Jump to content

டொராண்டோவில் இன்று


Recommended Posts

கனடியர்கள் யாவருமே அறிந்தவிடையம் இப்போது நிலவுகின்ற முரண்பாடான அறிகுறிகள் தென்படும் குளிர்ச்சுரம்.

 

அனேகமாக கனடியர்கள் யாவருமே அறிந்தவிடையம் இப்போது நிலவுகின்ற குளிர் காய்சல் பற்றியது. இது நாடு முழவதிலும் நிலவுகின்றதொரு தவிர்க்க முடியத பிரச்சினையாகிவிட்டது. சிலர் தமக்கே காய்ச்சல் வந்துவிட்டதோ என்று சந்தேகிக்கும் வண்ணம் இருக்கின்றனர்.

ஆனால் இன்று இது சாதாரணமான காய்ச்சலோ அல்லது வயிற்றுக்காய்ச்சலோ என்றோ அறிந்துகொள்ள முடியாமல் இருக்கின்றார்கள்;. அந்தளவிற்கு அந்த வைரஸ் பரம்பல் காணப்படுகின்றது. சாதாணகாய்ச்சலாக இருந்தாலும் குளிர் சுரமாகவிருந்தாலும் சுவாசமண்டலமே பாதிப்படைகின்றது. தொற்றுநொய் வைத்திய நிபுணராகிய நீல் றாயு அவர்கள் நாம் அதிகளவில் காய்ச்சாலால் பீடிக்கப்படுவது போலவே நாடு இரைப்பை தொற்றுநொய்களின் அதிகரிப்பினால் பாதிப்படைகின்றது எனக் கூறியுள்ளார்.

காய்ச்சலுக்கும் வயற்றுக் காய்ச்சலுக்கும் நிறைய முரண்பாடுகள் உள்ளன என றாயு அவர்கள் வியாழக்கிழமை அன்று ஊடகத்திற்குத் தெரிவித்திருக்கின்றார். ; நோர்வாக் எனப்படும் வயிற்று நோயினது அறிகுறு காய்ச்சல் ஏற்படுவது அல்ல. அதற்கு நிறையவே வேறுபாடுகள் காணப்படுகின்றன. குறிப்பிடப்படுகின்ற வயிற்று நோய்க்கு டையறியா வாந்தியெடுத்தல் வயிற்று வலி என்பன காணப்படும் ஆனால் இருமலோ அல்லது தொண்டை நோ தடிமன் குணங்கள் காணப்படமாட்டாது.

ஆனால் குளிர் காலங்களில் பிரபல்யமான குளிர்கால வாந்தி நோய்கள் குளிர்காலங்களில் மட்டும்தான் பரவுகின்றன எனவும் அவை திடிரென நோயை உருவாக்கிவிட்டு விரைவாக குணமாகிவிடுவதாகவும் றாயு அவர்கள் குறிப்பிட்டார். அத்துடன் அவைகள் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு மட்டுமே நீடித்திருக்கின்றன எனவும் விளக்கினார். சுpல சமயம் 12 மணித்தியாலங்களுடன் குணமாகியும் விடுகின்றன. இந்த கண்டுகொள்வதற்கு குழப்பமான அறிகுறிகளையுடைய நோய் மூன்று நாட்களுக்கு மேல் நீடிக்குமாயின் அவை ‘நோவாக்” என அழைக்கப்படும் வகையைச் சேர்ந்தவை அல்ல எனவும் தெளிவுபடுத்;தியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில் வருடாவருடம் காய்ச்சலுக்கான ஊசிமருந்தை ஏற்றுபவர்களுக்கு அந்த மருந்தின் தாக்கமானது மனிதனுக்கு மனிதன் வேறுபட்டு காணப்படுகின்றது. அது 100வீதம் பாதுகாப்பைக் கொடுக்குமென்றோ அல்லது 100 சனத்தொகைக்கும் ஒரேமாதிரிப் பாதுகாப்பளிக்கும் என்றோ கூற முடியானதெனவும் தெரிவித்தார். ஆனாலும் அந்த மருந்து ஊசியானது மக்களுக்கு ஓரளவு பாதுகாப்பை வழங்கத்தான் செய்கின்றதெனத் தெரிவித்திரு;கின்றார். அத்துடன் மக்களுக்கு தாம் அந்த ஊசி மருந்தினை எடுத்துக்கொள்ள வேண்டுமா இல்லையா என்பதுபற்றி சிந்திப்பதற்கு இந்த வருடமானது ஒரு சிறந்த உதாரணம் எனவும் கூறியுள்ளார்.

http://www.canadamirror.com/canada/5016.html

 

இதற்கு சரியான நோய் எதிர்பு நிவாரணி(biaxin 500 XL) பைஅக்சின் 500 எக்ஸ் எல்.இந்த பைஅக்ச்ன் எக்ஸெல்லானது ஒரு ச்ர்வரோக நிவாரணி. டாக்டரிடம் கேட்டு வாங்குங்கள்.இந்த எக்ஸ் எல் மட்டும்தான் காப்புறுதிகளினால் ஏற்றுக்கொள்ளபடும்.ஏனெனில் இந்த மருந்துக்கு இணையாக மற்றய கம்பனிகள் மருந்தேதும் தயாரிக்கவில்லை.இதுவும் சட்டத்திலுள்ள ஒரு ஓட்டை.இத்துடன் சேர்த்து இரண்டு வகையான உள்ளிளுக்கும் மருந்துகளை பாவிக்க வேண்டி வரும்.ஒன்று உங்கள் சுவாச வழியை சுத்தம் செய்ய உதவும்(ventolin 100 mcg).அடுத்தது சுவாசப்பையில் உள்ள சளியை அகற்ற உதவும்(flovent 250mcg).இவற்றை பாவிப்பதால்4-7 நாட்களில் சுகதேகியாகி விடுவீர்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 427
  • Created
  • Last Reply

அல்ஜீரிய துப்பாக்கி நபர்களில் அடங்கியிருந்த இரண்டு கனேடியர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.

 

அல்ஜீரியாவில் இயற்கை வாயு உற்பத்தி நிலையம் ஒன்றில், பணியாளர்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த துப்பாக்கி நபர்களில் கனேடியர்கள் இரண்டு பேரும் இருந்தார்களென அல்ஜீரிய ஊடகம் ஒன்று தெரிவிக்கிறது.

 

 

துப்பாக்கி நபர்களில் கனடா உட்பட்ட வெளிநாட்டவர்கள் சிலர் உள்ளதாக கடந்த வாரம் சில செய்திகள் வெளியாகிருந்தன.


இந்த நிலையில், பயங்கரவாதிகளின் உடல்களில் கனேடியர்கள் இரண்டு பேரின் உடல்களும் இருந்ததாக அல்ஜீரிய தொலைக்காட்சி சேவை ஒன்று தெரிவிக்கிறது. இரண்டு கனேடியர்கள் பயங்கரவாதிகள் மத்தியில் இருந்தார்களெனத் தமக்குத் தெரியுமென அல்ஜீரிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறினார்.

 

இந்த விடயம் குறித்து மேலதிக தகவல்கள் தமக்குத் தெரியாதென கனேடிய அரசு தெரிவித்தது. அது குறித்து அல்ஜீரிய அரசுடன் தொடர்பு கொண்டுள்ளதாக கனேடிய வெளியுறவு அமைச்சுக் குறிப்பிட்டது.

 

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=13532

Link to comment
Share on other sites

ஒன்ரோறியோ லிபரல் கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடும் ஹரிந்தர் தக்கார் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள்!

 

தற்போதைய முதல்வரான றால்டன் மெக்கென்றிக்கு அடுத்தபடியாக ஒன்ரோறியோ லிபரல் கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடுபவர்களில் ஒருவரான ஹரிந்தர் தக்காருக்குச் சொந்தமான தொழிற்சாலை முறைப்படியான பாதுகாப்பு நெறிமுறைகள் எதனையும் பின்பற்றாமல் சட்டபுறம்பாக தொடர்ந்தும் செயல்பட்டு வருவதாக சர்ச்சைகள் எழத் தொடங்கியுள்ளன.

ஒன்ரோறியோ மாகாணத்தில் தனக்குள்ள அரசியல் செல்வாக்கினை பயன்படுத்தியே இது போன்ற பிரச்சினைகளிலிருந்து ஹரிந்தர் தக்கார் தப்பித்து வருவதாகவும் பல குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன

இந்திய மாநிலங்களில் ஒன்றான பஞ்சாபில் சீக்கிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஹரிந்தர் கடந்த 1974 இல் கனடாவிற்கு  இடம் பெயர்ந்தார்.

பொருளாதாரம் மற்றும் அரசவியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருந்த இவர் மிசிசாகாவில் குடும்பத்துடன் வசிந்து வருகிறார்.

ஒன்ரோறியோ நிறுவனங்கள் பலவற்றில் முக்கிய தலைமைப் பொறுப்பினை வகித்து வந்த ஹரிந்தர் 2003 இல் நடைபெற்ற மாகாண சட்டசபைத் தேர்தலில் Mississauga-Erindale தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன் October 23, 2003 அன்று போக்குவரத்து அமைச்சரானார்.

ஒன்ரோறியோ மாகாணத்தில் முதலாவதாக அமைச்சர் பொறுப்பேற்ற இந்திய-கனடியன் இவரே.

மிசிசாகாவில் இயங்கி வரும் ஹரிந்தருக்குச் சொந்தமான CSI Sertapak Inc என்ற தொழிற்சாலை பல குற்றச் செயல்களை புரிந்து வருவதாக பலமுறை ஒன்ரோறியோ தொழிலாளர் நல அமைச்சகம் அறிவித்துள்ள போதிலும் அதனைக் கண்டு கொள்ளாமல் தனது செல்வாக்கினை பயன்படுத்தி மீண்டும் தவறிழைத்து வருகிறார் என தற்போது அடுக்கடுக்காய் குற்றச்சாட்டுக்கள் குவியத் தொடங்கியுள்ளன.

ஏற்கனவே ஹரிந்தர் அமைச்சராக பதவி வகித்த காலகட்டங்களிலும் பதவி விதிமுறைகளுக்குப் புறம்பாக பலமுறை தன் சொந்த நிறுவனப்  பணிகளை கவனிக்கச் சென்றதும் , அதற்க்குச் சாதகமாக செயல்பட்டதும் சர்ச்சையை உண்டாக்கியது.

இது குறித்து  கேள்வி எழுப்பப்பட்ட போது நிருவனத்தில் தலைமைப் பதவி வகிக்கும் தன மனைவியை காணச் சென்றதாகவே கூறி சமாளித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

6176230946e5ad6cab91b25ed3e7-600x400.jpg

 

 

http://www.canadamirror.com/canada/5295.html

Link to comment
Share on other sites

இசையின் சங்கமம்

மாசி 03

மாலை ஐந்து மணிக்கு
மெட்ரோபொலிட்டன் சென்ரர் (கெனடி  அண்ட் பிஞ்ச்)



http://www.youtube.com/watch?feature=player_embedded&v=4rGkbHFIG9c

Link to comment
Share on other sites

சர்ச்சைக்குள்ளான சட்டமூலம் Bill 115 ஐ நீக்கி விட அரசு திட்டம்

 

கடந்த சில மாதங்களாக ஒன்ரோறியோ ஆசிரியர்களுக்கும் , அரசுக்குமிடையே பெரும் பிணக்கினை ஏற்படுத்தி வந்த சர்ச்சைக்குள்ளான சட்டத்தை நீக்கி விட அரசு தீர்மானித்துள்ளது. நேற்று இது தொடர்பான தகவல்கள் வெளியாகியது .


ஆசிரியர்களின் உரிமைகளைப் பறிக்கும் விதத்தில் அரசால் கொண்டு வரப்பட்ட இத்தீர்மானத்தினை தோற்கடிக்கும் வரை ஓயப் போவதில்லை எனப போராடி வந்த பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் நிம்மதிப் பெருமூச்சு விடத் தொடங்கியுள்ளன.

தற்போது தான் ஒன்ரோறியோ அரசு சரியான பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளதாகவும் , எதிர் வரும் வார இறுதி நாட்களில் லிபரல் கட்சியின் புதிய தலைவர் தெரிவு செய்யப்பட்டு புதிய முதல்வர் பொறுப்பேற்றவுடன் ஆசிரியர்களின் ஊதிய இடை நிறுத்தம் உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்துப் பேசி சுமூக முடிவெடுக்கப்படும் எனக் கூறியுள்ளார் ஒன்ரோறியோ இடைநிலைப் பாடசாலைகள் பேரவையின் தலைவர் கென் கோரன்.

 

ஒருவழியாக ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று சர்ச்சைக்குள்ளான சட்டமூலத்தை திரும்பப்பெற அரசு முடிவெடுத்து விட்டதால் இனி மாணவர்கள் அச்சமின்றி பாடசாலைகளுக்கு திரும்பும் சூழல் உண்டாகியுள்ளது.

 

http://ekuruvi.com/bill%20115%20news

Link to comment
Share on other sites

9da2b38f4f16b.jpg
மேயராக ஃபோர்ட் நீடிப்பார்! மேல் முறையீட்டில் வெற்றி!
Jan 25 2013 11:31:57
 

 நகரக் கொள்கைகளுக்கு விரோதமாக செயல்பட்டார் என்ற சர்ச்சையில் நீதிபதியால் பதவி நீக்கம் செய்யப்பட்டார் மேயர் ராப் ஃபோர்ட். இதனைத் தொடர்ந்து மேல் முறையீடு செய்தார் ஃபோர்ட். அதற்கான தீர்ப்பு இன்று வெளியிடப்பட்டது.

ஃபோர்டை நீக்கி தீர்ப்பு அளித்தது தவறு என்றும் ஃபோர்ட் தனக்கென எந்தப் பணத்தையும் பெறாதபோது அதைத் திருப்பிச் செலுத்துமாறு சொன்னது தவறு என்று இன்று தீர்ப்பளித்த மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு தெரிவித்திருக்கிறது. அதனால் ராப் ஃபோர்ட்  மேயராக செயல்பட இனி தடை ஏதுமில்லை. 

‘மிக பிரமாதமாக உணர்கிறேன்’ என்று தீர்ப்பைக் குறித்து ஃபோர்ட் கருத்து தெரிவித்தார். 

‘இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி’ என்று அவரது சகோதரர் டாவ்க் ஃபோர்ட் தெரிவித்தார்.


2010ல் அப்போது நகரசபை உறுப்பினராக இருந்த ஃபோர்ட் நகரசபையின் அதிகாரப்பூர்வ கடிதத்தில் தனது கால்பந்துக் குழுவுக்கு நன்கொடைக் கேட்டு கடிதம் எழுதி 3150 டாலர்கள் பெற்றார் என்பது குற்றச்சாட்டு. இதை விசாரித்த ஆணையர் இது தவறு என்று குறிப்பிட்டு நன்கொடையாக பெற்ற பணத்தை ஃபோர்டிடம் இருந்துத் திரும்பப் பெற வேண்டும் என நகரசபைக்கு சிபாரிசு செய்தார். ஆனால் ஃபோர்ட் அதற்கு உடன்படவில்லை. இந்த சர்ச்சை இந்த வருடம் நகரசபை விவாதத்துக்கு வந்த போது ஃபோர்ட் அது குறித்து சபையில் பேசி வாக்கெடுப்பு நடத்தினார். அந்த வாக்கெடுப்பில் அவரும் கலந்துக் கொண்டு வாக்களித்தார். அந்த வாக்கெடுப்பில் ஃபோர்ட் பணத்தை திருப்பித் தர தேவையில்லை என்று முடிவாகியது. 

இது குறித்து தொடுக்கப்பட்ட வழக்கில் ஃபோர்ட் மேயராக நீடிக்கக் கூடாது என்று சென்ற நவம்பர் மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

http://ekuruvi.com/toronto-mayor-rob-ford-wins-appeal

 

 

police445cfgdf.gif

 

 

15 வயது சிறுவனின் உடல் தோண்டி எடுப்பு! 20 வருடத்துக்கு பிறகு மீண்டும் விசாரணை!
Jan 25 2013 11:27:00
 

 இருபது வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தை - அது கொலையாக இருக்கும் என்று கருதி காவல்துறையினர் மீண்டும் விசாரணையைத் துவக்கியிருகிறார்கள். இதற்காக இறந்த 15வய்து சிறுவனின் உடலை தோண்டி எடுத்திருக்கிறார்கள்.

1992ல் ட்வைன் பிட்டர்சிங் என்ற அந்த சிறுவன் 22வது மாடியிலிருந்த தனது வீட்டு பால்கனியிலிருந்து விழுந்து இறந்தான். அப்போது அது தற்கொலை என்று கருதப்பட்டது. 

ஆனால் 2011ல் இந்த வழக்குக்கு ஒரு திருப்பு முனை நிகழ்ந்தது. 1994ல் ட்வைனின் சகோதரி காணாமல் போனாள். அவள் காணாமல் போன தகவலை குடும்பத்தினர் காவல் துறையினருக்கு தெரிவிக்காமலே இருந்திருக்கிறார்கள். இந்த சூழலில் ஒரு பெட்டியில் பாதி எரிக்கப்பட்ட ஒரு பெண்ணின் உடல் கிடைத்திருக்கிறது. அது யார் என்பதை காவல்துறையினரால் கண்டுபிடிக்க இயலவில்லை. 2011ல் தான் அது சிறுவனின் சகோதரி என்ற உண்மை அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. ஏன் அவள் காணாமல் போனதை தெரிவிக்கவில்லை என்று பெற்றோரிடம் விசாரிக்க சென்ற போது அந்தப் பெண்ணின் நிஜத் தாய் ஜமைக்கா சென்றுவிட்டதும் வளர்ப்பு தாயும் தந்தையும்தான் இவர்களை வளர்த்திருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்திருக்கிறது. இதைத் தொடர்ந்து சிறுவனின் மரணமும் கொலையாக இருக்கலாம் என்று கருதி அவன் உடலை தோண்டி எடுத்திருக்கிறார்கள். 

இந்த சம்பவம் தொடர்பாக தந்தை மீதும் வளர்ப்பு தாய் மீதும் காவல்து றையினர் குற்ற வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.

http://ekuruvi.com/toronto-biddersingh-dwayne

 

 

r-KESEAN-W.gif

 

 

ஒன்பது வயது சிறுவன் சுட்டுக் கொலை! ப்ராம்ப்டன் பயங்கரம்!
Jan 25 2013 11:16:53
 

 வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சிப் பார்த்துக் கொண்டிருந்த ஒன்பது வயது சிறுவன் தலையில் குண்டு பாய்ந்து இறந்தான். இந்த பயங்கர சம்பவம் ப்ராம்ப்டனில் நடந்தது. துப்பாக்கி குண்டு ஜன்னல் வழியே வந்ததாக காவல் துறையினர் தெரிவிக்கிறார்கள்.

இந்த பரிதாபச் சிறுவனின் பெயர் கேசன் வில்லியம்ஸ். புதனன்று அவனது வீட்டில் இந்த துயர சம்பவம் நடந்திருக்கிறது. 

‘இது மிகக் கொடுரமான சம்பவம். ஒரு அப்பாவி சிறுவன் தனது வீட்டில் அமர்ந்திருக்கும்போது சுடப்பட்டிருக்கிறான் என்பதை நம்ப இயலவில்லை. இது குறித்து விசாரணையை மேற்கொண்டிருக்கிறோம்’ என்று காவல் துறை அதிகாரி ஜார்ஜ் கோய்க்கோய்க் சொல்லுகிறார்.

சிறுவனின் மரணத்தால் அவனது சகோதரனும் அன்னையும் நிலை குலைந்து போயிருக்கிறார்கள். ஐந்து மாதங்களுக்கு முன்புதான் அவர்கள் இந்தப் பகுதிக்கு குடி வந்திருக்கிறார்கள். 

‘யாருக்கோ வைத்த குறி சிறுவனை தாக்கியிருக்குமோ என்ற சந்தேகமும் இருக்கிறது.அதனால் இந்த வீட்டில் முன்பு குடியிருந்தவர்கள் குறித்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது’ என்கிறார் ஜார்ஜ்.

இந்தக் கொலை குறித்து அந்தப் பகுதியை சார்ந்த நூற்றுக் கணக்கானவர்களிடம் காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
Link to comment
Share on other sites

மேயராக ஃபோர்ட் நீடிப்பார்! மேல் முறையீட்டில் வெற்றி!

Jan 25 2013 11:31:57
 

 நகரக் கொள்கைகளுக்கு விரோதமாக செயல்பட்டார் என்ற சர்ச்சையில் நீதிபதியால் பதவி நீக்கம் செய்யப்பட்டார் மேயர் ராப் ஃபோர்ட். இதனைத் தொடர்ந்து மேல் முறையீடு செய்தார் ஃபோர்ட். அதற்கான தீர்ப்பு இன்று வெளியிடப்பட்டது.

 

 

இரண்டு பக்கங்களும் இணைந்து தாம் எதற்காக தேர்ந்து எடுக்கப்பட்டார்களோ அந்த வேலைகளை கவனிக்கலாம்!

Link to comment
Share on other sites

நெடுஞ்ச்சாலையின் டொராண்டோவின் கிழக்கு பகுதியான க்ளரிங்டனில் பாரிய விபத்து

 

ஏற்பட்ட பனிபொழிவினால் அறுபதிற்கும்மேற்பட்ட வாகனங்கள் மோதுப்பட்டு இருபக்கங்களும் பிரயாணம் தடைப்பட்டது.

ஒருவரும் இறக்கவில்லை. ஐந்து பேர் அளவில் காயங்களுக்கு உள்ளானார்கள்.

 

dd2d282f4d3889734c85c5debc32.jpg



Giant pileup shuts down Highway 401 westbound in Clarington

 

http://www.thestar.com/news/gta/article/1320199--giant-pileup-shuts-down-highway-401-westbound-in-clarington

Link to comment
Share on other sites

ஒன்ராறியோ மாநில ஆளும் கட்சியின் தலைவராக முதன் முறையாக பெண் ஒருவர் தேர்ந்து எடுக்கப்படவுள்ளார்.

 

கத்தலின் வின் என்ற அமைச்சர் இன்று நடந்த அந்த கட்சியின் தலைவர் தேர்வில் வென்றுள்ளார். இந்த கட்சியே ஆட்சியில் உள்ளதால் இவர் கனடாவின் பெரிய மாநில முதலவரும் ஆகின்றார்.மேலும் இவர் ஓரின சேர்க்கையையும் கொண்டவராவர்.

 

619e1ff54d55a722f2b3cb744d79.jpg

 

 



http://www.thestar.com/news/canada/politics/article/1320524--ontario-liberal-leadership-convention-sandra-pupatello-retains-slight-lead-over-kathleen-wynne-on-second-ballot

Link to comment
Share on other sites

ஒன்ராறியோ மாநில ஆளும் கட்சியின் தலைவராக முதன் முறையாக பெண் ஒருவர் தேர்ந்து எடுக்கப்படவுள்ளார்.

 

கத்தலின் வின் என்ற அமைச்சர் இன்று நடந்த அந்த கட்சியின் தலைவர் தேர்வில் வென்றுள்ளார். இந்த கட்சியே ஆட்சியில் உள்ளதால் இவர் கனடாவின் பெரிய மாநில முதலவரும் ஆகின்றார்.மேலும் இவர் ஓரின சேர்க்கையையும் கொண்டவராவர்.

 

 

http://www.thestar.com/news/canada/politics/article/1320524--ontario-liberal-leadership-convention-sandra-pupatello-retains-slight-lead-over-kathleen-wynne-on-second-ballot

 

 

கனடா-ஓன்ராரியோ மாகாண முதல்வரை தெரிவு செய்வதில் முக்கிய பங்கு வதிக்கும் கனடியத் தமிழர்கள்

 

இவ்வார இறுதியில் நடைபெறவுள்ள ஒன்ராரியோ ஆளும் லிபரல் கட்சிக்கான அடுத்த தலைவர் மற்;றும் அடுத்த ஒன்ராரியோ முதல்வரை தெரிவு செய்யும் தேர்தல் இவ்வார இறுதியில் ரொரன்ரோ மாநகரின் மத்தியில் அமைந்துள்ள புகழ்வாய்ந்த பழைய மேப்பல் லீவ் திடலில் நடைபெறவுள்ளது.

 

இத் தேர்தலுக்காக ஒன்ராரியோ முழுமையாக தெரிவு செய்யப்பட்ட 1800 தெரிவு செய்யப்பட்ட பேராளர்கள் கூடுகின்றனர். இதில் 60 தமிழர்கள் கனடியத் தமிழர் சமூகம் சாப்பாக போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்டு தமிழர் சமுகப்பிரதிநிதிகளாக கலந்து கொள்கின்றனர்.

 

இதில் பெரும்பான்மையானவர்கள் எந்தவொரு தலைமை வேட்பாளர் சார்புமின்றி சுயேற்சையாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை தமிழர் சமூகத்தை நோக்கி அனைத்து முதன்மை வேட்பாளர்களையும் படையெடுக்க வைத்துள்ளதாக கட்சிவட்டாரங்கள் தெரிவித்தன.

 

தனியாக தமது நலனை முன்னிறுத்தாது தமது தமிழ் சமூக நலனை முதன்மைப்படுத்திய தமிழர்களின் இன் நகர்வு பல சமூகங்களால் பெரிதும் அக்கறையுடன் நோக்கப்படுவதாக மூத்த அரசியல் அவதானி ஒருவர் தெரிவித்தார்.

தமிழர்கள் சிலர் உதிரிகளாக தெரிவு செய்யப்பட்டாலும், தமிழர் குழுவின் ஒன்று பட்ட வலிமை தமிழர் நலன்களை நோக்கி அவர்களை நகர்த்தும் என மேலும் அவர் தெரிவித்தார். தமிழர்களைப் போன்றோ ஒரு பெரும் வலிமைவாய்ந்த சமூகமாக சீக்கிய சமுகமும் தன்னை வெளிப்படுத்தியுள்ளது என்பதும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.

கதலீன் வேயின், சான்ரா பூப்பற்றலோ, Nஐராட் கெனடி ஆகியோரில் ஒருவருக்கே வெற்றி வாய்பு என்ற நிலையில் போட்டியிடும் பெண்களில் ஒருவர் தெரிவு செய்யப்பட்டால் ஒன்ராரியோ மாநிலத்தின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமை அவரைச் சாரும்.

 

http://naamthamilar.ca/?p=37274.html

Link to comment
Share on other sites

யார் தெரிவு செய்யப்பட்டாலும் வரும் மாகாணத் தேர்தலில் லிபரல் தோற்கவே சந்தர்ப்பம் இருக்கின்றது. அவ்வளவிற்கு டால்ரனின்ஆப்பு மக்களிற்கு வலிகொடுத்திருக்கின்றது.

 

வேண்டுமென்றால் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து விட்டுப்போக வேண்டியது தான்..

 

மற்றது தமிழர் ஒற்றுமை? ...வீண் கனவு...

Link to comment
Share on other sites

யார் தெரிவு செய்யப்பட்டாலும் வரும் மாகாணத் தேர்தலில் லிபரல் தோற்கவே சந்தர்ப்பம் இருக்கின்றது. அவ்வளவிற்கு டால்ரனின்ஆப்பு மக்களிற்கு வலிகொடுத்திருக்கின்றது.

 

வேண்டுமென்றால் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து விட்டுப்போக வேண்டியது தான்..

 

மற்றது தமிழர் ஒற்றுமை? ...வீண் கனவு...

 

 மூன்று கட்சிகளும் பெரும்பான்மை பெறும் நிலையில் இல்லை. எனவே லிபரல் தொடர்ந்தும் என்.டி.பி. ஆதரவுடன் ஆளும் சாத்தியங்கள் அதிகம்.

Link to comment
Share on other sites

சவால்களைச் சமாளிப்பாரா காத்லீன் வய்னே?

 

லிபரல் கட்சியின் தலைமைப் பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காத்லீன் வய்னேவிற்கு காத்திருக்கும் சவால்கள் அத்துணை எளிதானதல்ல. லிபரல் கட்யின் தலைவர் பதவிக்கான தர்தல் முடிவடைந்து அதிகாரபூர்வமாக தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள காத்லீன் சாதரமானவரும் அல்ல. 59 வயதாகும் இவர் கனடிய அரசியலில் நன்கு அனுபவம் பெற்றவர். பழுத்த அரசியல்வாதி என்றும் சொல்லலாம்.


தலைவர் பதவிப்  போட்டிக்காக பதவி விலகும் வரையிலும் Municipal Affairs and Housing மற்றும்  Aboriginal Affairs உள்ளிட்ட முக்கியத் துறைகளின் அமைச்சகப் பொறுப்புக்களையும் வகித்தவர். ஓரினச் சேர்க்கையாளராக ஒன்ரோறியோ மக்களிடத்தில் நன்கு அறிமுகமானவர். ஒன்றோரியோவின் முதல்வராக  காத்லீன் பொறுப்பேற்ற பின்னர் முதல் பெண் முதவி என்ற பெருமையையும் பெறுவார்.

இது ஒருபுறமிருக்க மக்கென்றிக்குப் பின்னர் முதல்வர் பொறுப்பேற்கும் காத்லீனால் தனக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்களை திறம்பட சமாளிக்க முடியுமா என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.

 

ஏனெனில்  இதற்கு முன்னர் முதல்வராக கடந்த ஒன்பதாண்டு காலம் பணியாற்றிய மக்கென்றி ஒன்றோரியோவின்  கல்வித் துறைக்கு செய்த தியாகங்கள் ஏராளம். இருப்பினும் இறுதியில்  நாட்டின் கடன் சுமையைக் குறைக்க அரசின் சட்டமூலங்களில் பல கெடுபிடிகளை கொண்டு வர முனைந்ததும்,  சிறுபான்மை அரசாக இருந்ததால் பிற கட்சியினரின் தயவின்றி எந்த முடிவையும் தன்னால் எடுக்க முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டதுமே மக்கென்றிக்கு பெரும் சவாலாக உருவெடுத்தது.

 

இது போன்ற பல பிரச்சினைகளுக்குப் பின்னரே வெறுப்படைந்து தலைவர் பதவியைத் துறக்கத தீர்மானித்தார் றால்டன் மக்கென்றி. தற்போது புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காத்லீன் வய்னேவிற்கும் இதே சவால்கள் காத்துக் கொண்டிருக்கின்றன.


முதலில் ஆசிரியர்களுக்கும் அரசுக்குமான பிணக்குகளை சிக்கலின்றி களைய வேண்டும்.

 

இரண்டாவதாக ஒன்ரோறியோ பொது ஊழியர்கள் அனைவருக்கும் பாதமில்லாத வகையிலான முடிவையே அரசு எடுக்க வேண்டும் அதே நேரத்தில் நாட்டின் கடன் சுமையைக் குறைக்க வேண்டும்.

 

  இதற்காக கொண்டு வரப்படும் எந்தவொரு சட்டமூலத்தினையும் எதிர்க் கட்சியினரின் துணையின்றி நிறைவேற்றவும் முடியாத சிக்கலான சூழ்நிலையிலேயே காத்லீன் மாட்டிக் கொண்டுள்ளார். இவரின் சாமர்த்தியம் ஒன்ரோறியோ மக்களிடம் செல்லுபடியாகுமா என்பதை பொறுத்திருந்து தான்  பார்க்க வேண்டும்.

 

http://ekuruvi.com/Premier%20designate%20Kathleen%20Wynne

Link to comment
Share on other sites

சவால்களைச் சமாளிப்பாரா காத்லீன் வய்னே?

http://ekuruvi.com/Premier%20designate%20Kathleen%20Wynne

 

ஈகுருவிக்கு உள்ளமாதிரி எங்களுக்கும் கேள்விக்குறியாத்தான் இருக்கு.. :D "வின்" என்று வரவேணும்.. :rolleyes:

Link to comment
Share on other sites

ஈகுருவிக்கு உள்ளமாதிரி எங்களுக்கும் கேள்விக்குறியாத்தான் இருக்கு.. :D "வின்" என்று வரவேணும்.. :rolleyes:

 

 பிரெஞ்சு மொழி பெயர் என எண்ணியிருக்கலாம்  :D

Link to comment
Share on other sites

குடிபோதையில் கார் ஓட்டிய பெண் கனடிய கவுன்சிலருக்கு $1,000 அபராதம்., டிரைவிங் லைசென்ஸ் 1 வருடத்திற்கு ரத்து!

 

கனடாவில் குடிபோதையில் கார் ஓட்டிய பெண் கவுன்சிலருக்கு $1,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. அதோடு அவருடைய டிரைவிங் லைசென்ஸ் ஒரு வருடத்திற்கு ரத்து செய்வதாக நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது.


கனடாவின் டொரண்டோ நகரில் உள்ள பெண் கவுன்சிலர் Ana Bailao குடிபோதையில் கார் ஓட்டியதாக கைது செய்யப்பட்டார். திங்கட்கிழமை காலையில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்ப்பட்ட கவுன்சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில் குடிபோதையில் கார் ஓட்டியதை அவர் ஒப்புக்கொண்டதால், அவருக்கு $1,000 அபராதம் விதித்ததோடு, ஒரு வருடத்திற்கு அவருடைய லைசென்ஸை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். இது அவருக்கு கொடுக்கப்பட்ட இரண்டாவது தண்டனையாகும். ஏற்கனவெ அவர் ஒருமுறை இதுபோன்று தண்டனை பெற்றுள்ளார்.

ஆனாலும் Ana Bailao அவர்கள் தனது கவுன்சிலர் பணியை திறம்பட இதுவரை செய்துவந்த காரணத்தால், அவர் தன்னுடைய பணியில் நீடிக்கலாம் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார். தீர்ப்பை கேட்டது கவுன்சிலர் Ana Bailao நீதிமன்ற வளாகத்திலேயே கண்ணீர் வடித்தார்.

 

http://ekuruvi.com/drink%20and%20drive%20council

Link to comment
Share on other sites

மார்க்கம் தேசிய ஹாக்கி விளையாட்டரங்கத் திட்ட அமைப்புப் படத்திற்கு நகரசபை அங்கீகாரம்

 

நீண்ட நாட்களாக அனைவராலும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கபப்ட்ட மார்க்கம் தேசிய விளையாட்டரங்கத் திட்டத்தின் அமைப்புப் படத்திற்கு நேற்று நகரசபை ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பான விவாதமும் ஓட்டெடுப்பும் மார்க்கம் நகரசபையில் செவ்வாய்கிழமையன்று இரவு துவங்கியது. அண்ணளவாக 9 மணி நேரங்கள் நடைபெற்ற மாநகராட்சில் கூட்டத்தில் நகர சபைத் தலைவர்கள் மட்டுமன்றி 600 க்கும் மேற்பட்ட பொது மக்களும், மார்க்கம் நகரில் வசிப்போருக்கான பிரதிநிதி குழுக்கள், பல்வேறு சமூகப பிரதிநிதிகள், தொழிற் துறையினர், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு சேவை நிறுவனங்கள் உள்ளிட்ட சமூக அக்கறை கொண்ட பல சிறப்பு குழுக்களும் பங்கேற்றன,

 

http://ekuruvi.com/markham%20jan%2030%20news



Mayor Frank Scarpitti along with Regional Councillor Gordon Landon and councillors Howard Shore, Carolina Moretti, Alan Ho, Alex Chiu and Logan Kanapathi voted against a motion that would have rescinded the controversial financial framework that sees the city borrow $325 million, half of which is to be paid back by the private sector while the city recovers its share through various means, including special charges on new development.


Mr. Kanapathi’s vote came as a surprise to some as he made statements suggesting he was against the financial framework.

 

http://www.yorkregion.com/news-story/1936659-nhl-arena-survives-key-votes/

Link to comment
Share on other sites

கிரீஸைப் பார்த்து பாடம் கற்றுக் கொள்ளாவிட்டால் நொடித்துப் போகுமாம் ஒன்ரோறியோ!

 

கடன் சுமையைக் குறைக்க உடனடியாக போர்க்கால ரீதியில் செயல்படாவிட்டால் ஒன்ரோறியோ கடனில் தத்தளித்து நொடித்துப் போக வேண்டிய சூழ்நிலை விரைவில் ஏற்படக் கூடும் என எச்சரித்துள்ளது  ப்ரசெர் நிறுவனம்.

உண்மையான நிலவரம் என்னவெனில் கடனில் தத்தளித்து நொடிக்கும் நிலைக்குச் சென்ற கலிபோர்னியாவைக் காட்டிலும் தற்போது ஒன்றோரியோவின் கடன் சுமை மிக அதிகமாக உள்ளது எனக் கூறுகிறது  இந்நிறுவனத்தின் ஆய்வு.

2010-11 கால கட்டங்களில் கலிபோர்னியாவின் கடன் சுமை $143.9 பில்லியனாக இருந்ததையும் , அதே கால கட்டத்தில் ஒன்றோரியோவின் கடன் சுமை $236.6 பில்லியன் என்பதும் ஆய்வில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதே நிலை நீடிக்குமானால் 2019-20 ஆம் ஆண்டு வாக்கில் நாட்டின் கடன் சுமை மிக அதிகரித்து உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 66% அளவிற்கான பாதிப்புக்களை ஏற்படுத்தி விடும் என்றும் தெரிகிறது.

இப்படியொரு நிலைக்கு வந்த பின்னர் மீளவே முடியாது எனவும் எச்சரிக்கின்றனர் பொருளாதார வல்லுனர்கள். இப்போதே கிரீஸ் நாட்டைப் பார்த்து பாடம் கற்றுக் கொண்டு கல்விக்கும் , சுகாதார நலப் பணித் திட்டங்களுக்கும் செலவிடும் தொகையை அரசு குறைத்துக் கொள்ள வேண்டும் எனவும்  அறிவுறுத்துகின்றனர் வல்லுனர்கள்.

 

http://ekuruvi.com/debt%20worse%20than%20California

Link to comment
Share on other sites

கனடா-ஓன்ராரியோ மாகாண முதல்வரை தெரிவு செய்வதில் முக்கிய பங்கு வதிக்கும் கனடியத் தமிழர்கள்

 

இவ்வார இறுதியில் நடைபெறவுள்ள ஒன்ராரியோ ஆளும் லிபரல் கட்சிக்கான அடுத்த தலைவர் மற்;றும் அடுத்த ஒன்ராரியோ முதல்வரை தெரிவு செய்யும் தேர்தல் இவ்வார இறுதியில் ரொரன்ரோ மாநகரின் மத்தியில் அமைந்துள்ள புகழ்வாய்ந்த பழைய மேப்பல் லீவ் திடலில் நடைபெறவுள்ளது.

 

18611_512032738841315_1305694339_n.jpg

549817_512032848841304_33883184_n.jpg

Link to comment
Share on other sites

தேர்தலில் அளவுக்கதிகமாய் செலவழித்துள்ளார் போர்ட் " - தணிக்கை முடிவுகளுக்குப் பின் புதிய குற்றச்சாட்டு!!

 

கடந்த ஒரு வருட காலமும் மாநகர முதல்வர் போர்ட்டுக்கு போதாத காலம் என்று தான் கூற வேண்டும். தொடர்ந்து அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்களையே சந்தித்து வருகிறார். நீதிமன்ற மேல் முறையீட்டுத் தீர்ப்பு சாதகமாய் அமைந்து மீண்டும் மாநகர முதல்வர் நாற்காலியில் அமர்ந்துள்ள அவர் மீது கடந்த மாநகரத் தேர்தலின் போது அளவுக்கதிகமாய் செலவழித்துள்ளார் என புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


நேற்று நடைபெற்ற கணக்குத் தணிக்கைக்குப் பின் வெளியான முடிவுகளில் சட்டப்புறம்பாக தேர்தலுக்கு அதிகப்படியான தொகையை போர்ட் செலவழித்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் மீண்டும் அவர் மீது நடவடிக்கைகள் பாயப் போவது உறுதி.

நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதே தற்போது அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. ஒன்று சட்ட விரோதமாக செயல்பட்டமைக்கான அபராதம் செலுத்துவது அல்லது மீண்டும் மாநகர முதல்வர் பதவியிலிருந்து அகற்றப்படுவது.

சமீபத்திலேயே போர்ட் தன் மீதான வழக்குகளுக்காக் நீதிமன்றம் வரையிலும் சென்று போர்ட் அலைய நேரிட்டதால் மீண்டும் பதவிக்குப் பங்கம் நேராது என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

 

http://ekuruvi.com/mayor_rob_ford_broke_

Link to comment
Share on other sites

ஒரு சதத்தின் இறுதிநாள் : Feb 04, 2013



rounding2-e.jpg



penny-rounding-example_e.jpg

Link to comment
Share on other sites

மார்க்கம் விருந்தினர் மாளிகையில் சட்டபுறம்பான சூதாட்டம் ; போலிஸ் அதிரடி சோதனை - 6 பேர் கைது

 

பல மில்லியன் டொலர்கள் முதலீட்டில் சட்டத்திற்கு புறம்பான சூதாட்ட நிறுவனமொன்று மார்க்கம் விருந்தினர் மாளிகையில் இயங்கி வந்த விடயம் நேற்று காவல்துறை நடத்திய அதிரடி சோதனையில் அம்பலமாகியுள்ளது.


திட்டமிட்டு  குற்றச்செயல்களை புரிந்து வரும் சதிகாரர்களே இந்த நிறுவனத்தை நடத்தி வந்தது கண்டறியப்பட்டுள்ளதால் உடனடியாக நிருவனத்தின் இணையதளம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் முடக்கபப்ட்டுள்ளன.

இந்த நிறுவனம் சார்பில் நடத்தப்படவிருந்த சூதாட்ட நிகழ்விற்காக நேற்றும் 2,300 பேர்  அழைக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.


PlatinumSB என்ற ஒன்லைன் சூதாட்ட நிறுவனமே இந்த குற்றங்களுக்கு துணை போவது தெரிய வந்துள்ளதால் குற்றமிழைத்ததாகக் கருதப்படும் 6 பேரை காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே கைது செய்தனர்.

 

http://ekuruvi.com/Police%20arrest%206%20in%20illegal%20gambling

 

 

Link to comment
Share on other sites

கத்தோலிக்க மதப் போதனைகளை மாணவர்கள் மீது திணிக்கக் கூடாது - நீதிமன்றில் பெற்றோர்கள் வாதம்!


Feb 04 2013 09:53:13
கனடாவில் உள்ள கத்தோலிக்கப் பாடசாலைகளில் காலங்காலமாக நடந்து வரும் பிரச்சினை தான் இது. ரொறொன்ரோ கத்தோலிக்க பாடசாலைகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு சமயப் போதனைகளை கட்டாயமாக பயில வேண்டும் வற்புறுத்தப்படுகின்றனர் மாணவர்கள். இந்த முறை பெரும்பான்மையான பெற்றோர்களுக்கு பிடிப்பதில்லை.


கனடா போன்ற பல் கலாச்சார நாடுகளில் அனைத்து  சமுதாயத்தினரின் உணர்வுகளையும் மதித்து நடக்க பாடசாலைகள் பழகிக் கொள்ள வேண்டும் என்கின்றனர் பெற்றோர்கள்.  எங்களுக்கென தனியாக ஒரு மதமும் , வழிபாட்டு முறைகளும் இருக்கும் போது கத்தோலிக்க மதம் தொடர்பான பாடங்களை பாடசாலைகளில் கட்டயமாக்குவது எந்த நிலையிலும் சரியானதல்ல என்பதே பெற்றோர்களின் வாதம்.

இதற்காக ப்ரோம்டனைச் சேர்ந்த தந்தை ஒருவர் நீதிமன்றம் வரை சென்று கத்தோலிக்கப் பாடசாலைகளில் பயின்று வரும் தன்னுடைய மகன்கள் இருவர் சமய வகுப்புக்களுக்கு செல்ல கட்டாயமாக்கப்படுவதற்கு எதிராக தற்காலிகத் தடை பெற்றுள்ளார். இருப்பினும் நீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படுமா என்பது புரியாத புதிராகவே உள்ளது.

இவர் மட்டுமல்ல, நாடு முழுவதுமுள்ள கத்தோலிக்க பாடசாலைகளில் பயின்று வரும் பிற மதங்களைச் சேர்ந்த பெற்றோர்கள் வைக்கும் முக்கிய கோரிக்கை இது தான்.

 

தீர்வு காண முயலுமா கத்தோலிக்க பாடசாலைகள் அமைப்பு?

 

http://ekuruvi.com/Ontario%20parents%20fighting

Link to comment
Share on other sites

 - ஒரு பாடசலை மாணவரின் செலவு 10000CAD

- கத்தோலிக்க பாடசாலைகள் நல்ல பழக்கவழக்கத்தை கொண்டன, காரணம் ?
- அவர்கள் மாணவர்களை நீக்குவதால்
- அப்படி நீக்கப்படுபவர்கள் உட்பட யாவரையும் பொது பாடசாலைகள் ஏற்கும்

 

- கத்தோலிக்க பாடசாலையில் சேர மாணவர் இல்லை ஒரு பெற்றோர் ஞாநச்துவம் பெற்றவராக இருக்கவேண்டும்
- ஆனால் நாடு நிலை இல்லை உயர் நிலை படசாலைக்கு எந்த மதத்தவரும் சேரலாம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடன்.  ஏன் பெற்றீர்கள். ???.    அந்த பணத்தை என்ன செய்தீரகள்.??    வருமானம் வாராதா. துறைகளில்.  பணத்தை முதலீடக்கூடாது     போர் ஒரு வருமானம் தாராதா துறை  அதுவும் சொந்த நாட்டில் சொந்த குடி மக்களுடன்   போரிடுவது   கடன் பெற்று போரிடுவது    மூட்டாள்தனமாகும்    போர் வெற்றியா  ?? இல்லை தோல்வியா??    தோல்வி தான்   அதை முதல் வெளிப்பாடாய் சொல்லுங்கள்   இந்த போர்  நாட்டை வங்குரோத்து அடைய செய்துள்ளது     ஆட்சி மாற்றத்தை செய்துள்ளது    இன்னும் என்ன செய்யுமோ ?? தெரியாது    ஆனால்  போரின் தாக்கம் வரும் 50 ஆண்டுகளுக்கு தொடரும்    புலிகள் இல்லை அவர்களின் போர்  தாக்கத்தை கொடுத்து கொண்டிருக்கும்    உங்கள் அனுபவம் வாழ்க. 🙏
    • தண்ணி பைப் சின்னத்தில் ஒரு சுயேட்ச்சைக் குழு இருக்காம் யாருக்காவது தொpயுமா
    • வரவர நீங்களும் கமல்ஹாசன் மாதிரி (பேச) எழுதத் தொடங்கிட்டீங்கள். 75 வருடங்களாக மாறாதது..?  ஒருவேளை உங்கள் எழுத்தை மாற்றிப் பாருங்களேன் ரசோதரன்.
    • இருக்கிறது. முஸ்லீம் நாடுகளில்  அடக்குமுறை இருக்கிறது.   மேற்குலகம்  தங்களால் முடிந்த அளவில் ஏதோ செய்கிறார்கள். சில அமைப்புகள் கூட குரல் கொடுக்கின்றன.  மதங்களை வைத்து சட்டங்களை உருவாக்கி பெண்களை அடிமைப் படுத்தும்   நாடுகளுக்குள் போய் நின்று கொண்டு குரல் எழுப்ப முடியாது. குரல்வளையை அறுத்துப் போட்டுவிடுவார்கள். ஆப்கானிஸ்தான், ஈரான், சிரியா…  போன்ற நாடுகளில் யேர்மனிய  பெண் நிருபர்கள் கூட தலையில் துணி கொண்டு மூடிக் கொண்டே செய்திகளை பகிர்ந்து கொள்வதை நான் பார்த்திருக்கின்றேன்.  சில காலங்களுக்கு முன்னர் துருக்கியில் நடந்த சந்திப்பொன்றில் ஐரோப்பிய பாராளுமன்ற ஜனாதிபதி ஊர்சுலா பொன் டெயார் லேயரை (Ursula von der Leyer) தனக்கு சரிசமமாக இருக்க அனுமதிக்காமல் தூரமாக ஷோபா ஒன்றில் அமர வைத்த துருக்கி அதிபர் ஏர்டோகான்(Erdogan) சம்பவத்தை நீங்களும் பார்த்திருப்பீர்கள். ஒரு சில நாட்களுக்கு முன்னர், ‘ஆப்ஹானிஸ்தானில் பெண்களின் திருமண வயது 9” என தமிழ்சிறிகூட செய்தி ஒன்றை இணைத்திருந்தார். ஆக பெண்களுக்கான அடக்குமுறை வீட்டுக்குள் நடந்தாலும், நாடுகளில் நடந்தாலும் அவைகளை அறியும் பட்சத்தில் மேற்குலகம் மட்டுமல்ல  நாங்களும் பேசுகின்றோம்.  
    • இதுக்கிள்ளை  தேனும் பாலும்  ஓடுமாமே..5 வருசத்திலை வீட்டுக்கு ஒரு கார்...ஒன்று மட்டும் உண்மை..முழு மூஞ்சையில் அடிவாங்கப்போவது நம் இனமே...உள்ள கோவணத்தையும் இழந்து நாடோடிகளய் திரிய வேண்டியதுதான்...அகதி அந்த்தஸ்தும் கிடைக்காது..
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.