Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தன்னை வெளிநாட்டு ஊடகர் ஒருவர் இலக்கு வைத்துவிட்டாராம்! சவேந்திர சில்வா.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sawendra-silva150Enews.jpg

ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வு ஆரம்பமாக உள்ள நிலையில், தனக்கு முழு அளவில் அவமதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் குறிப்பிட்டதொரு வெளிநாட்டு ஊடகவியலாளர் ஈடுபட்டிருப்பதாக ஐ.நா.வுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிட பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.

ஐ.நா.வின் அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்கான விசேட ஆலோசனைக்குழுவில் சில்வாவை ஐ.நா. நியமித்திருப்பது தொடர்பாக விமர்சிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைக் குழுக்கள் சிலவற்றால் அவருக்கெதிராக போர்க்குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டிருப்பதையடுத்து இந்த விமர்சனங்கள் எழுந்திருந்தன.

இலங்கைக்கெதிராக குறிப்பிட்ட ஒரு ஊடகவியலாளர் எப்போதுமே தரக்குறைவான நோக்கத்துடன் செயற்பட்டு வருவதாக சில்வா அரச வானொலிக்குத் தெரிவித்ததாக சன்டே லீடர் இணையத்தளம் குறிப்பிட்டிருக்கிறது.

அந்த ஊடகவியலாளர் இப்போது ஆதரமற்ற போர்க்குற்றச்சாட்டுகள் மூலம் உள்ளூர் மற்றும் சர்வதேச சமூகத்தின் முன்னால் தனக்கு அவமதிப்பை ஏற்படுத்த முயற்சிப்பதாக அவர் கூறியுள்ளார். அந்த ஊடகவியலாளர்களின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. ஆயினும் நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. விவகாரங்கள் குறித்து செய்தி சேகரிக்கும் நிருபரே அவர் என நம்பப்படுகிறது.

அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கான விசேட ஆலோசனைக்குழுவில் ஐ.நா. செயலாளர் நாயகமே தம்மை நியமித்திருப்பதாக சில்வா கூறுகிறார். இந்த நியமனத்தைத் தொடர்ந்து தமக்கெதிரான குற்றச்சாட்டுகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட ஊடகவியலாளர் சில காலம் மௌனமாக இருந்ததாகவும் பின்னர் மீண்டும் ஜெனீவாவில் மனித உரிமைக்குழுவின் அமர்வு இடம்பெறவுள்ள நிலையில், இலக்கு வைக்கும் முயற்சிகளை ஆரம்பித்திருப்பதாக சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

http://www.seithy.co...&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீ ஒரு கொலைகாரன் போர் குற்றவாளி எங்கு ஓடினாலும் செய்த ஊழ் வினை உன்னை துரத்தும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர் விரைவில் ஐநா பதவியில் இருந்து தூக்கபடலாம் என்று எதிபார்க்கலாம்.

US rep for UN Susan Rice........

on Silva, Rice told Inner City Press, "it's very concerning that someone with his background would be selected to serve on this advisory group. We have conveyed this to member states, as well as to the Secretariat. There are a lot of efforts underway to address [this, probably best not to be discussed publicly."

http://innercitypress.com/silva1usgsusun021712.html

Inner City Press: Investigative Reporting from the United Nations

innercitypress.com

InnerCityPress.com is engaged these days in investigative journalism from the United Nations, including the World Bank, the IMF, the UN Development Program and the five continents

இது மத்தியூ இல்லையப்பா, சந்துலாவின் வேலை. அந்த மனுசிதான் தெரிஞ்சவை எல்லாரிடமும் சொல்லி மாட்டி வைக்குது. எய்தவன் இருக்க அம்பை நொந்தால் அந்த நேரத்தில் இன்னொரு அம்பு வரப்போகுது. கவனம்.

Edited by மல்லையூரான்

கொஞ்சக்காலத்திற்கு முன்னராக ஐம்பது அமெரிக்க டாலர்கள் இந்த முகவரிக்கு அனுப்பினேன். இப்பொழுது பேபால் வசதியும் உள்ளது. மீண்டும் உதவ உத்தேசித்துள்ளேன்.

http://www.innercitypress.org/contrib.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.