Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் புத்தாண்டு : தை பொங்கலா? சித்திரை பிறப்பா??

தமிழர் புத்தாண்டு : தை பொங்கலா? சித்திரை பிறப்பா?? 12 members have voted

  1. 1. தமிழர் புத்தாண்டு : தை பொங்கலா? சித்திரை பிறப்பா??

    • தை பொங்கல்
      9
    • சித்திரை பிறப்பு
      3

Please sign in or register to vote in this poll.

Featured Replies

2043 ஆம் ஆண்டின் முதலாம் நாள் தைப்பொங்கல் என்பதால் புத்தாண்டென்பதா?

சோதிடக் கணிப்பின் படி கோள்களின் சுற்றுத் தொடங்கும் நாள் சித்திரைப் பிறப்பு என்பதால் புத்தாண்டென்பதா?

இதற்கான பதிலையும் விளக்கமளிக்கும் பணியையும் உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு காலத்தில் ஐரோப்பியர்களும் சித்திரையில் தான் புத்தாண்டு கொண்டாடினார்கள். பின்னர் தான் அது தை மாதத்திற்கு மாற்றப்பட்டது.. அங்கேயும் சித்திரையை விட்டுவிலகாமல் சித்திரையைக் கொண்டாடும் ஒரு கூட்டத்தினர் இருந்தனர். இதனால் தான் அவர்களை 'ஏப்ரல் ப+ல்" என'று அழைத்து இன்று உலகம் பூராகவும் ஏப்ரல் ப+ல் னொண்டாடப்படுகின்றது. இப்படி மாறாதவர்களை ஏப்ரல் ப+ல் என்று நையாண்டி செய்து பின்னர் ஏப்ரல் ப+லாக வந்தது.

தமிழர்களைப் பொறுத்தவரையில் தைப்பொங்கல் அதாவது தை மாதம் 15ம் திகதி ப+மியானது வடக்கு நோக்கிப்பயணிக்கும் காலம் ஆரம்பமாவதால் (உத்தராயணம்) மாரி முடிந்து விளைந்த நெல் அறுவடையும் தொடங்குவதால் சூரியனுக்கு நன்றி செலுத்தும் முகமாக புதுசாக விளைந்த நெல்லில் அரிசி எடுத்து முதல் முதலாக கூரியனுக்குப் படைத்து நன்றி செலுத்தி வசந்தகால வரவை ஆரம்ப்pக்கின்றனர். அத்துடன் இந்தப்பயணகாலத்தில் தான் மரங்கள் செடிகள் எல்லாம் துளிர்விட்டு ப+த்துக் குலுங்கி காயாகிக்கனியாகத்தொடங்கும் காலம்.

சித்திரை மாதம் வரும்போது சூரியன் ப+மியின் மத்தியகோட்டில் வரும் அதாவது எமது நாடாகிய இலங்கை, இந்தியாவின் உச்சத்தில் கூரியன் இருப்பான். தாவரங்கள், மிருகங்கள் எல்லாம் வரந்தத்துடன் அண்டியகாலப்பகுதியில் மிகவும் ஆனந்தமாகக்காணப்படும். ஏன் மனிதர்களும் கூட. ப+க்கள் ப+த்துக்குலுங்கி எங்கும் நறுமண வாசனைவீசும். இந்தநேரமே புதுவருடம் கொண்டாட உகந்தநேரமாகும் என காரணகாரியத்துடன் சித்திரைமாதம் தமிழர்களின் புதுவருடப்பிறப்பு என வகுக்கப்பட்டது. எனவே சித்திரைமாதப்புதுவருடம் ஏதோ எழுந்தமானத்தில் அமைக்கப்பட்டதல்ல என்பதை எல்லோரும் புரிந்து கொள்ளல் வேண்டும்.

ஐரோப்பியர்கள் இதை தை மாதத்திற்கு மாற்றியதற்கு காரணங்கள் உண்டு. அவர்கள் தைமாதம் பனிக்காலம், இவர்களால் ஏதும் பெரிதாகச் செய்து கொள்ளமுடியாது,

குளிருக்கு வீட்டில் முடங்கி இருப்பதால் அந்த மாதத்தை ஒரு சுறுசுறுப்பான மாதமாக்கவும் வியாபாரத்தை விருத்தி செய்து அந்தமாதபொருளாதாரத்தை தக்ககை;கவும் மாற்றப்பட்டது.. ஏனெனில் மேங்குலகநாடுகளில் சித்திரை மாதம் விவசாயப்பணியுடன் மற்றைய பணிகளுக்கும் விறுவிறுப்பான காலம். ஆகையால் கொண்டாட்டங்களில் நேரம் செலவிடமுடியாது.

புத்தாண்டிற்குச் சித்திரைமாதமே சிறப்பான மாதம். பச்சைப்பசேலென பூத்துக்குலங்கும் மரங்களும், காய் கனிகளும் நிறைந்த நிறைவான சூரியஒளி கிடைக்கும் ரம்மியமான வசந்தருது. நினைக்கவே குளிர்மையாக இல்லையா?

  • தொடங்கியவர்

தமிழகத்தில் வானியலில் வல்ல அறிஞர்களை ‘அறிவர், கணி, கணியன்’ என அழைத்தார்கள். அரசனுடைய அவையில் பெருங்கணிகள் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. மூவகைக் காலமும் நெறியினாற்றும் ‘அறிவர்கள்’ குறித்துத் தொல்காப்பியரும் குறிப்பிடுகின்றார்.

அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட்பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு - அதாவது 24 மணித்தியாலங்களோடு - அச்சொட்டாகப் பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நாட்பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும். பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.

காலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் தொடங்குகின்றான். இங்கே ஒரு மிக முக்கியமான விடயத்தை வாசகர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்! பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.

இன்றும் கூட ஆரியர்களின் பண்டிகைகளான சித்திரை வருடப்பிறப்பு, தீபாவளி போன்ற பண்டிகைகளை, தன் இனத்துப் பண்டிகைகளாக எண்ணி மயங்கிப் போய்க் கிடக்கின்றான் தமிழன். “தமிழனுக்கு தைத்திங்கள் முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு ஆகும்.”

பொங்கல் திருநாள் தமிழரின் தனிப்பெரும் திருநாள் ஆகும். பொங்கல் திருநாளைத் தமிழர்கள் ‘புதுநாள்’ என்று அழைத்தார்கள். பொங்கல் திருநாளுக்கு முதல் நாளை, போகி (போக்கி) என்று அழைத்தார்கள். போகி என்பது, போக்கு - போதல் என்பதாகும். (ஓர் ஆண்டைப் போக்கியது- போகியது- போகி) பொங்கல் என்பது பொங்குதல் - ஆக்குதல். இது தொழிற் பெயர். புத்தொளி, பொங்கல் என ஆகுபெயர் ஆகியுள்ளது. ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற முதுமொழியை ‘புத்தாண்டு வந்தால் புதுவாழ்வு மலரும்’ -என்ற கருத்தோடு ஒப்பு நோக்கிப் பார்க்க வேண்டும்.

தமிழர்-யப்பானிய பண்பாட்டு ஒற்றுமை நிலையை வெளிப்படுத்தும் நடைமுறையாகத் தைப்பொங்கல் விளங்குகிறது. யப்பானியர் தை 14ம் திகதி அன்று பழைய பயன்பாட்டுப் பொருட்களை எரிப்பார்கள். தமிழர்களும் அவ்வாறே செய்கின்றார்கள். இந்தக் கட்டுரைக்குப் பல நூல்களும், ஆய்வுநூல்களும் பயன்பட்டன. முக்கியமாகத் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், தமிழர் நாகரிகமும் பண்பாடும, ஒப்பியன் மொழி நூல், வாக்கிய பஞ்சாங்கம், பண்பாட்டுக் கட்டுரைகள், செம்பருத்தி சஞ்சிகைக் கட்டுரைகள், பொங்கலே தமிழ்ப் புத்தாண்டு- மலேசிய சிறப்பு மலர், தமிழர் யப்பானியர் வாழ்வில் தைப்பொங்கல் போன்ற நூல்கள் பேருதவி புரிந்தன. சில சொல்லாக்கங்களும் சொல்லாடல்களும் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளன. காலத்தின் தேவை கருதி ஏற்கனவே என்னால் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் சில கருத்துக்கள் மீண்டும் இடம் பெற்றுள்ளன.

ஆரிய முட்டாள்களின் இந்து ஆண்டு முறையை (சித்திரை) பின்பற்றும் முட்டாள் கூட்டம் (இந்து மத வெறி அமைப்புகளின் தூண்டுதலால் அவர்களின் மகுடிக்கு மயங்கி ஏமாந்த கூட்டம்) கூறும் காரணப்படி பார்த்தாலும் யாரும் ஒரு துவக்கத்தை உச்சியில் துவக்குவதில்லை. ஒரு நாள் பொழுது துவங்கும் பொழுது ஞாயிறு உச்சியில் இருக்கும் பொழுது துவக்குவதில்லை. மாறாக ஒரு நாள் நள்ளிரவில் துவங்கி சிறிது சிறிதாக விடியத்துவங்கி அரை நாள் முடியும் பொழுது ஞாயிறு உச்சிக்கு வருகின்றது. மீதும் ஞாயிறு சிறிது சிறிதாக மறையத் துவங்கி நள்ளிரவில் அந்த நாள் முடிவடைகின்றது. அது போலவே ஆண்டும் ஞாயிறு உச்சியில் இருக்கும் பொழுது துவங்குவதில்லை. உலகில் எந்த இனமும் கொடும் கோடை காலத்தில் தங்கள் ஆண்டினை துவங்குவதில்லை. இந்த முட்டாள் ஆரியன் அவன் இருந்த பகுதியில் பின்பற்றிய ஆண்டு முறையை இங்கும் வந்து புகுத்திட தமிழா அதை பின்பற்ற நீ என்ன முட்டாளா? உன்னை சுற்றி இருக்கும் வெற்றினத்தார்கள் பலர் தங்களை தமிழர் என்று அடையாளப்படுத்தி சித்திரைதான் ஆண்டின் துவக்கம் என்று கூறி உன்னை ஏமாற்றி குழப்புவார்கள். கவனமாயிரு.

உலகின் முதன்மையாக தோன்றிய இனங்களுள் முதன்நிலை பெறும் தமிழ் மொழி தமிழர் இனம் தமிழர் நாகரீகம் என்பவற்றின் தாயகம் குமரிக்கண்டம் என்றே தொல்பொருள் வல்லுநர்கள் தமது ஆய்வுகளின் மூலம் நிறுவியுள்ளனர். பண்டைத் தமிழன் இயற்கையை வணங்கி வந்தவன். ‘மழை, வெயில், குளிர், பனி, தென்றல், வாடை’ இவை மாறி மாறிப் பருவக் காலங்கள் மனிதனை ஆண்டு வந்ததால் தமிழன் ஆண்டு என்று அழைத்தான் என திரு. வெங்கட்ராமன் குறிப்பிடுகின்றார். பண்டையத் தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு, காலத்தைப் பகுத்தனர். "வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம்" என்று ஒரு நாளை ஆறு சிறு பொழுதுகளாக பகுத்திருந்தனர். அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பை அறுபது நாழிகைகள் எனவும் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறு பொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைள் எடுக்கின்றன.

1 நாழிகை

- 24 நிமிடங்கள்

60நாழிகை

- 1440 நிமிடங்கள்

இதனை இன்றைய கிருத்தவ கணக்கீட்டின்படி பார்த்தால்

1440 நிமிடங்கள்

- 24 மணித்தியாலங்கள்

24 மணித்தியாலங்கள்

- 1 நாள்

இவ்வாறு இன்றைய நவீன காலக் கணிப்பீட்டு முறையுடன் அச்சொட்டாகப் பொருந்தும் வகையில், பண்டையத் தமிழரின் காலக் கணிப்பீட்டு முறைமை மிகவும் நுட்பமாகக் கணிக்கப்பட்டுள்ளது. நாட்களை இவ்வாறு கணக்கிட்ட தமிழன் காலத்தை ஆறு பருவங்களாகப் பகுத்தான்.

1. இளவேனில் - தை - மாசி மாதங்கள்

2. முதுவேனில் - பங்குனி - சித்திரை மாதங்கள்

3. கார் - வைகாசி – ஆனி மாதங்கள்

4. கூதிர் - ஆடி - ஆவணி மாதங்கள்

5. முன்பனி - புரட்டாசி – ஐப்பசி மாதங்கள்

6. பின்பனி கார்த்திகை - மார்கழி மாதங்கள்

பண்டையத் தமிழர் தம் தாய் மொழியாக தமிழையும் தமது நாகரீகத்தையும் தம் இன அடையாளங்களையும் பேணி வந்த அதேவேளை, தமது நாகரீகத்தின் அடையாளமாக காலக்கணிப்பீடுகளையும் சரியாக மதிப்பீடு செய்து தமது வாழ்வியல் கூறுகளையும் நிர்ணயம் செய்து கொண்டனர் என அலெக்ஸ்ராண்டர்-கோண்டிரடோஸ், எஸ்.ஜி.வெல்ஸ் போன்ற மெய்யியலாளர்கள் தமிழர்களின் பூர்வீகத்தை உறுதி செய்துள்ளனர். காலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு தொடக்கத்தை இளவேனிற் காலத்தின் ஆரம்ப நாளாகக் கொண்டு தை மாதத்தினை தனது இனத்துக்கான புத்தாண்டாகப் பிரகடனப்படுத்திக்கொண்டான். தமிழாண்டின் தொடக்கக் காலகட்டம், உழைப்பின் பயனைப் பெற்று மகிழும் காலகட்டமாகவும் அமைந்தது. புத்தொளி வழங்கிய கதிரவனைப் போற்றிய தமிழ் நெஞ்சம் உழைப்பையும், தனக்குத் துணை நின்ற உயிரையும் போற்றியது. கதிரவனின் சுழற்சியைக் கொண்ட காலக்கணிப்பைக் காட்டும் அறிவியலும், நன்றியுணர்வை வெளிப்படுத்தும் முதிர்ந்த பண்பாடும் பொங்கல் விழாவில் போற்றப்படுவதை நாம் காணலாம்.

"தை பிறந்தால் வழி பிறக்கும்" எனும் தமிழர் முதுமொழியை "புத்தாண்டு வந்தால் புதுவாழ்வு மலரும்" என்ற கருத்தோடு ஒப்பு நோக்கிப் பார்க்க வேண்டும். தமிழர்கள் மட்டுமல்ல, உலகத்தில் பல்வேறு இன மக்களும் தத்தமக்குரிய புத்தாண்டை இளவேனில் காலத்திலேயே கொண்டாடுகின்றனர். தத்தமது புதுப் பணிகளையும், நற்செயல்களையும் தொடங்குகின்றனர். ஆனால் சித்திரை மாதத்தில் குறிப்பாகத் தமிழர்கள் எந்த நற்செயல்களையும் தொடங்குவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தை மாத தொடக்க நாளை தமிழர்கள் தைப்பொங்கல் நாளாக கால காலமாக கொண்டாடி வருகின்றனர். அதில் தோரணங்கள் கட்டுதல், புதுப் பானையில் புது நீர் அள்ளி பொங்கல் வைத்தல், பொங்கும் போது “பொங்கலோ பொங்கல்” என ஆரவாரம் செய்தல், பொங்கலை பரிமாறி உண்ணல், புத்தாடை அணிதல், முன்னோர்க்கு படையல் இடுதல், மாடுகளுக்கு உணவளித்தல், பணியாளர்களுக்கு புத்தாடை வழங்குதல் போன்ற செயல்பாடுகள் தமிழர்களிடையே பழங்காலந் தொட்டு இருந்து வருகின்றது. இவை அனைத்தும் நீண்ட நெடுங்காலமாக யப்பானியர்களாலும் கடைப்பிடிக்கப் படுகின்றது. இது அவர்களுக்கும் எமக்கும் இடையிலான ஒரு வரலாற்றுப் பண்பாட்டு ஒருமைப்பாடு இருந்திருக்க வேண்டும் என சில வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இனி தமிழ் மாதங்களின் இல்லை, இல்லை - தமிழ்த் திங்கள்களின் பெயர்களைப் பார்ப்போமா? தை முதல் மார்கழி ஈறாக உள்ள 12 திங்கள்களுக்கும் தனித் தமிழ்ப் பெயர்கள் உண்டு. அவை எவை என அறிவீர்களோ? மிக மிக முற்காலத்திலேயே தமிழன் வகுத்துத் தந்த கால அட்டவணை (calendrier / calendar) வான வெளியில் ஞாயிறு வலம் வருதலை அடிப்படையாகக் கொண்டது. இந்த வான மண்டலத்தைப் பன்னிரண்டு பகுதிகளாகப் பிரித்து 'ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு பெயர் கொடுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு பகுதியிலும் கண்ணுக்குப் புலனாகும் விண்மீன்களைக் கற்பனைக் கோடுகளால் இணைத்துப் பெறும் உருவங்களின் அடிப்படையில் பெயர்கள் இடப்பெற்றுள்ளன. இப்படிப் பெயர் கொடுத்தவர்கள் கிரேக்க வானியலார் என்பர். அவர்கள் பயன்படுத்திய சொல் என்ன தெரியுமா? 'horos'. இன்று ஐரோப்பிய மொழிகளில் வழங்கும் பல சொற்களுக்கு, 'horoscope, horodateur, hour, heure, year...' இச்சொல்லே வேர்ச் சொல். இந்த 'horos' என்ற கிரேக்கச் சொல்லுக்கு 'boundary, limit, border' என்று பொருள். (காண்க : On line etymology dictionary & The American Heritage dictionary). இந்தச் சொல்லுக்கு மூல வேர்ச்சொல் தேடப் போனால் நம் தமிழுக்குத்தான் வர வேண்டும். பக்கம், விளிம்பு எனப் பொருள்படும் ஓரம் என்ற சொல்லின் அடிப்படையில் பிறந்த சொல் ஓரை.

(காண்க : தமிழ்மொழி அகராதி - நா. கதிரைவேற்பிள்ளளை) இந்த ஓரை என்ற சொல்லின் கிரேக்க வடிவம்தான் 'horos'. வானப் பகுதிகள் பன்னிரண்டிலும் ஞாயிறு தங்கிச் செல்லும் பக்கத்தைத் தமிழர்கள் ஓரை என்று அழைத்தார்கள். இதற்கு வடமொழியில் 'இராசி' என்று பெயர். கிரேக்கத்துக்கு ஏற்றுமதி ஆனது ஓரை என்ற தமிழ்ச் சொல் மட்டும் அல்ல, அஃது உணர்த்தும் பொருளும் தமிழர்களின் வானியல் அறிவும்தான். ஆக, தமிழர்கள் கண்ட 12 ஓரைகளைத்தான் கிரேக்கர்களும் கண்டனர். ஞாயிறு எந்த ஓரையில் தங்குகிறதோ, அந்த ஓரையின் பெயரையே அந்தத் திங்களுக்கு (மாதத்தக்கு)ப் பெயராய் இட்டனர் தமிழர். கிரேக்கர்களும் உரோமர்களும் இம்முறையைப் பின்பற்றவில்லை.

எனவே, தமிழர்களாகிய நாம் நம் திங்கள்களுக்கு (மாதத்துக்கு)ச் சுறவம் முதல் சிலை ஈறாக உள்ள தனித் தமிழ்ப் பெயர்களைப் பயன்படுத்துதல் வேண்டும். முதலில் கடினமாகத் தோன்றினாலும் பழகியபின் இவை எளிமையாகிவிடும். வார நாள்கள் ஏழினுக்கும் கோள்களின் பெயர்களை இட்டனர் தமிழர். இம்முறையைக் கிரேக்கர்கள் பின்பற்றவில்லை, உரோமர்களோ மிகப் பிற்காலத்தில் தான் இம்முறையைக் கடைப்பிடித்தனர். கிழமை என்ற சொல்லுக்கு 'உரிமை' என்று பொருள்.

எனவே, ஞாயிற்றுக்கு உரிய நாள் என்ற பொருளில் ஞாயிற்றுக் கிழமை என்கிறோம். புதன், சனி என்பன தமிழ்ச் சொற்கள் அல்ல. ஆகவே, அவற்றுக்கு ஈடான அறிவன், காரி என்ற தனித்தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துதல் நன்று. ஆக, தமிழர்களின் புத்தாண்டு அதாவது வள்ளுவர் ஆண்டு சித்திரைத் திங்களில் தொடங்கவில்லை மாறாகச் சுறவம் முதல்நாள் (சனவரி 14) தொடங்குகிறது என்பதை நினைவில் கொண்டு நம் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை அமைத்துக்கொள்ள வேண்டியது தமிழர்களாகிய நம் கடமை. எனவே, இனி ஒரு விதி செய்வோம், அதனை எந்நாளும் காப்போம் "திருவள்ளவர் ஆண்டே இனி நம் ஆண்டு! சுறவத் திங்கள் முதல் நாளே நமக்குப் புத்தாண்டின் முதல் நாள். சுறவம் முதல் சிலை ஈறாக உள்ள திங்கள்களின் தனித்தமிழ்ப் பெயர்களையே நாம் இனி பயன்படுத்துவோம். கிழமைகளின் பெயர்களையும் தனித்தமிழிலேயே எழுதுவோம் ..." என்ற உறுதிமொழியை இன்று எடுப்போம்! வடமொழியோ பிறமொழியோ விட்டொழிப்போம்! நம் அருமைத் தமிழ் மொழியாலே நாம் செழிப்போம்! வாழ்க திருவள்ளுவர் ஆண்டு, வளர்க நம் தனித்தமிழ்ப் பற்று!

வழக்குத் தமிழ் - தனித்தமிழ்

தை - சுறவம்

மாசி - கும்பம்

பங்குனி - மீனம்

சித்திரை - மேழம்

வைகாசி - விடை

ஆனி - இரட்டை

ஆடி - கடகம்

ஆவணி - மடங்கல்

ஐப்பசி - துலை

புரட்டாசி - கன்னி

கார்த்திகை - நளி

மார்கழி - சிலை

கிழமைகளின் தனித்தமிழ்ப் பெயர்கள்

ஞாயிறு - ஞாயிறு

திங்கள் - திங்கள்

செவ்வாய் - செவ்வாய்

புதன் - அறிவன்

வியாழன் - வியாழன்

வெள்ளி - வெள்ளி

சனி - காரி

http://www.keetru.co...0-16&Itemid=515

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனும்... சித்திரை மாதத்தில், எம்முடன் சேர்ந்து புத்தாண்டு கொண்டாடுவதால்...

நாம் தைப் பொங்கலில், வருசப்பிறப்பை கொண்டாடுவதே நல்லது.

அத்துடன் ஆங்கிலேய வருடப்பிறப்புக்கு வாங்கிய வெடிகளை, தை மாதத்தில் கொளுத்தலாம்.

சித்திரையில் வருடப் பிறப்பு கொண்டாடினால்... இங்கு, கடைகளில் வெடி வாங்க முடியாது.

Edited by தமிழ் சிறி

இரு வரிகளில்

சித்திரைப் புத்தாண்டு= ஆரியரின் வருகையுடன் ஆரம்பித்து மிக ஆபசாமான கதைகளை காரணமாக்கி 64 வருசங்களுக்கும் பெயரிட்டு வரும் ஒரு ஆரியப் பண்டிகை.

தைப்பொங்கல்: தமிழர் பண்டிகை

முன்னர் யாழில் நடந்த ஒரு விவாதம்

சித்திரைப் புத்தாண்டு தமிழ்ப் புத்தாண்டல்ல

தை முதல் நாளையே தமிழரின் புத்தாண்டாகக் கொண்டாடுவோம்

நாகரிகம் தொடங்கிய காலம் தொட்டு வெவ்வேறு இன மக்கள் வெவ்வேறு நாட்களைத் தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறார்கள்.

இன்று சமய அடிப்படையில் கிறித்தவர்கள் சனவரி முதல் நாளையே புத்தாண்டின் தொடக்கமாகக் கொண்டாடுகிறார்கள். இஸ்லாமியர்கள் மொகமது நபி மெக்காவில் இருந்து மெடீனாவிற்கு ஓடிய நாளில் இருந்தே ஆண்டுகளைக் கணக்கிடுகிறார்கள். இப்படியே புத்த சமயத்தவர் புத்தர் பிறந்த நாளில் இருந்து ஆண்டுகளை எண்ணுகிறார்கள்.

கிறித்தவர்களுக்கு சனவரி முதல்நாள் எப்போதுமே புத்தாண்டின் தொடக்கமாக இருந்ததில்லை. பதினெட்டாம் நூற்றாண்டுவரை யேசுபிறந்த டிசெம்பர் 25 ஆம் நாளே புத்தாண்டின் தொடக்கமாக இருந்தது.

கிறித்துவ நாட்காட்டியின் அடிப்படையிலேயே சனவரி முதல் நாள் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாட்காட்டி காலத்துக்குக் காலம் திருத்தப்பட்டு ஒழுங்குபடுத்தி வரப்பட்டிருக்கிறது.

உரோம சக்கரவர்த்தி யூலியஸ் சீசர் அவர்கள் கி.மு. 45 ஆம் ஆண்டு ஒரு புதிய நாட்காட்டியை அறிமுகப்படுத்தினார். அதற்கு யூலியன நாட்காட்டி என்று பெயர். அதற்கு முந்தி ஒரு ஆண்டில் பத்து மாதங்களும் 304 நாட்கள் மட்டுமே இருந்தன. கிறித்துவ பாதிரிமார்கள் தங்களது அரசியல் நோக்கங்களுக்காக நாட்காட்டியில் உள்ள நாட்களையும் மாதங்களையும் கூட்டியும் குறைத்தும் சமயத்துக்கு ஏற்றவாறு பயன்படுத்தினார்கள். சில சமயங்களில் கையூட்டு வாங்கிக் கொண்டு ஆண்டை நீட்டியும் குறைத்தும் காட்டினார்கள்! யூலியஸ் சீசர் அந்தக் குளறுபடிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார். தனது பெயரில் ஒரு மாதத்தைக் கூட்டினார். அவர் கணித்த நாட்குறிப்பு கிபி 1,500 வரை பயன்பாட்டில் இருந்தது. கிமு 45ஆம் ஆண்டில் நாட்காட்டியைத் திருத்தி அமைத்ததால் அந்தக் குழப்ப ஆண்டு மொத்தம் 445 நாட்களைக் கொண்டிருந்தது.

அதன் பின் கிறகோறியன் (Gregorian) நாட்காட்டி நடைமுறைக்கு வந்தது. ஆனால் கிபி 1900 வரை பழைய நாட்காட்டியை கிரேக்கம், உருசியா போன்ற நாடுகள் கைவிடவில்லை. இன்றும் உருசியாவின் பழைமைவாத தேவாலயங்கள் யூலியன் நாட்காட்டியைத்தான் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன.

யூலியன் நாட்காட்டி ஒரு ஆண்டில் 365 1ஃ4 நாட்கள் இருப்பதாகக் கணக்கிட்டது. கணக்கைச் சரிசெய்ய நாலாண்டுக்கு ஒருமுறை (Leap Year) ஒரு நாள் பெப்ரபரி மாதத்துக்குரிய நாட்களோடு கூட்டப்பட்டது. ஆனால் உண்மையில் ஒரு ஆண்டு 365 நாட்கள், 5 மணித்தியாலங்கள், 49 நிமிடங்கள், 12 வினாடிகள் (365.2424) கொண்டது. இதனால் ஒரு புதிய சிக்கல் உருவாகியது. 128 ஆண்டுகளுக்கு ஒருமுறை 1 நாள் வித்தியாசம் ஏற்பட்டது. எனவே 1582இல் போப் கிறகோறியன் அதைச் சரிசெய்ய 10 நாட்களைக் (1582-325)ஃ120ஸ்ரீ10) குறைத்தார். அதன் பின்னர் 400 ஆல் பிரிக்கக்கூடிய நூற்றாண்டுகளில் ( 1700, 1800, 1900) ஒரு நாள் கூட்டப்பட்டது. ஆனால் 2000இல் கூட்டப்படவில்லை.

அப்படியும் கிபி 4,000 அல்லது 5,000 ஆண்டளவில் 12 நாட்கள் வித்தியாசம் ஏற்பட்டுவிடும் எனத் தெரிய வந்தது. எனவே இந்தத் தொல்லையில் இருந்து விடுபட 1972 ஆம் ஆண்டு அணு மணிப் பொறி ஒன்றினைக் கண்டு பிடித்தார்கள். அது காட்டும் நேரமே உலகத்தின் முறைமைப்பட்ட (official) நேரம் என எல்லா நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது.

வரலாற்றில் எகிப்தியர்கள்தான் முதன் முதலில் ஒரு ஆண்டில் 365 நாட்களைக் கொண்ட நாட்காட்டியை கிமு 4236இல் கண்டு பிடித்ததாகச் சொல்லப்படுகிறது.

பழந் தமிழகத்தில் ஆண்டுத் தொடக்கம் தை மாதமாக இருந்தது. பின்னர் ஆவணி ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளப்பட்டது. பின்பு சித்திரை ஆண்டின் முதல் மாதமாக மாற்றப்பட்டது.

ஆனால் தமிழர்கள் ஞாயிறு ஆண்டைக் (365 1/4); கொண்ட நாட்காட்டியை உருவாக்கியதாகத் தெரியவில்லை. உருவாக்கியதற்கான சான்று எதுவும் இல்லை.

திங்களின் வளர்பிறை தேய்பிறை கொண்டே தமிழர்கள்; ஆண்டைக் கணித்தனர். அதனால்தான் மாதத்தை திங்கள் என்று அழைத்தனர். திங்கள் ஞாயிற்றைச் சுற்றிவர எடுக்கும் நேரம் 27 நாட்கள், 7 மணி, 43 மணித்துளிகள்.

பண்டைய நாட்களில் காலத்தைப் பெரும்பொழுது சிறுபொழுது என வகுத்தனர். இளவேனில் (சித்திரை, வைகாசி ) முதுவேனில் (ஆனி, ஆடி)

கார் (ஆவணி, புரட்டாதி) கூதிர் (ஐப்பசி, கார்த்திகை) முன்பனி ( மார்கழி, தை, ) பின்பனி ( மாசி, பங்குனி) ஆறு பெரும் பொழுதாகும்.

வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை. யாமம் என்பதே ஒரு நாளில் அடங்கிய ஆறு சிறுபொழுதாகும். மேலும் ஒரு நாள் 60 நாளிகை கொண்டது என்று கணக்கிட்டனர். ஒரு நாளிகை 24 நிமிடங்களாகும்.

'உவவுமதி' (முழுமதி) நாளில் ஞாயிறும் திங்களும் எதிர் எதிராக நிற்கும் என்ற வானவியல் உண்மையைப் புறநானூற்றுப் பாடல் (65) ஒன்று தெரிவிக்கிறது.

சங்க காலத் தமிழ் இலக்கண, இலக்கியங்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, திங்கள், ஆண்டு, ஊழி என்று வானியல் அடிப்படையில் வரையறை செய்துள்ளன.

சங்க இலக்கியங்களில் எல்லாத் திங்கள்களின் பெயர்களும் சொல்லப்படவில்லை. தை, மாசி (பதிற்றுப்பத்து) பங்குனி (புறநானூறு) சொல்லப்பட்;டுள்ளது. ஆனால் தொல்காப்பிய ஆசிரியர் இகரவீற்றுப் புணர்ச்சி, ஐகாரவீற்றுப் புணர்ச்சியை விளக்கும்போது 'திங்களும் நாளும் முந்து கிளந்தன்ன' எனக் கூறுவதைக் காணலாம். எல்லாத் திங்கள்களின் பெயர்களும் இந்த இரண்டு எழுத்தில் (இ, ஐ) முடிந்தன என்கிறார். எனவே இன்றுள்ள 12 மாதங்களும் அவர் காலத்தில் இருந்து வருகின்றன எனத் துணியலாம்.

மேலும் தொல்காப்பியர் அ,இ,உ,எ, ஒ என்னும் ஐந்து உயிர் எழுத்துக்களும் ஒரு மாத்திரை ஒலிக்கும் குறில் எழுத்துக்கள் என்கிறார்.

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஒ, ஒள என்னும் ஏழு உயிர் எழுத்துக்களும் இரண்டு மாத்திரை ஒலிக்கும் நெடில் எழுத்துக்கள். மூன்று மாத்திரைகளில் எந்த எழுத்தும் ஒலிக்கப்படுவதில்லை. ஒலி மிகுதல் தேள்வைப்பட்டால் அந்தளவிற்குத் தேவையான எழுத்து ஒலிகளை எழுப்புதுல் வேண்டும்.

இதே போல் மெய் எழுத்துக்கு ஒலி அரை மாத்திரை. மாத்திரையின் கால அளவென்ன?

"கண்இமை நொடிஎன அவ்வே மாத்திரை

நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே" (தொல். எழுத்து - நூல்மரபு 8)

(இயல்பாகக் கண் இமைத்தலும், விரல் நொடித்தலுமே ஒரு மாத்திரை என்னும் ஒலி அளவு. இது தெளிவாக அறிந்தோர் வழி.)

காலத்தை இவ்வளவு நுணுக்கமாகக் கணக்கிட்ட புலவர்கள், இலக்கண ஆசிரியர்கள், அறிஞர்கள் தமிழர்களுக்கென ஒரு பொதுவான தொடர் ஆண்டை வரையறை செய்யாது போயினர். அதனால் அரசர்கள் புலவர்கள் சான்றோர்கள் பிறப்பு ஆண்டு, மறைவு ஆண்டு இவற்றைத் தொடர் ஆண்டோடு தொடர்பு படுத்தி வரலாற்றைப் பதிவு செய்ய முடியாமல் போய்விட்டது.

அரசர்கள் முடிசூடிக் கொண்ட ஆண்டை அடிப்படையாகக் கொண்டே அந்தந்த அரசர் 25 ஆண்டுகள், 50 ஆண்டுகள் ஆட்சி செய்தனர் எனக் குறிப்பிட்டார்கள். புலவர்களைப் பொறுத்தளவில் பிறந்த இறந்த ஆண்டுபற்றிய எந்தக் குறிப்பும் இல்லை.

தமிழர் வரலாற்றில் காலக் குழப்பம் இருப்பதற்கு தொடர் ஆண்டு இல்லாதது முக்கிய காரணமாகும், இருக்கிற 60 ஆண்டுகளும் சுழற்சி முறையில் வருவது மேலும் குழப்பத்தை உருவாக்கவே உதவியது. இதனால் வரலாற்று நிகழ்ச்சிகளை 60 ஆண்டுகளுக்கு மேல் கணக்கிட முடியவில்லை.

இடைக் காலத்தில் 'சக' ஆண்டை வைத்து தொடர் ஆண்டு எண்ணப்பட்டது. சக என்பது வடபுலத்து அரசன் சாலிவாகன் பெயரில் உள்ள சாலிவாகன சகாப்தம் என்பதன் சுருக்கமாகும். தமிழ்நாட்டில் மொகலாயர் ஆட்சி நடந்தபோது அரசு ஆவணங்களில், குறிப்பாக வருவாய்த் துறை ஆவணங்களில் 'பசலி' ஆண்டு என்ற தொடர் ஆண்டு பின்பற்றப்பட்டது.

புராணக் கதையின்படி ஒரு காலத்தில் நாரத முனிவர் காமம் மேலோங்கி அலைந்தபோது அவருக்கு அறுபதினாயிரம் கோபியரோடு கொஞ்சிக் குலாவும் கிருஷ்ண பகவான் நினைவு வந்ததது. நேராக அவர் முன் போய் "'கிருஷ்ணா, சதா கோபியரோடு கொஞ்சி இன்பம் அனுபவிக்கும் தேவனே, எனக்கு யாராவது ஒரு கோபியைத் தந்து எனது காம இச்சையைத் தீர்த்து வைக்க வேண்டும்''; என வேண்டினார்.

அதற்குக் கிருஷ்ண பரமாத்மா ''நாரதரே, நான் இல்லாத பெண்ணை நீ அனுபவித்துக்கொள்'' என ஆறுதல் மொழி கூறினார்.

ஆண்டவன் அருள்வாக்கு அருளப்பெற்ற நாரதர் வீடு வீடாய் (நாயாய்) அலைந்தார். அனைத்துப் பெண்கள் மனதிலும் கிருஷ்ணனே நீக்கமறக் குடி கொண்டிருந்தார். ஒரு கோபியும் அதற்கு விதி விலக்கல்ல. ஏக்கமும், ஏமாற்றமும் அடைந்த நாரதர் மானம், வெட்கம் எல்லாவற்றையும் தொலைத்து விட்டு மீண்;டும் கிருஷ்ண பரமாத்மாவிடமே வந்தார்.

'கிருஷ்ணா! எல்லாக் கோபியர் மனதிலும் தாங்களே இருக்கக் கண்டேன். தேவரீர் என்னை இவ்விதம் சோதிக்கலாமா? காம வேட்கை எனை வாட்டுகிறது. என்னைப் பெண்ணாக மாற்றி நீரே என்னை அனுபவித்து என் வேட்கையைப் போக்க வேண்டும்"' என வேண்டி நின்றார்.

பரிதாபப் பட்ட பகவானும் அவ்விதமே நடப்பதாகக் கூறி, நாரதரைப் பெண்ணாக்கி அவரோடு கலந்து அறுபது குழந்தைகளைப் பெற்றார்.

அந்த அறுபது குழந்தைகள் தான் பிரபவ முதல் அட்சய வரையிலான ஆண்டுகள். அந்தப் பெயர்கள் ஒன்றேனும் தமிழ் அல்ல. அறிவுக்கும் அறிவியலுக்கும் ஒவ்வாத இவ்வாண்டு முறை வரலாற்றுக்கு உதவாத வகையில் உள்ளது.

இந்த அறுபது ஆண்டுகளின் பெயர்களை ஆத்திரம் கொள்ளாமல் ஆன்மீகத் தமிழர்கள் ஆர அமர அலசிப் பார்க்க வேண்டும்.

பிரபவ முதல் அட்சய வடமொழிப் பெயர்களாவது தமிழர்கள் பெருமை கொள்ளத் தக்கவாறு உள்ளதா என்றால் அப்படியும் இல்லை. எடுத்துக் காட்டாக மூன்றாவது ஆண்டின் பெயரான ""சுக்கில"" ஆண் விந்தைக் குறிக்கிறது. இருபத்துமூன்றாவது ஆண்டான விரோதி எதிரி என்ற பொருளைத் தருகிறது. முப்பத்தெட்டாவது ஆண்டு குரோதி. இதன் பொருள் பழிவாங்குபவன் என்பதாகும். முப்பத்துமூன்றாவது ஆண்டின் பெயர் விகாரி. பொருள் அழகற்றவன், ஐம்பத்துஐந்தாவது ஆண்டான துன்மதி கெட்டபுத்தி என்று பொருள்.

ஆண்டுகள் வரலாற்றைத் தொடர்ச்சியாக பதிவு செய்யப் பயன்பட வேண்டும். அவை குழப்பத்திற்கு இடமின்றி இருத்தல் வேண்டும்.

இந்தக் குழப்பத்தை நீக்க தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள் மறைமலை அடிகளார் தலைமையில் 1921 ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஒன்றுகூடி ஆராய்ந்தார்கள். திருவள்ளுவர் பிறந்த ஆண்டை கி.மு 31 எனக் கொண்டு, திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டை ஏற்படுத்துவதென முடிவு செய்தனர். இழந்த தொன்மைச் சிறப்புக்குரிய தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமென அவர்கள் அறிவித்தனர்.

வானவியல் அடிப்படையில் தை முதல் நாள் ஞாயிறு தனுசு இராசியில் பட்டு மகர இராசியில் மலர்கிறான்.

தமிழ்நாடு அரசு அதனை ஏற்றுக் கொண்டு 1972 முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது. தைப் பொங்கல் திருநாளும் திருவள்ளுவர் நினைவாக அதற்கு மறு நாளும் அரச விடுமுறை நாட்களாகும்.

'பத்தன்று நூறன்று பன்னூ றன்று

பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்

புத்தாண்டு, தை முதல் நாள், பொங்கல் நன்னாள்''

என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல் கருத்து தமிழருக்குத் தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள் என்பதைத் தெளிவாக்குகிறது.

தமிழ் மண் மீட்பு, தமிழின மீட்பு இவற்றோடு நின்றுவிடாமல் பிற பண்பாட்டுப் படையெடுப்பால் இடைக்காலத்தில் சிதைக்கப்பட்ட எங்கள் கலை பண்பாட்டையும் நாங்கள் மீட்டெடுக்க வேண்டும்.

தைப் புத்தாண்டில் உலகம் வாழ் தமிழ்மக்கள் வாழ்வில் அல்லல்கள் நீங்கட்டும். துன்பங்கள் தொலையட்டும். இருள் அகலட்டும். விடியல் தோன்றட்டும். கோடி இன்பங்கள் குவியட்டும். மகிழ்ச்சி பொங்கட்டும். கல்வி துலங்கட்டும். தொழில்வளம் பெருகட்டும். அறிவியல் வளரட்டும். தமிழுணர்வு ஓங்கட்டும். இனவுணர்வு மலரட்டும்.

தமிழ் மண்ணில் அமைதி நிலவட்டும். அடிமை வாழ்வு முடியட்டும். மக்கள் வாழ்வில் தென்றல் வீசி புது வாழ்வு பூக்கட்டும். அந்த நம்பிக்கையுடன் புதிய ஆண்டில் காலடி எடுத்து வைப்போம்

மேலும்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=22028

  • கருத்துக்கள உறவுகள்

இனி மேல், சித்திரை வருசப்பிறப்பு, கொண்டாடுவதில்லை என்று தீர்க்கமான முடிவு எடுத்திருக்கின்றேன்!

இனி மேல், சித்திரை வருசப்பிறப்பு, கொண்டாடுவதில்லை என்று தீர்க்கமான முடிவு எடுத்திருக்கின்றேன்!

நானும் சரி மனைவியும் சரி 2005 இன் பின் சித்திரை வருடப்பிறப்பையும், தீபாவளியையும் கொண்டாடுவதில்லை. பிள்ளைகளுக்கும் அப்படி ஒரு தினம் இல்லை என்று நடைமுறையில் இப்போதைக்கு காட்டி வருகின்றோம்

நாளைக்கு அவர்கள் வளர்ந்து முடிவெடுக்கட்டும்

Edited by நிழலி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.