Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிம் யங் இல் இன் செத்தவீட்டு வைபவத்தில் வட கொறியர் கூலிக்கு மார்படித்தனர் என்கிறது B.B.C.

Featured Replies

கிம் யங் இல் இன் மரணசடங்கில் குய்யோ முறையோ என்று கூக்குரலிட்டு வேதனையை வெளிப்படுத்தும் வடகொறியரின் புகைப்படங்களையும் ஒளிப்பதிவுகளையும் தொகை தொகையாக வடகொறியா அரசு வெளியிட்ட பின் அவைகள் நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்டு கவனமாக பயிற்ற பட்ட நாட்டிய அசைவுகள் என தட்டி கழிக்கிறது B.B.C.

28 December 2011 Last updated at 02:59 ET

Thousands of North Koreans are attending the funeral for the former leader Kim Jong-il, many of whom have been seen crying and wailing on state television.

Jim Hoare, the British charge d'affaires in Pyongyang from 2001-2002 told the BBC many of the scenes of grief were likely to have been choreographed

http://www.bbc.co.uk...d-asia-16343707

Edited by மல்லையூரான்

ஆறு அணுக்குண்டுகளை வைத்திருப்பதால் மேற்குலகத்தால் இந்த கவனமும் மரியாதையும்.

  • கருத்துக்கள உறவுகள்

கிம் ஜோங்-உன் எதிர் கொள்ளும் சவால்

'a_Kims_funeral-1.jpgஜ-சே' என்றால் சுய சார்பு என்று பொருள். மார்க்சிஸ்ட் - லெனினிசம் போன்ற கம்யூனிச கொள்கை இது. சிலர் இதையே ஸ்டாலினிசம் என்பார்கள். நாடும் நாட்டு மக்களும் விடுதலை உணர்வுடன் இருக்க வேண்டும்; அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் யாரையும் சாராத நிலைவேண்டும் என்பதே இந்தக் கொள்கையின் அடிப்படைக் கோட்பாடு. இந்தக் கொள்கையை உருவாக்கி தனது நாட்டிலும் அறிமுகப்படுத்தினார் வடகொரியாவின் முதலாவது ஆட்சியாளர் கிம் இல்-சுங். இன்றைக்கு இதுதான் வடகொரியாவின் அதிகாரப்பூர்வ கொள்கை.

கொரியப் போருக்குப் பிறகு, கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரேயொரு குடும்பம்தான் வட கொரியாவை ஆட்சி செய்து வருகிறது. 1948-ல் வட கொரியா உருவானதிலிருந்து 1994-ம் ஆண்டுவரை கிம் இல்-சுங் ஆட்சியில் இருந்தார். அவரது மறைவுக்குப் பிறகு அவரது மகன் கிம் ஜோங்-இல் ஆட்சிக்கு வந்தார். 17 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அவர், கடந்த 17-ம் தேதி இறந்துவிட்டார். மாரடைப்பு காரணமாக அவர் உயிர் பிரிந்ததாக வட கொரிய அரசு அறிவித்தது. இவரது இளைய மகன் கிம் ஜோங் - உன் புதிய ஆட்சியாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

பொதுவாக சர்வாதிகாரிகள் கொடுங்கோலர்களாக இருப்பார்கள். அல்லது அப்படிச் சித்திரிக்கப்படுவார்கள். சர்வாதிகாரி இறந்தால் அந்த நாட்டில் மக்கள் மகிழ்ச்சியடைவார்கள். இனிப்பு வழங்கிக் கொண்டாடுவார்கள். ஆனால், கிம் ஜோங்-இல் இறந்தபோதும் சரி, இதற்கு முன்பு அவரது தந்தை கிம் இல்-சுங் இறந்தபோதும் சரி, மக்கள் கதறியழுதனர். கிம் ஜோங் இல் இறந்த செய்தி வெளியானதும், பலர் மார்பில் அடித்துக் கொண்டு வீதிகளில் ஓடியதை தொலைக்காட்சியில் காட்டினார்கள். பெண்கள் வீதிகளில் விழுந்து அழுது புரண்டனர். கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் முகங்களையும், தரையில் கைகளை அறைந்தபடி அழுது கொண்டிருந்த மக்களையும் காண முடிந்தது. நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில், செய்தி வாசிப்பாளரே அழுகையை அடக்க முடியாமல் கண்ணீர் விட்டார். சர்வாதிகாரிகள் மீது மக்களுக்கு இவ்வளவு அன்பா?

ஆனால் ஒரு நாட்டின் ஆட்சியாளர்களுக்காக மக்கள் இப்படி அழுவது அபூர்வம். அதுவும் நீண்டகாலம் ஆட்சியில் இருப்பவர்கள் மக்களின் நன்மதிப்பைப் பெறுவது அவ்வளவு எளிதானதல்ல. ஜோசப் ஸ்டாலின் போன்றோருக்குத்தான் இத்தகைய அரிய கெற்ரவம் கிடைத்தது. வடகொரிய ஆட்சியாளர்கள் இவர்கள் எல்லோரையும் விஞ்சிவிட்டார்கள்.

வடகொரியாவில் ஆட்சியாளருக்கு ஆண்டவனுக்கு நிகரான இkims_funeral.jpgடம் அளிக்கப்பட்டிருக்கிறது. நம்மூர் தொலைக்காட்சிகளில் பக்திப்பாடல்களைப் பாடுவது போல அங்கு ஆட்சியாளரைப் புகழ்ந்து பாடல்கள் ஒளிபரப்பாகும். அவரது பராக்கிரமங்களைக் கூறும் நிகழ்ச்சிகள் முக்கிய இடம்பிடிக்கும். அவரது பிறந்த ஊரின் மகிமை போற்றப்படும். செய்தித்தாள்கள், வானொலி, தொலைக்காட்சி எல்லாம் அரசின் பிடியில் இருக்கின்றன. சினிமா, கலை போன்றவைகூட ஆட்சியாளரின் சொல்படிதான் நடக்க வேண்டும். ஆட்சியாளரை ஓவியமாக வரைவதற்குக்கூட மிகச் சிலருக்குத்தான் அனுமதியுண்டு. அதுவும் மேலிடம் சொல்கிறபடிதான் நிறம், பின்னணி எல்லாம் இருக்க வேண்டும். கேலிச்சித்திரம் வரைவது பற்றி நினைத்தாலே அவ்வளவுதான்!

இப்படிப்பட்ட நாட்டில், ஆட்சியாளரின் மரணத்துக்காக மக்கள் அழுகிறார்கள் என்றால் அது உண்மையானதாக இருக்காது, ராணுவ நிர்பந்தம் காரணமாக இருக்கும் என்று சிலர் விமர்சிக்கிறார்கள். அல்லது நாட்டின் எதிர்காலத்தை பற்றிய பயத்தின் காரணமாகவும் மக்கள் அழுதிருக்கலாம் என்கிறார்கள். ஆனால், பஞ்சத்திலும் பட்டினியிலும் சிக்கியிருந்த ஒரு நாட்டை மீட்டு, நெருக்கடியான தருணங்களில் வழிநடத்தி, உலக அளவில் தனியிடத்தை உருவாக்கித் தந்த ஒருவரின் பிரிவால் மக்கள் வருந்துவது இயல்பானதாகவும் இருக்கக்கூடும்.

இப்போது பதவிக்கு வரும் கிம் ஜோங்-உன்னுக்கு இன்னும் 30 வயதுகூட ஆகவில்லை. எந்த அரசியல், ராணுவ அனுபவமும் கிடையாது. ஆனாலும் தந்தை உருவாக்கி வைத்திருக்கும் கட்டுக்கோப்பான நிர்வாகத்தின் காரணமாக அவரால் எந்தப் போட்டியும் இல்லாமல் தலைமைப் பதவிக்கு வர முடிந்திருக்கிறது.

மனித உரிமை மீறல்கள், அரசியல் எதிரிகளை அடைப்பதற்காகவே சிறைகளை உருவாக்கியிருப்பது என்பன போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் வடகொரியா மீது நீண்டகாலமாக இருக்கின்றன. உணவுக்காக சீனா போன்ற நாடுகளிடம் கையேந்த வேண்டியிருக்கிறது. வேலைவாய்ப்பின்மையும் பெரிய தலைவலியாக இருந்து வருகிறது. கொஞ்சம் அலட்சியமாக இருந்தாலும் இராக், லிபியா போன்ற நாடுகளைப் போல வழிக்குக் கொண்டுவர மேற்கத்திய நாடுகள் துடித்துக் கொண்டிருக்கின்றன.

பொதுவுடைமைக்கும் முதலாளித்துவத்துக்கும் இடையே தடுமாறிக்கொண்டிருக்கும் சீனாவை, வடகொரியா நீண்டகாலத்துக்கு நம்பியிருக்க முடியாது. நல்லதோ கெட்டதோ, அழிவுசக்தியான அணு ஆயுதத்தை மட்டும் நம்பியிருக்கும் நிலையில்தான் வடகொரியா இருக்கிறது. அதைச் சாமர்த்தியமாக கையாளுவதுதான் மக்களின் கண்ணீர் பற்றிய கேள்விக்கு புதிய தலைவர் தரும் பதிலாக இருக்கும்.

தினமணி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.