Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்காவே முன்வைக்கும்

Featured Replies

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்காவே முன்வைக்கும்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தானே நேரடியாக முன்வைப்பதற்கு அமெரிக்கா தீர்மானித்திருப்பதாக தெரியவருகிறது.

2009 ஆம் ஆண்டு மே மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிப்பட்ட பின்னர் இலங்கைக்கு எதிராக இத்தகைய தீர்மானமொன்றை அமெரிக்காவின் ஆதரவுடன் கனடா கொண்டுவந்தது. எனினும் அதை பெரும்பான்மையான வாக்குகளால் அப்போது இலங்கை தோற்கடிக்க முடிந்தது.

இந்நிலையில் இம்முறை தானே நேரடியாக தீர்மானத்தை முன்வைப்பதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது. அமெரிக்காவினால் இப்பிரேரணை சமர்ப்பிக்கப்படும்போது பெரும்பலான நாடுகள் அதை ஆதரிக்கும் என அமெரிக்கா கருதுவதாக இலங்கை ராஜதந்திரிகள் தெரிவித்தனர்.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவளிக்குமாறு ஏனைய நாடுகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான நடவடிக்கையில் பல்வேறு நாடுகளின் தலைநகரங்களில் தனது தூதுவர்களை அமெரிக்கா ஈடுபடுத்தியுள்ளதாக ஜெனீவாவிலிருந்து ஆபிரிக்காவுக்கு நேற்று புறப்பட்ட அமைச்சர் பீரிஸ் கூறியமை குறிப்பிடத்தக்கது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிகளை அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளத்தவறிவிட்டது என்ற அடிப்படையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை முன்வைக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

எனினும் இது அக்கிரமமான, அத்துமீறல் எனக்கூறி இக்குற்றச்சாட்டை இலங்கை நிராகரித்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத்தொடர் இன்று முதல் மார்ச் 23 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இலங்கைக்கு எதிரான தீர்மானம் கூட்டத்தொடரின் இறுதிநாட்களில் எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இக்கூட்டத்தொடருக்காக அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, ரவூப் ஹக்கீம், றிஷாட் பதியூதீன், நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசிங்க, பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா உட்பட்ட இலங்கைத் தூதுக்குழுவினர் ஏற்கெனவே ஜெனீவாவிற்கு வந்துள்ளனர்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/36627-2012-02-26-20-00-15.html

  • தொடங்கியவர்

அமெரிக்கா ஒரு முடிவுடன் தான் களம் இறங்கியுள்ளது. கடைசியாக ரொபேர்ட் பிளேக்கும் அவரின் அதிகாரியான மரியா ஓட்டேராவும் கடுமையான முடிவில் இறங்க முடிவெடுத்துள்ளதாக ஊகிக்கமுடிகின்றது.

காரணம், அமெரிக்காவின் உளவு கொடுத்த தகவல்களாக இருக்கும். குறிப்பாக சீன - சிங்கள உறவுகள், அதன் மூலம் நீண்டகால அடிப்படியில் ஆழமாக காலைப்பதிக்க எண்ணும் சீனா. இனவர்க்கம் கொண்டு நித்திரையில் இருக்கும் புதுடெல்லி தலைமைகள்.

இது நிச்சயம் அமெரிக்காவை கடுப்படைய வைத்திருக்கும். தானே களத்தில் இறங்க முடிவெடுத்துள்ளது.

அமெரிக்கா ஒரு முடிவுடன் தான் களம் இறங்கியுள்ளது. ............................................................................................................. தானே களத்தில் இறங்க முடிவெடுத்துள்ளது.

இலங்கையை கையாள மத்திய கிழக்குநாடுகளில் நடந்தது போலன்றி எளிதாக படைகளை இறக்க முடியாமல் பல சங்கடங்களை மேற்குநாடுகள் சந்திக்கவேண்டிவரும் (இந்தியா- சீனா காரணங்கள்). எனவே முழு முனைப்பான ராஜதந்திர நடவடிக்கைகள் போரினால் நலிந்து போயிருக்கும் எமக்கும் உகந்ததுதான்.

  • தொடங்கியவர்

மதில்மேல் பூனையாக இருக்கும் இந்தியாவை நினைத்து

அமெரிக்காவின் நேரடித் தலையீடு போன்ற ஒரு தோற்றப்பாடு இங்கு காண்பிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் லத்தீன் அமெரிக்க நாடொன்றின் மூலம் முன்மொழிவு நடத்தப்படுவதாக இருந்தது. இத் திடீர் மாற்றம் சிறிலங்காவை இறுதி நேரத்தில் பணியவைக்கும் முயற்சியாகக் கூட இருக்கலாம்.

செய்தி உண்மையானால் சிறிலங்கா பிடிவாதம் செய்வதுதான் நல்லது. இறுதிக் கணம் வரைக்கும் பணியாமல் இருக்க வேண்டும். சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதன் மூலமாகவேனும் ஈழத்தமிழருக்கு நல்வாழ்வும் சுதந்திரமும் கிடைக்க வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன்.

சிறிலங்காவுக்கு எதிரான பிரேரணையை பல நாடுகளுடன் இணைந்து கூட்டாக முன்வைக்கிறது அமெரிக்கா!

February 27th, 2012 அன்று வெளியிடப்பட்டது - கருத்துக்களேதுமில்லை

hro-geneva-100x100.jpg

ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை – பல நாடுகள் இணைந்து கூட்டாக முன்வைக்கவுள்ளதாக ஜெனிவாவில் உள்ள இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

நாளை தொடங்கவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வரும் நகர்வுகளுக்கு அமெரிக்கா தலைமை தாங்கி வருகிறது. முன்னதாக இந்தத் தீர்மானத்தை அமெரிக்கா அல்லது கனடா சமர்ப்பிக்கலாம் என்று கூறப்பட்டது.

பின்னர், அணிசேரா அமைப்பில் உள்ள ஆபிரிக்க நாடு ஒன்று இதனை முன்வைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. குறிப்பாக கெமரூன் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வர வாய்ப்புள்ளதாகவும் சிறிலங்கா சந்தேகித்தது. ஆனால் சிறிலங்கா இந்தத் தீர்மானத்தை தோற்கடிப்பதற்கு முழுமூச்சுடன் செயற்பட்டு வரும் நிலையில், வலுவான நிலையில் தீர்மானத்தை முன்வைக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி, சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம், புவியியல் ரீதியாக ஒவ்வொரு பிராந்தியத்தில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட நாடுகள் இணைந்து கூட்டாக சமர்ப்பிக்கப்படவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் கூறியுள்ளன.

ஆபிரிக்கா, ஆசியா, லத்தீன் அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பா, மேற்கு ஐரோப்பா என பிராந்திய ரீதியில் குறைந்தது ஐந்து நாடுகளின் கூட்டு அனுசரணையுடன் இந்தத் தீர்மானம் முன்வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

அமெரிக்கா தலைமையில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக நோர்வே அறிவித்துள்ளது. பிரித்தானியாவும் இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

அதேவேளை, ஒஸ்ரியா, பொற்ஸ்வானா, கௌதமாலா, லிபியா, ஹங்கேரி, போலந்து, ஸ்பெய்ன், ருமேனியா, உகண்டா, கெமரூன், நைஜீரியா போன்ற நாடுகளும் இதற்குப் பின்னணியில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. கடந்தமாதம் பொற்ஸ்வானா வெளிவிவகார அமைச்சரை சந்திக்க சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.

இந்தநிலையில் தற்போது பொற்ஸ்வானா வெளிவிவகார அமைச்சரை சந்திக்கும் முயற்சிகளில் பீரிஸ் தீவிரமாக இறங்கியுள்ளார். அதேவேளை, சிறிலங்காவுக்கு எதிரான தீர்மான வரைவு ஜெனிவாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தினால் விநியோகிக்கப்பட்டு அதனை செம்மைப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

இந்தநிலையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவு கோரி அமெரிக்காகவும்., அதனை முறிடியப்பதற்கு ஆதரவு கோரி சிறிலங்காவும் ஜெனிவாவில் தீவிரமான பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு, வரும் மார்ச் 21ம் நாளுக்கும் 23ம் நாளுக்கும் இடையில் இடம்பெறவுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராஜபக்ஷ அன் பிறதர்ஷ் அவர்களை ஆட்சிக்கட்டிலிருந்து இறக்கி தன்னுடைய பரிவாரங்களை ஆட்சிகட்டில் ஏற்றுவதே அமெரிக்காவினதும் இந்தியாவினதும் உள்ளார்ந்த நோக்கங்கள். இதனால் சீனாவின் தலையீட்டை மெல்லம் மெல்லமாகப் புறந்தள்ளமுடியும். இங்கு தமிழர்களுக்கு என்ன கிடைக்கப்போகின்றது? என்பது கனியாத காயாகவே இருக்கும்.

போருக்குப்பின் தமிழர் நிலப்பரப்பில் நடைபெறும் அரச அஜாரகங்களை யாரும் கண்டித்ததில்லை. மும்மொழிக் கொள்கையையும் சிங்களக்குடியேற்றங்களையும் உருவாக்கி தமிழர் நிலம் சிங்களவர் நிலம் என்ற வேறுபாடடை இல்லாதொழிப்பதை யாரும் கண்டு கொள்ளவும் இல்லை. எதிர்க்கவும் இல்லை. மொத்தத்தில் தமிழருக்கான தீர்வு என்ன என்பதை யாரும் அரசிற்கு முன்மொழியவுமில்லை. அதிகாரப்பகிர்வு என்பதைக்கூட யாரும் வற்புறுத்தவில்லை.

தமிழர்களின் ப+ர்வீகநிலமென்று தனியாக இருந்து அவர்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்கப்படுமாயின் அவர்கள் ஒரு காலத்தில் தனிஈழம் அமைக்க வாய்ப்பிருக்கு என்பதில் சர்வதேசமும் பயப்பிடுகின்றது. ஜெனிவாவில் தமிழருக்கு இப்போதைக்கு ஏதும் கிடைக்காது. ஆனால் அங்கு கிடைக்கப்பெறும் தீர்மதனங்களி;ன் அடிப்படையில் தமிழர்களின் எதிர்கால நகர்வுகள் இருக்கவேண்டும்.

Edited by Raj Logan

  • தொடங்கியவர்

தமிழர்களின் ப+ர்வீகநிலமென்று தனியாக இருந்து அவர்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்கப்படுமாயின் அவர்கள் ஒரு காலத்தில் தனிஈழம் அமைக்க வாய்ப்பிருக்கு என்பதில் சர்வதேசமும் பயப்பிடுகின்றது. ஜெனிவாவில் தமிழருக்கு இப்போதைக்கு ஏதும் கிடைக்காது. ஆனால் அங்கு கிடைக்கப்பெறும் தீர்மதனங்களி;ன் அடிப்படையில் தமிழர்களின் எதிர்கால நகர்வுகள் இருக்கவேண்டும்.

மகிந்த தலைமயிலான சிங்களம் தொடர்ந்தும் பலமான நிலையிலயே உள்ளது. அது எவ்வளவு காலம் நீடிக்கும் என திட்டவட்டமாக எதிர்வு கூறமுடியாது.

தாயக / புலம் பெயர் அமைப்புக்கள் சிங்களத்தின் சீன - பாகிஸ்தான் - ஈரான் உறவுகளை முன்வைத்தும், தமிழர்கள் மேற்குலக ஆதரவானவர்கள் என்பதை முன்வைத்தும் அரசியலை முன் நகர்த்தவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த தலைமயிலான சிங்களம் தொடர்ந்தும் பலமான நிலையிலயே உள்ளது. அது எவ்வளவு காலம் நீடிக்கும் என திட்டவட்டமாக எதிர்வு கூறமுடியாது.

.

விரைவில் மாறும்

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை வலுப்படுத்த, மரியா ஒற்றேரோவை ஜெனிவா அனுப்புகிறது அமெரிக்கா

http://news.lankasri.com/view.php?22uILZ203VjQ64e3OGpDcb3t92gdd3M294bc37pGce40KQjd02eLLSa2

  • தொடங்கியவர்

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை வலுப்படுத்த, மரியா ஒற்றேரோவை ஜெனிவா அனுப்புகிறது அமெரிக்கா

http://news.lankasri...e40KQjd02eLLSa2

இராஜாங்க செயலாளர் ஹிலாரிக்கு அடுத்ததாக உள்ளவர் இவர். இவரின் நேரடி பிரசன்னம் நிச்சயம் அமேரிக்கா இந்த விடயத்தில் மிக அதிக ஆக்கரை கொண்டுள்ளது என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.