Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் தீர்வை இலங்கை அரசாங்கம் ஆர்வத்துடன் தலைமையேற்று முன்னெடுக்க வேண்டும் : இந்தியா

Featured Replies

அரசியல் தீர்வை இலங்கை அரசாங்கம் ஆர்வத்துடன் தலைமையேற்று முன்னெடுக்க வேண்டும் : இந்தியா

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்துள்ளது.

இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களிப்பதற்கான காரணங்களை ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இந்தியப் பிரதிநிதி விளக்கியிருந்தார்:-

இலங்கையின் படிப்பினைக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழு வழங்கிய பரிந்துரைகளை இந்தியா வரவேற்றிருந்தது.

இலங்கையில் வாழும் அனைத்து இன மற்றும் மதக்குழுக்களுக்கும் மதிப்பளிக்கும் வகையிலான அரசியல் தீர்வு மூலமான நல்லிணக்கத்தை அந்நாட்டில் கொண்டுவருவதற்கு இந்த பரிந்துரைகள் ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திதருவதாய் இந்தியா நம்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் தீர்வை இலங்கை அரசாங்கம் ஆர்வத்துடன் தலைமையேற்று முன்னெடுக்க வேண்டும் என இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.

13ஆவது அரசியல் சாசன சீர்திருத்தத்தையும் அதற்கும் மேற்பட்டும் இலங்கையில் அதிகாரங்கங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதை நோக்கி இலங்கை நடைபோட வேண்டும் என்றும் பரந்துபட்ட கலந்துரையாடலுடன் அரசியல் நடவடிக்கைகளை அது முன்னெடுக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

செய்த காரியத்துக்கு ஆட்களைப் பொறுப்பேற்கச் செய்வதிலும் மனித உரிமைகளை பேணுவதிலும் தனக்கு இருக்கின்ற சர்வதேச கடப்பாடுகளை நிறைவேற்றும் நோக்கில் இலங்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் இந்தியா குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம் நல்லிணக்கம், சமாதானம் போன்ற இலக்குகளை அடைய இலங்கை போன்ற ஒரு ஜனநாயக நாட்டுக்கு போதிய அவகாசமும் செயல்படுவதற்கான இடமும் வழங்கபட வேண்டும் என்றும் இந்தியா தெரிவித்தது.

ஐ.நா.மனித உரிமை கவுன்சில் இலங்கை தமது இலட்சியங்களை எட்ட உதவியாக இருக்க வேண்டுமே ஒழிய தடையாக இருக்கக்கூடாது என்றும் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.

(மூலம் :பிபிசி )

http://www.bbc.co.uk/tamil/india/2012/03/120322_indiavote.shtml

தலைமையேற்று முன்னெடுக்க வேண்டும்

எங்கோ உதைக்கறது........................

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் தீர்வை இலங்கை அரசாங்கம் ஆர்வத்துடன் தலைமையேற்று முன்னெடுக்க வேண்டும் : இந்தியா

ஆப்பை சீனாகாரனொடு சேர்த்து சொருக போகிறான்: கந்தையா

  • தொடங்கியவர்

இந்திய மனமாற்றத்திற்கு என்ன காரணம்?

கடைசி நேரத்திலும் மகிந்த முகர்ஜியுடன் கதைத்துள்ளார் இந்தியாவின் முடிவை மாற்ற. இங்கே இந்தியா பதின்மூன்றாவது திருத்த சட்டத்திற்கும் அப்பால் சென்று தீர்வை தர கேட்டுள்ளது. அதையே கிருஸ்ணா கடைசி வரவில் செய்தார். ஆனால் மகிந்தா தான் உறுதியளிக்கவில்லை என்று காலை வாரிவிட்டுருந்தார்.

சீனாவின் ஆழமான காலூன்றல் நிச்சயம் டெல்லியை ஏமாற்றம் அடைய வைத்திருக்கும்.

தமிழக மக்களின் எழுச்சி காங்கிரசை இந்த முடிவுக்கு தள்ளி இருக்கும்.

இவை எல்லாமே இந்தியாவின் மாற்றத்தில் சிறு சிறு பங்கை ஆற்றியிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இனப்பிரச்சனைக்கான தீர்வை பொறுப்போடு முன்னெடுத்துத் தீர்த்துவைக்க வேண்டும். ஹெல உறுமய, ஜேவிபி போன்ற இனவாதிகளைக் காரணங்காட்டித் தப்பித்துக்கொள்ள முயலக்கூடாது என்பதுதான் அதன் அர்த்தம்

  • தொடங்கியவர்

வாக்களிப்பின் பின்னர் மன்மோகன் சிங்: "நாம் இதில் உள்ள சார்பான மற்றும் தீங்கான விடயங்களை ஆராய்ந்தோம். நாங்கள் வாக்களித்தமை எமது நிலைப்பாட்டின் அடிப்படையில் எடுக்கப்பட்டது.

வாக்களிப்பை தொடர்ந்து பல இந்திய இராஜதந்திரிகளும் விளக்கமளிக்கும் நிலையில் உள்ளனர்:

"இந்த தீர்மானத்தில் இலங்கையின் இறையாண்மையையோ இல்லை அதில் எந்த முடிவும் இல்லை"

" இலங்கை இந்திய கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை"

Prime Minister Manmohan Singh said after the voting, ''We had to weigh the pros and cons. What we did was in line with our stand.'' The Indian side insists that they have voted in favour of resolution only because it is 'non judgmental and non-intrusive'.

Soon after the voting, Indian diplomats were going at length to explain, "We don't see any contradictions in the position we have taken on Sri Lanka and in general."

http://www.rediff.co...rc/20120322.htm

Edited by akootha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தீர்வு இல்லையோ?

அர்ஜுன் ரணதுன்காக்கள் ஒரு இருபது புறாக்களை தான் வீழ்த்தினவை........

<video>http://youtu.be/8RWvsxGanOU</video>

  • தொடங்கியவர்

தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்: இந்திய பிரதமர்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தனது நிலைப்பாட்டிற்கு இணங்கியே இலங்கைகு எதிராக இந்தியா வாக்களித்தது எனவும் இலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதற்காக கரிசனைகள் வெளிப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டுமென விரும்பியதாகவும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

இலங்கையின் இறைமையை இந்தியா மீற விரும்பவில்லை எனவும் புதுடில்லியில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது ஏன் என செய்தியாளர்கள் வினவியமைக்கு பதிலளிக்கும் போதே இந்திய பிரதமர் இவ்வாறு கூறினார்.

"சாதக பாதகங்களை சீர்தூர்க்கி பார்க்க வேண்டும். நாம் செய்தது இலங்கை தொடர்பான எமது நிலைப்பாட்டிற்கிணங்கியதே. இலங்கையின் இறைமையை மீற நாம் விரும்பவில்லை. ஆனால் கரிசனைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும். அதனால் தமிழ் மக்கள் நீதியையும் கௌரவமான வாழ்க்கையையும் அடைய முடியும்" என அவர் தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/38125-2012-03-22-18-45-17.html

  • தொடங்கியவர்

இந்தியாவிடம் கெஞ்சி தோற்ற ‘ராஜபக்சே அண்ட் கோ’!

அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க ஆதரவைத் திரட்டி வந்த இலங்கை, தங்களுக்கு போதிய ஆதரவு இல்லை என்றதுமே, இந்தியாவிடம் கடைசி நேரத்தில் ஆதரவு கேட்டு கெஞ்சிப் பார்த்தது.

இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஏதாவது செய்யுங்கள் என்று ராஜபக்சேவே கேட்டுக் கொண்டாராம். ஆனால் அதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.

சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, கியூபா உள்ளிட்ட சில நாடுகள் மட்டுமே இலங்கைக்கு தங்களது ஆதரவை முன்பு தெரிவித்திருந்தன. ஆனால் சீனா தயவு இருந்ததால் எப்படியும் தீர்மானம் தோற்கடிக்கப்படும், இந்தியாவும் நமக்கே ஆதரவு தரும் என்று நம்பிய இலங்கைக்கு, ஐரோப்பிய யூனியன் மொத்தமாக எதிர்ப்பு நிலை எடுத்தது பெரும் பீதியைக் கிளப்பியது.

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் மொத்தம் 46 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. அதில் ஒரு தீர்மானம் நிறைவேற 24 உறுப்பு நாடுகளின் ஆதரவு தேவை. அமெரிக்காவின் தீர்மானத்துக்கு கிட்டத்தட்ட 24 நாடுகள் -இந்தியா உள்பட – ஆதரவு இருப்பது ராஜபக்சேவுக்கு தெரிந்துவிட்டதால் கடைசி நேர முயற்சியில் தீவிரமாக இறங்கிப் பார்த்து தோற்றார்.

இன்னொரு பக்கம், இலங்கைக்கு ஆதரவு திரட்டும் வகையில் இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரீஸ் ஒரு இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் அதை பெரும்பாலான நாடுகளும் புறக்கணித்து விட்டன. இலங்கை போடும் விருந்தை சுவைப்பதற்காக மேற்கண்ட சில நாடுகளின் பிரதிநிதிகள் மட்டுமே ஆவலோடு வந்திருந்தனராம். இதனால் விருந்தை கசப்புணர்வுடன் இலங்கைத் தரப்பு முடித்ததாம்.

இதற்கிடையே, கடைசி நேர முயற்சியாக, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை ராஜபக்சே தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்தியாவின் நிலையை மாற்றிக் கொள்ளுமாறு கெஞ்சி கேட்டுக் கொண்டாராம்.

பிரதமர் மன்மோகன் சிங்கிடம் எடுத்துச் சொல்லி இந்தியாவின் நிலையை மாற்ற வேண்டும் என்று அவர் பிரணாப்பிடம் கோரினாராம். ஏற்கனவே நேற்று கிருஷ்ணாவை, சந்தித்த பெரீஸ் இதே கோரிக்கையை வலியுறுத்தினார். அதற்கு கிருஷ்ணா, கை விரித்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்தே பிரணாப்பைத் தொடர்பு கொண்டார் ராஜபக்சே என்கிறார்கள்.

நேரடியாக பிரதமர் மன்மோகன் சிங்கிடமும், சோனியா காந்தியிடமும் கூட ராஜபக்சே பேசி ஆதரவு கோரலாம் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இருப்பினும் நாடாளுமன்றத்தில் தீர்மானத்தை ஆதரிப்போம் என்று சொல்லி விட்டதால் இந்திய அரசு தனது நிலையை கடைசிவரை மாற்றிக் கொள்ளவில்லை.

http://www.alaikal.com/news/?p=100727

Edited by akootha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேரளா போய் எம். கே. நாராயணின் கோவிலில் எடைக்கு எடை தங்கம் இலஞ்சம் கொடுக்க கஜானா காலி.  காலை பிடிக்க தயார். 

  • தொடங்கியவர்

எனது நிறைவேறாத கனவு - தமிழீழம், கருணாநிதி

இன்று ஊடகவியலார்களை சந்தித்த கருணாநிதியிடம் உங்களின் இதுவரை நிறைவேறாத கனவு எது என்று கேட்கப்பட்டபொழுது அது 'தமிழீழம்' எனப்பதிலளித்தார்.

அமெரிக்க தீர்மானத்திற்கு ஆதரவு தந்தமைக்கு சிங்கிற்கும் சோனியாவிற்கும் நன்றி தெரிவித்தார்.

http://in.news.yahoo.com/tamil-eelam-unrealised-dream-karunanidhi-173502850.html

  • கருத்துக்கள உறவுகள்

எனது நிறைவேறாத கனவு - தமிழீழம், கருணாநிதி

இன்று ஊடகவியலார்களை சந்தித்த கருணாநிதியிடம் உங்களின் இதுவரை நிறைவேறாத கனவு எது என்று கேட்கப்பட்டபொழுது அது 'தமிழீழம்' எனப்பதிலளித்தார்.

அமெரிக்க தீர்மானத்திற்கு ஆதரவு தந்தமைக்கு சிங்கிற்கும் சோனியாவிற்கும் நன்றி தெரிவித்தார்.

http://in.news.yahoo...-173502850.html

கருணாநிதி இப்போ... அதிகமாக பொய் சொல்ல ஆரம்பித்து விட்டார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.