Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஸ்யாவில் அதிபர் தேர்தல்

Featured Replies

ரஸ்யாவில் அதிபர் தேர்தல்

உலகில் இருக்கும் தலைவலி பிடித்த தலைவர்கள் போதாதென்று இன்னொரு திருகுவலி பிடித்த தலைவர்..

put-1.jpg

ரஸ்யாவின் அதிபர் தேர்தல் இன்று ஞாயிறு அதிகாலை ஆரம்பித்தது. முதல்கட்ட வாக்களிப்பு அமெரிக்க அலாஸ்காவிற்கு அருகில் ஆரம்பித்து படிப்படியாக சூரியனோடு நகர்ந்து போனது. பசுபிக் முதல் அத்திலாந்திக் வரை பரவியுள்ள மாபெரும் நாட்டில் நடைபெறும் தேர்தல் இதுவாகும். இன்று அதிகாலை கிழக்கு சைபீரியாவில் உள்ள சூகோட்டா பகுதியில் -35 பாகை வெப்பம் உறை நிலையில் இருக்க மக்கள் வாக்களிப்பை ஆரம்பித்தார்கள். நாடு முழுவதும் ஒன்பது பெரும் தேர்தல் வலயங்களாக்கப்பட்டு, 90.000 வாக்குச் சாவடிகள் திறந்து, வாக்களிப்பு நடைபெறுகிறது. இன்று மாலை ஐரோப்பிய நேரம் ஆறு மணிக்கு வாக்குச் சாவடிகள் மூடப்படும். தற்போதய நிலையில் பிரதான வேட்பாளர் புற்றின் 60 வீதமான மக்களின் ஆதரவை பெற்றுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிடக்கூடிய வேட்பாளர்களை தந்திரமாக ஓரங்கட்டி, தனிக்காட்டு ராஜாவாக அரங்கிற்கு வந்துள்ளார்.

இந்தத் தேர்தல் பொது மக்களுக்கு பதவி ஆசை பிடித்த தலைவர்கள் மீது விரக்தி ஏற்பட வழி வகுக்கும் என்பது தெரிந்ததே. காரணம் ரஸ்யாவில் ஒருவர் இரண்டு தடவைகள் மட்டும் அதிபராக இருக்கலாம். புற்றின் ஏற்கெனவே இரண்டு தடவைகள் அதிபாராக இருந்துவிட்டார். பின்னர் பிரதமர் பதவிக்கு பின்வாங்கி இப்போது மறபடியும் அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார். பழைய அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஸ் மறுபடியும் தேர்தலில் குதித்து ஒபாமாவுடன் போட்டியிட்டால் அது எப்படி அசிங்கமாக இருக்குமோ அதுபோன்றதே புற்றினின் இந்தச் செயல். மூன்று தடவைகள் பதவியில் இருந்தது போதும், இனிமேலாவது பதவி ஆசையை அடக்கி மற்றவர்களுக்கு வழிவிடுங்கள் என்று முன்னைய அதிபர் மிக்கேல் கொர்பச்சேவ் கேட்டதை இவர் முற்றாக மதிக்கவில்லை.

put-4.jpg

அதேவேளை சீனாவின் அபார வளர்ச்சி காரணமாக ரஸ்யா மூன்றாவது இடத்திற்கு பின் தள்ளப்பட்டு, ஐரோப்பிய ஒன்றியத்தின் வரவால் மேலும் பின் தள்ளப்பட்டு வரலாற்றில் என்றுமில்லாத பின்னடைவை சந்தித்துள்ளது. எனவே வரலாறு காணாத பெரிய தொகையை ரஸ்ய இராணுவத்திற்கு ஒதுக்கி மறுபடியும் ரஸ்யாவை அமெரிக்காவிற்கு நேரடிப் போட்டி நாடாக கொண்டு வரப்போவதாக சபதமெடுத்து வாக்குகளைக் கேட்டு வருகிறார். தான் இளைஞன் என்பதைக் காட்ட தன்னிலும் வயது குறைந்த தனது பிள்ளையின் வயதுடைய மாடல் அழகி ஒருவரையும் புதிய காதலியாக சேர்த்து களமிறங்கியுள்ளார்.

ரஸ்யாவில் உள்ள மக்கள் தொகை பனிக்கரடி போல பிரக்ஞையற்று, உறங்கிக் கிடக்கும் தன்மை கொண்டது. மாறாக யாராவது இதன் வாலை இழுத்துவிட்டால் சரி – பிழை தெரியாது சீறி எழும்பும். இதை நன்கு உணர்ந்த மேலை நாடுகள் தேர்தலில் புற்றின் சைபர் கிரைம் மோசடி செய்து ஏமாற்றி வெற்றி பெறும் பேர்வழி என்ற பிரச்சாரத்தை முடுக்கிவிட்டன. டிசம்பர் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மாலைவரை தோல்வி நிலையில் இருந்தவர் சட்டென வெற்றி பெற்றார். இந்திய தேர்தலில் ப.சிதம்பரம் வென்றது போல கடைசி நேரத்தில் இவர் கட்சி வென்றது. கணினியை பார்த்து வாக்குகளை தனக்கு சாதகமாக திருப்பிவிட்டு சைபர் கிரைம் மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. இவருக்கு எதிரான ஆர்பாட்டங்கள் மொஸ்கோவில் நடைபெற்றன.

put-3.jpg

தன்னுடைய 12 வருட அதிபர் பதவிக்காலத்தில் தளம்பாத மனிதராக இருந்த புற்றின் முதல் தடவையாக தளம்பல் நிலைக்கு வந்தார். எதிரணியினர் தான் தேர்தல் மோசடி செய்து வென்றதாக பிரச்சாரம் செய்து வன்முறை நடாத்த திட்டமிட்டுள்ளதாக பெரும் பிரச்சாரங்களை முடுக்கி விட்டுள்ளார். வெற்றி பெற்றதும் தனக்கு எதிராக போராட்டம் வெடித்தால் அதை இரும்புக் கரம் கொண்டு அடக்க அவர் தயாராகிவிட்டார் என்பதை எளிதாக உணர முடிகிறது.

அதேவேளை மேலை நாடுகள் சிரியாவுக்கு எதிராக ஐ.நா பாதுகாப்பு சபையில் பிரேரணை கொண்டு வந்தபோது ரஸ்யா வீட்டோவை பாவித்து அதைத் தடுத்தது. நடைபெறும் தேர்தலில் மேலை நாடுகள் தனக்கு எதிரான ஆர்பாட்டங்களை தூண்டிவிடாது அடக்கி வாசித்தால் மறுபடியும் சிரியாவுக்கு எதிராக வீட்டோ பாவிக்காமல் பல்டியடிக்க இவர் தயாராக இருப்பார் என்பது மேலை நாடுகளுக்கு தெரியும். நேற்று முன்தினம் சிரியாவை தாம் ஆதரிக்கவில்லை என்று வெளிப்படையாக முழங்கி ஆஸாட்டின் தலையில் துண்டை விரித்தார். இதுபோலவே சதாம் உசேனின் தலையிலும் துண்டு விரித்தவர் என்பது தெரிந்ததே.

மறுபுறம் ரஸ்யாவின் பொருளாதார வீழ்ச்சி, மக்களின் வறுமை போன்றன இரண்டாம் உலகயுத்த காலத்தில் இருந்ததைப் போலவே இப்போதும் இருக்கிறது. மேலை நாடுகளின் உதவி இல்லாமல் ரஸ்யாவை கொண்டு நடாத்துவது கடினம். அதற்குள் சீனாவின் உளவாளிகள் இருவர் ரஸ்யாவின் ஏவுகணை பிரிவை உளவுபார்த்தபோது கைதாகியுள்ளார்கள். இது ரஸ்யாவிற்கு கூடியிருந்து கழுத்தறுப்பது போன்ற கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆக, ரஸ்யாவுக்கு இப்போது எதிரி மேலை நாடுகள் அல்ல சீனாவே. பாட்டாளி மேலே வந்தால் பட்டாளிக்குத்தான் தாங்காது என்ற நிலை இரண்டு சம்மட்டி, சுத்தியல் நாடுகளுக்கும் ஏற்பட்டுள்ளது. யார் கழுத்தை யார் அறுப்பது, யார் தலையில் யார் சம்மட்டியால் அடிப்பது என்ற நிலை.

put-2.jpg

மேலும் தற்போதைய நிலையில் புற்றினைவிட ஆளுமையுள்ள தலைவர் ஒருவர் ரஸ்யாவுக்குள் உருவாகக் கூடாது என்பதில் கே.ஜி.பி அவதானமாக இருந்துள்ளது. பழைய கே.ஜி.பி உளவாளி ஒருவர் பொலோனியம் விஷம் வைத்து இங்கிலாந்தில் கொல்லப்பட்டது சில ஆண்டுகளுக்கு முன் நடந்த நாடகம். அணு விஷத்தையே மனிதனுக்குக் கொடுத்து கொல்லும் நயவஞ்சகத்திலும் நயவஞ்சகமான காலத்திற்குள் ரஸ்யா புற்றினுடைய காலத்தில் போயுள்ளது. ஜனநாயகம் என்ற போர்வையில் ஒரு தனிமனித சர்வாதிகாரி இந்த நாட்டை ஆள்வது தப்பு என்று – புற்றினின் ரஸ்யா – என்ற நூலை எழுதிய ரஸ்ய பெண் எழுத்தாளர் அனா பொலிற்றிக்கோவ் காஜாவை தீர்த்துக் கட்டினார்கள். இப்படி அனைத்து எதிர்ப்புக்களும் அடக்கப்பட்டுவிட்டன. இப்போது வெற்றிப் படியில் நிற்கிறார் புற்றின்.

இவருடைய வழமைக்கு மாறான செயலை உலகம் எப்படி மதிப்பிடுகிறது என்பதை உலகில் உள்ள பதவி மோகம் கொண்ட மற்றய தலைவர்கள் அவதானித்தபடி இருக்கிறார்கள். தள்ளாடி புத்தி பேதலித்தாலும் சாகும்வரை பதவியை விட்டு விலக மறுக்கும் இந்திய தலைவர்கள் போல தாமும் இருக்க வேண்டுமென பலர் கனவு காண்கிறார்கள். இதில் முக்கியமானவர் சிறீலங்காவின் மகிந்த ராஜபக்ஷ இவர் மூன்றாவது முறையும் அதிபர் பதவிக்கு வரும் கனவில் மிதந்து வருகிறார். அதற்குள் நாசமாய் போன போர்க் குற்றம் அவருடைய கனவுகளை குழப்பி வருகிறது. ஒரு மகாவம்ச நாயகன் போர்க்குற்ற விளிம்பில் நிற்பது மகாவம்சத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. இருந்தாலும் புற்றினை காரணம் காட்டி பல மோசமான தலைவர்கள் மறுபடியும் பதவி மோகம் கொள்ள வாய்ப்புள்ளது. இந்தத் தேர்தல் உலகத்திற்கே ஒரு தப்பான முன்மாதிரியாக உள்ளது.

இவ்வளவு மோசமான பின்னணிகளுக்குள்தான் ரஸ்ய அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. ஆனால் இங்கு ஒரு விடயம் மட்டும் முக்கியமானது. தற்போதைய நிலையில் புற்றினை விட்டால் ரஸ்யாவுக்கு பொருத்தமான தலைவர் வேறு எவரும் இல்லை. ஜனநாயகத்திற்கு பழக்கப்படாத ஒரு கம்யூனிச சர்வாதிகார நாட்டுக்கு பழைய கே.ஜி.பி உளவுப்பிரிவு தலைவரே பொருத்தமானவர். இந்த இலட்சணத்தில் தேர்தல் ஒரு கண்துடைப்பாகவே உள்ளது. ஏற்கனெவே பல கே.ஜி.பி தலைவர்கள் இருந்து இறைச்சிக்கடை நடாத்திய இடம்தான் ரஸ்ய அதிபர் சிம்மாசனம். அதில் கே.ஜி.பி அல்லாத ஒருவர் இருப்பது கடினமானது. நாளை விடிந்தால் மறுபடியும் ஓர் உளவுப்பிரிவு தலைவரிடம் நாடு போய்விடும்.

அடுத்து வரும் ஆறு ஆண்டுகள் உலக சமுதாயத்திற்கு தலைவலி மிக்க ஆண்டுகளாகவே அமையும். அதைத் தடுக்க வேண்டிய காலம் கடந்துவிட்டது.

அலைகள் ரஸ்ய விவகாரப் பிரிவு 04.03.2012

http://www.alaikal.com/news/?p=98707

put-6.jpg

Edited by akootha

  • தொடங்கியவர்

மீண்டும் சனாதிபதியானார் பூட்டின் :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பயங்கரசுத்துமாத்து பண்ணித்தான் புட்டின் முன்னுக்கு வந்திருக்கிறான் எண்டு ரிவி ரேடியோக்களிலை கதைக்கிறாங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.