Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனர்கள் இலங்கை தொழிற்சந்தையை இலக்கு வைத்து படையெடுக்கின்றனர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

China_CI.jpg

சீனப் பிரஜைகள் இலங்கை தொழிற்சந்தையை இலக்கு வைத்து படையெடுத்து வருவதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பல்லாயிரக் கணக்கான சீனர்கள் கடந்த ஆண்டில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.

2011ம் ஆண்டில் சுமார் 60000 சீனப் பிரஜைகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத சுற்றுலாத்துறை அமைச்சின் உயரதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

சீன அரசாங்கத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களில் பணியாற்றும் நோக்கிலேயே பல சீனர்கள் இலங்கைக்கு விஜயம் செய்கின்றனர்.

இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்த 60000 சீனப் பிரஜைகளில், 9000 பேர் இன்னமும் நாடு திரும்பவில்லை.

எவ்வாறெனினும், இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சு சீனர்களின் வருகையை சுற்றுலாப் பயணிகளின் அதிகரிப்பாகவே தனது புள்ளி விபரங்களில் வெளிப்படுத்தியுள்ளது.

2011ம் ஆண்டில் 90000த்திற்கும் மேற்பட்ட சீனப் பிரஜைகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.

முன்னைய ஆண்டை விடவும் இந்த எண்ணிக்கை 15 வீதம் அதிகமாகும்.

எனினும், இந்த சுற்றுலாப் பயணிகளில் பலர் இலங்கையில் ஓய்வெடுப்பதற்காக செல்லவில்லை எனவும், உழைப்பை வழங்கி பணம் சம்பாதிக்கும் நோக்கில் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் தென் பகுதியில் அதிகளவான சீனர்கள் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.

உள்ளுர் உழைப்பாளர்கள் பலருக்கு சந்தர்ப்பம் கிடைக்கப் பெறவில்லை என்பதே யதார்த்தமாகும். சீன அரசாங்கம் மிகவும் கருணையுடன் இலங்கையின் அபிவிருத்திக்காக பங்களிப்பு செய்வதனைப் போன்று தோன்றிய போதிலும், உண்மை நிலைமை வேறுவிதமாக அமைந்துள்ளது.

சீன நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களில்ச சீனர்கள் கடமையாற்றி வருகின்ற அதேவேளை, சீன அரசாங்கமே கடன்களை வழங்கியுள்ளது.

இதன்படி, இலங்கைக்கு வழங்கப்பட்ட பணம் சீனர்களுக்கு மீளவும் சென்றடைகின்றது. சீனாவுடனான உறவுகள்; வலுப்பட்டுள்ள அதேவேளை ஏனைய நாடுகளுடனான உறவுகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக குறித்த கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது.

http://www.globaltam...IN/article.aspx

தமிழர்களை ஆயுத ரீதியாக மற்றும் அடிமைகளாக்க இந்தியாவும் சிங்களமும் முயன்று கடைசியில் சீனாவிடம் எல்லாத்தையும் கொடுக்கும் கதையின் அத்தியாயம் இது .

கடந்த வருடம் க்கு 800,000 மேல் உல்லாசப்பிரயாணிகள் வந்தார்கள் அதில் எத்தனைபேர் சீனர்கள் ? அவர்களில் பலர் பின்னர் விமான நிலையத்தில் வெளிநாட்டு நாணயத்துடன் கைதாகினரா?

The Chinese – Not Tourists But A Growing Labour Workforce

Tens of thousands of Chinese have been in and out of Sri Lanka in the past year, 2011. Highly placed sources at the Ministry of Tourism speaking on conditions of anonymity to The Sunday Leader said that as many as 60,000 Chinese nationals had arrived last year for purposes of work on Chinese funded projects. Of this number a minimum of 9,000 remain in the country.

Officially, however, the ministry has been forced to maintain that these numbers comprise of a significant rise in “tourist” arrivals from China to Sri Lanka.

http://www.thesundayleader.lk/2012/01/01/the-chinese-not-tourists-but-a-growing-labour-workforce/

சீனர்கள் வந்தார்கள், சிங்களவரின் வேலைகள் பறிபோயின. இனி சிங்களவர் என்ன செய்வார்கள்? தமிழர்களிடம் தட்டிப்பறித்து சீனர்களுக்குக் கொடுப்பார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

'சிங்களம்' செஞ்சோற்றுக்கடன் கழிக்கின்றது!

கடன் கழிய, சிங்களம், சீனாவாக மாறியிருக்கும்!

'சிங்களம்' செஞ்சோற்றுக்கடன் கழிக்கின்றது!

கடன் கழிய, சிங்களம், சீனாவாக மாறியிருக்கும்!

அதில் கிந்திய வெளியுறவுக்கொள்கை பெருமிதம் கொள்ளும் :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஆபிரிக்காவிலும் இதே கொள்கையைக் கையாண்டு, இப்போது அங்கெல்லாம் சீன நகரங்கள் (China Towns) முளைத்திருக்கின்றன..! இவர்கள் உள்ளூர் மக்களுடன் கலப்பதில்லை..! பணமே குறியாக இருப்பார்கள்..! :rolleyes:

அங்கே உள்ளூர் மக்களுடன் உரசல்கள் ஏற்பட்டுள்ளதாக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பார்த்தேன்..! :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

chinese_workers.jpg

Chinese%2Bworker%2Bcarries%2Belectrical%2Bwires%2Bat%2Bthe%2Bplanned%2Bsouthern%2Bhighway%2Bconstruction%2Bsite.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.