Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மேர்வின் சில்வா பொலிஸ் மாஅதிபரிடம் முறைப்பாடு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Mervin.jpg

பொதுசன உறவுகள் அமைச்சர் மேர்வின் சில்வா பொலிஸ் மாஅதிபரிடம் முறைப்பாடொன்றை சமர்ப்பித்துள்ளார். அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கும் களனி பிரதேச சபையின் உறுப்பினர்கள் சிலருக்கும் இடையில் தோன்றியுள்ள கருத்து முரண்பாடுகள் தொடர்பிலான விடயங்கள் முறைப்பாட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

அமைச்சர் மேர்வின் சில்வாவுடன் கருத்து முரண்பாடுகளைக் கொண்டுள்ள களனி பிரதேச சபையின் உறுப்பினர்கள் சிலராலும் அண்மையில் பொலிஸ் மாஅதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

களனி தொகுதியில் கடந்த காலத்தில் இடம்பெற்ற கப்பம் கோரல் அச்சுறுத்தல் உள்ளிட்ட தன்னிச்சையான செயற்பாடுகள் குறித்து அந்த முறைப்பாட்டின் மூலம் பிரதேச சபை உறுப்பினர்கள் பொலிஸ் மாஅதிபரை தெளிவு படுத்தியிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

பொலிஸ் மாஅதிபருக்கு மாத்திரமன்றி பாதுகாப்பு அமைச்சுக்கும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கும் இந்த முறைப்பாட்டினை சமர்ப்பித்துள்ளதாக களனி பிரதேச சபை உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலைமையின் கீழ் இருதரப்பு முறைப்பாடுகள் தொடர்பாகவும் பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

http://www.saritham.com/?p=47839

அடுத்தவன் சொத்தைப் பறிப்பது சிங்கள பௌத்த தர்மத்தின் பிரதான நடைமுறைகளில் ஒன்று!

சில வாரங்களுக்கு முன்னர் இந்த 'அரசியல்வாதி' ஐ,தே.க. கட்சியின் உள்பூசலில் குளிர்காய்ந்தவர், அதை பரிகாசமாக பேசி தன்னை அணுகினால் குழப்பம் விளையாது எனக்கூறியவர். இன்று அவரை மகிந்தா கைவிடும் நிலைமை தோன்றியுள்ளது.

கெஹலிய ரம்ப்புக்களையும் மகிந்தா யார் என புரிய ஆரம்பித்துள்ளார்.

நாளை இவர்களால் 'மகிந்த கூட்டம்' காட்டிக்கொடுக்கப்படும்/கைவிடப்படும்.

சில வாரங்களுக்கு முன்னர் இந்த 'அரசியல்வாதி' ஐ,தே.க. கட்சியின் உள்பூசலில் குளிர்காய்ந்தவர், அதை பரிகாசமாக பேசி தன்னை அணுகினால் குழப்பம் விளையாது எனக்கூறியவர். இன்று அவரை மகிந்தா கைவிடும் நிலைமை தோன்றியுள்ளது.

மகிந்த யாரைக் கைவிட்டாலும் மேர்வினை இலகுவில் விடமாட்டான். காரணம் மகிந்தவின் இளமைக் காலத்தில் குடி, போதை, மாது முதலிய அனைத்து சிற்றின்பங்களையும் மகிந்த தலைநகரில் அனுபவிக்க துணை நின்றவன்தான் இந்த மேர்வின் சில்வா. இதன் மூலம் மகிந்தவின் அந்தரங்கம் பலவும் தெரிந்தவன்.

மேர்வினால் தலையிடி மோசமானால் அவனைத் தீர்த்துக் கட்டுவதே மகிந்தவுக்கு இருக்கும் ஒருவழி!

மேர்வினும் பெரிய கில்லாடி. அவனுக்கும் தெரியும் மகிந்தாவின் குணம், பார்க்கலாம் யாரை யார் .............. என்று :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.