Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்திய இராஜதந்திரத்தின் படுதோல்வியும் சீனாவின் அமோக வெற்றியும்

Featured Replies

இந்திய இராஜதந்திரத்தின் படுதோல்வியும்

சீனாவின் அமோக வெற்றியும்!

சீனாவின் இராஜதந்திரம் மெல்ல மெல்ல மேற்காக நகர்ந்து தென்னாசியாவில் இந்தியாவின் குரல்வளையை ஏறத்தாழ பிடித்துவிட்டது. மேற்கண்ட கருத்தை அமெரிக்கா முன் வைத்துள்ளது.

முதலாவது இந்திய பார்ப்பனிய இராஜதந்திரம் அடிப்படை துவேஷம் கொண்டது என்பதால் அது தனக்கு அயலில் உள்ள அத்தனை தென்னாசிய நாடுகளையும் ஆண்டான் அடிமை நிலையில் பார்த்து வந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு தென்னாசியாவில் உள்ள அத்தனை நாடுகளின் இரகசியமான முதல் எதிரியாக இந்தியா மாறியது. எல்லா நாடுகளும் இந்தியா நமது தொப்புள் கொடி உறவு, இந்தியாவை பகைத்து எதுவுமே செய்ய முடியாது என்று பேசியபடியே இரகசியமாக சீனாவுடன் கை கோர்த்துவிட்டன.

இந்தியாவுக்கு ஆதரவாக இருந்த ஈழத் தமிழினம் தமது முதல் எதிரியாக இன்று இந்தியாவை கருதுவதை பல செய்திகளும் உணர்த்துகின்றன. உதாரணமாக சென்ற வாரம் வன்னி மக்கள் நாங்கள் இந்தியாவை நம்பவில்வை அமெரிக்காவையே நம்புகிறோம் என்று அமெரிக்க பிரதிநிதியிடம் தெட்டத் தெளிவாக தெரிவித்திருந்தனர். இந்த நிலைக்கு அவர்கள் வரக் காரணம் எது..? இந்தியாவின் கொள்கை வகுப்பாளரின் தோல்வியடைந்த இராஜதந்திரமே.

தன்னுடைய காலில் பட்ட புல்லை அரைத்து குடித்துவிட வேண்டுமென கொள்கை வகுத்தவன் இந்திய இராஜதந்திரி சாணாக்கியன். அவனுடைய கொள்கை தோல்வியடைந்துதான் இந்தியா மேலை நாடுகளுக்கு பல நூற்றாண்டுகள் அடிமையானது. சுதந்திரத்தின் பின்னாவது அந்தக் கொள்கையின் தோல்வியை இந்தியா மறு மதிப்பீடு செய்திருக்க வேண்டும், ஆனால் செய்யவில்லை. இன்று எல்லாவற்றையும் இழந்து நிற்கும் இந்தியா குறித்து அமெரிக்கா வெளியிட்ட கருத்துக்கள் மிக மோசமானவையாக உள்ளன.

விடுதலைப் புலிகளை வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டுமென இந்தியா தம்மிடம் சொன்னதாக நோர்வே கடந்த டிசம்பர் தெட்டத் தெளிவாக அறிக்கை வெளியிட்டிருந்தது. விடுதலைப்புலிகள் மட்டுமா.. பாகிஸ்தான், நேபாளம், பூட்டான், சீக்கிம், சிறீலங்கா, வங்காளதேசம் என்று அத்தனை தென்னாசிய நாடுகளையும் இந்தியா இவ்வாறுதான் கருதியது. இதன் பரிசே இன்று சீனாவின் வெற்றியாக உள்ளது. இது குறித்து வெளியான செய்தி :

சீனாவின் நடவடிக்கைகள் குறித்து கவலை அடைந்துள்ள இந்தியா தனது திறனை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது” என அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் இயக்குநர் ரொனால்டு பர்கீஸ் தெரிவித்தார்.

இந்தியாவை சுற்றி வங்கதேசம், பாகிஸ்தான், மியான்மர், மாலத்தீவு, இலங்கை ஆகிய நாடுகளில் ஏற்கெனவே சீனா தனது ராணுவ நிலைகளை வலுப்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் கத்வாரில் துறைமுகத்தை சீரமைத்து அங்கே தமது படைகளை நிறுத்தியுள்ளது. மாலத்தீவில் அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கிக் கப்பல்தளத்தை அமைத்திருக்கிறது. இதனால் இந்தியாவின் கவலை மேலும் அதிகரித்துள்ளது.

பதிலடியாக 6 ஆயிரம் கிலோமீட்டர் பறந்துசென்று தாக்கக்கூடிய ஏவுகணையை வடிவமைத்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை பல்வேறு போர் ஆயுதங்களை சுமந்துசெல்லக்கூடிய திறன்வாய்ந்தது. இந்தியா அதை பரிசோதிக்க தீவிரமாக உள்ளது என செனட் குழுவினரிடம் ரொனால்டு பர்கீஸ் தகவல் அளித்துள்ளார்.

சமீபத்தில் அமெரிக்க தேசிய புலனாய்வு மையத்தின் இயக்குநர் கிளெப்பரும் இதே தகவலைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் அம்பந்தோட்டை துறைமுகத்தை சீரமைத்து வலுவாக நிலை கொண்டிருக்கிறது. வங்கதேசத்தின் சிட்டகாங்க், மியான்மரின் காக்கோஸ் தீவுகளிலும் தமது கடற்படையை நிலைநிறுத்தியிருக்கிறது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் மூளுமேயானால் எந்த சிரமுமின்றி இந்திய கடற்பரப்புக்குள் தமது படைகளை நிலை நிறுத்திக் கொள்ளும் திட்டத்தை நீண்டகாலமாகவே சீனா மேற்கொண்டு வருகிறது.

ஆனால் இந்தியாதான், இலங்கை வழியாக சீனா உள்ளே வர வலியப் போய் வாசல் கதவைத் திறந்து வைத்து விட்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.alaikal.com/news/?p=97245

Edited by akootha

  • தொடங்கியவர்

தென்னாசியாவின் இன்னொரு சாபக்கேடு இந்தியா – பாக் பிரச்சனை

ஏற்கெனவே தென்னாசியாவின் சாபக்கேடாக சிறீலங்காவின் நடவடிக்கைகள் அமைந்து சீனா அதன் வழியாக உள்ளே நுழைந்துவிட்டது. இதுபோல பாகிஸ்தானுடன் இந்தியா கொண்ட பகையால் அங்கும் சீனா நுழைந்துவிட்டது. சீனாவின் சுற்றி வளைப்பில் வகையாக மாட்டிவிட்டது இந்திய இராஜதந்திரம் என்று கூறிய அமெரிக்கா இப்போது பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் நல்லுறவு வராது என்று தெளிவாக சொல்லியுள்ளது. ஆக எல்லாவற்றையும் கோட்டைவிட்டுள்ளது இந்திய இராஜதந்திரம் என்பதே இதன் பெறுபேறாகும். குறைந்தபட்சம் இலங்கையின் தமிழரைக்கூட தமது நிரந்தர விரோதிகளாக்கிவிட்டது இந்திய இராஜதந்திரம்.

இந்தியா – அமெரிக்கா இடையே அமைதி ஏற்படுத்துவது மிகவும் கஷ்டம் என்று அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்க செனட் சபையின் ஆயுத சேவைகள் குழு முன்னர் ஆஜராகி அவர்களது கேள்விக்கு அமெரிக்க தேசிய புலனாய்வு பிரிவின் இயக்குனர் ஜேம்ஸ் கிளாப்பர் பதிலளித்தார்.

அப்போது கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கிளாப்பர், இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏராளமான பதிலுக்குப்பதிலான பிரச்னைகள் இருப்பதே, அவ்விரு நாடுகளுக்குமிடையே அமைதி ஏற்படுத்துவது கஷ்டமான காரியமாக உள்ளது என்றும், இது தொடர்பாக விரிவாக விளக்க மற்றொரு அமர்வு தேவைப்படும் என்றும் கூறினார்.

http://www.alaikal.com/news/?p=97262

Edited by akootha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.economist.com/node/21547855

இந்த கட்டுரையின் படி இந்தியா, அண்டைய நாடுகளுடன் மிகவும் நட்புடன் உள்ளதாக சொல்லபட்டுள்ளது.

INDIA’S foreign minister, S.M. Krishna, gushes about the close “civilisational, cultural” ties his country shares with Sri Lanka. He notes how India is the biggest trading partner and source of tourists for the island nation, plus one of the largest investors. It dishes out pots of aid, including roughly $300m for 50,000 Tamils, displaced in a brutal civil war that ended in 2009, to build houses near Kilinochchi and Jaffna in Sri Lanka’s north. And India is building a power station, and renovating railways and a port.

Memories in Sri Lanka of India’s troubled role in the long and bitter civil war appear to be fading. Meanwhile, India, officially, does not worry about signs of its neighbour’s dalliance with China. That is despite the news last month that Chinese investors took 85% control of the project extending Colombo’s main commercial port, which handles goods traded almost entirely with India. “Sri Lanka is sensitive to the security concerns of India,” says the foreign minister, reassured.

But regardless, Mr Krishna says, India does not (any longer) meddle in the affairs of its neighbours. “We will not destabilise or divide a nation”, he says firmly. The desire to ward off any resentment at India throwing its weight about the region is a fairly recent phenomenon. It may explain India’s inaction last week in the Maldives, when an elected ally, President Mohamed Nasheed, was toppled in what looks very much like a coup.

Hawkish Indians, such as Brahma Chellaney, a foreign-affairs type in Delhi, lament that as a result India’s “clout is eroded, and its ability to shape events is waning.” For Mr Chellaney, the Maldives is the latest example. Yet the cautious approach, combined with growing largesse, may win allies in the long term.

Edited by Queen

இந்திய இராஜதந்திரத்தின் படுதோல்வியும்

சீனாவின் அமோக வெற்றியும்!

இப்படி எழுதினால் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்

இந்திய இராஜ மந்த்திரத்தின் படுதோல்வியும் சீன இராஜதந்திரத்தின் படு வெற்றியும்

ஈழத்தமிழினத்தைப் படுகொலை செய்த பாவத்துக்கு இந்தியாவை சீனா அழிக்கவேண்டும். அல்லது இந்தியா சோவியத்யூனியன் மாதிரி உடைய வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழினத்தைப் படுகொலை செய்த பாவத்துக்கு இந்தியாவை சீனா அழிக்கவேண்டும். அல்லது இந்தியா சோவியத்யூனியன் மாதிரி உடைய வேண்டும்

எங்களை அழித்த இந்தியக் அகயவர்கள் நாசமாகப் போவார்களாக. சீனா எங்களுக்கு நண்பனோ இல்லையோ, ஆனால் இந்தியாவை அவர்கள் அழித்தால் நிச்சயம் நான் சதோசப்படுவேன்.

சீனத்தின் வரவுதான் இந்தியாவைத் திருத்த முடியும். இன்றைய உலக ஒழுங்கில் இந்திய சீனப் போர் என்பது நடைபெற முடியாத ஒன்று. இரு நாடுகளின் நலன்களும் இந்தப் போர் விடயத்தில் அடங்கியிருக்கின்றன. அமெரிக்கக் கருத்தும் போர் பற்றிய எதிர்வு கூறலாக இல்லை.

மாறாக இந்தியாவின் அயல் நாடுகள் சீனாவுடன் உறவுகளை மேற்கொண்டு வருவது வெளிப்படையாகவேயுள்ளது. காரணம் அயல் நாடுகளின் உள்நாட்டுப் பிரச்சனைகளை தமக்குச் சார்பாகப் பயன் படுத்த விளைந்ததன் முடிவுவே. சீன ஆதிக்கத்தின் நகர்வுகள் நிச்சயமாக இந்தியாவைச் சூழ்ந்துள்ள நாடுகளில் உள்நாட்டுக் கலவரங்களைத் தோற்றுவிக்கும் வாய்ப்புகளைக் கொண்டதாகத்தான் இருக்கும். சீனாவின் சந்தைத் தேவைகளும், அதன் மனிதவலுப் பெருக்கங்களும் பசிபிக் பிராந்திய நாடுகளிடையே அச்சம் கொள்ளச் செய்பவையாக உள்ளது. அப்பிரதேசங்களின் உள்நாட்டு வியாபாரத் தாபனங்கள் அதிகமாக சீனர்களின் கைகளிலேயேயுள்ளது. சாதாரண நிலையில் காணப்படும் குடியேற்ற தன்மையைவிடவும் பொருளாதாரத் தன்மையிலான குடியேற்றம் சீனர்களால் இப்பிரதேசங்களில் பெருமளவாக மேற்கொள்ளப் படுகிறது.

இதேபோன்ற நிலை தென்னாசியப் பிராந்தியங்களிலும் ஏற்பட வாய்ப்புகளுண்டு. அதனால் உள்நாடுகளின் பொருளாதாரத் திறனைக் கட்டுப்படுத்தும் வாப்புகள் சீனாவின் கைகளுக்குச் சென்றுவிடுமானால் இந்தியா பாதகத்தைச் சந்திக்கும். இப் பிராந்தியங்களில் இந்தியா பெருமளவான தமது நட்பு சக்திகளை இழந்துள்ளது. இனிமேல் புதிதான நட்பு சக்திகளை உருவாக்க வேண்டும். கட்டுரையில் குறிப்பிட்ட விடயம் உண்மையென இந்தியா உணர்ந்தால் அத்தகைய முயற்சிகளில் முனைப்புக் காட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இராஜதந்திராமா .............. இந்தியாவிலா?

ஊழல் செய்யவே நேரம் போதவில்லை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.