Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்கள் மட்டும் காணாமல் போன இலங்கையில் தற்போது சிங்கள, முஸ்லீம் மக்களும் காணாமல் போகின்றனர்!

Featured Replies

தமிழர்கள் மட்டும் காணாமல் போன இலங்கையில் தற்போது சிங்கள, முஸ்லீம் மக்களும் காணாமல் போகின்றனர்! - The Economist

இலங்கையில் தற்போது காணாமல் போவோர் பட்டியலில் சிங்கள மற்றும் முஸ்லீம் மக்கள் கூட இடம்பெறுவதாக பிரித்தானியாவை தளமாகக் கொண்டு வெளிவரும் The Economist சஞ்சிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடபகுதியில் கடந்த டிசம்பர் மாதம் 09ஆம் திகதி அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜா மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் போன சம்பவமானது அங்கு வாழ்வோர் ஆபத்தில் இருப்பதையே குறித்து நிற்பதாக இச்சஞ்சிகை சுட்டிக்காட்டியுள்ளது. இவ்விகாரம் தொடர்பில் இச்சஞ்சிகையில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கியமான விடயங்களை இங்கே தொகுத்துத் தருகின்றோம்.

கொழும்பில் கடந்த 09ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 'காணாமல் போன அரசியல் செயற்பாட்டாளர்களை சிறிலங்கா அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும், வடபகுதியில் கைது செய்யப்படும் சம்பவங்கள் உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும், போர் இடம்பெற்ற வலயங்களிலிருந்து படைத்தரப்பினரை வெளியேற்ற வேண்டும்' என கோரிக்கை விடுத்திருந்த போதிலும், அதற்கு எதிர்மாறான சம்பவங்களே இடம்பெற்று வருகின்றன.

இலங்கையில் இடம்பெற்ற போரில் காணாமல் போன தமிழ் மக்கள் தொடர்பில் வீரராஜா மற்றும் முருகானந்தன் ஆகிய இருவரும் கடந்த சில மாதங்களாகப் பரப்புரைகளை மேற்கொணண்டு வந்தனர்.

காணாமல் போன தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது சிறிலங்கா படைத்தரப்பினரால் தடுத்து வைக்கப்பட்டவர்கள்.

யாழ்ப்பாணத்தில் காணாமல் போன வீரராஜா மற்றும் முருகானந்தன் ஆகிய இருவரும் உந்துருளியில் சென்ற ஆயுததாரிகளால் கடத்தப்பட்டு, பின்னர் வெள்ளை வானில் கொண்டு செல்லப்பட்டனர்.

இக்கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் சிறிலங்கா படைத்தரப்பினரே இருப்பதாக முக்கிய அரசியல் செயற்பாட்டாளரான உதுல் பிரேமரட்ன தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் சாட்சியங்கள் உள்ள போதிலும், இவ்வழக்கை தொடர்ந்து முன்னெடுப்பதற்கான போதிய சாட்சியங்கள் தம்மிடம் இல்லை என சிறிலங்கா பொலிஸார் கூறியுள்ளனர்.

சிறிலங்கா அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு கடத்தல்கள், காணாமல் போதல்கள் மற்றும் தடுத்து வைத்தல் தொடர்பில் பெரும் எண்ணிக்கையிலான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கடந்த டிசம்பர் மாதம் வெளியிட்ட தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இச்சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு, தொடர்புடையவர்களை நீதியின் முன்னிறுத்துமாறு சிறிலங்கா அரசாங்கத்தை நல்லிணக்க ஆணைக்குழு கோரியுள்ளது.

இலங்கையில் தற்போது சிங்கள மற்றும் முஸ்லீம் மக்கள் கூட காணாமல் போகின்றனர். இவ்வாறு காணாமல் போன சிலர் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த 03ஆம் திகதி நள்ளிரவு கடத்தப்பட்ட சிங்களவரான 25 வயதுடைய டினேஸ் புத்திகா சரித்தானந்தா மறுநாள் காலை கொழும்பு புறநகர்ப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.

முஸ்லீம் சோதிடரான முகமட் நியாஸ் என்பவர் கடந்த ஒக்ரோபர் மாதம் ஆயுததாரிகளால் வெள்ளை வானில் கடத்தப்படடு, மூன்று வாரங்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டார்.

இத்தகைய சம்பவங்கள் சிறிலங்கா பொலிஸாருக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ தெரிந்த வகையில் இடம்பெறுவதாகவும், இச்சம்பவங்களில் சிறிலங்கா பொலிஸாரின் ஒப்புதல் உள்ளதாகவும் ஆசிய மனிதவுரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் காணாமல் போன லலித் குமார் வீரராஜா மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் குறித்து அவர்களின் பெற்றோர்கள் ஐக்கிய நாடுகள் சபைக்கு மனுவொன்றை அனுப்பியுள்ளனர்.

இம்மனு ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இத்தகைய காணாமல் போகும் சம்பவங்கள் தொடர்பாக உள்ளுர் அதிகாரிகளிடமிருந்து உரிய தீர்வு கிடைக்காத காரணத்தினாலேயே பாதிக்கப்பட்ட குடும்பத்தவர்கள் சர்வதேச அமைப்பை நாடியுள்ளதாக உதுல் பிரேமரட்ன குறிப்பிட்டுள்ளார்.

தன்னைப் பற்றிய தகவல்களையும் தயாராக வைத்திருங்கள், கடத்தப்படுபவர்களில் தான் அடுத்ததாக இருக்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்' என இக்கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=3d5db937-f1ce-41b4-bf12-fa38e1e43fa3

  • கருத்துக்கள உறவுகள்

எண்ணையின் சுவையில் ருசி கண்ட நாயானது, எங்கிருந்தாலும் அதை, நக்கத் தான் செய்யும்!

அது செக்காக இருந்தாலென்ன, அல்லது சிவலிங்கமாக இருந்தாலென்ன!

நாய்க்குத் தேவை எண்ணை மட்டுமே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.