Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெனீவாவில் இலங்கையை ஆதரித்து கூட்டுக் குற்றவாளியாக வேண்டாம்

Featured Replies

இலங்கையில் இனப்படுகொலை செய்த இலங்கை அரசை ஆதரிக்காதீர்கள். ஆதரித்து கூட்டுக் குற்றவாளியாகாதீர் என்று கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

வைகோ, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு, எழுதி உள்ள கடிதம்:

இலங்கையின் இனவாத அரசு, ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்வதற்கு அனைத்துவிதமான ஆயுத உதவிகளையும், நிதியையும் அள்ளித்தந்ததுடன், இராணுவ உதவிகளையும் இந்திய அரசு செய்தது, உலகத் தமிழர்களின் நெஞ்சில் பலத்த ரணத்தையும், தாங்க முடியாத துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இலங்கையில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை, ஐ.நா. பொதுச்செயலாளர் நியமித்த மூன்று உறுப்பினர் விசாரணைக் குழு, சுட்டிக் காட்டி உள்ளது.

ஆனால், உலக நாடுகளை ஏமாற்றுவதற்காக, இலங்கை அரசு, தனக்குத்தானே ஒரு விசாரணைக்குழுவை நியமித்துக்கொண்டது. அந்தக் குழு, அனைத்து உண்மைகளையும் குழிதோண்டிப் புதைத்து விட்டு, கோயபெல்ஸ் பாணியில், இலங்கை அரசின் நடவடிக்கைளை நியாயப்படுத்தி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.

2009 ஆம் ஆண்டு மே மாதம், இரண்டு மூன்றாவது வாரங்களில் நடைபெற்ற கொடூரமான படுகொலைகளுக்குப் பிறகு, ஜெர்மனியின் முன்னெடுப்பில், பதினாறு நாடுகள், ஐ.நா. மனித உரிமைகள் குழுக் கூட்டத்தை, ஜெனீவா நகரில் கூட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டன. அக்கூட்டம், 2009 மே மாதம் கடைசி வாரம் நடைபெற்றது. ஆனால், அந்தக் கூட்டத்தில், போர்க்காலத்தில் இலங்கை அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பாராட்டுகின்ற வகையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற, இந்தியா பெரிதும் உதவியது.

இந்தியாவின் இந்த நடவடிக்கை, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, தமிழ் இனத்துக்கு எதிராக மேற்கொண்ட, மன்னிக்க முடியாத துரோகம் ஆகும். இப்போது, உலக நாடுகளின் மனசாட்சி விழித்துக் கொள்ளத் தொடங்கி விட்டது. எனவே, பெப்ரவரி 27 ஆம் நாள், ஜெனீவா நகரில் நடைபெறுகின்ற, ஐ.நா. மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில், இலங்கை அரசின் போர்க்குற்ற நடவடிக்கைகளை விசாரிப்பதற்கான ஒரு தீர்மானத்தை, அமெரிக்காவும், மேலும் பல நாடுகளும் கொண்டு வருகின்றன.

இலங்கையின் போர்க்குற்றங்கள் மற்றும் இனக்கொலை நடவடிக்கைகளை விசாரிப்பதற்கான அத்தகைய ஒரு தீர்மானத்தை, இந்திய அரசு ஆதரிக்க வேண்டும்; இலங்கை அரசுக்கு எவ்வித ஆதரவும் அளிக்கக்கூடாது என்று, நான் தங்களுக்கு ஏற்கனவே எழுதி உள்ள பல கடிதங்களில் கேட்டுக் கொண்டு உள்ளேன்.

ஆனால், பெப்ரவரி 27 ஆம் நாள், மஹிந்த சமரசிங்கே என்ற இலங்கை அரசுப் பிரதிநிதி, ஐ.நா. மனித உரிமைகள் குழுவில் நடைபெற இருக்கின்ற மிக முக்கியமான வாக்குப்பதிவில், “இந்தியா இலங்கை அரசை ஆதரிக்கும்” என்று தெரிவித்து இருப்பது, பேரதிர்ச்சியாக உள்ளது.

இலங்கைக்கான இந்தியத் தூதர் அசோக் கே. காந்தா, இலங்கைக் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வை பெப்ரவரி 26 ஆம் நாள் நேரில் சந்தித்து, ஜெனீவாவில் நடைபெற இருக்கின்ற ஐ.நா. மனித உரிமைகள் குழுவின் கூட்டத்தில், இலங்கையை இந்தியா ஆதரிக்கும் என உறுதி அளித்து இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இது உண்மையாக இருக்குமானால், இந்த நடவடிக்கை, ஈழத்தமிழர்களுக்கு எதிராக இந்தியா செய்கின்ற மன்னிக்க முடியாத துரோகம் ஆகும். ஈழத்தமிழர்களின் படுகொலையால், தமிழகத்திலும், உலகம் முழுமையும் வாழுகின்ற தமிழர்களின் இதயத்தில் குருதி வடிந்து கொண்டு இருக்கின்றது.

உலக நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் இலங்கை அரசு நிறுத்தப்படுவதைத் தடுக்க இந்தியா முயற்சிகளை மேற்கொள்ளுமானால், இலங்கையில் நடைபெற்ற தமிழ் இனப் படுகொலைக்கு இந்தியாவும் பொறுப்பு; கூட்டுக் குற்றவாளி என்ற நிலைமையே ஏற்படும்.

ஏற்கனவே காயப்பட்டுப் புண்ணாகி இருக்கின்ற தமிழர் நெஞ்சில் மேலும் தீ வைக்கின்ற எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாதீர்கள் என வேண்டுகிறேன். ஜெனீவாவில் நடைபெறுகின்ற ஐ.நா. மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில், இலங்கைக்கு ஆதரவான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாதீர்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்று கடிதத்தில் வைகோ கூறியுள்ளார்

http://akkinikkunchu.com/new/

வை.கோ. க்கு நன்றிகள்.

புலிகள் இல்லாதபோதும் டெல்லி தொடர்ந்தும் தமிழின போக்கில் செல்வது எமக்கு தோல்வியே.

இந்தியாவை எமது வழிக்கு கொண்டுவரவேண்டும், அதுவரை முயற்சிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் வைக்கோ வை ஜெனிவா அனுப்பி இருந்தேலே பின்னி பெடலெடுத்து இருப்பாரப்பா... யாரும் இவரை போகவேண்டாம் என தடுத்து விட்டீர்களா..? டெல் டெல்மீ.. கிந்தியவை எல்லாம் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை தலைவர் வைக்கோ... அவரு சங்கரன் கோயில் இடைதேர்தலில் வீடு வீடாக போய் வாக்கு கேட்பதை விட்டிருப்பார்.. ஒரு சீட்டு வாங்கி என்ன பிரோயசனம்..?

டிஸ்கி:

இவர்களுக்கு பேரு தமிழ் தேசிய கூத்தமைப்பாம் .. ஒரே சிப்பு சிப்புதான் வருது.. இங்கிலீசு ஒருவேளை..?

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஐயா வைகோ அவர்களுக்கு,

இந்தியாவின் டில்லி ஆதிக்க வர்க்கம் அவர்களின் நிலைப்பாடு நாயின் வாலை போன்றது, அதை எப்படி நிமிர்த்த முடியாதோ! அதேபோன்றுதான் தமிழர்களுக்கு ஆதரவை ஏற்படுத்த முடியாது !!

இருந்த போதும் தொடர்ந்தும் முயற்சிக்கின்றீர்கள் அதற்காக மீண்டும் நன்றிகள்.

இந்தியக் காட்டுமிராண்டிகள் சிதறும்போது தான் தமிழகத்தின் குரல் எடுபடும்!

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா. மனித உரிமை ஆணைய ஓட்டெடுப்பு: இலங்கையை இந்தியா ஆதரிக்கக் கூடாது- கருணாநிதி

புதன்கிழமை, பிப்ரவரி 29, 2012, 13:37 [iST] A A A

NewsletterIts Free!

உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள்

Ads by Google

£423 Flights to Colombo www.dealchecker.co.uk/Colombo

Return Flights Fr £423 For Colombo Compare All Leading Airlines Now!

Ads by Google

TalkTalk £3.25 Offer

½ Price Winter Sale Now On! Sign Up and Start Saving Today

www.talktalk.co.uk/

சென்னை: இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இலங்கை அரசை இந்தியா ஆதரிக்கக் கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை இனியும் அனுமதிக்கக் கூடாது எனும் நோக்கில், இலங்கை மீது போர்க் குற்ற விசாரணைக்கு ஆணையிட வேண்டுமென்று வலியுறுத்திடும் தீர்மானம் ஒன்றை 27-2-2012 அன்று தொடங்கிய ஐ.நா. மனித உரிமை ஆணையக்கூட்டத்தில், அமெரிக்கா, பிரான்ஸ், நார்வே உள்ளிட்ட நாடுகள் கொண்டு வந்துள்ளதாகவும்; இந்தத் தீர்மானத்தின் மீது நடைபெறவிருக்கும் வாக்கெடுப்பில் இலங்கைக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று இலங்கை அமைச்சர் மகிந்த சமரசிங்க கருத்து அறிவித்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து 27-4-2011 அன்று எனது தலைமையில் நடைபெற்ற கழக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்திலேயே முதல் தீர்மானமாக பின்வருமாறு நிறைவேற்றப்பட்டது என்பதை நினைவுகூர்ந்திட விரும்புகிறேன்:

இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களுக்காக ஐக்கிய நாடுகள் அமைப்பின் வாயிலாக அமைக்கப்பட்ட இந்தோனேஷிய அரசின் தலைமை வழக்கறிஞர் தலைமையிலான விசாரணைக் குழு, இலங்கைப் படையினர் ஈழத் தமிழர்கள் மீது நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலை உறுதி செய்திருக்கிறது. அரசை எதிர்க்கின்றவர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டதற்கும், மனித உரிமை மீறல்களுக்கும் ஆதாரங்கள் இருப்பதாகக் கூறியுள்ளது.

இந்தக் குழுவின் அறிக்கை ஏப்ரல் 25ம் தேதியன்று நியூயார்க்கில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக் கட்டத்தில் 40,000க்கும் அதிகமான அப்பாவி தமிழர்களை இலங்கை ராணுவம் சுட்டுக்கொன்றதாக கூறப்பட்டுள்ளது. போர்க் கைதிகளை இலங்கை ராணுவம் கொடூரமாகச் சுட்டுக் கொன்றுள்ளது என்றும் வீராங்கனைகள் பலாத்காரம் செய்யப்பட்டனர் என்றும் அந்த அறிக்கையிலே கூறப்பட்டுள்ளது.

இலங்கைப் போர்க் குற்றங்கள் பற்றி ஐ.நா. குழு பரிந்துரைத்துள்ளவாறு சர்வதேச விசாரணை ஆணையத்தை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், 'போர் என்றால் பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்படுவது சகஜம்தான்' என்று இதயமற்றோர் பாணியில் விமர்சனம் செய்யாமல், இந்தக் குற்றங்களுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு வேண்டிய அனைத்து முயற்சிகளிலும் இந்திய அரசு உடனடியாக ஈடுபட வேண்டும் என்றும் இந்த உயர்நிலை செயல் திட்டக்குழு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் இந்த நிலைப்பாட்டினை மத்திய அரசுக்கு மீண்டும் நினைவு படுத்துவதோடு, ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும்போது, எக்காரணம் கொண்டும் இந்திய அரசு இலங்கை அரசை ஆதரித்திடக்கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறிட விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

ஒருவேளை இலங்கையை இந்தியா ஆதரித்தால், மத்திய அரசுக்குத் தரும் ஆதரவை திமுக வாபஸ் பெறுமா.. இதையும் கருணாநிதி சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

இலங்கைக்கு இந்தியா ஆதரவு-பழ.நெடுமாறன் கண்டனம்:

இந் நிலையில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில்,

ஐ.நா. மனித உரிமை குழுக் கூட்டத்தில் போரின் போது இலங்கை ராணுவம் மனித உரிமை மீறலில் ஈடுபட்டது தொடர்பாக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வருகிறது. இதை எதிர்த்தும், இலங்கைக்கு ஆதரவாகவும் இந்தியா வாக்களிக்கும் என வெளிப்படையாக இந்தியா தங்களிடம் தெரிவித்து விட்டதாகவும் இந்தியாவின் ஆதரவு என்பது நூற்றுக்கு நூறு சதவீதம் உறுதியானது எனவும் இலங்கையின் மனித உரிமைக்கான சிறப்பு தூதர் மகிந்த சமரசிங்கே தெரிவித்தார்.

இதை கண்டு உலகம் எங்கும் உள்ள தமிழர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் அதிர்ச்சி அடைந்தனர். மனித நேயமற்ற முறையில் இந்திய அரசு நடந்து கொள்வதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.