தியாகம் செய்தால் அவருக் குரிய மரியாதையை வழங்க வேண்டும் என்பது போர்த்தருமம். அத் தகைய தொரு போர்த்தர்மத்தை துட்டகைமுனு, எல்லாள மன்னன் தொடர்பில் பின்பற்றிய தகவல்கள் உண்டு. இருந்தும் சமகால துட் டகை முனுக்களிடம் அத்தகைய இயல்பு இல்லை.

எனவே இது விட யத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மிகவும் நிதானமாக செயலாற்ற வேண்டும். விடுதலைப் போரில் எங்கள் இழப்புகள் ஏராளம். அந்த இழப்புகளின் துயரங்கள் ஆறிக்கொள்ள மிக நீண்டகாலம் எடுக்கும். அதேசமயம் எங்கள் உரிமைகள் தொடர்பில் ஏதேனும் கிடைப்பதாக இல்லை. வன்னிப்போரில் தமிழர் தரப்பில் ஏற்பட்ட இழப்புகள் தொடர் பில் சர்வதேச சமூகம் தலையிடும் என்ற நம்பிக்கை இருந்தது உண்டு.

ஆனால் எதுவுமே நடைபெறவில்லை. மாறாக வன்னிப் பெரும் நிலப் பரப்பில் பணியாற்றிய சர்வதேச தொண்டு அமைப்புகள் அங்கிருந்து வெளியேறின. உலகில் எங்கு போர் நடந்தாலும் அங்கு தொண்டு அமைப்புகள் விரைந்து சென்று உதவி புரிவதே மரபாக இருக்க, எங் கள் மண்ணில் மட்டும் போர் தொடங்கியவுடன் சர்வதேச அமைப் புகள் மூட்டை முடிச்சுக்களைக் கட்டிக் கொண்டு வெளியேறின. இல ங்கை அரசு உத்தரவிட்டது நாங்கள் வெளியேறினோம் என்று சர்வ தேச தொண்டு அமைப்புகள் நியாயம் கற்பித்தால் அது மகாதவறு. ஏனெனில் போர் நடக்கிறது. அப்பாவிப்பொது மக்கள் பலியாகப் போகிறார்கள். எங்களை காப்பாற்றுங்கள், எங்களைக்கைவிட்டுப் போகாதீர்கள் என்று மக்கள் கெஞ்சிக் கேட்கிறார்கள். அதையும் பொருட்படுத்தாமல் சர்வதேச அமைப்புகள் வன்னியிலிருந்து வெளி யேறின எனில் எங்கள் பேரிழப்பில் சர்வதேச சமூகம் நடந்துகொண்ட முறை மிகக்கொடூரமானது.

எனவே சர்வதேச சமூகம் இனிமேலேனும் எங்கள் விடயத்தில் சாத கமாகத் தலையிடும் என்று நினைத்தால் அது கற்பனையாகமட்டுமே இருக்க முடியும். ஆக,அன்புக்குரிய யாழ்ப்பாணப்பல்கலைக் கழக மாணவர்களே! எங்கள் உரிமைக்காக நீங்கள் வகுக்கக் கூடிய இராஜ தந்திரம் கனதியானது. உங்களால் அது முடியும். எனவே நீங்கள் முத லில் உங்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துங்கள். அரசியலைப் படி யுங்கள். நாங்கள் விட்ட தவறுகளை ஆராயுங்கள். அந்தத் தவறு களை எங்கியிருந்து திருத்த வேண்டும் என்பதை இனங்கண்டு கொள்ளுங்கள்.

கூடவே தமிழ் மக்களை அரசியல் புலத்தில் விழிப்படையச் செய்யுங் கள். உங்களிடமிருந்து இதனையே எதிர்பார்க்கிறோம் ஒரு உன்னத மான விடுதலை விரும்பி ஒருபோதும் எதிரியை சீண்டுவதில்லை. மற்றவர்களின் உசுப்பேத்தல்களுக்கு இடம் கொடுப்பதும் இல்லை. உரிமை என்பது கிடைத்து விட்டால் எதையும் நாம் அனுஷ்டிக்க முடியும். அதுவரை மனதுக்குள் வழிபாடாக நடக்கட்டும். இப்போதைக்கு அது போதும்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=25653

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பங்கர் அமைச்சருக்கு பெட்டி போய் சொன்ன நேரத்திற்கு சேர்ந்திட்டுது. இல்லையென்றால்.....

Edited by KuLavi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.