Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சன் சீ கப்பல் அகதியை நாடு கடத்தும் திட்டத்தை கைவிட்டது கனடா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Asiri-300-80-tamil.gif

138515125820120304-090330-g.jpg

சன் சீ கப்பல் அகதியை நாடு கடத்தும் திட்டத்தை கைவிட்டது கனடா

அரசியல் தஞ்சம் கோரி எம்வி சன் சீ கப்பல் மூலமாக கனடாவிவைச் சென்றடைந்த இலங்கையர் ஒருவரை நாடு கடத்தும் முயற்சிகளில் கனேடிய குடிவரவு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்ற நிலையில் அது முறியடிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் தேசிய பாதுகாப்புக்கு குறித்த இலங்கையர் அச்சுறுத்தலாக இருக்கிறார் என கனடா அறிவித்துள்ளது.

492 பேருடன் கனடாவை அடைந்த சன் சீ கப்பலில் பயணித்த 35 வயதுடைய சந்தீசன் அழகேந்திரன் என்பவர் கனடாவில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர் என கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சன் சீ கப்பலில் கனடா சென்றவர்களில் 15 பேர் விடுதலைப் புலி உறுப்பினர்கள் என தெரியவந்துள்ளதாக கனடா அறிவித்துள்ளது.

தமிழீழ போக்குவரத்து சபையில் பஸ் மற்றும் மோட்டர் சைக்கிள் திருத்துனராக அழகேந்திரன் செயல்பட்டு வந்துள்ளதாகவும் மாவீரர் தின நிகழ்வில் கலந்து கொண்டவர் எனவும் கனடா குறிப்பிட்டுள்ளது.

அழகேந்திரன் இதற்கு முன்னர் தாய்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பித்தவராவார்.

இந்த நிலையில் அழகேந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் நேரடி தொடர்பு கொண்டவர் அல்ல எனவும் ஆயுதப் பயிற்சி பெற்றவர் அல்ல எனவும் விடுதலைப் புலிகள் நடமாட்டம் இருந்த இடத்தில் வசித்து வந்தவர் எனவும் கனேடிய குடிவரவு அதிகாரி டக்ளஸ் கொச்ரன் குறிப்பிட்டுள்ளார்.

மாவீரர் தின நிகழ்வில் விடுதலைப் புலி உறுப்பினராக அவர் கலந்து கொள்ளவில்லை எனவும் சாதாரண பொது மகனாகவே கலந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் புலிகளின் அரசியல் பிரிவில் அவர் இடம்பெற்றதற்கான சான்றுகள் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இக்கருத்துக்களை ஏற்றுக் கொண்ட கனேடிய அரசு அழகேந்திரனை நாடு கடத்தும் திட்டத்தை கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

.http://www.adaderana.lk/tamil/news.php?nid=23469

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி..!

கனேடிய உளவுத்துறை தனக்கு தேவையான தகவல்களை பெற வேலைத்தளங்களுக்கு இல்லை வீட்டுக்கு திடீர் விஜயம் செய்வதுண்டு. அதை மத்தியகிழக்கு பெண் ஒருவர் பிழையான அணுகுமுறை என வெளிப்படையாக சவால் விடுத்தார். ஆனால், அதில் பிழை இல்லை என உளவுத்துறை வாதிட்டுள்ளது. http://www.theglobeandmail.com/news/national/csis-calls-surprise-work-visits-a-legitimate-investigative-strategy/article2358076/

இவ்வாறான அணுகுமுறைகளை தமிழர்கள் மத்தியிலும் கடைப்பிடிப்பது வழக்கம்.

இந்த சவால்களையும் மீறி பயணிக்கவேண்டியுள்ளது.

  • 1 month later...

இந்தக்கப்பலை ஒழுங்கு செய்தவர் என குற்றம்சாட்டப்பட்டு மார்க்கண்டு தயாபரன் பிரான்சில் கைதாகியுள்ளார்.

lewin_smuggling98.jpg

http://news.nationalpost.com/2012/04/05/mv-sun-sea-human-smuggling-suspect-thayakaran-markandu-arrested-in-france/

எம்.வி.சன் சீ கப்பல் மூலம் இலங்கை அகதிகளை கனடாவிற்கு சட்டவிரோதமான முறையில் அழைத்துச் சென்றதாக குற்றஞ் சாட்டப்பட்டு பிரான்ஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நபரே குற்றவாளி என கனடா உறுதி செய்துள்ளது.

தயாகரன் மார்கண்டு என்ற இலங்கை பிரஜையே குற்றவாளி என கனேடிய பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இவர் 2010ஆம் ஆண்டில் இலங்கை அகதிகள் 500 பேரை கனடாவிற்கு அழைத்துச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. _

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=37470

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.