Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவாவுக்கு வெள்ளை வானையும் எடுத்து சென்றிருக்கலாம்

Featured Replies

ஜெனிவாவுக்கு வெள்ளை வானையும் எடுத்து சென்றிருக்கலாம்: ரவி

ஜெனிவா மாநாட்டிற்காக இலங்கையிலிருந்து படையெடுத்து செல்ல வேண்டிய தேவையில்லை. இரண்டு மூன்று அமைச்சர்கள் சென்றிருந்தாலே போதுமென்று தெரிவித்த ஐ.தே.க. எம்.பி. யான ரவி கருணாநாயக்க, படையெடுத்து செல்லும் அமைச்சர்கள் “வெள்ளை வானையும்’ எடுத்து சென்றிருக்கலாம் என்றும் பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் பூர்வாங்க வரவு செலவுத் திட்ட விவாதம் ஒன்றை நடத்துதல் எனும் தனி நபர் பிரேரைணையை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான பிரேணையை வெற்றி கொள்வதற்கு இங்கிருந்து 53 பேர் படையெடுத்துச் சென்ற போதும் எவ்விதமான பிரயோசனமும் இல்லை. மக்களின் பணத்தைத்தான் வீணடித்துள்ளனர். 53 பேர் கொண்ட பட்டாளமே செல்வதை விடவும் நிமல் சிறிபால டி சில்வா போன்ற விடயம் தெரிந்த மூன்று பேரை ஜெனிவாவுக்கு அனுப்பியிருக்கலாம்.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தோற்கடிக்க முடியாத அரசு நல்லிணக்க ஆணக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றப் போவதாக கூறியுள்ளது. இதன் மூலம் ஜெனிவாவில் அரச இராணுவத்தை காட்டிக் கொடுத்துவிட்டது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் நாம் கருத்துக்களை முன் வைத்தபோது எம்மைத் துரோகிகள் என கூறிய அரசாங்கம் ஜெனிவாவுக்கு சென்று அதனை நிறைவேற்றுவதாக கூறுகின்றது.

ஜெனிவாவில் இலங்கையின் பிரயத்தனங்கள் அனைத்தும் தோற்றுவிட்டன. பிரேரணையை அமெரிக்கா சமர்ப்பித்து விட்டது. ஜெனிவா சென்ற எமது நாட்டு பிரதிநிதிகள் தம்முடன் வெள்ளை வானையும் கொண்டு சென்றிருக்கலாம் என்றார்.

http://www.alaikal.com/news/?p=99318

வெள்ளைவான் ஜெனிவாவிலும் களவெடுக்க முடியும். ஆனால் பிழை போனது வேறு ஒரு இடத்தில்.

குத்தி அங்கேயேயும் நின்று ஊடகவியாலாரை கடத்தத்தான் திட்டம் போட்டவர். ஆக்களை இருப்பிடங்களில் போய்கண்டு பிடிப்பதற்குள் பீரிசு கொட்டலில் கூத்துக்களாடி எல்லோரையும் திருப்பி அழைக்க வைத்துவிட்டார்.

இதனால்த்தான் மான் வேட்டைக்கு போகும் போது இருமல் வருத்தக்கரனை வீட்டில் விட்டுவிட்டு போகவேண்டுமென்கிறது.

  • தொடங்கியவர்

ஐ.தே.க. ஒருபக்கத்தில் நாட்டுப்பற்றுள்ள கட்சி எனக்காட்ட விரும்புகிறது. மற்றைய பக்கத்தில் எதிர்க்கட்சியாகவே இருக்க விரும்பவில்லை.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் நாம் கருத்துக்களை முன் வைத்தபோது எம்மைத் துரோகிகள் என கூறிய அரசாங்கம் ஜெனிவாவுக்கு சென்று அதனை நிறைவேற்றுவதாக கூறுகின்றது.

இரணில் ஏற்கனவே தனது கட்சி உறுப்பினர்களை ஜெனீவா பற்றி கதைக்கவேண்டாம் எனக்கேட்டுள்ளார். அதையும் மீறி இரவி இந்த கருத்தை கூறியுள்ளார். இது அண்மையில் கொலன்னாவையில் தோல்வியில் முடிந்த வெள்ளை வான் கடத்தலின் பின்னர் வந்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இதனால்த்தான் மான் வேட்டைக்கு போகும் போது இருமல் வருத்தக்கரனை வீட்டில் விட்டுவிட்டு போகவேண்டுமென்கிறது.

smiley_lol.giflollol356.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.