Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடபுலத்தவர்களின் உழைப்பு வெளியே போகிறது பாரீர்!

Featured Replies

வடபுலத்தவர்களின் உழைப்பு வெளியே போகிறது பாரீர்!

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, ஜனாதிபதித் தேர்தலின்போது இரு விடயங்களை முன்வைத்தார். அதில் ஒன்று ‘எங்களால் முடி யும்’ மற்றையது ‘மாற்றத்தை ஏற்படுத்துவோம்’ இவ்விரு விடயமுமே அவரை வெள்ளை மாளிகையில் அமர்த்தியது. அமெரிக்க மக் கள் மாற்றத்தை விரும்புபவர்கள். மாற்றம் என்பது மிகவும் முக்கி யமானது. அதேநேரம் நேரான சிந்தனையும், எங்களால் முடியும் என்ற நம்பிக்கையும் வாழ்க்கையில் வெற்றி நடைபோடுவதற்கு மிகவும் அவசியமானது.

இந்த இரண்டு கருத்துக்களும் அமெரிக்க மக்களின் சிந்தனையைத் தூண்டிவிட அதில் நிறம், மதம் என்பன அடிபட்டுப்போக ஒபாமா, அமெரிக்காவின் ஜனாதிபதியாகினார். இதை இவ்விடத்தில் கூறிய தன் நோக்கம் யாது? என்று நீங்கள் கேட்கலாம்.எல்லாம் காரணத் தோடுதான். தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் மாற்றத்தை விரும்பாதவர்களாக இருக்கின்றனர். தந்தையின் தொழிலை தனயன் செய்வது, அதில் நவீன தொழில்நுட்பத்தைப் புகுத்துவதற்கு விரும் பாமை போன்ற காரணங்களால் அபி விருத்தி நோக்கிய சமகாலப் பொருளாதாரத் திற்கு நம்மவர்கள் ஈடுகொடுக்க முடியாதவர்களாக இருக்கின்றனர்.

இதன் காரணமாக தென் பகுதியைச் சேர்ந் தவர்கள் வடபுலத்தில் உள்ள கட்டிடவாக்கம், பாலங்கள் நிர்மாணம், வீதி அமைப்பு போன்ற வற்றில் ஈடுபட்டு பெருந்தொகையான வருமானங்களை ஈட்ட, தமிழ கத்தைச் சேர்ந்த சிற்ப வல்லுநர்கள் வடபகுதியில் இருக்ககூடிய பிரபல்யமான ஆலயங்களின் நிர்மாணப் பணி யில் ஈடுபட்டு கோடிக் கணக்கான ரூபாய்களை வருமானமாக பெற்றுக்கொள்ள, எங்கள் இளைஞர்கள் வேலையில்லாதவர்களாக உள்ளனர்.

இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் போதிய பயிற்சிகளை நாம் பெற்றுக்கொள்ள வில்லை என்பதாகும்.ஆலய நிர்மாணப் பணிகளில் தமிழகத்தின் தலைசிறந்த சிற்பக் கலைஞர்களிடம் பயிற்சி பெற வேண்டும். அதேபோல் மாபிள் பதித்தல், பாரிய கட்டிடங்களை அமைத்தல் போன்றவற்றில் தென்பகுதியில் உள்ள கட்டிட நிர்மாணத் தில் நிபுணத்துவம் உடையவர்களிடம் பயிற்சி பெறவேண்டும். இத்தகைய பயிற்சிகளை பெறமுடியாது போனால் எதிர்காலத்தில் தென்பகுதியைச் சேர்ந்தவர்களும், தமிழகத்தைச் சார்ந்தவர்களுமே வட பகுதியில் இடம்பெறக்கூடிய அத்தனை நிர்மாணப் பணிகளிலும் ஈடுபடுவர்.

நிலைமை இதுவாக இருந்தால் இப்போது இங்கு சமாளித்துக் கொண் டிருக்கக்கூடிய சிற்ப நிலையங்கள், கட்டிட ஒப்பந்த அமைப்புகள்யா வும் களத்தில் இருந்து தூக்கி எறியப்படும். ஆக, எங்கள் இளைஞர்க ளுக்கு தொழில் வழிகாட்டவும் வடபுலத்து பணம் வெளியேறு வதைத் தடுக்கவும் கட்டிடவாக்கம், ஆலய நிர்மாணம் போன்றவற்றில் பயி ற்சி பெறுவதற்கு ஏற்ற ஒழுங்குகளை அமைப்பு ரீதியாக உரு வாக்கி, அதில் இளைஞர்களை இணைத்து, தென் பகுதி, தமிழகம் தேவையா யின் வேறிடங் களுக்கும் பயிற்சி பெறுவதற்காக அனுப்பி வைக்க வேண்டும்.இதனைச் செய்யும்போதுதான் நாங்களே எங்கள் வருமா னத்தை அனுபவிக்கும் பாக்கியசாலிகளாக மாறமுடியும்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=25812

ஆத்தை படுகிற பாடுக்கை குத்தியன் பாலுக்கு அழுகிறானாம். இப்பதான் தமிழகத்து சிப்பிகள் பணத்தை கொண்டு ஓடுகிறார்களாம். ஐயா வலம்புரி! பேச்சுவார்த்தை நின்று போயிட்டாம்.கேள்வி பட்டீர்களா?

Edited by மல்லையூரான்

உண்மை தான் அகூதா.. இப்ப தமிழ் மக்களுக்கு தேவை தன்னிறைவு அதோட தங்கள் சிதறடிக்கப் பட்ட வளங்களை ஒன்று கூட்ட வேண்டும்.. பேச்சு வார்த்தை நடைபெறும் அதே சமயத்தில் எங்கள் மக்கள் மீண்டும் பொருளாதாரத்திலையும் கல்வியிலையும் முன்னுக்கு வர வேண்டும்.. தனியார் தொழில் வாய்ப்புக்களை வளர்க்க வேண்டும்.. இப்ப சிங்களவன் பழைய மோட்டுச் சிங்களவன் இல்லை..இல்லாட்டி சிங்களவன் எங்களை இன்னும் ஏய்த்துக் கொண்டு தான் இருப்பான்..

உண்மை தான் அகூதா.. இப்ப தமிழ் மக்களுக்கு தேவை தன்னிறைவு அதோட தங்கள் சிதறடிக்கப் பட்ட வளங்களை ஒன்று கூட்ட வேண்டும்.. பேச்சு வார்த்தை நடைபெறும் அதே சமயத்தில் எங்கள் மக்கள் மீண்டும் பொருளாதாரத்திலையும் கல்வியிலையும் முன்னுக்கு வர வேண்டும்.. தனியார் தொழில் வாய்ப்புக்களை வளர்க்க வேண்டும்.. இப்ப சிங்களவன் பழைய மோட்டுச் சிங்களவன் இல்லை..இல்லாட்டி சிங்களவன் எங்களை இன்னும் ஏய்த்துக் கொண்டு தான் இருப்பான்..

பழையவனும் மோட்டுச் சிங்களவன் இல்லை. இது, புத்தகத்தைப் படித்து விட்டு அல்லது வியாபாரம் செய்து, படிக்காத கிராமியச் சிங்களவர்களை ஏமாற்றியவர்கள் சொல்லிய புளுகு.

ஆரம்பத்திலிருந்தே நமக்கு ஆப்பு வைத்துள்ளான்.

நீங்கள் சொல்வதும் சரிதான் தப்பிலி..

ஸிங்ஹள மோடையா என்பது சிங்களத்தில் உள்ள பழமொழி. மோட்டு சிங்களவன் என்பது அதன் மொழி பெயர்ப்பு மட்டுமே.

Tamil Tigers in Britain

Burning less bright?

That the struggle is rooted in geography, not religion, is one reason. Another is that young Sri Lankans are too successful to need to march or plot. They are more likely than other Asians to be employed (though they earn slightly less than Indians) and Sri Lankan children do better at school than any ethnic group bar the Chinese. Intensive extracurricular learning and well-educated parents (especially the mothers) help to explain it, suggests Jill Rutter of IPPR, a think-tank. Branding helps too: teachers may label Somali refugees damaged basket-cases, but Tamil children, sometimes no less traumatised, are stereotyped as industrious maths geeks. Labels can be self-fulfilling. Popular actresses such as Amara Karan are further signs of the community's success. - Economist

http://www.economist.com/node/11546741

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

பொருளாதாரமே ஒரு இனத்தின் ஆதாரம். அதை வளர்ப்பதும், எம்மிடம் உள்ள பொருளாதாரத்தை தக்கவைப்பதும் இனத்தின் அடையாளத்திற்கு முக்கியம்.

பல்வேறு காரணத்தால் பெரும்பான்மையான தாயக இளையவர்கள் வேலையில்லாமல் உள்ளனர். இது பல்வேறு சமூக பின்னடைவுகளுக்கு வழிகோலுகின்றது. அந்த வகையில் மேலே எழுத்தப்பட்ட ஆசிரியர் தலையங்கம் சமுதாய விழிப்புணர்வை தரும் ஆக்கமாகவே தெரிகின்றது.

சமூக பின்னடைவு மட்டுமல்லாது பெரிய தங்கி வாழும் சமுதாயமும் வளர்ந்திருக்கு.. ஒரு சில சமுதாய சீர் கேடுகளுக்கு இதுவும் ஒரு காரணம்..பெரும்பாலான மக்கள் வெளி நாட்டு பணத்தை இன்னும் நம்பி வாழும் மன நிலையே காணப் படுகிறது... முக்கியமாக வெளி நாடுகளில் தமிழ் மக்களுக்கு அகதி குடியுருமை பெரும்பாலும் நிறுத்த or குறைக்க பட்டிருக்கும் சமயத்தில் இது எங்களை ஒரு death end க்கு கொண்டு போகக் கூடும்..

மேலும் வெளி நாடுகளில் வாழும் எங்கள் உளைக்கும் சமுதாயமும் அடுத்த தலை முறைச்சமுதாயமும் மிகவும் கடினமான பொருளாதார சுமைகளுக்குள் மாட்டுப்பட்டிருக்கும் இந்த சமயத்தில் எங்கள் பிரதேசம் பொருளாதார ரீதியாக தன்னிறைவு அடைவது அவசியம்... இதில் புலம்பெயர் மக்கள் தட்போது அனுப்பும் பணம் சரியான வழியில் ஒவ்வொரு குடும்பத்தவராலும் பயன் படுத்தப்பட வேண்டும்.. economical growth of our comunity should be sustainable rather than a sudden shift - ஒருவருக்கு ஒரு ரொட்டி வாங்கி கொடுப்பதை விட அவருக்கு ரொட்டி எவ்வாறு செய்யலாம் என்று சொல்லி கொடுப்பது அவர் வாழ்நாள் முழுக்க சொந்த ரொட்டி சாப்பிட வழிவகுக்கும்-

இதைவிட ஏன் நாங்களே ஒரு இலாப நோக்கற்ற கட்டமைப்பை அல்லது தொழில் சார் குளாம் ஒன்றை உருவாக்க கூடாது..

எனக்கு இது எவ்வளவு சாத்தியம் என்று தெரியவில்லை.. ஆனால் ஒரு இரசாயன பொறியியலாலராக என்னால் முடிந்ததை நான் என்னால் முடிந்த பங்களிப்பை வழங்குவேன்... நெடுக்கு.. அகூதா .. மேலும் வேறு தொழில் சார் உறவுகளிற்கு..ஏன் நீங்கள் எல்லாம் இது பற்றி பரிசீலிக்கக் கூடாது...

வடபுலத்தவர்களின்(யாழ்ப்பாணத்து) உழைப்பு (என்ன வேலை செய்து வந்தது?) வெளியே (தற்போதைய நிலையில் தென்னிலங்கை வெளிநாடு இல்லை-தமிழ் நாடு?) போகிறது பாரீர்!

ஸிங்ஹள மோடையா என்பது சிங்களத்தில் உள்ள வாசகம். மோட்டு சிங்களவன் என்பது அதன் மொழி பெயர்ப்பு மட்டுமே. இந்த உண்மையை மாற்ற முயலாமல் தயவு செய்து குறுகிய மனப்பான்யுடன் தீட்ட பட்ட இந்த தலப்பை பற்றி எழுது முடியுமா? இதுதான் வலம்புரியின் தலைப்பு. இது தமிழருக்குள் இனத்துவேசத்தை தூண்ட எழுதபட்டது.

பல்வேறு காரணத்தால் பெரும்பான்மையான தாயக இளையவர்கள் வேலையில்லாமல் உள்ளனர். இது பல்வேறு சமூக பின்னடைவுகளுக்கு வழிகோலுகின்றது. அந்த வகையில் மேலே எழுத்தப்பட்ட ஆசிரியர் தலையங்கம் சமுதாய விழிப்புணர்வை தரும் ஆக்கமாகவே தெரிகின்றது.

1956 அளவில் 65% அரசாங்க உத்தியோகங்களையும், 75% காவல் பாதுகாப்பு உத்தியோகங்களையும் தமிழினம் வைத்திருந்தது. இனவாத மென்ற ஒரே ஒரு காரணத்தால் அந்த நிலையிலிருந்து பின்னேறி இப்போ 1% இல்லை. யாழில் இந்த பினேற்ற காரணத்தை கண்டு அதை தடுத்து நிறுத்த முயலாவிட்டல் இந்த 1% மக்கள் கூட உயிரோடு இருக்க மாட்டார்கள்.

ஐயா வலம்புரி! பேச்சுவார்த்தை நின்று போயிட்டாம்.கேள்வி பட்டீர்களா?

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

புலம்பெயர் தேசங்களில் கூட இயன்றளவிற்கு எமது சமூகம் தமது சமூகத்துக்குள்ளேயே வர்த்தகங்களை செய்து ஊக்குவிக்க முடியும், அது தேவையும் கூட. கனடா, டொராண்டோவை பொறுத்தவரையில் இது ஓரளவுக்கு சாத்தியமாகின்றது. அதேவேளை சில துறைகளில் நாம், எமது சமூகம், டொராண்டோ மாநகரத்தையே தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் அளவுக்கு வளர்ந்தால் பெருமை தரக்கூடிய விடயமாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதன் காரணமாக தென் பகுதியைச் சேர்ந் தவர்கள் வடபுலத்தில் உள்ள கட்டிடவாக்கம், பாலங்கள் நிர்மாணம், வீதி அமைப்பு போன்ற வற்றில் ஈடுபட்டு பெருந்தொகையான வருமானங்களை ஈட்ட, தமிழ கத்தைச் சேர்ந்த சிற்ப வல்லுநர்கள் வடபகுதியில் இருக்ககூடிய பிரபல்யமான ஆலயங்களின் நிர்மாணப் பணி யில் ஈடுபட்டு கோடிக் கணக்கான ரூபாய்களை வருமானமாக பெற்றுக்கொள்ள, எங்கள் இளைஞர்கள் வேலையில்லாதவர்களாக உள்ளனர்.

இதனை அடிப்படையாக கொண்டு ஒரு பிரச்சார இயக்கம் ஒன்றை உருவாக்கி தமிழ் இளைஞர்களளுக்கு வேலை வாய்ப்புகள் கிடைப்பதற்காக பல வழிகளிலும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

1. மீழ் குடியேற்றங்களுக்கு வெளிநாடுகளாள் கொடுக்க படும் பணத்திலிருந்து அரசாங்கம் கோவில்கள் கட்டுவது யாழ்ப்பணத்தில் சரிக்கு சரி புத்த விகாரைகள் கட்டுவதற்கு. எந்த விதத்திலும் விகாரைகள் கட்ட யாழ்ப்பாணத்து மக்கள் பயிற்சி பெற முடியாது. . ஏழைகளுக்கு அவசியத்தேவையான இந்தியாவின் 50,000 வீடுகள் தடுத்து நிறுத்தபட்டு பணம் தெற்கே திருப்ப ஆயத்தங்கள் செய்ய பட்டிருகின்றன.

2.வாழ வீடுகள் கட்டி கொடுக்காமல் பாலங்கள் புனருத்தானம் செய்வது அரச வாகனங்களுக்காக.

3. யாழ்ப்பாணத்து சாலையோரங்களில் தேனீர்கடைகள் நடத்தும் வேலையை இராணுவம் செய்வதாக யாழ்ப்பணம் போய் வந்த அமெரிக்க எழுத்தாளர் எழுதியுளார்.(குறிப்பாக முறிகண்டியைப்பற்றி எழுதியிருந்ததாக ஞாபகம். பிழையென்றால் திருத்தவும்)

வலம்புரியார் எழுதியிருகிறாரா தென்னிலங்கை போகும் தமிழர் உழைப்புகளை தடுத்து நிறுத்த தேனீர் போட கற்றுக்கொண்டு தமிழ் இழைஞர்கள் தேனீர் கடைகள் திறக்க வேண்டும் என்று? அரசியல் நிலைமைகளை அவதானியாத அறிவுரைகளால் என்ன பயன்?

இதனை அடிப்படையாக கொண்டு ஒரு பிரச்சார இயக்கம் ஒன்றை உருவாக்கி தமிழ் இளைஞர்களளுக்கு வேலை வாய்ப்புகள் கிடைப்பதற்காக பல வழிகளிலும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

யாழ்ப்பாணம் - தமிழ்நாடு என்று அரசியல் பிரிவினையை வைத்து தொடங்க பட்ட தலைப்பை விடுத்து நல்ல பல காரணகளை நிரைப்படுத்தி ஒரு புது தலைபை தொடங்கி தற்கால அரசியல் சூழ்நிலையில் எப்படி தமிழீழ பொருளாதாரத்தை மேம்படுத்தி தாய இழைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை புலம்பெயர் மக்கள் எற்படுத்தலாம் என்று கட்டாயம் விவாதிக்க வேண்டும் இதில் வரும் முடிவுகளை செயல் படுத்த யாழ் அங்கத்தவர்கள் பொறுப்பெடுக்க வேண்டும். யாழ் புனைபெயர்களிலோ அல்லது இயற்பெயர்களிலோ இந்த நிறுவன்ங்களுக்கு தொண்டர் வேலை செய்யலாம்.

முடிந்தால் நானே ஒருதிரியை தொடக்கி வைப்பேன் அதில் பலரும் எழுத்த விருப்பமிருந்தால். மிகவும் முக்கியம் எதையாவது செயல் படுத்த வர வேண்டும். இந்தகிழமை நடந்த கொலைகள திரையீட்டை பார்க்க வந்தவர்களை எண்ண ஒருவரின் கைவிரகள் தேவையில்லை. இலங்கை அரசு அதில் பங்கேடுக்க மறுத்தும் அதில் பங்கெடுத்திருந்த சிங்களவர்கள் தமிழர்களுடன் பார்க்கும் போது 3:1 ஆக இருக்கலாம்.

Edited by மல்லையூரான்

நல்ல பல காரணகளை நிரைப்படுத்தி ஒரு புது தலைபை தொடங்கி தற்கால அரசியல் சூழ்நிலையில் எப்படி தமிழீழ பொருளாதாரத்தை மேம்படுத்தி தாய இழைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை புலம்பெயர் மக்கள் எற்படுத்தலாம் என்று கட்டாயம் விவாதிக்க வேண்டும் இதில் வரும் முடிவுகளை செயல் படுத்த யாழ் அங்கத்தவர்கள் பொறுப்பெடுக்க வேண்டும். யாழ் புனைபெயர்களிலோ அல்லது இயற்பெயர்களிலோ இந்த நிறுவன்ங்களுக்கு தொண்டர் வேலை செய்யலாம்.

முடிந்தால் நானே ஒருதிரியை தொடக்கி வைப்பேன் அதில் பலரும் எழுத்த விருப்பமிருந்தால். மிகவும் முக்கியம் எதையாவது செயல் படுத்த வர வேண்டும்.

நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.