Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனீவாவில் பேச்சுக்கள்

Featured Replies

ஜெனீவாவில் பேச்சுக்கள்- கிழக்கில் தொடரும் தாக்குதல்: ஒரு துணைப்படை வீரர் வீரச்சாவு!

மட்டக்களப்பு கிரானில் சிறிலங்காப் படையினரும் அதனுடன் சேர்ந்தியங்கும் ஆயுதக்குழுவினரும் இணைந்து நடத்திய பதுங்கித் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் துணைப் படைவீரர் ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.

கிரான் சிறிலங்கா படைமுகாமிலிருந்து வந்த சிலங்கா படையினர் இன்று புதன்கிழமை காலை 10.15 மணியளவில் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர்.

மட்டக்களப்பு சந்திவெளி திகிலிவெட்டையைச் சேர்ந்த 28 வயதுடைய நாராயணபிள்ளை சாந்தகுமார் என்ற துணைப் படைவீரரே வீரச்சாவடைந்தவராவார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரச பிரதிநிதிகளுக்கும் இடையில் சுவிற்சர்லாந்தின் ஜெனீவாவில் போர் நிறுத்த உடன்பாடு அமுலாக்கம் பற்றிய பேச்சு இன்று ஆரம்பமாவதற்கு 3.30 மணித்தியாலயங்களுக்கு முன்னர் இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Puthinam.com

  • தொடங்கியவர்

ஜெனீவாவில் பேச்சுவார்த்தை தொடங்கியது!

ஜெனீவாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையேயான பேச்சுவார்த்தை இன்று புதன்கிழமை சுவிஸ் நாட்டு நேரப்படி காலை 9 மணிக்குப் பின்னர் தொடங்கியது.

இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்னர் காலை 9 மணியளவில் ஊடகவியலாளர் மாநாடுஇ பேச்சுக்கள் நடைபெறும் ஜெனீவா கோட்டை வளாகத்தில் நடைபெற்றது.

பேச்சுக்களில் பங்கேற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் சிறிலங்கா அரசாங்கப் பிரதிநிதிகள் விவரங்கள் ஊடகவியலாளர்களுக்குக் கையளிக்கப்பட்டன.

தமிழீழ மற்றும் சிறிலங்கா அரசாங்க தரப்பு பிரநிதிகளை நோர்வே சிறப்புத் தூதர் எரிக் சொல்ஹெய்ம் ஊடகவியலாளர் மாநாட்டுக்கு அழைத்து வந்தார்.

நோர்வே சிறப்புத் தூதுவரும் சர்வதேச அபிவிருத்தி அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் மற்றும் சுவிஸ் வெளிவிவகார அமைச்சின் அதிகாரி மார்ஸ்வெல் ஆகியோர் ஊடகவியலாளர் மாநாட்டில் சிறப்புரையாற்றினர்.

இருதரப்பினருக்கும் இடையே சிறிய அளவில் நம்பிக்கை தொடங்கி உள்ளது. இந்த நம்பிக்கை அதிகரிக்க வேண்டும். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதே இப்பேச்சுக்களின் மிக முக்கிய நிகழ்ச்சி நிரல் என்று எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்தார்.

ஊடகவியலாளர் மாநாட்டின் இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் குழுவின் தலைவரான அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கமும்இ சிறிலங்கா அரசாங்கக் குழுவின் தலைவரான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இருவரும் கைகொடுத்தனர்.

பின்னர் நோர்வே சிறப்புத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம்இ நோர்வே முன்னாள் வெளிவிவகார அமைச்சர் விதார் ஹெல்கிசன் ஆகியோருக்கும் இருதரப்புக் குழு தலைவர்களும் கை கொடுத்தனர்.

இதையடுத்து ஊடகவியலாளர்கள் மாநாடு முடிவடைந்தது.

அதன் பின்னர் பேச்சுக்கள் நடைபெறும் நோக்கி தமிழீழம் மற்றும் சிறிலங்கா குழுவினரும் அவர்களுடன் நோர்வேஇ சுவிஸ் குழுவினரும் சென்றனர்.

ஊடகவியலாளர் மாநாட்டில் தமிழீழ மற்றும் சிறிலங்கா அரசாங்கக் குழுவின் தலைவர்களான அன்ரன் பாலசிங்கம்இ நிமல் சிறிபால டி சில்வா ஆகியோரது உரைகளும் இன்று இடம்பெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உரைகள் இடம்பெறவில்லை.

இருநாள் பேச்சுக்களின் முடிவில் நாளை வியாழக்கிழமை சுவிஸ் நாட்டு நேரப்படி மாலை 4 மணிக்கு நடைபெறும் ஊடகவியலாளர்கள் மாநாட்டில் இருவரது உரைகளும் கேள்வி பதில் பகுதிகளும் இடம்பெறக் கூடும் என்று ஜெனீவா செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த பேச்சுக்களின் செய்திகளைச் சேகரிக்க சர்வதேச ஊடகங்கள்இ உள்ளுர் ஊடகங்கள்இ சிறிலங்கா மற்றும் தமிழீழ ஊடகங்களின் பிரதிநிதிகள் பெருமளவில் ஜெனீவாவில் குவிந்துள்ளனர். அனைவரும் பலத்த சோதனைகளுக்கு மத்தியில் உள் அனுமதிக்கப்பட்டனர்.

பேச்சுக்கள் நடைபெறும் ஜெனீவா கோட்டை பிரதேச பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புதினம்

  • தொடங்கியவர்

புலிகளுக்கு அழுத்தம் கொடுக்க வலியுறுத்தி ஜெனீவாவில் சிங்களவர் குழு பரப்புரை

ஜெனீவாப் பேச்சுக்களில் விடுதலைப் புலிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் பரப்புரைகளை மேற்கொள்ள சிங்களவர் குழு ஜெனீவாவில் முகாமிட்டுள்ளனர்.

இது தொடர்பிலான சுவரொட்டிகளையும் ஜெனீவாவில் அவர்கள் ஒட்டியுள்ளனர்.

சிறிலங்காவின் அமைதிஇ ஐக்கியம் மற்றும் உரிமைகளுக்கான தேசிய சங்கத்தின் பிரதிநிதிகள் ஜெனீவா சென்றுள்ளனர்.

"யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைச் செயற்படுத்த விடுதலைப் புலிகளுக்கு அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும்" என்று இந்த அமைப்பின் பேச்சாளர் ஹெச்.எல்.டி. மகிந்தபால தெரிவித்தார்.

"இப்பேச்சுக்களில் தீர்வு ஏதும் காணப்படும் என்ற நம்பிக்கை தங்களுக்கு இல்லை"என்றும் அவர் தெரிவித்தார்.

இக்குழுவில் இடம்பெற்றுள்ள சிறிலங்காவின் அமைதிச் செயற்பாட்டாளர் என கூறப்படுகிற ஜெகான் பெரேராவும் ஜெனீவா சென்றுள்ளார்.

அவர் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்இ "பேச்சுக்களில் முன்னேற்றம் ஏற்படலாம். ஆனால் அது மெதுவாகவே ஏற்படும். கடந்த 3 ஆண்டுகளாக இருதரப்பினரும் சந்திக்காத நிலையில் 2 நாட்கள் சந்திப்பின் மூலம் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை வலுப்படுத்த முயற்சிக்கின்றனர். இந்த காலம் போதுமானது அல்ல" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஜெனீவா ஊடகவியலாளர்களிடம் பேசிய விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம்இ யுத்த நிறுத்தம் என்கிற ஒரு செயற்திட்டம்தான் பேசப்படும். ஆனால் அதற்குள் ஓராயிரம் செய்திகள் விவாதிக்கப்பட உள்ளன என்று தெரிவித்தார்.

புதினம்

ஜெனிவா பேசுக்களில் பங்குபற்றிய புலிகள் பிரதிநிதிகள்

geneva_talks_01_51167_435.jpg

ஜெனிவா பேசுக்களில் பங்குபற்றிய அரச பிரதிநிதிகள்

gosl_del_geneva_04_51175_435.jpg

படங்கள் நன்றி தமிழ் நெட்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைச் செயற்படுத்தப் போவதில்லை: ஜெனீவாவில் சிறிலங்கா அரசாங்கம் மறைமுக அறிவிப்பு!

[புதன்கிழமை, 22 பெப்ரவரி 2006, 19:21 ஈழம்] [ச.விமலராஜா]

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் எதுவித சரத்துகளையும் செயற்படுத்தப் போவதில்லை என்பதை ஜெனீவாவில் மறைமுகமாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை வலுப்படுத்துவதற்கான பேச்சுக்களுக்குச் செல்லுகிறோம் என்று அறிவித்துவிட்டு ஜெனீவாவுக்கு சிறிலங்கா அரசாங்கக் குழு சென்றது. சர்வதேச சமூகமும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை வலுப்படுத்தும் பேச்சுக்கள் என்று வர்ணித்தன.

இந்தப் பேச்சுக்களின் தொடக்கத்தில் உரையாற்றிய தமிழீழ விடுதலைப் புலிகளின் பேச்சுக் குழுவின் தலைவர் அன்ரன் பாலசிங்கமும் யுத்த நிறுத்த ஒப்பந்த சரத்துகளை சுட்டிக்காட்டி, எவை எவை நிறைவேற்றப்பட வேண்டும் என்கிற மக்களின் பிரச்சனைகளைத் தவிர்த்து வேறு எதுவித அரசியல் விமர்சனங்களையும் முன்வைக்காமல் முற்று முழுதாக யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் செயற்பாட்டை தனது உரை முழுமைக்கும் வலியுறுத்தினார்.

ஆனால் சிறிலங்கா அரசாங்கத்தின் தரப்பில் அதன் குழுத் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா யுத்த நிறுத்த ஒப்பந்தம் என்ற சொற்றொடரைக் கூட ஒரு சில இடங்களில்தான் பயன்படுத்தி உள்ளார்.

அந்த குறிப்பிடுவதும் இடங்களில் கூட ஒப்பந்தத்தின் சரத்துகளைக் கூட அல்ல் இந்த ஒப்பந்தத்தை நிராகரிக்கும் கருத்துகளைத்தான்.

அறிமுகம் என்ற தலைப்பிட்டு நிமல் சிறிபால டி சில்வா ஆற்றிய உரையின் 4 ஆம் பந்தியில் யுத்த நிறுத்த ஒப்பந்தம் பற்றி நிமல சிறிபால டி சில்வா கூறியுள்ளதாவது:

"2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆம் நாள் சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுக்கும் இடையே கைச்சாத்திடப்பட யுத்த நிறுத்த ஒப்பந்தம் எமது அரசியல் யாப்பிற்கும் சட்டத்துக்கும் முரணானது. மேலும் சிறிலங்கா குடியரசின் இறையாண்மைக்கும் அதன் பிரதேச ஒற்றுமைக்கும் ஊறுவிளைவிக்கிற ஒப்பந்தம் அது" என்று கூறுகிறார்.

அதன் பின்னர் கதிர்காமர் மரணம் போன்ற சம்பவங்களைச் சுட்டிக்காட்டும் ஓரிடத்திலும் இறுதிப் பந்தியான சட்டம் ஒழுங்கு என்ற தலைப்பின் கீழும் யுத்த நிறுத்தம் என்ற சொற்றொடரை நிமல் சிறிபால டி சில்வா பயன்படுத்தியுள்ளார். அந்த சட்டம் ஒழுங்குத் தலைப்பின் கீழ் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் மீதான அரசாங்கத்தின் அதிருப்தியைத்தான் சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படுத்தியிருக்கிறது.

வழமையாகச் சொல்லி வரும் யுத்த நிறுத்த மீறல்கள், கதிர்காமர் கொலை, சிறார் படை சேர்ப்பு, மனித உரிமை மீறல்கள், தேர்தல் புறக்கணிப்பு விடயங்கள், கொலைகளுக்கு நாங்கள் விசாரணைகளை நடத்துகிறோம் என்கிற பகிரங்க கண்துடைப்பு வசனங்களை- சிறிலங்கா நாடாளுமன்றத்தில் வாசிக்கப்படுகிற அறிக்கையைத் தவிர ஆக்கப்பூர்வமாக எதுவித அம்சமும் இல்லாத உரையை நிமல சிறிபால டி சில்வா வாசித்திருக்கிறார்.

ஜெனீவா பேச்சு மேசையை வழமையான அவதூறு பரப்புரை யுக்தியாக சிறிலங்கா அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ள முனைகிறது.

தமிழர் தரப்போ, தமிழ் மக்களின் பிரச்சனைகள் என்ன? யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் ஏற்கப்பட்ட சரத்துகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று மக்களின் பிரச்சனைகளை முன்வைத்துள்ளது.

அதேபோல் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்துப் பேசுகிற மகிந்தவின் புதிய அணுகுமுறை குறித்தும் சிலாகித்துள்ள நிமல் சிறிபால டி சில்வா, இந்தப் பேச்சுக்களின் அடிப்படை அம்சமான துணை இராணுவக் குழு பற்றி ஒரு இடத்தில் கூட வாயே திறக்கவில்லை. அப்படியானால் யுத்த நிறுத்த ஒப்பந்தம் பற்றி பேசாமல் ஜெனீவாவிற்கு இவர்கள் போனது ஏன் என்ற கேள்விதான் எழுகிறது.

சிறிலங்கா அரசாங்கக் குழுவிற்கு பயிற்சிப் பட்டறையில் சொல்லிக் கொடுக்கப்பட்ட விடயம்தான் என்ன? இந்த இழுத்தடிப்பு வேலைக்குத்தானே ஜெனீவா சென்றார்கள்?

முதல் நாளில் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்திருக்கும் கருத்துகள் 2 ஆம் நாளின் போக்கை மட்டும் அல்ல இலங்கைத் தீவின் எதிர்காலத்தை தெளிவாகச் சொல்லுகிறது.

சர்வதேச சமூகத்தையும் தமிழ்ச் சமூகத்தையும் ஏமாற்றுகிற ஒரு போக்கை "இராஜதந்திரம்" என்று இனியும் சிங்களத் தலைமைகள் நினைத்து செயற்பட்டால் அவர்கள் சிங்களவர்களையும் ஏமாற்றுவதோடு தமிழர் தரப்பு ஆற்றப் போகிற வேறு வழியற்ற எதிர்வினைக்கு முகம் கொடுத்தே ஆக வேண்டியதைத் தவிர வேறு எதுவும் அவர்களுக்கு வழி இல்லை என்பதைத்தான் ஜெனீவாவின் சிறிலங்கா அரசாங்க அறிக்கை சொல்லிச் செல்கிறது என்று எமது ஜெனீவா செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

நிமல் சிறிபால டி சில்வாவின் உரை:

அறிமுகம்:

சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான பேச்சுக்களில் இது ஒரு முக்கியமான கட்டம். அர்த்தமுள்ள யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கையின் அனைத்து இனத்தவருக்குமான பயன் ஏற்படுத்துகிற அடிப்படையில் இப்பேச்சுக்கள் அமைய வேண்டும்.

கௌரவமான அமைதி என்ற கொள்கையை முன்வைத்து எமது அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சிறிலங்கா பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுக்கும் இடையே கடந்த 2002 ஆம் ஆண்டு எமது அரசியல் யாப்புக்கும் சட்டத்துக்கும் முரணான யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

இது சிறிலங்கா குடியரசின் இறையாண்மைக்கும், பிரதேச ஒற்றுமைக்கும் சேதம் ஏற்படுத்தக் கூடியது.

தற்போதுள்ள பிரச்சனைக்கு பேச்சுக்களின் மூலம் தீர்வு காண இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஒரு முதல் கட்ட நடவடிக்கையாக இருக்கும் என்று நாம் கருதுகிறோம்.

எமது அரச தலைவர் பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு சந்தர்ப்பங்களில் விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்கு அழைப்பு விடுத்து வருகிறார்.

விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்கள் தொடர்பில் சிறிலங்காவின் அனைத்துக் கட்சி கூட்டத்தை கடந்த சில வாரங்களாகக் கூட்டி ஒரு இணக்கப்பாட்டை உருவாக்கியுள்ளோம். எமது வரலாற்றில் இத்தகைய இணக்கப்பாடு காணப்படுவது இதுவே முதன்முறையானது.

நாங்கள் எமது மக்களின் முழுமையான ஆதரவுடன் இங்கே ஜெனீவாவுக்கு வந்துள்ளோம்.

புதிய அணுகுமுறை:

இனப்பிரச்சனைக்கு கௌரவமான தீர்வு என்பதை முன்வைத்து 2005 ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் நாள் எமது அரச தலைவராக மகிந்த ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டார்.

எமது அரச தலைவரின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் மகிந்த சிந்தனையானது, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நேரடிப் பேச்சுக்களை நடத்துவதை வலியுறுத்துகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருடன் நேரடிப் பேச்சுக்களை நடத்தக் கூட அவர் தயாராக இருப்பதாக அறிவித்தார்.

ஆத்திரமூட்டும் செயற்பாடுகள் பல நிகழ்த்தப்பட்ட போதும் எமது அரச தலைவர் அமைதி முயற்சிகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு, மிகுந்த பொறுமையைக் கடைபிடித்தார்.

இந்தப் பொறுமையானது எமது பலவீனம் அல்ல. அமைதியின் மீதான எமது ஈடுபாட்டை வெளிப்படுத்துவதாகவும். அத்தகைய ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் தொடரும் நிலையில் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்படும் நிலையில் யுத்த நிறுத்தம் என்பது ஒட்டுமொத்தமாக அர்த்தமற்றதாகவே சீர்குலைந்துவிடும்.

இந்த நிலையில், உரிய தீர்வு காண்பதற்கு புதிய அணுகுமுறையை எமது அரச தலைவர் மேற்கொள்கிறார். எமது அரசாங்கம் பேச்சுக்களை நடத்தவும் கேட்கவும் புதியதாக சிந்திக்கவும் முற்படுகிறது.

சனநாயகம் மற்றும் மனித உரிமைகள்:

ஆசியாவின் நீண்டகால சனநாயகம் நிலைத்திருக்கும் நாடு எமது சிறிலங்கா. கடந்த 65 ஆண்டுகாலத்துக்கும் மேலாக எமது மக்கள் தமது பிரதிநிதிகளை அனைத்து இனக் குழுக்களுக்களிலிருந்தும் தெரிவு செய்து வருகின்றனர்.

சிங்களவர், தமிழர், முஸ்லிம், மலாய், பேர்கர் உள்ளிட்ட அனைத்து இன மக்களுக்கும் அனைத்துவிதமான உரிமைகளும் வழங்கப்பட்டிருக்கிண்றன.

எந்த ஒரு இனத்தவரும் தமது பிரதிநிதியைத் தெரிவு செய்யும் உரிமையை எமது அரசாங்கம் மறுத்தது இல்லை.

2005 ஆம் ஆண்டு சிறிலங்கா அரச தலைவர் தேர்தல் நடைபெற்ற நாள் வருத்தத்திற்குரியது.

குறிப்பிட்ட சில மாவட்டங்களில் பொதுமக்களை வாக்களிக்க விடாமல் தமிழீழ விடுதலைப் புலிகள் தடுத்தனர். கடந்த ஏப்ரல் 2004 ஆம் ஆண்டு தேர்தலின் போதும் பல இடங்களில் தேர்தல் முறைகேடுகள் நடந்தன என்பதை சர்வதேச சமூகத்தின் கண்காணிப்பாளர்கள் உறுதிப்படுத்தினர்.

இவை அனைத்தும் சனநாயகத்தை நிராகரிக்கும் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள்.

இந்த நிலையில் அர்த்தமுள்ள யுத்த நிறுத்த ஒப்பந்தம் கடைபிடிக்கப்பட, வடக்குப் பிரதேச மக்கள் சனநாயகச் செயற்பாடுகளை சுதந்திரமாக மேற்கொள்ள வேண்டும்.

இலங்கையின் வடபகுதியான கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் விடுதலைப் புலிகளினால் அனைத்து இன மக்களினது அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன.

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் வடக்கு - கிழக்குப் பகுதியில் விடுதலைப் புலிகளும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட போதும் அதை தங்களது போர் நடவடிக்கைகளுக்காவே பயன்படுத்தினர். அரசியல் பிரமுகர்களின் படுகொலைகளை நிகழ்த்தினர்.

யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்கள்:

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் முன்னுரையிலேயே போர் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றுதான் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் எமக்குக் கிடைத்திருக்கும் ஆதாரங்கள் அடிப்படையில் தங்களது இராணுவ பலத்தை அதிகரித்துக் கொள்ளவே இந்த ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் பயன்படுத்தியுள்ளனர்.

இத்தகைய செயற்பாட்டை விடுதலைப் புலிகள் கைவிட வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கம், கண்காணிப்புக் குழு, சர்வதேச சமூகம் வலியுறுத்திய போதும் அதை அவர்கள் நிராகரித்தனர். இதனால் பாரிய அளவிலான யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்கள் நிகழ்த்தப்பட்டு யுத்த நிறுத்த ஒப்பந்தம் முறிவடையும் நிலைக்கு வந்தது.

கடந்த மாதம் வரை விடுதலைப் புலிகளினால் மொத்தம் 3,519 யுத்த நிறுத்த மீறல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தால் 163 மீறல்கள் மேற்கொள்ளப்பட்டதாக கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. ஆக 96 விழுக்காடு ஒப்பந்த மீறல்களை விடுதலைப் புலிகளே மேற்கொண்டுள்ளனர்.

படுகொலைகள், சிறார் படை சேர்ப்பு, கடத்தல்கள், இளைஞர்களைக் கடத்துதல், தற்கொலைத் தாக்குதல்கள், படையினரை படுகொலை செய்தல், பொதுமக்கள், மாணவர்கள், அரசியல் பணியாளர்களைச் சித்திரவதை செய்தல் மற்றும் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தல் என்கிற வகையில் விடுதலைப் புலிகளின் யுத்த நிறுத்த மீறல்கள் உள்ளன.

இந்தச் செயற்பாடுகளினால் யுத்த நிறுத்தம் ஒப்பந்தம் சீர்குலைந்து, வடக்கு - கிழக்கில் இயல்பு நிலைமை திரும்புவதில் தடை ஏற்பட்டது.

இந்த நிலையில் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட லக்ஸ்மன் கதிர்காமருக்கு நாம் வணக்கம் செலுத்துகிறோம்.

இந்தச் சூழலில் முஸ்லிம் சமூகத்தினர் பற்றியும் நாம் சில கவலைகளைப் பகிர்ந்து கொள்கிறோம்.

விடுதலைப் புலிகளால் வடபகுதியிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் தமது வீடுகளுக்கு மீள திரும்ப இந்த ஒப்பந்தம் வகை செய்ய வேண்டும் என்று விரும்புகின்றனர். கிழக்குப் பிரதேசத்தில் அவர்களது பாதுகாப்பும் பாரிய ஆபத்தில் உள்ளது.

ஆகையால் இந்தப் பேச்சுக்களில் முஸ்லிம்களின் பிரச்சனைகளும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

ஆயுதப் போராட்டத்தால் சிறார் பாதிப்பு:

விடுதலைப் புலிகளின் படையணியில் 5,368 சிறார்கள் இருப்பதாக யுனிசெஃப் அறிக்கை தெரிவிக்கிறது. யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது முதல் சனவரி 30 ஆம் நாள் வரை சிறார் படை தொடர்பிலான 2,011 யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்களை விடுதலைப் புலிகள் மேற்கொண்டுள்ளனர். ஒட்டுமொத்த மீறல்களில் இது 55 விழுக்காடாகும்,

இது குறித்து அனைத்து சர்வதேச சமூகமும் கவலை தெரிவித்துள்ளது. சிறார் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட நபரைக் கைது செய்ய காவல்துறையினரை விடுதலைப் புலிகள் அண்மையில் கைது செய்தனர்.

சட்டம் ஒழுங்கு:

2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்குப் பின்னர் பாரிய அளவிலான படுகொலைகள் நடந்தன. ஒப்பந்தத்தின் வரையறைகள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் பாரிய அதிருப்தி கொள்கிறது.

நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க எமது அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

பாதாள உலகக் குழுக்கள், ஆயுதக் குழுக்கள், போதைப் பொருள் கடத்தும் குழுவினரை ஒடுக்குவதற்கு பாரிய நடவடிக்கைகளை எமது அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

திருகோணமலையில் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டமை, தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் கடத்தப்பட்டமை, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை போன்ற அனைத்து குற்றச் செயல்களிலும் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தக் குற்றச்செயல்களில் ஈடுபட்டோரை சட்டத்தின் முன் நிறுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பொருளாதார அபிவிருத்தி:

சிறிலங்கா அரச தலைவராக மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்ற உடன் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அறிவித்தார்.

போரினாலும் ஆழிப்பேரலையாலும் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்குப் பகுதியில் பொருளாதாரா அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க சிறப்புக் கவனம் செலுத்தப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

மகிந்த சிந்தனை மூலம் வடக்கு - கிழக்கு மாகாணங்களுக்கு ஏராளமான பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இவற்றை மகிந்த ராஜபக்ச தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தெரிவித்திருக்கிறோம்.

2004 ஆம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட ஆழிப்பேரலையால் வடக்கு - கிழக்கு மக்கள் பாரிய பாதிப்புக்குள்ளாகினர். ஆழிப்பேரலை மீளமைப்புக்காக ஏலவே பல திட்டங்களை நாம் செயற்படுத்தி வருகிறோம்.

யாழ்ப்பாணத்தில் விவசாயிகளுக்கான சலுகைகளை அறிவித்துள்ளோம்.

அர்த்தமுள்ள யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முன்னெடுப்பதின் மூலமே வடக்கு - கிழக்கின் பொருளாதார அபிவிருத்தியை நாம் மேற்கொள்ள முடியும்.

இறுதியுரை:

இன்றைய பேச்சுக்கள் ஒரு புதிய தொடக்கம். இந்தப் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டு இலக்குகளை அடையும் என்று நம்பிக்கை கொள்கிறோம்.

வன்முறையற்ற பாதையில் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் போர் நடவடிக்கைகள் தவிர்த்த நிகழ்ச்சித் திட்டத்தை விடுதலைப் புலிகள் முன்னெடுக்க வேண்டும் என்றார் நிமல சிறிபால டி சில்வா.

http://www.eelampage.com

அப்ப மீண்டும்.............??!!

அப்ப மீண்டும்.............??!!
பேச்சுவார்த்தைதான்.. நாலுபேர்வந்து உறுக்கி முறுக்கி தொடக்கப்பட்ட பேச்சுவார்ததை தொடரும்.. ஒருத்தரும் அங்கால இங்கால அசையமுடியாது..

:P

பேச்சுவார்த்தைதான்.. நாலுபேர்வந்து உறுக்கி முறுக்கி தொடக்கப்பட்ட பேச்சுவார்ததை தொடரும்.. ஒருத்தரும் அங்கால இங்கால அசையமுடியாது..

:P

ஆமா இப்படி தான் மகிந்த சொல்லி கொண்டு வந்தவர் நோர்வே வெளியேற்றம் ஆசியாவில் பேச்சு, இந்தியாவின் தலைமை, 2 மாச அடிதான் சொன்னாட் மகிந்த கூப்பிடுடா நோர்வைய் :P :P :P :P

சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங்

சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங்

பேச்சுவார்த்தை நடக்காது.. மக்கள்படை தொடரும்..???

:P

இந்த களத்தில் - சுகுமார அவர்களை - யாரும் எதிர்த்து பேசுவதை - நான் வன்மையா எதிர்க்கிறன் -

அவரே - காமராஜன் - ஊப்ஸ் ராமராஜனை - கைது செய்திட்டாங்களே - எண்ட கவலைல இருக்கார் _ :lol: 8)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ந..நா. சுகுமாறா!

பேச்சிவாத்தை நடக்குதோ இள்லையோ கிடக்க, தூல்கிங் எத்தனை கிலோக்களுடன் சுஸ்ஸுக்கு வந்தார் என்று செல்லுங்கலேன்!!

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி சுகுமார், நீரும் ராமதாசுடன் ஜெனிவாக்குப்போனிரே?.

இனி நீர் தானே தூல்கடத்துவதற்குப்பொறுப்பு?

நீங்கல்லாரும் டெமன்ஸ்ரேசன்பற்றி சொல்லுறீளா.. அந்த செய்தி யாகூல எப்போதொ படிச்சு நடந்தத அறிஞ்சிட்டனே..

:P

நீங்கல்லாரும் டெமன்ஸ்ரேசன்பற்றி சொல்லுறீளா.. அந்த செய்தி யாகூல எப்போதோ படிச்சு நடந்தத அறிஞ்சிட்டனே..

:P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓம் நானும் உதை நிதர்சனத்திலை (http://www.nitharsanam.com/?art=15470) பாத்து அறிஞ்டிட்டன் :smile2:

  • தொடங்கியவர்

எம்மிடம் தஞ்சம் கோரி வரும் சிறுவர்களுக்கு தஞ்சமும் பாதுகாப்பும் அளிக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு: அரசியல்துறை பொறுப்பாளர் ஜெனீவாவில் உரை

தமிழர் தாயகத்தின் இராணுவ ஆக்கிரமிப்புப் பிரதேசங்களில் இளம் சிறார்கள் இராணுவ வன்முறைகளுக்கு அஞ்சி அப்பிரதேசங்களிலிருந்து வெளியேறி எமது அமைப்பிடம் தஞ்சம் கோரி வந்தவண்ணமுள்ளனர். அவர்களுக்கு தஞ்சமும் பாதுகாப்பும் அளிக்க வேண்டிய தேவை ஓர் பொறுப்புள்ள விடுதலை இயக்கம் என்ற வகையில் எமக்கு உண்டு. இவ்வாறு தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வடக்கு கிழக்கில் சிறுவர் நிலைபற்றிப் பேச்சுவார்த்தை மேசையில் ஆற்றிய உரையின் போது தெரிவித்திருக்கின்றார்.

வடக்கு கிழக்கில் சிறுவர் நிலைபற்றிப் பேச்சுவார்த்தை மேசையில் திரு. தமிழ்ச்செல்வன் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:-

வயது குறைந்த சிறுவர்களை விடுதலைப்புலிகள் தமது அமைப்பில் சேர்த்துக் கொள்ளல் தொடர்பாக எழும் குற்றச்சாட்டுக்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்துடன் நேரடித் தொடர்பற்றவையாயினும் கூட இரண்டு தசாப்த யுத்தத்தினாலும் சிறுவர்களின் அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படும் சூழலினாலும் இந்த விடயம் குறித்து ஒப்பந்த அமுலாக்கல் பற்றிப் பேசும் சந்தர்ப்பத்தில் குறிப்பிடுவது அவசியமான தேவையாகிறது. யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்து 4 வருடங்கள் கடந்த நிலையிலும் 20 வருட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வில் இயல்பு நிலை தோன்றாத சூழலில் யுத்தத்தால் பெற்றோர் கொல்லப்பட்டு பாடசாலைகளும் வணக்கத் தலங்களும் அரச படைகளின் குண்டு வீச்சுக்கு இலக்காகி ஆயிரக்கணககான பிள்ளைகள் பெற்றோரை இழந்து ஏதிலிகளாக்கப்பட்டனர். இந்த அவலநிலையை குழந்தைகளின் நலன்களில் கரிசனை காட்டும் அரச தூதுக்குழுவினர் அந்தந்த இடங்களை நேரில் சென்று பார்த்தாலே புரிந்துகொள்ள முடியும்.

அண்மையில் திருகோணமலையில் அரச படைகளால் மிகவும் கொடூரமாகக் கொல்லப்பட்ட ஐந்து மாணவர்கள் பற்றியும் கொடிகாமம் வரணியில் தாய் தந்தையோடு உறங்கிக்கொண்டிருந்த 15 வயதுச் சிறுவன் கதறக் கதற சிறிலங்காப் படைகளால் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவங்கள் பல்கலைக்கழக மாணவர்கள் பேராசிரியர்கள் உபவேந்தர் உட்படப் பலர் மிகமோசமான முறையில் தாக்கப்பட்டமை போன்ற சம்பவங்களும் சுட்டிக் காட்டப்பட்டது.

அத்துடன் உங்களுடைய அரசாங்கத்தால் கட்டவிழ்த்துவிடப்பட்ட இனப்படுகொலைகளாலும் அப்பாவி மக்கள் மீதான தாக்குதல்களாலும் குறிப்பாகப் பாடசாலைகள் ஆலயங்கள் குடியிருப்புக்கள் மீதான தாக்குதல்களாலும் எமது பல்லாயிரக் கணக்கான சிறுவர்கள் கொல்லப்பட்டமையையும் பெற்றோர் மற்றும் உறவினரை இழந்த ஆயிரக்கணக்கான சிறுவர்களை எமது அமைப்புப் பொறுப்பேற்றுப் புனர்வாழ்வளித்துப் பராமரித்து வருவதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

தமிழர் தாயகத்தின் இராணுவ ஆக்கிரமிப்புப் பிரதேசங்களில் இளம் சிறார்கள் இராணுவ வன்முறைகளுக்கு அஞ்சி அப்பிரதேசங்களிலிருந்து வெளியேறி எமது அமைப்பிடம் தஞ்சம் கோரி வந்தவண்ணமுள்ளனர். அவர்களுக்கு தஞ்சமும் பாதுகாப்பும் அளிக்க வேண்டிய தேவை ஓர் பொறுப்புள்ள விடுதலை இயக்கம் என்ற வகையில் எமக்கு உண்டு. இத்தேவையை நிறைவேற்றுவதற்காக ஆயிரக்கணக்கான சிறார்களை அவர்களுக்காக அமைக்கப்பட்ட இல்லங்களில் பாதுகாப்பாகத் தங்க வைத்து கல்வி தேவைப்படும் இடத்தில் தொழில்கல்வி என்பவற்றை எமது அமைப்பு வழங்கிக்கொண்டிருக்கிறது.

இந்த உண்மைகளை நேரில் பார்த்து நிலமைகளை சீர்செய்வதை விடுத்து சிறிலங்கா அரசு விடுதலைப்புலிகள் வயது குறைந்தோரைப் படையில் சேர்க்கிறார்கள் என்று தவறான பரப்புரையைச் செய்துவருகிறது. சிறுவர் நலன் தொடர்பாக நாங்கள் ருNஐஊநுகு அமைப்புடன் ஒரு வேலைத்திட்டத்தை ஒழுங்கமைத்து செயற்பட்டு வருகிறோம். இதற்கென சமாதான செயலகத்தின் அனுசரணையுடன் விசேட செயற்குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

ருNஐஊநுகு இன் அறிக்கைகளில் எண்ணிக்கை தொடர்பான தவறுகள் இருப்பதை பல தடவைகளில் நாம் சுட்டிக்காட்ட நேர்ந்தது. அத்துடன் வயது குறைந்தோர் என்று இனங்காணப்பட்டவர்கள் காலத்திற்குக் காலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவது இந்த எண்ணிக்கைகளில் பிரதிபலிக்கப்படாமல் இருப்பது குறித்து சுட்டிக்காட்டப்பட்டபொழுது ருNஐஊநுகு அதனை ஏற்றுக்கொண்டுள்ளது.

நான்கு வருடங்களாகியும் சமாதானத்தின் பெறுபேறுகள் மக்களைச் சென்றடையாத நிலையில் வறுமை பெற்றோரின்மை வேலை வாய்ப்பின்மை சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்ல முடியாதவை போன்றவை சிறுவர்களைத் தொடர்ந்தும் பாதிக்கும் காரணிகளாகவுள்ளன. இராணுவ ஆக்கிரமிப்பிற்குட்பட்ட பிரதேசங்களில் பாடசாலைச் சிறுவர்கள் இராணுவ சோதனைக் கெடுபிடிகளுக்குட்பட்டே அன்றாடம் பாடசாலை செல்லும்நிலை இருப்பதும் சுற்றிவளைப்புக்களால் ஏற்படும் பீதியும் சிறுவர்களையும் பல்கலைக்கழக மாணவர்களையும் அப்பிரதேசங்களிலிருந்து வெளியேறி எமது நிர்வாகப் பிரதேசத்தினுள் வருவதற்கு நிர்ப்பந்திக்கின்றன.

வயது குறைந்தோரை அமைப்பில் சேர்ப்பது தொடர்பான குற்றச்சாட்டுக்கள் கிழக்கு மாகாணத்திலேயே பெருமளவில் இருந்தன. தவறான நடவடிக்கைகளுக்காக எமது அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட கருணாவின் காலத்தில் தலைமைப்பீடத்தின் கொள்கைக்கு மாறாக பலவந்தமாகச் சேர்க்கப்பட்ட 2000 இற்கு மேலான வயது குறைந்த சிறார்கள் பெற்றோரிடம் சேர்க்கப்பட்டனர். இது எமது அமைப்பு சிறுவர் ஆட்சேர்ப்புத் தொடர்பாகக் கடைப்பிடிக்கும் சர்வதேசக் கோட்பாட்டு நியமங்களை மதிப்பதென்ற நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தும் ஓர் அம்சமெனலாம்.

அண்மை நாட்களில் அரச படைகளுடன் சேர்ந்தியங்கும் கருணா குழுவினர் பலவந்தமாகக் கடத்திச் சென்று ஆயதப் பயிற்சி கொடுத்த 14 15 16 வயதுச் சிறுவர்கள் சிறிலங்கா இராணுவ முகாம்களில் தமக்குப் பயிற்சியளிக்கப்பட்டதை வெளிப்படுத்தியுள்ளனர். போரில் சிறுவர்களைப் பயன்படுத்துவது தொடர்பான சர்வதேச நியமங்களை நாம் மதிக்கும் அதேவேளை போரினால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்குக் கல்வி பெற்றோரின் வாழ்வுநிலை உயர்வு போசாக்கு சுகாதாரம் போன்றவற்றில் உண்மையான அக்கறையுடன் செயற்படுவது அவசியமேயன்றி சிறுவர் பிரச்சினையை அரசியலாக்கி விவாதம் செய்வது பொருத்தமற்றது.

யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின் எந்தவொரு சரத்துமே படைக்கு ஆட்சேர்ப்பதைத் தடைசெய்யாத நிலையில் போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் ஆணை வரையறைக்குள் இந்த விடயம் பிரச்சினைக்குரியதாகாது. மாறாக சிறுவர் தொடர்பான முறைப்பாடு வரும் சந்தர்ப்பங்களில் அதற்கெனப் பணிபுரியும் ருNஐஊநுகு அமைப்பிடமும் எமது அமைப்பிடமும் சமர்ப்பிப்பதே பொருத்தமானதாகும்.

சிறுவர்கள் தொடர்பான கரிசனை உள்ளவர்கள் வடக்குக் கிழக்கையும் விடுதலைப்புலிகள் அமைப்பையும் தெரிவு செய்து விமர்சனத்திற்குள்ளாக்குவதை

  • தொடங்கியவர்

ஜெனீவா பேச்சுக்கள் நிறைவடைந்தன

ஜெனீவாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையேயான பேச்சுக்கள் இன்று வியாழக்கிழமை நிறைவடைந்துள்ளன.

இப்பேச்சுக்களின் முடிவு விவரங்கள் தற்போது நடைபெற உள்ள ஊடகவியலாளர் மாநாட்டில் அறிவிக்கப்பட உள்ளது.

பெருந்திரளான ஊடகவியலாளர்கள் இம்மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஊடகவியலாளர்கள் மாநாட்டில் கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்படக் கூடும் என்றும் ஜெனீவா செய்திகள் தெரிவிக்கின்றன.

புதினம்

பேச்சு தொடரவேண்டும்.. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஏப்பிறல் 19-21 ஜெனீவாவில் நடைபெறும்..

:P

பேச்சு தொடரவேண்டும்.. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஏப்றல் 19-21 ஜெனீவாவில் நடைபெறும்..

:P

பேச்சு தொடரவேண்டும்.. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஏப்பிறல் 19-21 ஜெனீவாவில் நடைபெறும்..

:P

பேச்சுவார்த்தையில எதிர்வுகூறின பதில் ஏதுமில்லயா.... எல்லாரும் மௌனமா இருக்கீக..

:P

உனது அப்பன் செய்த கொடுமையை கண்ணால் கான 10 மாசம் உனது அம்மா காத்து இருந்தாள், இலங்கை அரசின் கொடுமைகளை நிப்பாட்ட என்னும் காலம் தேவையாம் காத்திரு

நீயும் உனது நக்கலும் கடவுளின் கழிவில் பிறந்தவனே

பேச்சுவார்த்தையில எதிர்வுகூறின பதில் ஏதுமில்லயா.... எல்லாரும் மௌனமா இருக்கீக..

:P

சுகுமாரன் உங்க ஒட்டு குழுக்களின் ஆயுதங்கள் பறிக்கப்பட்டால் அரைவாசி பிரச்சினை தீர்ந்துவிடும், முக்கியமா ஜிகாத்திட்ட பறிக்கனும்.

சுகுமாரன் உங்க ஒட்டு குழுக்களின் ஆயுதங்கள் பறிக்கப்பட்டால் அரைவாசி பிரச்சினை தீர்ந்துவிடும், முக்கியமா ஜிகாத்திட்ட பறிக்கனும்.

தொப்பிகளால் உலகதுக்கும் நின்மதி இல்லை, இலங்கை தொப்பிகளால் எமக்கும் நின்மதி இல்லை

சுகுமரானால் பெற்ற தாய்க்கும் நின்மதி இல்லை அப்பன் பெயர் தெரியவில்லையாம் :P :P :P :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.