Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகசீன் சிறைச்சாலையில் கலவரம் 15பேர் வரையில் காயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகசீன் சிறைச்சாலையில் கலவரம் 15பேர் வரையில் காயம்

play-button.gif?w=28&h=30மகசீன் சிறைச்சாலையில் இன்று காலை பதினொரு மணியளவில் தாக்குதல் நடைபெற்றுள்ளது. அண்மையில் மகசீன் சிறைச்சாலைக்கு நியமிக்கப்பட்ட எமில் நிறஞ்சன் என்ற அதிகாரியின் கடும் போக்கிற்கு எதிராக இன்று சிங்களக் கைதிகள் அதிகாரிகள் மீது பொல்லுகள் கல்லுகளால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்நடவடிக்கைக்கு எதிராக கைதிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு 15கைதிகள் வரையில் காயமடைந்துள்ளனர். தொடர்ந்தும் துப்பாக்கிப் பிரயோகங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இத்தாக்குதலில் தமிழ்க் கைதிகளும் பாதிப்படைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. நிலமை மிகவும் பதட்டமான நிலையில் இருப்பதாகவும் தற்போது மகசீன் சிறைச்சாலை புகைமண்டலமாகக் காட்சியளிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

நேரடியான சாட்சியமாக கைதி ஒருவரின் குரலில் கிடைத்த உடனடிச் செய்தியைக் கேட்க இணைப்பில் அழுத்துங்கள்.

http://mullaimann.blogspot.com/2012/01/15.html

மேலதிக செய்திகள் விரைவில்.....

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக செய்திகள் விரைவில்.....

  • கருத்துக்கள உறவுகள்

Tense situation at Magazine Prison

Tuesday, 24 January 2012 12:23

Welikada-606-60.jpg

A tense situation was reported from the Magazine Prison. The sound of gun fire was heard from the prison premises, a reporter said

.

The fire brigade has been called in, while initial reports from the prison say that inmates of the Magazine Prison had set a building on fire following a protest.

At least 19 inmates and a prison guard were admitted to the Colombo National Hospital following the clash at the prison, hospital sources said. Police used tear gas to control the tense situation at the Magazine prison a short while ago, a reporter stated. (SD/HF)

dailymirror.lk

  • கருத்துக்கள உறவுகள்

மகசீன் சிறையில் 29பேர் காயம், இருவர் கவலைக்கிடம்; பதற்றம் தொடர்கிறது

magazenejail.jpg

கொழும்பு - மகசீன் சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலையில் உணவுக்காக கைதிகள் திறந்து விடப்பட்டபோது, சிங்களக் கைதிகள் அங்கிருந்த தமிழ்க் கைதிகள் மீது தாக்குதல் மேற்கொள்ள முனைந்ததாகவும், அதனைத் தொடர்ந்து கைதிகளுக்கிடையில் முறுகல் நிலை தோன்றி யுள்ளதாகவும் தெரியவருகிறது.

இதனையடுத்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு பொலிஸாரதும், இராணுவத்தினரதும் உதவி பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இரண்டாம் இணைப்பு

கொழும்பு-வெலிக்கடை-மகசீன் சிறைச்சாலையில் இடம்பெற்ற முறுகல் நிலையின்போது 29 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முறுகல் நிலையை கட்டுப்படுத்தும் நோக்கில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையிலேயே இவர்கள் காயமடைந்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் கண்ணீர்ப் புகைப் பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரியவருகிறது.

இந்த முறுகல் நிலை காரணமாக கொழும்பில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளதோடு, தெமட்டகொடை சந்தி முதல் பொரள்ளைச் சந்திவரையிலான பேஸ்லைன் பகுதிவரையிலான ஒரு பகுதி வீதிகள் மூடப்பட்டடுள்ளன.

இதேவேளை சம்பவத்தின் விளைவாக சிறைச்சாலைக்குள் தீ விபத்தொன்றும் ஏற்பட்டிருந்தது. இருந்தபோதிலும் தீயணைப்புப் படையினர் வரவழைக்கப்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுவருகின்றன.

http://184.107.230.170/~onlineut/News_More.php?id=47877774224867601

  • கருத்துக்கள உறவுகள்

Tense situation at Magazine Prison in Welikada

Tuesday, 24 January 2012 12:23

Welikada-606-60.jpg

A tense situation was reported from the Magazine Prison in Welikada. The sound of gun fire was heard from the prison premises, a reporter said.

The fire brigade has been called in, while initial reports from the prison say that inmates of the Magazine Prison had set a building on fire following a protest.

At least 20 inmates and four prison guards were admitted to the Colombo National Hospital following the clash at the prison, hospital sources said. Police used tear gas to control the tense situation at the Magazine prison a short while ago, a reporter stated.

Following the clash LTTE suspects who are placed in a ward within the Magazine Prison were taken out and were taken to the Welikada Prison a short while ago.

(SD/HF)

சிறீலங்கா தலைநகரில் இருக்கும் மகசீன் சிறையில் நிலவும் கலவரச் சூழல் காரணமாக.. தமிழ் கைதிகள்.. மகசீன் சிறைச்சாலையில் இருந்து அதன் அருகில் உள்ள பிரதான வெலிகடைச் சிறைச்சாலைக்கு மாற்றப்படுகின்றனர். இங்கு வைத்து 1983 யூலையில் இல் தமிழ் கைதிகள் இனப்படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் கைதிகளின் பாதுகாப்பை.. தமிழ் தேசியக் கூட்டமைப்பு.. மற்றும் மனோ கணேசன் போன்றவர்கள் உறுதி செய்து கொள்வதோடு.. அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் களத்தில் நின்று சேவையாற்ற முன் வர வேண்டும்..! தமிழ் கைதிகளின் நிலைமை, பாதுகாப்புக் குறித்து சர்வதேச ஊடகங்களுக்கும்.. மனித உரிமைகள் அமைப்புக்களுக்கும்.. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கும் உடனுக்குடன் தகவல்கள் பரிமாறப்படுவதோடு.. கொழும்பில் வெளிநாட்டு தூதரக மட்ட விழிப்புணர்வையும் ஏற்படுத்திக் கொண்டிப்பது நன்று.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

IMG_0864-Pic-9.jpg

IMG_0761-Pic7.jpg

IMG_0750-Pic-3.jpg

IMG_0662-Pic-6.jpg

IMG_0705-Pic-1(1).jpg

IMG_0685-Pic-2.jpg

dailymirror.lk

Edited by nedukkalapoovan

பொன்சேகாவும் இங்கேதான் சிறைவைக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் பாதுகாப்பாக உள்ளார் என கூறப்பட்டுள்ளது. அதன் மூலம் இது தமிழர்களுக்கு எதிரான இனவாத தாக்குதல் என நிரூபிக்கப்பட்டுள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்

1983 வெலிக்கடை படுகொலையும்.. சிங்கள கைதிகளிடையே கலவரம் என்று தான் ஆரம்பிக்கப்பட்டு.. சிங்களக் கைதிகள் சிறைகளை உடைத்துத் தள்ளிக் கொண்டு வந்து.. தமிழ் கைதிகளை படுகொலை செய்ய அனுமதிக்கப்பட்டனர். இப்போதும்.. சிங்கள அரசு சார் ஊடகங்கள்.. தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைப்புலிச் சந்தேக நபர்கள் என்றே இனங்காட்டி செய்திகளையும் வெளியிட்டு வருகின்றன. இது சிங்களக் காடைக் கைதிகள் தமிழ் அரசியல் கைதிகளை தாக்க.. அல்லது இதைச் சாட்டு வைத்து தமிழ் அரசியல் கைதிகள் மீது சிங்களப் படைகளும் கைதிகளும் தாக்க வாய்ப்பை உண்டு பண்ணி உள்ளதால்.. இந்த சூழலை புலம்பெயர் சமூகமும்.. ஊடகங்களும் சர்வதேச மயப்படுத்துவதோடும்.. உள்ளூர் தமிழ் அரசியல் தலைமைகள்.. களத்தில் நின்று கைதிகளை பாதுகாக்க ஏற்பாடுகளையும் செய்வதோடு சர்வதேசத்தின் பார்வையையும் இப்பக்கம் கொண்டு வருதல் அவசியம்..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

Sri Lanka jail riot 'injures 28' in Colombo

_58065928_013800522-1.jpg

Prisoners set fire to a kitchen and an administrative building

At least 28 people have been injured in clashes between guards and rioting inmates at a prison in the Sri Lankan capital, Colombo, police say.

Reports say guards opened fire to restore order and most of the injured are prisoners with bullet wounds.

A local man told the Associated Press there had been disturbances at Welikada (Magazine) jail for several days.

Reports say prisoners want better food and conditions. Police say inmates are angry at moves to curb drug smuggling.

Police spokesman Ajith Rohana said 24 prisoners and four guards had been hurt in Tuesday's violence.

_58065930_013800670-1.jpg

Several guards were also hurt in the clashes

AP quoted a doctor at Colombo National Hospital saying most of the prisoners had gunshot wounds. Three guards had been hit by stones and another had a fractured leg.

None of the injuries was life threatening, Dr Prasad Ariyawansa said.

Pictures from the scene showed soldiers deployed outside the jail as black smoke billowed into the air from inside the complex.

Prisoners are reported to have set fire to a kitchen and an administrative building.

A number of inmates have been demonstrating on rooftops with a banner calling for the prison chief to be removed.

Welikada is a maximum security jail described as Sri Lanka's largest.

http://www.bbc.co.uk...h-asia-16699119

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசியல் கைதிகள் சுமார் 180 பேர் வரை பாதுகாப்பாக இடமாற்றப்பட்டுள்ளதாக சிறீலங்கா சிங்களப் பொலிஸ் பேச்சாளர் வெலிகடையில் இருந்து டெயிலிமிரர் மூலம் தெரிவித்திருக்கிறார்.

http://www.dailymirror.lk/top-story/16283-tense-situation-at-welikada-prison-.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1983 வெலிக்கடை படுகொலையும்.. சிங்கள கைதிகளிடையே கலவரம் என்று தான் ஆரம்பிக்கப்பட்டு.. சிங்களக் கைதிகள் சிறைகளை உடைத்துத் தள்ளிக் கொண்டு வந்து.. தமிழ் கைதிகளை படுகொலை செய்ய அனுமதிக்கப்பட்டனர். இப்போதும்.. சிங்கள அரசு சார் ஊடகங்கள்.. தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைப்புலிச் சந்தேக நபர்கள் என்றே இனங்காட்டி செய்திகளையும் வெளியிட்டு வருகின்றன. இது சிங்களக் காடைக் கைதிகள் தமிழ் அரசியல் கைதிகளை தாக்க.. அல்லது இதைச் சாட்டு வைத்து தமிழ் அரசியல் கைதிகள் மீது சிங்களப் படைகளும் கைதிகளும் தாக்க வாய்ப்பை உண்டு பண்ணி உள்ளதால்.. இந்த சூழலை புலம்பெயர் சமூகமும்.. ஊடகங்களும் சர்வதேச மயப்படுத்துவதோடும்.. உள்ளூர் தமிழ் அரசியல் தலைமைகள்.. களத்தில் நின்று கைதிகளை பாதுகாக்க ஏற்பாடுகளையும் செய்வதோடு சர்வதேசத்தின் பார்வையையும் இப்பக்கம் கொண்டு வருதல் அவசியம்..!

கட்டாயம் இவ்விடயத்தில் தமிழ் அரசியல்வாதிகள் கவனம் எடுக்க வேண்டும். துரித நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தற்போதைய தகவல்களின் படி இக்கலவரமானது திசைதிருப்பி தமிழ்க்கைதிகளின் மீது வன்முறைகள் பிரயோகிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

தமிழ் கைதிகளின் பாதுகாப்பை.. தமிழ் தேசியக் கூட்டமைப்பு.. மற்றும் மனோ கணேசன் போன்றவர்கள் உறுதி செய்து கொள்வதோடு.. அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் களத்தில் நின்று சேவையாற்ற முன் வர வேண்டும்..!

எல்லாம் முடிஞ்ச பிறகு வந்து நிண்டு அறிக்கைவிடத்தான் அவை வருவினம்.

நெடுக்காலபோவான் & சாந்தி.........

சிங்களவனும் சிங்களவனும் மோதிக்குறான்........

எங்க பக்கம் எந்த சேதம் ஆனதாவும் தகவல் இல்ல...........

நிலமை இப்டி இருக்க ஓவரா நீங்க சிந்திக்குறது ....

நாளைக்கு நிஜமாவே சிங்களவன் எமக்கு செய்யும் கொடுமயை நாங்க வெளீல சொன்னாலும்...

தமிழர்கள் இப்டிதான்,,, எப்போ பாரு சம்பந்தமில்லாம கத்துவாங்க

எங்கிற தோற்றப்பாடே சர்வதேசத்துக்கு/மத்தவங்களுக்கு கொடுக்கும்!.......

இது...

யானை மண்ணை தன் தலைல போடுறது மாதிரி என்னாலும்.. பரவாயில்ல...

கண்ணிவெடிய தூக்கி ..கவட்டுக்கு அடியில வைச்சமாதிரி ஆகிடும்!!

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தியக்காவுக்கு

தங்களுக்கு இருக்கும் தொடர்புகள் மூலம் இச்செய்திகளை நீங்கள் வெளியில் கொண்டுவருவது ஏதோ ஆபத்தை நாம் விலை கொடுத்து வாங்குவது போல் எனக்கு தெரிகிறது. இது எனது கருத்து மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்

01.jpg

02.jpg

03.jpg

04.jpg

05.jpg

06.jpg

07.jpg

08.jpg

09.jpg

10.jpg

11.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அறிவிலி காலை கவனமா வைச்சிருங்கோ சிதறினா சேதாரம் உங்களுக்குத்தான்.

அறிவிலி , விசுகு,

நேற்றைய நிலமை வெளியில் தெரியப்படுத்தாமல் இருந்திருந்தால் எமது உறவுகள் பலரை இழந்திருப்போம். நிலமை அப்படித்தான் இருந்தது. அதனாலேயே அவசரமாக செய்தியை வெளிப்படுத்த வேண்டிய தேவையை கைதிகள் துரிதப்படுத்துமாறு வேண்டியதற்கு அமைவாகவே செய்தி வெளியில் சொல்லப்பட்டது.

எங்கே அடி விழுந்தாலும் தமிழன் தான் பாதிக்கப்படுகிறான். இன்று பாருங்கள் 20 கைதிகள் உடுக்க உடையில்லை குடிக்க தண்ணீரில்லை எதுவும் இல்லாமல் எங்களைத்தான் நாடி வந்திருக்கிறார்கள். இனிமேல் என்றாலும் சில விடயங்களில் புத்திசாலித்தனமாக செயற்படுவோம். அதுவே எம்மவர்களைக் காப்பாற்ற ஏதுவாகும்.

கலவரத்தால் பாதிக்கப்பட்ட 200தமிழ் அரசியல் கைதிகளுக்கான அவசர உதவி தேவை.

நேற்றைய தினம் கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை காரணமாக புதிய மகசீன் சிறையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் கழுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்களுக்கான எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத நிலமையில் மிகுந்த சிரமத்துக்கு கைதிகள் உள்ளாகியுள்ளனர்.

இவர்களுக்கான அவசர தேவைகளாக ஆடைகள் , பற்பசை , சவர்க்காரம் போன்ற அத்தியாவசிய தேவைகளை கைதிகள் வேண்டியுள்ளனர்.குடிதண்ணீர் முதற்கொண்டு அடிப்படை வசதிகள் அற்ற நிலமையில் சிரமப்படுகிறார்கள். எனினும் நிதியுதவி எதுவும் எம்மிடம் கையிருப்பில் இல்லாமையால் புலம்பெயர் உறவுகளிடமிருந்து அவசரமான இவ்வுதவியை வேண்டி நிற்கிறோம்.

நாளைய தினம் மேற்படி பொருட்களை வழங்கியாக வேண்டிய அவசரத்தைப் புரிந்து உங்கள் உதவிகளை வழங்குமாறு உறவுகளே உங்களை வேண்டுகிறோம்.

ஒரு கைதிக்கான பொருட்களுக்குத் தேவையான பணம் – 1500,00ரூபா

200கைதிகளுக்கும் தேவையான மொத்தத் தொகை – 1500,00Rsx 200 = 300000,00ரூபா

அண்ணளவாக 2100,00€ தேவைப்படுகிறது. அவசர உதவியான இத்தேவையைத் புரிந்து உறவுகள் உதவ முன்வருமாறு வேண்டுகிறோம்.

play-button.gif?w=28&h=30தமது தேவைகiளை நிறைவேற்றுமாறு கழுத்துறைச் சிறையிலிருந்து கைதியொருவர் தந்த குரல் வழிச்செய்தியைக் கேட்க இவ்விணைப்பில் அழுத்துங்கள்.

இவர்களுக்கு நேசக்கரம் கொடுக்க கீழ்வரும் விபரங்களில் தொடர்பு கொள்ளுங்கள்.

வங்கிமூலம் உதவ :-

Bank information

Germany:

NESAKKARAM e.V.

55743 Idar-Oberstein

Konto-Nr. 0404446706

BLZ 60010070

Postbank Stuttgart

Other countrys:

NESAKKARAM E.V

A/C 0404446706

Bank code – 60010070

IBAN DE31 6001 0070 0404 4467 06

Swift code – PBNKDEFF

Postbank Stuttgart

Germany

பேபால் கணக்கு மூலம் உதவ –nesakkaram@gmail.com

விபரங்களைப் பெற்றுக் கொள்ள –முகவரி:

Nesakkaram e.V

Hauptstr – 210

55743 Idar-Oberstein

Germany

Shanthy Germany – 0049 6781 70723

மின்னஞ்சல்: nesakkaram@gmail.com

Skype – Shanthyramesh

Vereinsregister:

AZ- VR 20302

Amtsgericht 55543 Bad Kreuznach

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.