Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா மனித உரிமைச் சபையில் தொடர்ந்தும் மல்லுக்கட்டும் சிறிலங்கா

Featured Replies

[ வியாழக்கிழமை, 08 மார்ச் 2012, 06:52.05 PM GMT ]

ஐ.நா மனித உரிமைச் சபையில் இடம்பெற்று வரும் பல்வேறு விவதாங்களிலும், சிறிலங்கா அரச தரப்பினர் தங்களை நியாயப்படும் வகையில், சபை அமர்வுகளில் தொடர்சியாக பங்கெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டில் இடம்பெயர்தோர் தொடர்பிலான விவாதத்தின் போது கருத்துரைத்த சிறிலங்காவின் பிரதிநிதி,

2009ம் ஆண்டின் போரின் காரணமாக, இடம்பெயர்ந்த மக்களில் 98வீதமானர்கள் மீளக்குடிமர்தப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

போரின் விளைவாக 2 90 000 இடம்பெயந்த மக்களை சிறிலங்கா அரசாங்கம் எதிர்கொள்ள நேர்ந்த நிலையில், இவர்களுக்கான வசதிகளை சிறிலங்கா அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்ததாக தெரிவித்த சிறிலங்காவின் பிரதிநிதி, இடம்பெயர்ந்த மக்களை உடனடியானதும், நீண்ட கால நோக்கத்திலுமான திட்டங்கள ஊடாக, சொந்த இடங்களில் மீளகுடிமயர்தப்பட்டதாக தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்ந்தும் சிறிலங்காவின் திட்டம், அரசாங்கத்துக்கு நிறைவைத் தந்துள்ளதாக தெரிவித்த சிறிலங்காவின் பிரதிநிதி, கடந்தாண்டு இறுதிப் புள்ளிவிபரத்தில் 6647 பேர் மட்டுமே, மீள்குடியமர்தப்பட வேண்டிய நிலையில் இருந்துள்ளதாக தெரிவித்தார்.

316 மில்லியன் டொலர்களை மீள்குடியேற்ற திட்டங்களுக்கு செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த சிறிலங்காப் பிரதிநிதி, கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பின்னர், மிகுதி உள்ளவர்களும் மீள் குடியமர்தப்படுவார்கள் என தெரிவித்தார்.

மக்களுக்கான உணவு மற்றும் குடியிருப்பு தொடர்பிலான விவாதத்தில் கருத்துரைத்த சிறிலங்காவின் பிரதிநிதி, சகல இன மக்களுக்கான குடிமைப் பாதுகாப்பை, சிறிலங்கா அரசாங்கமானது தேசிய மட்டத்தில் உறுதிப்படுத்துகின்றதென தெரிவித்தார்.

குடிமக்கள் அனைவருக்கும் நாட்டின் எந்தப் பாகத்திலும் குடியமர்வதற்கான உரிமையை சிறிலங்கா உறுதிப்படுத்துகின்றதென தெரிவித்த சிறிலங்காவின் பிரதிநிதி, பல்லின மக்களையும், பல்லின கலாச்சாரங்களையும் கொண்ட சிறிலங்காவில், அனைத்து இன மக்களின் அடையாளங்களையும் உறுதிப்படுத்தும் உரிமைகளை சிறிலங்கா பேணுகின்றது என தெரிவித்தார்.

பல்லின மக்களும் ஒன்றாக கூடி வாழ்வதற்கான வழிமுறைகளை சிறிலங்கா ஊக்குவிப்பதாகவும்சிறுபான்மை இன மக்களின் உரிமைகளை, ஒன்றுபட்ட தேசிய மட்டத்தில் வளர்தெடுக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

சிறார்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பிலான விவாதத்தின் போது கருத்து தெரிவித்த சிறிலங்காவின் பிரதிநிதி, சிறார்களுக்கான பாதுகாப்பை சிறிலங்கா உறுதிப்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

சமீபத்திய முன்னெடுப்பாக 595 போராளிச் சிறார்களை, இதுவரை புனர்வாழ்வளித்து குடும்பங்களுடன் இணைத்துள்ளதாக தெரிவித்தார்.

இவ்வாறு ஐ.நா மனித உரிமைச் சபையின் பல்வேறு விவாதங்களிலும் சிறிலங்கா பங்கெடுத்து வருகின்றமையானது, பல்வேறு விவகாரங்களிலும் தன் மீதான அழுத்தங்களை திசைதிருப்பும் வகையிலான, சிறிலங்காவின் பொய்களின் கட்டவிழ்ப்பாகவே இவைகள் உள்ளன என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

http://www.tamilwin.com/show-RUmqyDTcPdnv2.html

இவ்வாறு ஐ.நா மனித உரிமைச் சபையின் பல்வேறு விவாதங்களிலும் சிறிலங்கா பங்கெடுத்து வருகின்றமையானது, பல்வேறு விவகாரங்களிலும் தன் மீதான அழுத்தங்களை திசைதிருப்பும் வகையிலான, சிறிலங்காவின் பொய்களின் கட்டவிழ்ப்பாகவே இவைகள் உள்ளன என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஐ.நா. தீர்மானம் நிறைவேற்றப்படும் பொழுது:

- அது சிங்கள மென்போக்கு அரசியல்வாதிகளை ஓரம்கட்டச்செய்யலாம்

- இராணுவம் மெல்ல மெல்ல அரசியல் மீது நட்டம் கொள்ள ஆரம்பிக்கலாம்

சிறிலங்காவின் பிரதிநிதி, பல்லின மக்களையும், பல்லின கலாச்சாரங்களையும் கொண்ட சிறிலங்காவில், அனைத்து இன மக்களின் அடையாளங்களையும் உறுதிப்படுத்தும் உரிமைகளை சிறிலங்கா பேணுகின்றது என தெரிவித்தார்.

அப்படியானால் ஏன் சிங்கள மொழி, அரசாங்க மொழி பௌத்தமதம் அசாங்க மதம்

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவின் பிரதிநிதி, பல்லின மக்களையும், பல்லின கலாச்சாரங்களையும் கொண்ட சிறிலங்காவில், அனைத்து இன மக்களின் அடையாளங்களையும் உறுதிப்படுத்தும் உரிமைகளை சிறிலங்கா பேணுகின்றது என தெரிவித்தார்.

அப்படியானால் ஏன் சிங்கள மொழி, அரசாங்க மொழி பௌத்தமதம் அசாங்க மதம்

ஸ்ரீலங்காவில் உள்ள 22 காவல்துறை மாஅதிபர்களில்....

21 சிங்களவரும், ஒரு முஸ்லீமும் மட்டுமே... உள்ளார்.

தமிழர்களுக்கு என்றுமே, உயர் பதவிகளைக் கொடுக்க, சிங்களம் முன்வராது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.