Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலவரத்தால் பாதிக்கப்பட்ட 200தமிழ் அரசியல் கைதிகளுக்கான அவசர உதவி வழங்குமாறு வேண்டுகிறோம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கலவரத்தால் பாதிக்கப்பட்ட 200தமிழ் அரசியல் கைதிகளுக்கான அவசர உதவி தேவை.

நேற்றைய தினம் கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை காரணமாக புதிய மகசீன் சிறையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் கழுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்களுக்கான எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத நிலமையில் மிகுந்த சிரமத்துக்கு கைதிகள் உள்ளாகியுள்ளனர்.

இவர்களுக்கான அவசர தேவைகளாக ஆடைகள் , பற்பசை , சவர்க்காரம் போன்ற அத்தியாவசிய தேவைகளை கைதிகள் வேண்டியுள்ளனர்.குடிதண்ணீர் முதற்கொண்டு அடிப்படை வசதிகள் அற்ற நிலமையில் சிரமப்படுகிறார்கள். எனினும் நிதியுதவி எதுவும் எம்மிடம் கையிருப்பில் இல்லாமையால் புலம்பெயர் உறவுகளிடமிருந்து அவசரமான இவ்வுதவியை வேண்டி நிற்கிறோம்.

நாளைய தினம் மேற்படி பொருட்களை வழங்கியாக வேண்டிய அவசரத்தைப் புரிந்து உங்கள் உதவிகளை வழங்குமாறு உறவுகளே உங்களை வேண்டுகிறோம்.

ஒரு கைதிக்கான பொருட்களுக்குத் தேவையான பணம் – 1500,00ரூபா

200கைதிகளுக்கும் தேவையான மொத்தத் தொகை – 1500,00Rsx 200 = 300000,00ரூபா

அண்ணளவாக 2100,00€ தேவைப்படுகிறது. அவசர உதவியான இத்தேவையைத் புரிந்து உறவுகள் உதவ முன்வருமாறு வேண்டுகிறோம்.

play-button.gif?w=28&h=30தமது தேவைகiளை நிறைவேற்றுமாறு கழுத்துறைச் சிறையிலிருந்து கைதியொருவர் தந்த குரல் வழிச்செய்தியைக் கேட்க இவ்விணைப்பில் அழுத்துங்கள்.

இவர்களுக்கு நேசக்கரம் கொடுக்க கீழ்வரும் விபரங்களில் தொடர்பு கொள்ளுங்கள்.

வங்கிமூலம் உதவ :-

Bank information

Germany:

NESAKKARAM e.V.

55743 Idar-Oberstein

Konto-Nr. 0404446706

BLZ 60010070

Postbank Stuttgart

Other countrys:

NESAKKARAM E.V

A/C 0404446706

Bank code – 60010070

IBAN DE31 6001 0070 0404 4467 06

Swift code – PBNKDEFF

Postbank Stuttgart

Germany

பேபால் கணக்கு மூலம் உதவ –nesakkaram@gmail.com

விபரங்களைப் பெற்றுக் கொள்ள –முகவரி:

Nesakkaram e.V

Hauptstr – 210

55743 Idar-Oberstein

Germany

Shanthy Germany – 0049 6781 70723

மின்னஞ்சல்: nesakkaram@gmail.com

Skype – Shanthyramesh

Vereinsregister:

AZ- VR 20302

Amtsgericht 55543 Bad Kreuznach

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி,வேறு பல வழிகளில், உறவுகளுக்காக உதவிக் கொண்டிருக்கின்றேன்!

ஆயினும் உங்கள் தேவையின் 'அவசரம்' கருதி $ 100, அவுஸ் வெள்ளிகள் அனுப்பியிருக்கின்றேன்!

கிடைத்தமை பற்றித் தெரியப் படுத்துங்கள்!

நன்றிகள், உங்கள் காலத்தாற் செய்யும் உதவிக்கு!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவரச வேண்டுகோளையேற்று எமது சக கள உறவு புங்கையூரான் 100 AUD(€78,35)முன்வந்து வழங்கியுள்ளார். அவருக்கு இதயம் நிறைந்த நன்றிகள்.

இன்னும் தேவைப்படுகிற மேலதிக நிதி - 2100,00€ - 78,35€ = 2021,65€

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவசமாகச் செய்யப்பட வேண்டிய உதவிக்கு உங்கள் ஆதரவினைத் தாருங்கள்.

அக்கா நானும் அனுப்பியிருக்கிறேன். கிடைத்த‌தும் அறிய‌த்த‌ர‌வும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொக்குவிலான்,

உங்கள் உதவிக்கு மிக்க நன்றிகள்.

100€அனுப்பியிருந்தீங்கள் கழிவு போக95,15€ கிடைத்தது.

இதுவரை கிடைத்த உதவி :-

புங்கையூரான் -78,35€

கொக்குவிலான் -95,15€

நெடுக்ஸ் - 58,09€

இசைக்கலைஞன் 110,77 €

= 342,36€

இன்னும் தேவைப்படுகிற மேலதிக நிதி - 2100,00€ - 342,36€ = 1757,64€

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

எனது பங்களிப்பையும் நண்பர்கள் மூலம்.. paypal இல் (

NESAKKARAM e.V.) அனுப்பி இருக்கிறேன். கிடைத்ததும் அறியத்தரவும். அனுப்பியவர் விபரங்கள் தகவல் காப்புக்குரியவை. நேசக்கரம் அவற்றை காத்துக்கொள்ள வேண்டும்.

நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது பங்களிப்பையும் நண்பர்கள் மூலம்.. paypal இல் (

NESAKKARAM e.V.) அனுப்பி இருக்கிறேன். கிடைத்ததும் அறியத்தரவும். அனுப்பியவர் விபரங்கள் தகவல் காப்புக்குரியவை. நேசக்கரம் அவற்றை காத்துக்கொள்ள வேண்டும்.

நன்றி.

நன்றிகள் நெடுக்ஸ் உங்கள் உதவியான 50பிரித்தானிய பவுண்களில் 58,09€ கிடைத்தது. மிக்க நன்றிகள். கைதிகளுக்கான அவசர நிவாரணத்திற்கு தங்கள் உதவி பேருதவியாக உள்ளது.

பி.குறிப்பு :- அனுப்பியவரின் பெயர் விபரம் எதுவும் வரவில்லை. மின்னஞ்சல் மட்டும்தான் வந்துள்ளது.

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் தேவைப்படுகிற மேலதிக நிதி - 2100,00€ - 231,59€ = 11868,41€

தொகையைப் பார்த்திட்டே பயப்பிடப் போறாங்க..! கணிதத் தவறு நடந்துள்ளது போல தெரிகிறது. :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொகையைப் பார்த்திட்டே பயப்பிடப் போறாங்க..! கணிதத் தவறு நடந்துள்ளது போல தெரிகிறது. :icon_idea:

ரைப்பண்ணின கை ஒரு 1 ஐ கூட அடிச்சிட்டுது. நன்றி சுட்டிக்காட்டியமைக்கு. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நானும் அனுப்பியிருக்கிறேன்..! தயவு செய்து பெயர் எதுவும் போட வேண்டாம்..! :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நானும் அனுப்பியிருக்கிறேன்..! தயவு செய்து பெயர் எதுவும் போட வேண்டாம்..! :rolleyes:

பெயர் சொல்லாமல் உதவும் பலருள் இசை நீங்களும் ஒருவர். உங்கள் உதவி 110,77 €கிடைத்தது மிக்க நன்றிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை கிடைத்த உதவி :-

புங்கையூரான் -78,35€

கொக்குவிலான் -95,15€

நெடுக்ஸ் - 58,09€

இசைக்கலைஞன் 110,77 €

= 342,36€

இன்னும் தேவைப்படுகிற மேலதிக நிதி - 2100,00€ - 342,36€ = 1757,64€

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாதிக்கப்பட்ட தமிழ்க் கைதிகளுக்கான உடனடி உதவிக்கு முழுமையான பண உதவி இதுவரை கிடைக்கப்பெறவில்லை. ஆயினும் தெரிந்த நண்பர்களிடம் கடன்பெற்று குறித்தளவு பொருட்கள் கழுத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விபரங்கள் கிடைத்ததும் இங்கு வெளியிடப்படும்.

காலத்தின் தேவையை உணர்ந்து எமக்கு கடன் தந்துதவியவர்களின் கடனை மீளச்செலுத்த வேண்டும். உறவுகளே உங்களால் முடிந்த உதவிகளை வழங்குங்கள்.

Edited by shanthy

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.