Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

செங்கடல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sengadal.jpg

சிங்கள அரசையும், இந்திய அரசையும் ஒரு தட்டில் வைத்து அம்பலப்படுத்துவதால் தணிக்கையில் பிரச்சினை. சென்னை உலகத் திரைப்பட விழாவில் திரையிட புறக்கணிப்பு என்று எப்போது கேள்விப்படும் போதும் ஏதேனும் சர்ச்சை கச்சை கட்டிக் கொள்வதால் ‘செங்கடல்’ இயல்பாகவே ஆர்வத்தைத் தூண்டியிருந்தது. எங்கே புறக்கணிக்கப்பட்டதோ, அதே படவிழாவில் அரங்கு நிறைந்த கூட்டத்துக்கு இடையே தரையில் அமர்ந்து செங்கடலை கண்டோம்.

லீனாவின் ‘டயரி’தான் ஒருவரி கதை. 2009 மே மாத வாக்கில் ராமேஸ்வரத்தில் இயக்குனர் லீனா, மீனவர் பிரச்சினை குறித்த ஆவணப்படத்துக்காக தங்கியிருக்கிறார். காவல்துறையினர் லீனாவை விசாரிக்கிறார்கள். அவர் எடுத்த வீடியோ காட்சிகளை போட்டுப் பார்க்கிறார்கள். கடைசியாக ராமேஸ்வரத்தை விட்டு வெளியேற்றுகிறார்கள்.

முதல் காட்சியிலிருந்தே இது ஆவணப்படமா, திரைப்படமா என்கிற குழப்பம் ஏற்படுகிறது. இது இரண்டுமே இல்லை என்று உணரும்போது படம் எந்தவொரு குறிப்பிடத்தக்க உணர்வையும் உருவாக்காமல் முடிந்துவிடுகிறது. லீனா படத்தை இயக்கி மட்டும் இருக்கலாம். பொலிவான தோற்றம், ஆளுமையான குரல் இருந்தாலும் நடிப்பாற்றல் அவருக்கு கொஞ்சம் சுமார்தான். ஒரு சிலரைத் தவிர படத்தின் பாத்திரங்கள் பெரும்பாலும் தொழிற்முறை நடிகர்கள் அல்ல என தெரிகிறது. எனவே பல காட்சிகள் அமெச்சூர்த்தனமாய் அமைந்துவிடுகிறது. இத்தனைக்கும் கேமிரா, எடிட்டிங் உள்ளிட்ட விஷயங்கள் நல்ல தொழிற்நேர்த்தியுடன் அமைந்தும், ஏதோ விஸ்காம் மாணவர்களின் அறிமுக குறும்படத்தை பார்வையிடும் உணர்வுதான் வருகிறது.

எடுத்தாளப்பட்டிருக்கும் உள்ளடக்கமும் ஒன்றும் புதிதல்ல. ஓரளவு ஈழ, தமிழக அரசியல் அறிந்த எல்லோருக்குமே தெரிந்த விஷயங்கள்தான். பத்திரிகைகளில் வாசித்தது, மேடைகளில் கேட்டது மாதிரியான தகவல்களை காட்சிகளாக்கி இருக்கிறார்கள். ஆனால் வாசித்தபோதும், கேட்டபோதும் ஏற்பட்ட கோபம், காட்சிகளாகப் பார்க்கும்போது இல்லை எனுமளவுக்கு மிக பலகீனமான உருவாக்கம்.

ராமேஸ்வரம் மீனவர் பிரச்சினை, ஈழத்தமிழர் பிரச்சினையோடு பின்னிப் பிணைந்ததுதான் என்றாலும்.. ஏதேனும் ஒரு தரப்பின் பார்வையில் ஃபோகஸ் செய்திருந்தால் திரைக்கதை குழப்பமில்லாமல் இருந்திருக்கும். பல காட்சிகளில் யார் மீனவர், யார் ஈழத்தமிழர்.. எது அகதிமுகாம், எது மீனவர் குப்பம் என்கிற குழப்பம் பார்வையாளனுக்கு ஏற்படுகிறது.

இடையிடையே வரும் கவிதைகள், ஏதோ ஒரு மணிபல்லவத்தீவு கனவுகாட்சி, சித்தார்த் என்கிற ஆமை என்று ஆடம்பரமாக சொருகப்பட்டிருக்கும் பின்நவீனத்துவக் காட்சிகள் எதுவுமே இந்தம் சாமானிய மரமண்டைக்கு ஏறவில்லை.

ஈர்க்கக்கூடிய ஓரிரு விஷயங்களும் உண்டு. மனநிலை பிறழ்ந்த ஈழத்தமிழர் பாத்திரத்தில் நடித்திருப்பவரின் நடிப்பு அபாரம். அவரது பாத்திரம் மட்டுமே செதுக்கி, செதுக்கி கவனத்தோடு உருவாக்கப்பட்டிருக்கிறது. அவரது கையில் எப்போதும் இடம்பெறும் ரேடியோவும் கதையில் தவிர்க்க இயலாத ஒரு பாத்திரமாகிறது. இறுதியில் அந்த ரேடியோ கூட செயலிழந்துப் போய்விடுவதாக காட்டுவது படுசோகம். மீனவர் ஒருவர் அவருக்கு வேறு ரேடியோ பரிசளிப்பது எதிர்கால நம்பிக்கை.

எந்தவகையில் செங்கடல் சிங்கள, இந்திய ஏகாதிபத்தியங்களை நடுநடுங்க வைக்கிறது என்பது கடைசிவரை புரியவேயில்லை. இதைவிட காத்திரமான எழுத்துகளும், கூட்டங்களும் கூட எந்த பெரிய ‘சர்ச்சை’யையும் ஏற்படுத்திவிடாத நிலையில், செங்கடலுக்கு ஏனிந்த கொலைவெறி ஆர்ப்பாட்டம் என்பது புரியவேயில்லை. அகதி முகாம்களில் காவல்துறையினரின் அத்துமீறலை எல்லாம் செங்கடலை விட சிறப்பாக, கேப்டன் நடித்த ‘சபரி’ திரைப்படத்திலேயே கண்டுவிட்டோம்.

அதுபோலவே ஈழத்தமிழருக்கான போராட்டங்கள் குறித்த காட்சிகளின்போது, டெல்லியில் கவிஞர்கள்-எழுத்தாளர்கள் நடத்திய போராட்டம்தான் ஐ.எஸ்.ஓ. 9001 விருதுபெற்ற ஒரிஜினல் போராட்டம் என்கிறரீதியில் வரும் காட்சிகள், கவுண்டமணி-செந்திலின் வாழைப்பழ நகைச்சுவைக்கு இணையான நகைச்சுவை உணர்வை தருகிறது. கொஞ்சமும் ஒட்டாத இந்த செல்ஃப் பிரமோஷனை லீனாமணிமேகலை தவிர்த்திருக்கலாம்.

‘இது விடுதலைப்புலிகளை எதிர்க்கும் படம்’ என்று தாங்களாகவே நினைத்துக்கொண்டு புலி ஆதரவாளர்கள் தேவையில்லாமல் செங்கடலை ஏற்றிவிட்டிருக்கிறார்கள். புலிகளை மட்டுமல்ல. இந்தியா, இலங்கை அரசுகளையும் கூட ஒன்றும் அவ்வளவு வலிமையாக ‘செங்கடல்’ எதிர்க்கவில்லை. திரைப்பட உருவாக்கத்துக்கான எந்தவொரு திட்டமிடலோ, தேவையான உழைப்போ இன்றி, ‘நம் பங்குக்கும் ஒரு படம்’ என்று கடனுக்கு எடுத்தமாதிரியாகதான் ஏனோதானோவாக எடுத்திருக்கிறார்கள். இந்தப் படத்தை ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கவோ போதுமான சமாச்சாரங்கள் எதுவுமே படத்தில் இல்லை என்பதுதான் உண்மை.

பின்னூட்டங்கள்:

ராம்ஜி_யாஹூ said...

சென்னை திரைப் பட விழா வெளியிடலுக்குப் பிறகு

எவ்விதமான ஆதரவு/எதிர்ப்பு குரல்களும் அந்த அளவு

வர வில்லை.

திரை அரங்குகளில் வெளியிடப் பட்டாலும்

மக்கள் இதுவும் கடந்து போகும் என்று கடந்து தான் போவார்கள் என எண்ணுகிறேன்,

உங்கள் கருத்து என்ன

2:43 PM, December 28, 2011 யுவகிருஷ்ணா said...

திரையரங்கில் வெளிவந்தாலும் உச்சிதனை முகர்ந்தால், காற்றுக்கென்ன வேலி ரேஞ்சுக்குதான் ஹிட் ஆகும் :-)

2:48 PM, December 28, 2011 ஜீ... said...

ஷோபாசக்தி?

2:49 PM, December 28, 2011 யுவகிருஷ்ணா said...

சும்மா ஒரு சீனில் வருகிறார். வசனம் : ஷோபாசக்தி-யாம். பரவாயில்லை, not bad. 2:56 PM,

December 28, 2011 Karthi said...

முதலில் உஙகளுக்கு தமிழில் நாம் உண்டாக்கவேண்டிய சுயாதீன (Independent) சினிமா சார்ந்த அக்கறை ஏதுமில்லை என்பது தெளிவாக தெரிகிறது.அப்படி இருந்தால் விஜயகாந்தின் ‘சபரி’போன்ற வெகுஜன சினிமாவை பற்றியெல்லாம் எள்ளலான ஒப்பீடெல்லாம் வைத்திருக்கவே மாட்டீர்கள். இரண்டு தளங்களின் வேறுபாடுகள் என்னவென்று அறிவதற்கு உண்மையில் ஆர்வமில்லை என்றால் இப்படத்தை பற்றிய உஙகளின் இம்மாதிரியான விமர்சனங்களை தவிர்த்திருக்கலாம்.

என்னைப் பொறுத்த வரை செங்கடலின் முக்கியத்துவம் இரண்டு தளங்களில் உண்டு. ஒன்று, மைய நீரோட்ட சினிமாவில் இருந்து முற்றிலும் விலகி ஒரு மாற்று வெளியில் சுயாதீன முயற்சியாக அசல் தன்மையுடன் வந்திருக்கும் தமிழின் முழு நீளப்படம். இரண்டாவது, தமிழக மீனவர் பிரச்னையை, அவரகளது அன்றாட வாழ்வை அந்த மக்களை கொண்டே பல பாசிச இடர்ப்பாடுகளை தாண்டி, ஒரு மக்கள் பங்களிப்பு சினிமாவாக உருவாக்கி இருப்பது. செங்கடல் ஒரு முக்கிய அரசியலை துணிச்சலாக முன்னெடுக்கும் படம், அதே சமயம் கலை சார்ந்த சில நுட்பமான சரிவுகளை கொண்ட படம் தான். செங்கடல் தன் இலக்கின் தீவிரத்தை அடைந்துவிட்டது என்றோ அல்லது அது ஒரு சிறந்த படமென்றோ நான் கூர வரவில்லை ஆனால் அதன் முக்கியத்துவத்தை மறுக்க இயலாது என்றே சொல்ல வருகிறேன்.நனறி.

3:10 PM, December 28, 2011 யுவகிருஷ்ணா said...

கார்த்தி அவர்களே!

திடீரென சினிமா ஆர்வலராக/விமர்சகராக நீங்கள் பில்டப் ஆகிவிட்டதால் இப்படியெல்லாம் பேசவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். பிரச்சினையில்லை.

ஒரு விஷயம் மொக்கை என்றால் ஏன் மொக்கை என்று விளக்க வேண்டும். இந்தப் பதிவு விளக்குகிறது.

அதைப்போலவே ஒரு விஷயம் சிறப்பானது என்றால் ஏன் சிறப்பானது என்று விளக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக ‘பெஸ்ட்டு, சூப்பர்’ என்று கோஷம் போட்டுக் கொண்டிருந்தால், ஏதாவது பார்ட்டிகளில் யாராவது சரக்கு வாங்கி கொடுப்பார்களே தவிர, உங்கள் அபிப்ராயத்துக்கு பெரிய மரியாதை இருக்காது.

இண்டிபெண்டட் சினிமா பற்றி எனக்கு எதற்கு சார் அக்கறை இருக்கணும்? நானென்ன சினிமாக்காரனா? நான் வெறும் ரசிகன். எனக்குப் பிடித்ததை உயர்த்திப் பிடிப்பேன். பிடிக்காததை கீழே போட்டு மிதிப்பேன். அவ்வளவுதான்! :-)

http://www.luckylook...og-post_28.html

Edited by சுபேஸ்

ஏன் < செங்கடல் > ஐரோப்பாவில் வெளியிடப்படவில்லை ?????????? விசுவாசிகள் யாரும் இங்கு இல்லையா ????? மிக்க நன்றிகள் சுபேஸ் உங்கள் இணைப்பிற்கு :):):) .

Edited by komagan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.