Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர் என்பதால் மறைக்கப்படும் திறமைகளும் மறுக்கப்படும் உரிமைகளும்

Featured Replies

இலங்கை அரசாங்கத்தின் அமைச்சரவை என்பது மிக நீண்டதொரு பட்டியலை கொண்டது .எந்த அலுவலுக்கு எந்த அமைச்சுக்கு போவதென்பது சாதாரண மக்களுக்கு புரியாத புதிராக உள்ளது .

''தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சு '' செயற்பாடுகள் நடைபெறுகிறதோ இல்லையோ இப்படியும் ஒரு அமைச்சு இயங்குகிறது .இடதுசாரி என்ற முகமூடியுடன் இந்த அரசாங்கத்தோடு கலந்து கொண்ட திரு .வாசுதேவ நாணயக்கார இதற்குப் பொறுப்பான அமைச்சராக இருக்கிறார் .

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த அமைச்சினால் ''இன விவகாரம் தொடர்பான அலகு'' என்று ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது .அமைச்சின் மேலதிக செயலாளர் திரு நிக்கலோய் பிள்ளை இதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் .

ஓர் இன சமூகமாக பிறந்த காரணத்தினால் ஏதேனும் நெருக்கடிகளை எதிர் நோக்க நேரிட்டால் இந்த அமைப்பு அதற்கான நீதியை பெற்றுத்தரும் .இது தான் ''இன விவகாரம் தொடர்பான அலகு '' என்ற இந்த அமைப்பின் செயற்பாடு என்று கூறப்படுகிறது .

இன்று இருக்கக் கூடிய மூத்த அரசியல் வாதிகளில் திரு .வாசுதேவ நாணயக்காரவும் ஒருவர் .அவ்வப்போது தமிழ் மக்களின் நியாய பூர்வமான உணர்வுகளைப் புரிந்து அவர்களுக்கு ஆதரவான கருத்துக்களை துணிச்சலுடன் வெளிப்படுத்தி வந்தவர் .அந்த வகையில் 1948 ம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னால் ஆட்சிக்கு வந்த அரசுகளால் தமிழ் இனம் என்ற ஒரே காரணத்துக்காக அவர்கள் வஞ்சிக்கப்பட்டதை நேரே பார்த்தவர்தான் இந்த வாசுதேவ நாணயக்கார .

இன்று முள்ளிவாய்க்கால் வரை தமிழினத்தை கொண்டுவந்து விட்டதன் அடிப்படைப் பிரச்சனையே அவன் தமிழனாகப் பிறந்ததுதான் என்பது இந்த வசுதேவாவுக்கு இன்னும் புரியவில்லையா ?முள்ளி வாய்க்காலில் சண்டை நடந்தது ;புலிகள் இறந்தார்கள் ;மக்கள் அழிக்கப்பட்டார்கள்;சரி அது ஒருபுறம் இருக்கட்டும் 1990இல் இருந்து 2008வரை, எத்தனை விமானத் தாக்குதல்கள் தமிழ் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டன .தங்களுக்கு வசதி வரும்போது ,நேரம் வரும்போதெல்லாம் தமிழர்களின் வீடுகள் ,பொது இடங்களில் விமானத்தாக்குதல்களை நடத்தி பொது மக்களை கொன்று குவித்துவிட்டு புலிகள் என்று கணக்கு முடித்த கதை எல்லாம் இந்த வாசுதேவாவுக்கு தெரியாதா? அல்லது அவரும் இந்த புலிக்கதையை நம்புகிறாரா ?

தனிப்பட்ட முறையில் கடந்த காலங்களில் தமிழ் இனத்திலே பிறந்த காரணத்தினால் எத்தனை பேர் நீதிக்குப்புறம்பாக தண்டிக்கப் பட்டிருக்கிறார்கள் .தமிழன் என்ற ஒரே காரணத்தினால் எவ்வித குற்றச்சாட்டுகளும் இல்லாமல் 10,20ஆண்டுகள் சிறைகளில் செத்துக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான தமிழர்களுக்கு வாசுதேவாவின் இந்த அலகு நீதி பெற்றுக் கொடுக்குமா?அந்த அதிகாரம் அதற்கு உண்டா?

இன்று லக்ஸ்மன் கதிர்காமர் உயிரோடு இல்லை .தனி ஒரு மனிதராக உலகநாடுகள் எல்லாம் திரிந்து விடுதலைப் புலிகளை பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்து உலகநாடுகள் பல தடைசெய்ய காரணமாயிருந்தவர் கதிர்காமர்தான் .இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை .தமிழின விரோதியாக இருந்தாலும் அவரது திறமையையும் ஆளுமையையும் யாரும் குறைத்து மதிப்பிட முடியாது .இன்று 50 பேர் போயும் சாதிக்க முடியாததை அவர் தனித்து நின்று சாதித்து காட்டியவர் அவரின் வெற்றிடத்தை மகிந்த அரசு நிச்சயமாக உணர்ந்திருக்கும் .இலங்கையில் பிரதமர் பதவியும் அவரின் திறமைக்கு குறைந்த பதவிதான் .அதைக்கூட சிங்களத்தலைமைகள் அவருக்கு கொடுக்க தயாராய் இருந்ததில்லை .காரணம் தமிழின விரோதியாக இருந்தாலும் அவர் தமிழர் என்பதுதான் .

ஒரு பத்திரிகையில் வந்த கேள்வி பதிலில் இப்படி எழுதியிருந்தார்கள் .

கேள்வி;- லக்ஸ்மன் கதிர்காமர் இல்லாத மந்திரிசபை எப்படியிருக்கும் ?

பதில் ;-முத்தையா முரளிதரன் இல்லாத கிறிக்கட் அணிமாதிரி இருக்கும் .

அந்தந்த துறைகளில் இரண்டு பேரின் திறமையையும் தன் ஒரே பதிலில் இமயத்தில் வைத்திருந்தார் அந்த பத்திரிகையாளர் .

தமிழனாகப் பிறந்தபடியால் முத்தையா முரளிதரனுக்கு இழைக்கப்பட்ட அநீதி இன்னும் கொடுமையானது .கிறிக்கட் உலகில் முறியடிக்க முடியாத பல உலக சாதனைகளின் சொந்தக்காரன் முரளிதரன் .இலங்கையின் உலகக்கிண்ண கனவை நனவாக்கி அர்ச்சுன ரணதுங்கவின் கையில் உலகக்கிண்ணம் வந்து விழ தூணாக நின்ற முரளியின் நிலை என்ன ?அர்ச்சுன அணியிலிருந்து விலகியபோது அல்லது சனத் ஜெயசூரிய தலைமைப் பொறுப்பிலிருந்து நீங்கிய போதாவது முரளிதரனை கப்டன் பதவியில் வைத்து அழகு பார்த்திருக்க வேண்டும் .கிறிக்கட் சபையும் விரும்பவில்லை .அரசுத் தலைமைகளும் அதை விரும்பவில்லை .தமிழன் என்ற காரணத்தால் முரளியின் கிரிக்கட் வாழ்க்கை முழுமை பெறாமல் முடிந்து போய்விட்டது .

1982ம் ஆண்டு வலது குறைந்தோருக்கான சர்வதேச ஒலிம்பிக் ஹொங்கொங்கில் நடைபெற்றது .ஒட்டுசுட்டான் கருவேலங் கண்டலை சேர்ந்த செல்லைய தவராசா என்ற இளைஞர் தனது சொந்த முயற்சியிலும் ,ஒட்டுசுட்டான் ஐக்கிய விளையாட்டு கழகத்தின் அனுசரணையோடும் இந்த போட்டியில் கலந்து கொண்டு 200 மீட்டர் ,400 மீட்டர் போட்டிகளில் தங்கப் பதக்கமும் மற்றொரு போட்டியில் வெண்கலப் பதக்கமும் பெற்று மூன்று பதக்கங்களுடன் நாடு திரும்பியிருந்தார் .கொழும்பு விமான நிலையத்தில் வந்து இறங்கியபின் இலங்கை அரசோ ,விளையாட்டுத்துறை அமைச்சோ அவரை கண்டு கொள்ளவேயில்லை .தனக்கு ஒரு பீயோன் வேலையாவது தருமாறு தனது பதக்கங்களையும் ,சான்றுகளையும் கொண்டு அரசாங்க அதிபர் ,திணைக்கள அதிகாரிகள் பலரையும் சென்று பார்த்தார் .தமிழன் என்ற காரணத்தால் அவரின் மற்ற எந்த தகுதியும் எடுபடவில்லை 20 வருடங்களுக்கு முன் வேலை தேடி புறப்பட்டவர் திரும்பவே இல்லை காணாமல் போனோர் பட்டியலில் சேர்த்து கணக்கு முடித்தாயிற்று அவரது மனைவி பிள்ளைகள் அநாதரவாக விடப்பட்டுள்ளார்கள் .

1960களிலே என்று ஞாபகம் ,நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் என்ற தமிழர் ஆசிய தடகளப் போட்டியில் உயரம் பாய்தலில் சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்றார் .அவர் தமிழ் இனத்தில் பிறந்த படியால் அவரது சாதனை பேசப்படாமலேயே போய்விட்டது .அவர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் .

இலங்கையின் கலை உலகில் தவில் வித்துவான் அமரர் தட்சணாமூர்த்தியின் பெயர் என்றுமே நிலைத்து நிற்கக்கூடியது.அவருக்கு இணையான தவில் வித்துவான் இந்தியாவில் கூட அப்போதும் இல்லை, இப்போதும் இல்லை.இலங்கை அரசால் கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயர் விருதுகளுக்கு அவர் தகுதியாய் இருந்தும் தவில் இந்துக்களின் கலை வடிவம் என்பதாலும் ,அமரர் தட்சணாமூர்த்தி தமிழராக இருந்தமையாலும் இலங்கை அரசுகள் அவரை புறக்கணித்து விட்டன

1970 களில் இலங்கை வானொலியில் தமிழ் அறிவிப்பாளராக பணியாற்றி கடல் கடந்து ,கண்டங்கள் கடந்து இலட்சோப லட்சம் தமிழர்களை தனது வெண்கலக் குரலால் கட்டிப் போட்டவர் திரு .அப்துல் ஹமீட். அவரின் ''பாட்டுக்கு பாட்டு '' நிகழ்ச்சி பட்டி தொட்டி எல்லாம் பேசப்பட்டது .இலங்கையில் முஸ்லீம்கள் தங்களை தமிழர் என்று அடையாளப் படுத்த விரும்புவதில்லை .தமிழால் உயர்ந்த அப்துல் ஹமீத் கூட தமிழன் என்று தன்னை அடையாளப்படுத்தியதாக எனக்கு நினைவில்லை .அனால் இலங்கை அரசுகள் அவரை தமிழன் என்ற வரம்புக்குள் கொண்டு வந்து இருட்டடிப்பு செய்து புறக்கணித்து விட்டன.

ஆங்கில இசை உலகில் இன்று முன்னிலையில் இருப்பவர் பாடகி மடோனா .ஆங்கில இசை உலகில் அவருக்கு இணையாக இன்று பேசப்படுபவர் ஒரு தமிழ் பெண் என்றால் நம்புவீர்களா?அவர் வேறுயாருமல்ல ஏ.ஆர் ரகுமான் இசையில் ''ஸ்லம்டாக் மில்லினர்''என்ற படத்தில் பின்னணி பாடிய செல்வி .மாயா அருள்பிரகாசம்தான் . இவரின் பெயரும் ஏ. ஆர். ரகுமானின் பெயரோடு ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப் பட்டிருந்தது .இவரை பற்றி இன்னொரு தகவல் அந்த நாட்களில் ஈரோஸ் இயக்கத்தில் முக்கிய பிரமுகராக இருந்த அருளரின் மகள் தான் இவர் .இவரின் நிஜப் பெயர் மாதங்கி அருள்பிரகாசம் .ஆங்கில இசை உலகில் இவர் M.I.Aஎன்ற பெயருடன் பிரபலமாகியுள்ளார் .தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தி இசை அல்பம் ஒன்றை இவர் வெளியிட்டிருந்தார்.இதனால் இலங்கையில் இவருக்கு புலி முத்திரை குத்தப்பட்டுள்ளது .அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் மிகப் பிரபலமானவர்கள் உட்பட கோடிக்கணக்கான ரசிகர்களை இவர் கொண்டுள்ளார் என்பது இலங்கை அரசுக்கு நல்ல செய்தியாக இருக்காது .

மேலே சொல்லப்பட்டவை எல்லாம் ஒரு சில உதாரணங்கள் .அனால் இந்த பட்டியல் இன்னும் நீளமானது .எந்த குற்றச்சாட்டும் இல்லாமல் தமிழர் என்பதால் வெறும் சந்தேகத்தின் பேரில் விசாரணை ஏதுமின்றி சிறையில் செத்துக் கொண்டிருக்கும் அப்பாவிகளை பிணையில் கூட வெளியில் விட நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கே அதிகாரமில்லாத போது உப்புச் சப்பிலாத ஒரு அமைச்சையும் அலகையும் வைத்து கொண்டு திரு .வாசுதேவ நாணயக்கார எதை சாதிக்கப் போகிறார்.

கே.சசி

இன்று லக்ஸ்மன் கதிர்காமர் உயிரோடு இல்லை .தனி ஒரு மனிதராக உலகநாடுகள் எல்லாம் திரிந்து விடுதலைப் புலிகளை பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்து உலகநாடுகள் பல தடைசெய்ய காரணமாயிருந்தவர் கதிர்காமர்தான் .இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை .தமிழின விரோதியாக இருந்தாலும் அவரது திறமையையும் ஆளுமையையும் யாரும் குறைத்து மதிப்பிட முடியாது .இன்று 50 பேர் போயும் சாதிக்க முடியாததை அவர் தனித்து நின்று சாதித்து காட்டியவர் அவரின் வெற்றிடத்தை மகிந்த அரசு நிச்சயமாக உணர்ந்திருக்கும் .இலங்கையில் பிரதமர் பதவியும் அவரின் திறமைக்கு குறைந்த பதவிதான் .அதைக்கூட சிங்களத்தலைமைகள் அவருக்கு கொடுக்க தயாராய் இருந்ததில்லை .காரணம் தமிழின விரோதியாக இருந்தாலும் அவர் தமிழர் என்பதுதான்

.

இப்படியானவர்கள் புலிகள் அமைப்பில் இருந்து இருந்தால்? எப்படி இருந்து இருக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்

.

இப்படியானவர்கள் புலிகள் அமைப்பில் இருந்து இருந்தால்? எப்படி இருந்து இருக்கும்?

கருணா போல் தன் இனத்தையே விற்றிருப்பார்!!!!.

கருணா போல் தன் இனத்தையே விற்றிருப்பார்!!!!.

எல்லாம் கருணாவை வளர்த்தவர்களுக்கு சொல்லனும் :D:lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் கருணாவை வளர்த்தவர்களுக்கு சொல்லனும் :D:lol::icon_idea:

பால்ராஜ்,தீபன் போன்றவர்களையும் புலிகள் தான் வளர்த்தவர்கள்.சுய மூளையும்,இன உணர்வும் கொஞ்சம் தேவை.(கருணா போன்றவர்களுக்கு) :huh: :huh: :icon_mrgreen: :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் கருணாவை வளர்த்தவர்களுக்கு சொல்லனும் :D:lol::icon_idea:

உங்களது திறமையை பாராட்டுகின்றேன். எல்லோராலும்முடியாது சசி.

:lol::icon_idea: :icon_idea:

.

இப்படியானவர்கள் புலிகள் அமைப்பில் இருந்து இருந்தால்? எப்படி இருந்து இருக்கும்?

மாயாவை கூப்பிட்டு அரசவை கவிஞர் ஆக்கவேண்டும் என்று சொல்லுகின்றாரா கட்டுரையாளர்.

தமிழன் ஒதுக்கப்படுவது உலகறிந்தது ஆனால் கட்டுரையாளரின் உதாரணங்கள் வெறும் சப்பை கட்டு .

பால்ராஜ்,தீபன் போன்றவர்களையும் புலிகள் தான் வளர்த்தவர்கள்.சுய மூளையும்,இன உணர்வும் கொஞ்சம் தேவை.(கருணா போன்றவர்களுக்கு) :huh: :huh: :icon_mrgreen: :icon_mrgreen:

என்னை எதிர்க்க வேண்டும் என்றதுக்காக எழுதப்பட்ட கருத்து........

கருணா, கேபி போன்றோரை வளர்த்து விட்டாவர்கள் அப்படியானவர்களை அழிக்கும் திறமையும் கொண்டு இருக்க வேண்டும்.

என்ற அர்த்ததில் எழுதப்பட்டது.................

இதற்க்கு வேற மாதிரியும் என்னால் கருத்துச் சொல்ல முடியும் ஆனால் தேவையில்லாமல் ஏன் ப்ழையதை கிளறுவான் என்று விட்டு இருக்கேன்,.

உங்களது திறமையை பாராட்டுகின்றேன். எல்லோராலும்முடியாது சசி.

:lol::icon_idea: :icon_idea:

ஒருமுறை ஆதர்வாக இருந்து எதிரியாக மாறியவர்களின் வரலாற்றை பார்க்கவும்.

  • தொடங்கியவர்

கே.வி.சசி, நுனாவிலான் , விசுகு ,அர்ஜுன் உங்களின் கருத்துக்களுக்கு நன்றி.

மேலும் திரு. அர்ஜுன் , இலங்கையில் ஆட்சியில் இருந்த அனைத்து அரசுகளும் தமிழின அடையாளங்களை வெளியுலகிற்கு மறைப்பதில் அக்கறையாகவே இருந்திருகின்றன.இதனாலேதான் பல தனிமனித சாதனைகள் திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்யப்பட்டன. அவற்றில் ஒரு சிலவற்றை நான் தொட்டுக் காட்டியிருக்கிறேன். ஆனால் இந்தப் பட்டியல் மிகமிக நீளமானது .இதை நான் எனது கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன்

அடுத்து மாயா விவகாரம், தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணத்தில் பயின்று பின் லண்டனில் குடியேறியவர். இப்போது 36 வயதில் ஆங்கில பொப்பிசை

துறையில் கொடிகட்டிப் பறக்கிறார். இதற்காக பல சர்வ தேச விருதுகளை வென்றிருக்கிறார் . அவர்மீது நான் மதிப்பு வைத்திருப்பது இதற்காக மாத்திரமல்ல

ஆங்கில ஊடகங்கள் சில அவரை தமிழ் புலியென அடையாளப் படுத்தினாலும். ஈழத் தமிழர் பிரச்னையை அவர் வெளியுலகிற்கு கொண்டு செல்ல எடுக்கும்

முயற்சிகள்தான். அவரின் நல்லபக்கங்களை அறிய முயலுங்கள். நன்றி.

Edited by k.sasi

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்வீரசிங்கம் அவர்கள் சாதனை படைத்த போது ஆக்காலங்களில் கொழும்பு டெய்லி நியூஸ் பத்திரிகையில் எதிர் வீரசிங்க என்பவர் சாதனை படைத்தார் என்று செய்திகள் வெளியிட்டன.

  • தொடங்கியவர்

இந்த உண்மைகளைத்தான் நான் வெளியில் கொண்டுவர முயன்றேன். நன்றி கந்தப்பு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.