Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி

Featured Replies

தமிழீழத் தொலைக்காட்சி PAS 12 at 45.0 E ல் ஒளிபரப்பாகின்றது.

11548 V

National TV of Tamil Eelam (15.00-16.30 & 20.30-22.00 CET)

மேலதிக விபரத்திற்கு

http://www.lyngsat.com/pas12.html

தகவலுக்கு நன்றிகள்.

தகவலுக்கு நண்றி மோகன் அண்ணா...! Hot Bird ல் பார்ப்பதுக்கு வசதிகள் கிடையாதா...?? pas 12 லில் பார்ப்பதுக்கு lnb யை 45. பாகை திருப்ப இல்லை இன்னும்மொண்றை இணைக்காமல் பார்க்க வளி இருக்கிறதா....???

நன்றி தகவலுக்கு - பேராசிரியர்-(pro-)

a message from nitharsanam huh?

let me- conform -once again-about it !-lol :wink: 8)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒஸ்ரேலியாப் பக்கம் என்ன மாதிரியாம்?

இலவசமாக ஜரோப்பிய மற்றும் உலகத் தமிழர்களை தேடிவருகிறன்றது தமிழீழ தேசியத் தொலைக்காட்சி.

http://www.nitharsanam.com/?art=15313

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி. தகவல்களுக்கு

Hot Bird ல் பார்ப்பதுக்கு வசதிகள் கிடையாதா...?? pas 12 லில் பார்ப்பதுக்கு lnb யை 45. பாகை திருப்ப இல்லை இன்னும்மொண்றை இணைக்காமல் பார்க்க வளி இருக்கிறதா....???

தல,

ரிரிஎன் உள்ளிட்ட மற்றய தமிழ் தொலைக்காட்சிகள் Hot Bird ஊடாக வருவதால் பெரும்பாலானோரின் டிஷ் அதனை நோக்கியே நிறுவப்பட்டிருக்கின்றது. ஆனால் தேசிய தொலைக்காட்சி Hot Bird தவிர்ந்த வேறு ஒரு செய்மதி ஊடாக ஒளிபரப்படுவதால் 45 கோணத்தில் வேறு ஒரு டிஷ் பொருத்துவதை தவிர வேறு வழியில்லை என்று நினைக்கின்றேன் :lol:

ஒஸ்ரேலியாப் பக்கம் என்ன மாதிரியாம்?

தற்போதைய நிலையில் தென் ஆசிய ஐரோப்பிய நாடுகளிலேயே இதனை பார்க்க முடிகின்றது. எதிர்காலத்தில் கனடிய, அமரிக்க, ஆஸ்ரேலியா பிரதேசங்களுக்கு விஸ்தரிக்கப்படலாம். ஆனால் அதற்கு பெருமளவிலான நிதிபலம் தேவை என்று நினைக்கின்றேன்.

தற்போதைய நிலையில் தென் ஆசிய ஐரோப்பிய நாடுகளிலேயே இதனை பார்க்க முடிகின்றது. எதிர்காலத்தில் கனடிய, அமரிக்க, ஆஸ்ரேலியா பிரதேசங்களுக்கு விஸ்தரிக்கப்படலாம். ஆனால் அதற்கு பெருமளவிலான நிதிபலம் தேவை என்று நினைக்கின்றேன்.

எனது நன்பன் சொன்னான் மோட்டர் வங்கி பூட்டின தான திரும்புமாம்/?

தற்போதைய நிலையில் தென் ஆசிய ஐரோப்பிய நாடுகளிலேயே இதனை பார்க்க முடிகின்றது. எதிர்காலத்தில் கனடிய, அமரிக்க, ஆஸ்ரேலியா பிரதேசங்களுக்கு விஸ்தரிக்கப்படலாம். ஆனால் அதற்கு பெருமளவிலான நிதிபலம் தேவை என்று நினைக்கின்றேன்.

பேசாமல் இன்னும் ஒரு டிஸ் வாங்கிப் பூட்டினால் சரிவரும் எண்டு நினைக்கிறன்....... !

ஒரு டிஸ் பூட்டி என்ன ஒன்பது டிஸ்பூட்டி என்ன சும்மா தேசிய தொலைக்காட்சி எண்டு பெயர்தான், அதிலை தேசிய உடையிலே வந்து செய்தி வாசிக்கினம் கருத்தாடல்களில் பங்கு பற்றீனம். கிரீன்பீஸ்காரர் மாதிரி சரியான நெறியாள்கை புரெபெசர்மாரோடை கதைச்சு செய்தா உப்படி நடக்குமே?

உவைக்கும் இளையோர் அமைப்பு எண்டு படங்காட்டிறவைக்கும் எவ்வளவு வித்தியாசம்?

என்ன குறுக்கால போவானே ஏன் எங்களுடைய தொலைக்காட்சியை இப்படி அலுத்துகிறீங்கள். படிப்படியாக தானே வளரவேண்டும்.

யார் சொன்னது எங்கடை எண்டு? உங்கடையா இருக்கலாம்.... எனிவே சீரியசாக செய்யிறவை எண்டா உப்படி பிளைவிடமாட்டீனம். உதைப்பாத்தா ஏதே தாங்களும் செய்யினமாம் எண்டு காட்ட வெளிக்கிட்ட மாதிரி எல்லே இருக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒமோம்! சும்மா கலர்ஸ் காட்டுகினமாக்கும். வெள்ளைக்காரன் என்ன மாதிரி நிகழ்ச்சிகள் செய்யிறான். அவங்களிட்டை இருந்தாவது படிக்க வேண்டாமே? ஒரு நிகழ்ச்சி செய்யிறதெண்டால் அதுக்கு ஒரு ஒழுங்கு முறை இருக்கு.. அதுக்கான சில திட்டமிடல்கள் இருக்கு.. (மேற்கூறிய வார்த்தைகள் கடன் பெறப்பட்ட வார்த்தைகள்)

அந்த பொன்மொழிகளைத்தானே பொறுப்பாளர் பெறுப்பில்லாமல் அழித்துப்போட்டார்.

எனிவே காப்புரிமையோடு மேற்கோள்காட்டுங்கோ இல்லாட்டி சட்டநடவடிக்கை எடுத்துப்போடுவினம்.

தமிழீழ தொலைகாட்சி எங்கள் தொலக்காட்சி என நீங்கள் தானே முன்னர் சொன்னீர்கள் ஏன் இப்பொழுது கட்சி மாறுகிறீர்கள்

இங்கே உடனடித்தேவைகள் இருப்பின் தற்காலிக தீர்வாக உணர்வாளர்கள் நேரடியாக பொருளாதார உதவிகளை செய்யலாம். ஆனால் இதற்கு நிரந்தர தீர்வு என்பது உரிய விளம்பரதாரர்களை பெற்றுக் கொள்ளுவது.

தமிழ் தேசிய தொலைக்காட்சியின் நாளாந்த ஒளிபரப்பு நேரமானது (2100-2200 மத்திய ஜரோப்பிய நேரம்/CET) தமிழ் ஒளி இணையத்தின் 24 மணி சேவையில் மிகவும் பெறுமதிமிக்க அதிக பார்வையாளர்களை கவரும் நேரம் (prime time). அதிலும் மிக முக்கியமாக ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் நிலவரம், நிகழ்வுகளின் ஆய்வகம் என்ற அரசியல் கலந்துரையாடல் நடக்கும் நேரமானது மிகவும் பெறுமதிவாய்ந்தது.

தமிழ்த் தேசிய தொலைக்காட்சியின் வெள்ளிக்கிழமை நிகழ்ச்சிகளும் அம்பலம் பேன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டது.

அதைவிட தமிழீழத்தின் பொருளாதாரம், கல்வி, கலை கலாச்சாரம், வாழ்வியல், சமூகங்களின் இன்னல்கள், பின்தங்கிய கிரமாங்களில் உள்ள அடிப்படை வசதிகளுக்கான குறைபாடுகள் பற்றி தமிழீழ நிர்வாகத்தின் அலகுகள் பற்றி என பல புதிய பயனுள்ள விவரணங்கள் சேர்க்கப்படுகின்றன அவர்களது வாரநாள் நிகழ்ச்சிகளில்.

தமிழீழத் தொலைக்காட்சியானது அவர்களது ஒவ்வொரு நிகழ்ச்சிகள் மூலம் தமிழீழத்தின் அன்றாட வாழ்வின் சவால்கள் முதல் வராலாற்று வெற்றிகள் வரை நிதானமாக ஆவணப்படுத்தி உங்களோடு பகிருகிறார்கள். அங்குள்ள யதார்த்தத்தை நாள்தோறும் உங்களின் வீடுகளின் சொகுசில் இருந்து அறிந்து கொள்ள உதவுகிறார்கள். புலம் பெயர் தமிழ் உறவுகளுக்கு மாத்திரமல்ல உலகத்திற்கும் உடனுக்குடன் ஒளிக்காட்சிகளாக சாட்சிகளாக அனுப்பி வைக்கிறார்கள். உதாரணத்திற்கு 19 மார்கழியில் யாழ்பல்கலைக்கழ சமூகத்தின் அமைதி ஊர்வலத்தின் போது அவர்கள் மீது இராணுவம் கட்டவிழ்த்து விட்ட வன்முறை அன்றைய தமிழ்தேசிய தொலைக்காட்சியின் செய்திகளில் ஒளிவடிவில் சொற்களால் வர்ணிக்க முடியாத அந்த அராஜகம் உலகம் முழுவதற்கும் சாட்சியாக்கப்பட்டது 24 மணத்தியாலங்களிற்குள்.

தமிழ்த் தேசிய தொலைக்காட்சி செய்யும் இந்த வரலாற்றுச் சேவையை தமிழ் உணர்வுள்ள வியாபார வணிக நிறுவனங்கள் உணர வேண்டும். உங்கள ஆதாரவு தமிழ் தேசியத்திற்கு வலுச் சேர்பது மாத்திரமல்ல உரிய விளம்பரத்தையும் உடனடிப்பயனாக பெற்றுக் கொள்வீர்கள்.

கள உறவுகளே உங்களில் யாராவது விளம்பரத்துறையில் படித்து கொண்டிருந்தால் அல்லது வேலை செய்து கொண்டிருந்தால் உங்கள் நிபுணத்துவத்தை பயன்படுத்தி தமிழ்த் தேசியத் தொலைக்காட்சிக்கு ஒரு சிறந்த விளம்பர அறிமுக தந்திரோபாயத்தை (marketing & promotional strategy) உருவாக்கி கொடுக்க முன்வாருங்கள்.

செய்தி நிறுவனங்களின் மீளபிரசுர உரிமையில் அவர்கள் இதைப்பற்றி கூறியிருப்பார்கள். உதாரணத்திற்கு TamilNet எடுத்தால் அவர்களுடைய XML/RSS feed பாவிப்பதற்கு முன் அனுமதி தேவையில்லை. ஆனால் அந்த feed இன் மூலம் TamiNet என்றதை மறைக்காமல் போட வேண்டும் என்கிறார்கள்.

பொதுவாக இலவசமாக கிடைக்கும் feeds எடுத்தால் அது செய்திநிறுவனங்களினால் செய்தியின் தலையங்கம் (மற்றும் அதுபற்றிய சிறு குறிப்பை) மாத்திரம் மற்றய இணையத்தளங்களுக்கு தானியங்கியாக அனுப்புகிறது. முழுச் செய்தியையும் படிக்க செய்திநிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு தான் வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் தான் அவர்கள் அந்தச் சேவையை வழங்குகிறார்கள்.

XM/RSS feeds போன்ற தானியங்கிச் சேவைகளை வழங்காத தளங்களில் இருப்பவற்றை அதே போல் தலையங்கத்தையும் செய்திபற்றிய சிறு குறிப்பை மேலோட்டமாக எழுதி முழுச் செய்திக்கு இணைப்பை குடுப்பதில் என்ன தவறு? இதற்கு முன் அனுமதி தேவையாக தெரியவில்லை.

TamilNet தமது தளத்தில் விளம்பரங்கள் போடுவதில்லை. அந்த வகையில் அவர்களது செய்தியை விளம்பரம் போடும் இணையத்தளத்தில் முன் அனுமதியின்றி போடுவது தவறு.

புதினத்தை எடுத்தால் அவர்கள் தமது இணையத்தில் விளம்பரம் போடுகிறார்கள். அந்த வகையில் அவர்களுடைய செய்திகளை முன் அனுமதியின்றி இன்னொரு விளம்பரம் இல்லாத தளத்தில் போடுவதும் தவறு.

ஒரு இணையத்தில் பிரசுரிக்கப்படும் செய்தியை முழுமையாக வெட்டி ஒட்டி 20 வேறு இணையத்தில் போடுவதால் பலருக்கு போய்ச்சேரும் என்ற வாதம் சரியா? பல மூலங்களிலிருந்து வரும் சம்பந்தப்பட்ட செய்திகளை ஓரே பக்கத்தில் வாசகர்களின் வசதி கருதி வழங்க விரும்புபவர்கள் XML/RSS feeds போல தலையங்கத்தையும் சிறு குறிப்பையும் அல்லவா போடுவது நியாமானது?

தமிழ்த் தேசிய தொலைக்காட்சி நிகழ்சிகளின் சிறுபகுதிகளை ஒரு விளம்பரம் இல்லாத (வியாபார நோக்கோடு இல்லாமல்) இயங்கும் இணையத்தளம் போடுவதை ஓரளவேனும் ஏற்றுக் கொள்ளலாம்.

நல்ல படைப்புகள், ஆக்கங்கள் எல்லோருக்கும் பிந்தியாவது போய்சேரவேணும் என்றால் அதற்கு தமிழ் ஒளி இணையத்தாரின் இணையத் தளத்திலேயோ சில நாட்களுக்கு பின்னராக உத்தியோகபூர்வமாக நிலவரம் போன்றவற்றை வழங்குவது சிறந்த அணுகு முறை.

நல்லம் நிர்வாகம் அனுமதித்தால் யாழ் களத்துக் ஒரு விளம்பரம் குடுப்பம்.

ஒரு கல்லில் இரு மாங்காய். :wink:

தேசியத்துக்குச் சார்பாக இயங்கும் அனைத்து ஊடகங்களும் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்தி விளம்பரப்படுத்த வேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊமை.. உங்களுக்கு புரியவில்லை.. அது உங்கள் தவறுமில்லை.. களத்தில் ஆங்காங்ககே நடந்த சில சம்பவங்களினால் இவ்வாறு எழுதப்படுகிறது. புரிய வேண்டியவர்களுக்கு புரிந்திருக்கும். புரியாதவர்களுக்கு புரிந்தவர்கள் புரிய வையுங்கப்பா

அதொல்லாம் சும்மா பொழுதுபோக்கு படம் காட்ட எழுதினது. எனிவே நீங்கள் பழசுகளை உப்படி கிண்டிக் கதைக்கிறது நல்லா இல்லை.

வீண் முழக்கத்தை விட்டுட்டு இனி யதார்த்தத்தை எழுத முயற்சிக்கிறம் :P :wink: :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா பொழுதுபோக்கிற்காக தான் தேசியம்பற்றி எழுதுகிறதெண்டு நிருபிச்சுட்டியள்.... நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

இலண்டனில் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியை பார்பதற்கு

SIVA 07715591237

http://nitharsanam.com/?art=15313

யார் சொன்னது எங்கடை எண்டு? உங்கடையா இருக்கலாம்.... எனிவே சீரியசாக செய்யிறவை எண்டா உப்படி பிளைவிடமாட்டீனம். உதைப்பாத்தா ஏதே தாங்களும் செய்யினமாம் எண்டு காட்ட வெளிக்கிட்ட மாதிரி எல்லே இருக்கு.

உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது. என்ன செய்தாலும் நீங்கள் அவர் போல வரமாட்டீங்கள். :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.