Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை இந்தியா பெற்றுக்கொடுக்க வேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை இந்தியா பெற்றுக்கொடுக்க வேண்டும்

மேஜர் ஜெனரல் மேத்தா கோரிக்கை

44444444.jpg

தமிழ் மக்களுக்கான அதிகாரப் பரவலாக்கலுடனான அரசியல் தீர்வினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய

பாரிய பொறு ப்பு இந்தியாவிற்கு உள்ளது.அரசியல் அதிகாரப் பரவலாக்கல் தொடர்பான நடவடிக்கைகளை புதுடில்லி முன்னெடுக்கத் தவறுமாயின் அது மன்னிக்க முடியாதது என முன்னாள் இந்திய இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் அசோக் கே.மேத்தா தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றிற்கு அவர் எழுதியுள்ள பத்தியிலேயே மேற்கண்டவாறு வலியு றுத்தியுள்ளார்.

தனது மூலோபாய நலன்களை நன்கு உணர்ந்துள்ள இந்தியா, இலங்கைத்தீவில் இழந்த தனது அரசியல் செல்வாக் கினை சமப்படுத்துவதற்காக இலங்கையுடனான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதில் முனைப்புக் காட்டுகின் றது. தமது மூலோபாய நலன்களுக்காக இந்தியாவில் தங்கியிருக்க வேண்டிய தேவை முடிபிற்கு வந்துள்ளதையிட்டு இலங்கை மகிழ்வுறுகின்றது. விடுதலைப்புலிகளை அழிப்பதற்குரிய சீனாவின் இராணுவ மற்றும் அரசியல் ஆதரவு இல ங்கையினால் பெரிளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதோடு, பொருளாதார முதலீடுகளையும் சீனா பாரியளவில் முன்னெ டுக்கின்றது. இந்தியாவின் வகிபாகத்திற்கு மாற்றான மூலோபாய பிரசன்னமாகவும் இலங்கையினால் சீனா பார்க்கப்படு கின்றது என அக் கட்டுரையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

போர் முடிபடைந்து நீண்டகால மாகியுள்ள நிலையில், விடுதலைப் புலிகள் இல்லாத புற நிலையில் தமிழ் மக்களுக்குரிய அரசியல் அதிகார பரவலாக்கலை அரசாங்கம் இன்னமும் வழங்காது உள்ளது. இது விவகாரத்தில் நிறைவேற்றப் படாத பொறுப்பு ஒன்று இந்தியாவுக்குள்ளது. நிரந்தர பேச்சுவார்த்தைகளுக்கூடாக சமாதானத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் அரசியல் அதிகாரப் பரவலாக்கத்துடனான தீர்வினை ஏற்படுத்தும் பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளது. தனது மூலோபாய நலன்களை நன்கு உணர்ந்துள்ள இந்தியா, இலங்கைத் தீவில் இழந்த தனது அரசியல் செல்வாக்கினை சமப்படுத்துவதற்காக இலங்கையுடனான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதில் முனைப்புக் காட்டுகின்றது. அம்பாந்தோட்டை துறைமுக கட்டுமானம்,கொழும்புத் துறைமுக நவீனப்படுத்தல், கொழும்பிலி ருந்து காலிக்கான முத லாவது அதிவிரைவுப் பாதை உட்பட்ட இன்ன பிற அபிவிருத்தித் திட்டங்கள் ஊடாக இலங்கையில் சீனாவின் கை ஓங்கியுள்ளது. ஆனாலும் சீனா தமது நண்பன் என்றும் இந்தியா தமது சகோதரன் என்றும் ராஜபக்­ கூறிவருகின்றார். ஏனையவர்கள் கனிகளை பறித்துச்சென்ற போது இந்தியா தூக்கத்தில் ஆழ்ந்து இருந்ததாக இலங்கை ஆய்வாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

அத்தோடு இராணுவத் தீர்வு என்ற இலங்கையின் போக்கிற்கு ஆட்சேபனை தெரிவிக்காதது மட்டு மல்ல, அதற்குரிய ஆதரவினையும் இந்தியா வழங்கியிருந்தமை மோசமான செயலாகும். இலங்கை தமிழர்களுக்குரிய அரசியல் அதிகாரப் பரவலாக்கல் தொடர்பான நடவடிக்கைகளை புதுடில்லி முன்னெடுக்கத் தவறுமாயின் அது மன்னிக்க முடியாதது என அக்கட்டுரையில் அசோக் மேத்தா தெரிவித்துள்ளார்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=25780

முதல் தமிழக தமிழர் தண்ணீர் சுதந்திரமாக பெற இந்தியா உதவட்டும். கண்னடகாரனும்,கேரளக்காரனும் பிச்சை போடுறமாதிரி தண்ணீர் கொடுக்கிறதை நிறுத்தனும்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை இப்போது அயல்நாடுகளிலிருந்து, தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே... திண்டாடும் நேரம் நெருங்கியுள்ள நிலையில், மற்றவனுக்கு உபத்திரவம் கொடுக்காமல் இருந்தாலே போதும்.

இந்த நிலைமைக்கு காரணமான காங்கிரஸ் இந்திய மக்களுக்கு பதில் சொல்லியே... ஆக வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.