Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்களை போராட அழைக்கும் இலங்கை அரசு

Featured Replies

மக்களை போராட அழைக்கும் இலங்கை அரசு

இலங்கைக்கு எதிராக மேற்கத்தைய நாடுகள் சதி செய்வதாக குற்றஞ்சாட்டி அவற்றுக்கு எதிராக இலங்கை மக்கள் போராட்டங்களை நடத்த வேண்டும் என்று இலங்கை அரசாங்க அமைச்சர் ஒருவர் அழைப்புவிடுத்துள்ளார்.

இலங்கை அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய இலங்கையின் வீடமைப்புத்துறை அமைச்சரான விமல் வீரவன்ஸ அவர்களே இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

விடுதலைப்புலிகளை இலங்கை இராணுவம் ஒழித்ததை விரும்பாத மேற்கத்தைய நாடுகள் அதற்காக இலங்கை ஜானாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும், இராணுவத்தினரையும் தண்டிக்க விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் இலங்கை அமைச்சரவை பேச்சாளரான லக்ஷ்மன் யாப்ப அபேவர்த்தன, சக்தி, வலு அமைச்சரான சம்பிக ரணவாக்க மற்றும் பெட்ரோலிய அமைச்சரான சுசில் பிரேமஜயந்த ஆகியாரும்

சமூகமளித்திருந்தனர்.

மேற்கு நாடுகளுக்கு தமது எதிர்ப்பை காண்பிக்கும் வகையில், ஐநா மனித உரிமைக் கவுன்ஸிலில் கூட்டம் ஆரம்பமாகும் தினத்தில் இலங்கையின் அனைத்து நகரங்களிலும் மக்கள் போராட்டங்களை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஆனால், பிபிசிக்கு செவ்வி வழங்கிய இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளரான திஸ்ஸ அத்தநாயக்க அவர்கள், இந்த பிரச்சினைகளுக்கு போராட்டங்களின் மூலம் தீர்வு காண முடியாது என்றும் அவற்றை சர்வதேச சமூகத்துடன் அரசாங்கந்தான் கையாள வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே அமைச்சரவைக் கூட்டத்தில் உரையாற்றிய இந்த அமைச்சர்கள் அண்மையில் பெட்ரோலிய விலையேற்றத்தை கண்டித்து பல இடங்களில் நடந்த போராட்டங்களை அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் நடத்தப்பட்ட சதி என்று விபரித்துள்ளனர்.

இந்த போராட்டங்களால், சிலாபம் மற்றும் நீர்கொழும்பில் பல மக்கள் பாதிக்கப்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/02/120223_lankagovecallprotest.shtml

படையெடுத்து வருகிறதாம்

இனவாதப் பேய்க் கூட்டம்

பொய்யுரைக்க வருகிறதாம்

கொலைகார நரிக் கூட்டம்..!

முறியடிக்க எழுந்து விடு

... மானத் தமிழினமே

இன்னும் ஏனடா யோசனை

மடை திறந்த வெள்ளமென

புறப்பட்டு வந்திடு தமிழினமே

ஜெனிவா வின் முற்றத்திற்கு

ஈழத் தமிழன் மட்டுமல்ல

உலகத் தமிழினமே எழுந்திடு

மறவர் வழி வந்த மானத்தமிழர்நாம்

தூங்கிக் கிடக்கும் கோழைகள் நாமல்ல

அண்ணன் திலீபன் அன்றே சொன்னார்

மக்கள் புரட்சி வெடிக்கும் ஒருநாள்

ஈழ தேசம் மலரும் ஓர் நாளென

செயல் வடிவம் நாம் கொடுப்போம்

புயலாக மாறி ஜெனிவா சென்றிடுவோம்

- பா .சங்கிலியன்

420320_254946251255124_100002192543157_579231_1730953102_n.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹையோ ஹையோ ... ஸ்ரீ லங்கா கூட்டத்திற்கு வேலை வெட்டி இல்லையே? 

Edited by KuLavi

  • தொடங்கியவர்

அரசுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டம் ஆளுங்கட்சி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலக்கத்தில்

ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆளுங்கட்சி எதிர்வரும் வாரத்தில் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ள எதிர்ப்புச் செயற்பாடுகள், ஆளுங்கட்சியிலுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெரும் கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கின்றன எனத் தெரிகிறது.

எரிபொருள் விலை அதிகரிப்பாலும், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பாலும் மக்கள் பெரும் சிரமங்களை அனுபவித்துவரும் சூழ்நிலையில், இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு மக்களை அழைப்பது பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது என ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றுத் தங்களுக்குள் கருத்துப்பரிமாற்றம் செய்துகொண்டமையை அறியமுடிந்தது.

இது தொடர்பில் நேற்று எம்மிடம் கருத்து வெளியிட்ட மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், "எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் சம்பளம் உட்பட்ட பல பிரச்சினைகளில் சிக்கித்தவிக்கும் பெருந்தோட்ட மக்களை இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு எந்த முகத்தை வைத்துக்கொண்டு அழைப்பது" என்று கேள்வியெழுப்பினார்.

எவ்வாறாயினும், அரசுடன் இணைந்து செயற்படுவதால் அரசின் கோரிக்கைக்கேற்ப மக்களை அணிசேர்க்க வேண்டுமெனவும், இதன் விளைவுகள் அடுத்த தேர்தலின்போதுதான் தங்களுக்குத் தெரியவருமென்றும் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் கவலையுடன் குறிப்பிட்டார்.

http://184.107.230.170/~onlineut/News_More.php?id=85110856524858656

தமிழர்கள் முன்னணியில் நிறுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கலாம்.

27ம் திகதி கோமாளித்தனமான நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது!– இனாமலுவே சுமங்கல தேரர்

எதிர்வரும் 27ம் திகதி கோமாளித்தனமான நடவடிக்கைகளில் எவரும் ஈடுபடக் கூடாது என தம்புள்ளை இனாமலுவ சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கவுன்சில் அமர்வுகள் ஆரம்பமாகவுள்ள 27ம் திகதி இலங்கையில் நடத்தப்பட உள்ள ஆர்ப்பாட்டங்கள் குறித்து அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாடு தழுவிய ரீதியில் ஆர்ப்பாட்டம் நடத்துவது கோமாளித்தனமான செயலாகும்.

உண்மையில் இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த நகைச்சுவையாகவே இந்தத் திட்டத்தை கருத வேண்டும்.

இவ்வாறான நகைச்சுவைகளினால் சர்வதேச சமூகத்திலிருந்து இலங்கை மேலும் ஓரம் கட்டப்படக் கூடிய அபாயம் காணப்படுகின்றது.

எனவே, புத்திக் கூர்மையுடனும், சாணக்கியத்துடனும் இந்தப் பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டும் என சுமங்கல தேரர் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சில் அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் யோசனைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடு தழுவிய ரீதியில் போராட்டங்களை நடாத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இந்த போராட்டத்திற்கான அழைப்பினை விடுத்திருந்தார்.

http://news.lankasri.com/view.php?22Gp7bc3LI24eM29302jQ6dd3QjR20j923e4SLLcb3pGa2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.