Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எரிக் சொல்ஹெய்ம் புதுடெல்லி விஜயம்!

Featured Replies

எரிக் சொல்ஹெய்ம் புதுடெல்லி விஜயம்!

நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும், இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் புதுடெல்லிக்கு விஜயம் செய்துள்ளார்.

ஜெனிவாவில் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 19வது கூட்டத் தொடரில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான தீர்மானத்தை கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள மேற்கத்தேய நாடுகள், இந்தியாவின் ஆதரவைப் பெறும் முயற்சிகளில் இறங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக அமெரிக்காவின் ஆதரவுடன் கொண்டு வரப்படவுள்ள இத்தீர்மானம் குறித்து அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஹில்லரி கிளின்டன் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரஸூக்கு கடந்த வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக தெரியப்படுத்தியிருந்தார்.

அத்துடன், இவ்விகாரம் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸை அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஹில்லரி கிளின்டன் வொஷிங்டனுக்கு அழைத்துள்ளார்.

இதனிடையில், சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான இத்தீர்மானத்துக்கு இந்தியாவும் ஆதரவு வழங்குவதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

அதேவேளை, இத்தீர்மானம் தொடர்பில் இந்தியாவின் ஆதரவை உறுதிப்படுத்திக் கொள்ளும் முயற்சிகளில் மேற்கத்தேய நாடுகள் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதன் ஒரு கட்டமாக நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும், இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் புதுடெல்லிக்கு விஜயம் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

இது தொடர்பில் இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுடன் எரிக் சொல்ஹெய்ம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்துடன், அமெரிக்கத் தரப்பிலும் சில உயர்மட்ட அதிகாரிகள் புதுடெல்லிக்கு விஜயம் செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிய வருகின்றது.

அதேவேளை, இந்தியாவின் ஆதரவைத் தக்க வைப்பதற்கான முயற்சிகளில் சிறிலங்கா அரசாங்கம் இறங்கியுள்ளது. சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கடந்த மாதம் 24ஆம் திகதி புதுடில்லிக்கு குறுகிய பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அத்துடன், இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான பாதுகாப்புக் கருத்தரங்கில் கலந்து கொண்டுள்ள சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஜெனிவா தீர்மானம் குறித்து இந்திய உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படுவதற்கு இந்தியா ஆதரவு வழங்;குமானால், அது சிறிலங்கா அரசாங்கத்துக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்துவதாக அமையும் எனக் கருதப்படுகிறது.

அதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் போர்க்குற்ற விவகாரங்களுக்கான விஷேட தூதுவர் ஸ்டிபன் ரப் (Stephen Rapp) இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=eb191f99-a5b3-44b5-bc80-f65cccbd9eb1

  • தொடங்கியவர்

குறிப்பிட்ட திகதிக்கு முன்னரே அமெரிக்காவுக்கு ஓடுகிறது அரசு; பிரேரணையைத் தடுக்கப் பிரயத்தனம்

அமெரிக்கா விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ள இலங்கை அரசு, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான உயர்மட்டக் குழுவொன்றை நியூயோர்க்குக்கு அனுப்புவதற்குத் தீர்மானித்துள்ளது என நம்பகரமாகத் தெரியவருகிறது.

வெள்ளைமாளிகை கொழும்புக்கு எழுதிய கடிதம் தொடர்பில் தமது உயர்மட்ட இராஜதந்திரிகளுடன் மந்திராலோசனை நடத்திய பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளார் என்று உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

மார்ச் மாதமளவில் அமெரிக்கா வருமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், குறிப்பிட்ட திகதிக்கு முன்னரே இலங்கைக்குழு அங்கு செல்வதற்கு உத்தேசித்துள்ள தெனக் கூறப்படுகின்றது.

ஜெனிவா மாநாட்டை இலக்கு வைத்தே இலங்கை இந்தக் காய்நகர்த்தலை முன்னெடுத்துள்ளது என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறினாலும், இதுவிடயம் தொடர்பில் அரசு இன்னும் உத்தியோகபூர்வமாக எதனையும் அறிவிக்கவில்லை.

இதேவேளை, ஜெனிவாக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை ஆதரிப்பதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ள நிலையில், அந்த முடிவை மாற்றியமைக்கும் நோக்கிலேயே ஜெனிவாத் தொடருக்கு முன்னரே இலங்கை உயர்மட்டக்குழு அங்கு செல்வதற்கு எத்தனிக்கின்றது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப் பட்டுவரும் அபிவிருத்தி நடவடிக்கைகள், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், மனிதஉரிமைகள் செயற்றிட்டம் உட்பட முக்கியமான சில விடயங்கள் குறித்து அமெரிக்காவுக்குத் தெளிவுபடுத்தி அதன் நிலைப்பாட்டை மாற்றும் நோக்கிலேயே தமது விஜயத்தை இலங்கைக்குழு துரிதப்படுத்துவதற்கு உத்தேசித்துள்ளது என இராஜதந்திர மட்டத்திலான தகவல்கள் தெரிவித்தாலும், அமெரிக்கா இறுதிவரை உறுதியாகவிருக்கும் என மேற்குலக இராஜதந்திரிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, நல்லிணக்கப்பாடு, கடப்பாடுகள், வடமாகாண சபைத்தேர்தல் உட்பட முக்கியமான சில விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு வருமாறு கோரி அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் பீரிஸுக்கு அண்மையில் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://184.107.230.170/~onlineut/News_More.php?id=73561795602548271

  • தொடங்கியவர்

இந்த செய்திகள் பற்றி பரபரப்பு, இல்லை விறுவிறுப்பு ஏதாவது புலனாய்வு செய்திகள் வெளியிடுமா?? :D

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் ஈரானை வீழ்த்தும் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளின் முயற்சிக்கு இந்தியாவும் சிறிலங்காவும் ஆதரவு வழங்கினால் இலங்கை போர்குற்ற விசாரணையில்யிருந்து தப்புவதற்கு ஆதரவு வழங்கப்படும் என்ற நிபந்தனையை அமெரிக்கா இலங்கை அரசின் முன் வைக்கவிருக்கிறது போல் எனக்குத் தெரிகிறது. அதுதான் வாசிங்டனுக்கு வந்து பேசும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வேறுவிதமாகவிருந்தால் அதை இலங்கையில் வைத்தே பேசிமுடித்திருப்பார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Srilanka depends on iranian oil for 93% of its needs and will be devastated by looming sanctions on Iran. As US officials head to colombo to discuss alternatives for Sri Lanka, they also ask that war crimes report be opened up to UN scrutiny.

The Fog of an Uncivil War in Sri Lanka

rendezvous.blogs.nytimes.com

It has been nearly three years since Sri Lankan government troops crushed the separatist Tamil Tigers in a gory, scorched-earth campaign that brought an end to three decades of civil war. But the fog of war has still not lifted: Sri Lanka said Tuesday that it won't be sending a review of alleged war...

  • தொடங்கியவர்

ஐ. நாவையும், அதன் கிளை உறுப்புகளையும் கேள்வி கேட்கவும், அவற்றின் போலி முகமூடிகளை கிழிக்கவும் உலகத் தமிழரினம் தயாராக வேண்டும்.

நமது அடுத்த கட்ட ஈழப்போர் என்பது துப்பாக்கி முனையிலோ, சிங்களவர்களிடத்திலோ நடக்கப்போவது அல்ல. மாறாக அது சர்வதேசத்திற்கும் - தமிழர்களுக்கும் இடையேயும்;

போலி தாராளவாத மேற்குலக வாக்குறுதிகளுக்கும், பொய்மையை கிழித்தெடுக்கும் தமிழரின் அறத்திற்கும் இடையே நடக்கும் போராக இருக்கும்.

களம் மாறி இருக்கிறது. ஆயுதம் மாறி இருக்கிறது. போருக்கான காரணம் மாறவில்லை.

(முக நூல் ஊடாக)

இந்தியக் காட்டுமிராண்டி கிருஷ்ணா சிங்களப் பயங்கரவாதிகளிடம் எடுத்துக் கொண்டுவந்த பிச்சையில் பங்கு கேட்க வந்திருப்பான்!

சிங்களவன் எமக்கு எதிரியாக இருக்கிறான். அவனை நமக்கு தெரியும்.

இந்தியா பக்கத்திலிருக்கு என்று, உதவி போய்க்கேடக நஞ்சு வேலை செய்த்தது. இனி நாம் கவனமாக இருப்போம்.

எங்கோவோ இருந்து வந்து தேவை எதுவும் இல்லாமல் நல்லவர்களாக நடித்து, தம்மை நம்ப வைத்து ஏய்த்தவர்கள் இந்த கூட்டம். இது இந்தியாவுக்கு போகுதாயின் அதன் விளக்கம் சாமி வரம் கொடுக்க நினைத்தாலும் பூசாரி அதை கெடுக்க போகிறான் என்பதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் ஈரானை வீழ்த்தும் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளின் முயற்சிக்கு இந்தியாவும் சிறிலங்காவும் ஆதரவு வழங்கினால் இலங்கை போர்குற்ற விசாரணையில்யிருந்து தப்புவதற்கு ஆதரவு வழங்கப்படும் என்ற நிபந்தனையை அமெரிக்கா இலங்கை அரசின் முன் வைக்கவிருக்கிறது போல் எனக்குத் தெரிகிறது. அதுதான் வாசிங்டனுக்கு வந்து பேசும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வேறுவிதமாகவிருந்தால் அதை இலங்கையில் வைத்தே பேசிமுடித்திருப்பார்கள்.

போரை இஸ்ரேல் தான் முன்னின்று நடாத்தப்போகிறது.அமெரிக்காவின் வீட்டோ பவர் மட்டுமே இஸ்ரேலுக்கு போதுமானது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.