Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உபவாச சிகிச்சை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உபவாச சிகிச்சை!

resize_20111205191010.jpg
டல் தன் இயல்பு நிலையிலிருந்து மாறுவதே நோய் என்று நோய் இயல் வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள்.

உடலை மறுபடியும் தன் இயல்பு நிலைக்குத் திரும்ப வைப்பதே இயற்கை மருத்துவ சிகிச்சையின் நோக்கம். மற்ற சிகிச்சை முறைகளில் உள்ளது போல நோய்க்குத் தகுந் தவாறு மருந்துகள் என்று இதில் இல்லை. எந்த சிகிச்சை முறையைப் பயன்படுத்தினாலும் இயல்பு நிலைக்குத் திரும்ப வைப்பதே இதன் நோக்கம்.

இந்த முறைகளில் உபவாச சிகிச்சை தலை சிறந்தது. இயற்கை மருத்துவத்தின் மற்ற எந்த சிகிச்சையையும் விட உபவாச மும், பிராணாயாமமும் உடலை சீக்கிரம் தன் சகஜ நிலைக்குத் திருப்பி விடுகிறது. உபவாசத்தை ‘பட்டினி கிடப்பது’ என்று பலர் குறிப்பிடுகிறார்கள். பட்டினிக்கும் உபவாசத்திற்கும் ஒரு வேறுபாடு இருக்கிறது.

நாம் அன்றாடம் உண்ணும் உணவில் எல்லா பகுதியையும் உபயோகித்து விடுவ தில்லை. ஒரு குறிப்பிட்ட பகுதியை உடல் உபயோகப்படுத்தாமல் சேமிப்பில் வைத்துக் கொள்கிறது. என்றா
08a.jpg
வது உணவு உடலுக்குக் கிட்டவில்லை என்றால் அந்த சேமிப்பு உணவை உடல் உபயோகப் படுத்திக் கொள்கிறது.

உடலில் சேமிப்பு உணவு இருக்கும் வரை நாம் உணவு கொடுக்காமல் இருந் தால் ஒன்றும் பெரிய தவறில்லை. அந்த சேமிப்பும், கரையும் பொழுது நம்மு டைய உபவாசம் தொடருமானால், அதற்கு மேல் உடல் தளர்ந்து கொண்டே வருகிறது. இந்தத் தளரும் நிலைக்கு நாம் வந்து அதற்கு மேல் உணவு அருந்தாமல் இருந்தால் தான் பட்டினி என்பதாகும்.

உடலில் இந்த சேமிப்பு உணவு இருந்து கொண்டிருக்கும் பட்சத்தில் நாம் உணவு கொடுக்காமல் இருந்தால் உடல் தன் னுடைய பல வேலைகளைக் குறைத்துக் கொண்டு தன்னைத் தானே சுத்திகரிக்கும். பணியில் ஈடுபடுகிறது. உடலில் தேங்கி உள்ள நச்சுப் பொருட்களையும் நோய் களுக்குக் காரணமாக உள்ள உடலுக்கு ஒவ்வாத கழிவுத் தேக்கங்களையும் வெளி யேற்றுவது இந்த சுத்திகரிப்புதான்.

நோய் உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும் சக்தி நம் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களுக்கு உண்டு. இந்த வெள்ளை அணுக்களின் முழுமையான திறன் உணவு அருந்திக் கொண்டிருக்கும் நாட்களைவிட உபவாச நாட்களில் அதி கம் வெளிப்படுகிறது.

உபவாசம் உடலுக்கு ஓய்வாக அமை கிறது. உடலின் உள் உறுப்புகளின் இயக் கங்களுக்கும் ஓய்வு தருகிறது. இந்த முழு ஓய்வு கிடைக்கும் பொழுது உடல் தானே சீரடைகிறது.

உபவாசத்தில் பலவகைகள் இருக்கிறது. தண்ணீர் கூட அருந்தாமல் இருந்து விடுவது நிர்ஜலோபவாசம் என்பது. இது உடல் ஆரோக்கியத்துக்காக இருப்பதை விட ஆன் மிக ஆரோக்கியத்துக்குத்தான் பின்பற்றப்படுகிறது. உடல் ரீதியில் ஏதா வது பிரச்னைகள் இருந்தால் இது அவ்வளவாக உபயோகமாக இராது.

அடுத்தது, தண்ணீர் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல். நாள் முழுவதும் 3 முதல் 4 லிட்டர் அருந்தி முழு ஓய்வு எடுப்பது. இது உடல் நோய்களைச் சீர் படுத்தவல் லது. காய்ச்சல், வயிற்றோட் டம், ஜலதோஷம், தொண்டைக் கட்டு போன்ற பல நோய்களுக்கு இது நல்ல பலன் தரும்.

நாள்பட உடலில் பிரச்னை கொடுத்து வரும் மூட்டு வலிகள், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கும் ஆரம்ப கால கட்டமாக உடல் சுத்திகரிப்புக்கு இது மிகவும் பலன் தரும். ஒன்று முதல் மூன்று அல்லது நான்கு நாட்கள் வரை உடல் எந்த அளவுக்கு இடம் கொடுக் கிறதோ அந்த அளவுக்கு உபவாசம் இருக் கலாம். கொஞ்சம் மன உறுதியும், பொறு மையும் தேவைப்படும்.

அடுத்த ரக உபவாசம் எல்லோராலும் எளிதில் பின்பற்றக் கூடியதே. பழரசங் கள், இளநீர் போன்ற இயற்கையான பானங்களை மொத்தம் 2 முதல் 2லு லிட்டர் வரை கு டித்து, மேலும் 2லு லிட்டர் வரை தண்ணீர் அருந்திக் கொண்டு உபவாசம் இருத்தல். இயற்கை மருத்துவத்திற்குப் புதிதாக வரும் நோயா ளிகள் இந்த முறையைப் பின் பற்றி உடல் சுத்திகரிப்பு செய்து கொள்வர்.

உபவாசம் இருக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

உபவாசம் இருப்பதற்கு முந்திய தினமே இரவு மாமிசம், மசாலா உணவுகள் எண்ணெய்ப் பதார்த்தங்கள் தவிர்க்கப் பட வேண்டும்.

எளிய உணவு உட்கொண்டு, பழங்கள் முதலானவை சற்று அதிகமாக எடுத்துக் கொண்டால் உபவாசத்தன்று காலை மலச்சிக்கல் இன்றி எளிதில் இயற்கை உபாதைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும்.

உபவாசத்தன்று மலச்சிக்கல் ஏற்பட்டு குடலில் மலம் தேங்கியிருந்தால் அதிகமாக வாயு, உற்பத்தியாகி தலைவலி, உடல் இறுக்கம், வலிகள் போன்ற உபாதை கள் இருக்கும்.

எனிமா:

மலச்சிக்கல் இருப்பது போல் தோன்றி னால், எனிமா சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம். வெளியே பிரசவ மருத்துவ மனைகளில் கொடுப்பது போல சோப்புத் தண்ணீர் எல்லாம் எனிமாவுக்குப் பயன் படுத்துவது இல்லை. சாதாரண தண்ணீரே இளம் சூட்டில் பயன்படுத்தப்படுகிறது.

இயற்கை மருத்துவமனைகளில் சிறிய டம்ளர் எனிமா கருவியைப் பயன்படுத்துவ துண்டு. அதை உபயோகித்து ஆசனவாய் வழியாக பெருங்குடலில் ஒன்றிரண்டு டம்ளர் தண்ணீரைச் செலுத்தினால் மலத்தைக் கழுவி வெளியேற்றி விடுகிறது.

(எனிமா சிகிச்சை பற்றி இயற்கை மருத்துவர்களிடம் நேரடியாக தெரிந்து கொண்டு பயன்படுத்தவும்).

வயிற்றுப்பட்டி

வயிற்றில் வாயு தொந்தரவு, அதிகப் படியான பசி முதலியவை அடங்கியிருந் தால் உபவாசத்தில் தொந்தரவு இல்லாமல் இருக்கும்.

அதற்கு ஏதுவாக வயிற்றுக்கு களிமண் பட்டிகள் காலை, மாலை, இரவு மூன்று வேளைகளிலும் போட்டுக் கொள்ள வேண்டும். அசுத்தமில்லாத இடங்களில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு, சுத்திகரிக்கப் பட்ட களிமண்ணை இயற்கை மருத்துவ நிலையங்களில் ஊறப்போட்டு வைத்திருப் பார்கள். சில்லென்று இருக்கும்.

இதை ஈரமான பருத்தித் துணிகளில் பொட்டலம் போல கட்டி வைப்பது மண்பட்டி. அது கிடைக்காத பட்சத்தில், சற்றே கனமான துவாலையை பானைத் தண்ணீரில் அல் லது ஐஸ்வாட்டரில் நனைத்து முக்கால் வாசித் தண்ணீரைப் பிழிந்து விட்டு மண்பட்டி போல வயிற்றில் போட்டுக் கொள்ளலாம்.

சற்றே கனமாகவும், சில்லென்றும் இருக்கும் மண்பட்டி, அல்லது ஈரத் துணிப்பட்டி உள்வயிற்றில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து பெருங்குடல், சிறு குடல் போன் றவற்றைச் சீராக இயக்குகிறது.

வயிற்றின் உள்ளுறுப்புகள் சீராக இயங்கினால் வாயு கட்டாமல், வயிற்று வலியோ தலைவலியோ இல்லாதிருக்கும்.

மனோநிலை:

உபவாசம் இருப்பதற்கு மனம் தயா ராக இருத்தல் அவசியம். அப்போதே பசி மட்டுப்படுகிறது. இயற்கை மருத்துவ நிலையங்களில் மருத்துவர்கள் உபவாசத் தின் நன் மைகளையும், முறைகளையும் விரி
08b.jpg
வாக எடுத்துக்கூறி ஊக்குவித்து, அதன் பின்பே நோயாளிகளை உபவாசத்தில் வைப்பர்.

அதிகம் சமையல் வாசனை வரக்கூடிய இடங்களிலும் விருந்து, கேளிக்கைகள் நடக்கக் கூடிய இடங்களிலும் மக்கள் உபவாசம் இருப்பது கஷ்டம். உபவாசம் இருக்கும் நோயாளிகளுக்கு உதவியாக வீட்டில் உள்ள மற்ற உறவினர்களும் எளிமையான உணவையே, உட்கொள்வது அவசியம். அப்போதே சூழல் தயாராகி இருக்கும்.

வீட்டில் ஒருவருக்கு அம்மை கண்டிருந் தாலும், சமையலில் யாருக்குமே தாளிப்ப தில்லை என்கிற கலாச்சாரம் நம்மிடத்தில் உண்டு தானே. அது போலத்தான் இது.

தண்ணீர் குடித்தல்:

உபவாசத்தன்று காலையிலிருந்தே தண்ணீர் குடித்துக்கொண்டு வரவேண்டும். நாள் முழுவதும் இடை இடையே அரை டம்ளர், ஒரு டம்ளர் தண்ணீர் அருந்திக் கொண்டே வந்தால் பசியும் இல்லா திருக்கும். சுத்திகரிப்பும் சீராய் நடக்கும்.

ஒரே சமயத்தில் இரண்டு, மூன்று டம்ளர் தண்ணீரை ஒன்றாகக் குடித்தால் சிலருக்கு வாந்தி வருவதுபோலத் தோன்றும். அதனால் முதலிலிருந்தே கொஞ்சம், கொஞ் சமாக அருந்திக்கொண்டு வந்தால் கஷ்ட மாகத் தெரியாது.

தண்ணீர் 2லு முதல் 3லிட்டர் வரை குறைந்தபட்சம் குடிக்க வேண்டும். பழரசங்கள் 2லிட்டர் வரும். வெறும் தண்ணீர் உபவாசமானால் மொத்தம் 4 முதல் 5 லிட்டர் வரை குடித்தல் அவசியம்.

உபவாசத்தில் உடலுக்கும் உள் உறுப் புகளுக்கும், மனதிற்கும், புலன்களுக்கும் ஆக நான்கு விதமான ஓய்வுகள் தர வேண்டும்.

உடலுக்கு ஓய்வு

அலைச்சலைத் தவிர்க்க வேண்டும். வெயிலில் வெளியே செல்லுதல் முதலா னவை உபவாசத்தின் பலன்களை வெகு வாகக் குறைத்துவிடும்.

எளிமையில் செரிக்கக்கூடிய பழரசங் களையே நாம் அருந்துவதால், உள் உறுப்பு களுக்கும் ஓய்வு கிட்டுகிறது. காபி, டீ, பீடி, சிகரெட், மாத்திரைகள் முதலியவை நம் உள்ளுறுப்புகளுக்குத் தரும் ஓய்வைக் குறைக்கிறது.

டி.வி., சினிமா பார்த்தல், சென்ட் உபயோகித்தல், வாசமுள்ள மலர்களைச் சூடிக் கொள்ளுதல், அருந்தும் பழரசங் களில் வாசனைப் பொருட்களைச் சேர்ப் பது, அதிகப்படியான சுவையை உண் டாக்கிக் கொள்வதோ புலன்களுக்குக் கொடுக்கும் ஓய்வைக் குறைக்கிறது.

உபவாசத்தில் நாம் செய்யக் கூடியது தியானமும், மென்மையான நாடி சுத்தி பிராணாயாமமும் மட்டும்தான். மற்றபடி ஓய்வே சிறப்பானது.

மென்மையான இசை சிறிது நேரம் கேட்கலாம். இப்படி முழு ஓய்வு அளித்து, உடலின் சுத்திகரிப்பே நோக்கமாக காத் திருத்தல் உபவாசத்தின் முக்கிய அம்சம்.

சர்க்கரை நோயாளிகள், ரத்த சோகை உள்ளவர்கள், வயிற்றில் அல்ஸர் உள்ள வர்கள் உபவாசம் இருப்பதில்லை. சில குறிப்பிட்ட நோய்களுக்கு உபவாச வகை கள் சற்றே மாறுபடும். எதுவாக இருந் தாலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படியே உபவாசம் இருத்தல் அவசியம்.

http://www.thedipaar...ws.php?id=37875

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி நுணாவிலான்

இயந்திர வாழ்க்கை வாழும் எம்போன்ற புலம்பெயர் மக்களுக்கு

இந்த உபவாசம் ஒத்துவருமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ்வளவு நல்லவிடயங்கள்....சைவசமயத்தில் நடைமுறையாக சொல்லப்பட்டுள்ளது.....அதை யாரும் கணக்கெடுப்பதில்லை....அவைகள் இப்போது சமயபிரகாரம் பட்டிக்காடாக தெரிகின்றது....இதை வெள்ளைகள் புத்தமாக வெளியிடும்போது...புது உலகமாக தெரிகின்றது.....எடியே செல்லம் இனிமேல் திங்கள் செவ்வாய் வியாழன் வெள்ளி விரதமெண்டு சொல்லாதையடி...அதை ஸ்ரைலாய் டையட் எண்டு சொல்லி....அசத்தடி................... :lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.