Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு எதிராக வாக்களித்தமையால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படவில்லை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு எதிராக வாக்கலித்ததால் இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்கிற .எஸ்.கல்கட் அவர்களின் கூற்று தவறானது

திரு கல்கட் அவர்களே, உங்கள் கூற்று தப்பானது. இலங்கை புலிகள் அழிக்கப்பட்டு விட்டது என்றது. ஆனால் இலங்கை அரசு இலங்கையின் வடகிழக்கு மாகாணங்களில் கட்டி எழுப்பும் இராணுவ மயமாக்கலின் structure and pattern of the militarization தொடர்பாக ஆராய்கிறவர்கள் உங்கள் கூற்றை மறுதலிப்பார்கள்.

மன்னார் மாவட்டக் கரைகள், கச்சதீவு, நெடுந்தீவு முல்லைத்தீவு மாவட்டக் கரைகள், வன்னிப் பகுதிகள் என அவர்கள் கட்டி எழுப்பும் இராணுவ அமைப்புகள் இரண்டாவது IPKF வரவை இலங்கை எதிர்பார்த்துத் தயாராகுவதையே உணர்த்துகிறது.

நெடுந்தீவு போன்ற இடங்களில் அவர்கள் தொலை தொடர்புக் கோபுர போர்வையில் அமைதிருக்கும் அமைப்புகள் தொடர்பாகவும் சந்தேகங்கள் உள்ளது.

இலங்கையின் வடபகுதி இராணுவ மயமாக்கல் அமைப்பு புலிகள் மீழமைப்புத் தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கையென்று நீஙகள் நம்புகிறீர்களா?

அவற்றின் அமைப்பும் ஆற்றலும் புவியியலும் அவை 2ம் IPKF வருகை நிகழ்ந்தால் இந்திய முப்படைகளையும் சர்வதேச தலையீட்டுக்கு அவசியமான சில நாட்க்கள் வரைக்குமாவது தடுத்து நிறுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப் படுகிறது என்பதை நீங்கள் உணரவில்லையா? அத்தகைய சில நாட் போரின்போது தென்னிந்திய அணுமின் நிலையங்கள் உட்பட முக்கியமான நிலைகளைத் தாக்கும் வல்லமையை இலங்கை விமானப் படை பெற முனைவது மற்றும் இலங்கை தொலைத் தாக்கல் வல்லமையை அதிகரிக்க முனைவது இந்தியப் பாதுகாப்புக்கு ஆபத்தானது என உங்களுக்குத் தோன்றவில்லையா?

மேலும் இந்திய பாதுகாப்புக்கு மிக முக்கியமான மன்னார்க் கடல் எண்ணை வளங்களை ஆராய்ந்து அறுவடை செய்ய இலங்கை அரசுக்கு இந்திய நிறுவனங்கள் மட்டுமே தெரிவாக இல்லையென்பதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்.

ஜெனீவாவில் இந்தியா எடுத்த நிலைபாடு இலங்கை அரசுக்கு அதிற்ச்சியில்லை. ஆனால் என்றோ வரும் என்று இலங்கை எதிர்பார்த்த இந்திய முரண்பாடு தாங்கள் முழுமையாக தாயராகுமுன்னம் இத்தனை விரைவாக இடம் பெற்றதுதான் அவர்களுக்கு அதிற்ச்சி.

இந்த பின்னணியில் ஜெனீவாவில் இந்தியா எடுத்த நிலைபாடு இந்திய பாதுகாப்புக்குக்கு சாதகமானது என்றே கருதுகிறேன்.

என்னுடைய எதிர்வினை உங்களுக்கு கிடைக்க வேண்டுமென்றும் இது தொடர்பாக உங்களோடு தொடர்ந்து விவாதிக்கவேண்டும் என்றும் விரும்புகிறேன் எனது மின்னஞ்சல் visjayapalan@gmail.com

இங்கு பதிவுசெய்த கருத்துத் தொடர்பான யாழ் வாசகர்களது கருத்தை எதிர்பார்க்கிறேன்

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவுக்கு ஆதரவு வழங்கியதால் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாம்!

Lt-Gen-A-S-Kalkat-150x150.jpg

ஜெனீவாவில் இலங்கை்கு எதிரான முன்வைக்கப்ட்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தமை காரணமாக தமது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளதாக இந்தியாவின் முன்னாள் இராணுவ உயரதிகாரி ஒருவர் கருத்து வெளியிட:டுள்ளார். இதன் காரணமாக இந்தியாவின் பாதுகாப்பு முறைமைகளில் நெருக்கடி நிலைமையை தோற்றுவிக்கும் எனவும் லெப்டினன் ஜெனரல் கல்கட் சுட்டிக்காட்டியுள்ளார்.

1987 ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்ததிற்கு அமைய இந்திய – இலங்கை அமைதிப்படையின் முன்னாள் பிரதம ராணுவ அதிகாரியான ஏ.எஸ்.கல்கட் இவ்வாறு தெரிவித்துள்ளார்

சீனா, பிராந்தியத்தில் முன்னிலைக்கு வருவதை தடுப்பதற்கு இலங்கையுடன் இணைந்து இந்தியா செயற்படவேண்டும். இந்தியாவின் சகலவித பாதுகாப்பு துறை சார் விடயங்களில் கடற்பிராந்திய பாதுகாப்பு தொடர்பில் இலங்கை தீர்க்கமான முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது. எனவும் கூறியுள்ளார்.

http://tamil.srilankamirror.com/2012/03/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4/

ஓய்வு பெற்றவர்கள் அப்படியும் கூறுவார்கள். எல்லாமே செய்திகள்தான். முன்னர் தீக்ஷித் ஓய்வுபெற்றவுடன் வேறுபட்டார். இப்போது இவர் சிற்லங்காவோ சீனாவோ இந்தியத் தென்பிராந்தியத்திலும் சரி வேறு எப்பகுதியிலேனும் சரி நேரடிப் போரிடுதலுக்குத் தயாராகப் போவதில்லை.

அமெரிக்க மேற்குல நாடுகளின் ஒத்துழைப்புகள் இந்தியாவிற்கு உண்டு. அதிலும் இந்திய ரஷ்ய பாதுகாப்பு ஒப்பந்தம் இன்னமும் நடைமுறையிலுண்டு.

தமிழர்சார் இராணுவ மீளமைப்பு ஒன்று இந்தியாவினால் மேற்கொள்ளப்படும் சாத்தியங்கள் தென்படுகின்றன. கல்கட் கூறுவது போல் இந்தியாவிற்கு அச்சுறுத்தல் ஏற்படுமாயின் இந்த நிகழ்வு தவிர்க்க முடியாததாகிவிடும்.

ஜெனீவா பிரேரணையால் நாட்டின் சுயாதிபத்தியத்துக்கு பாதிப்பில்லை அமைச்சர் வாசுதேவ _

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=37258

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.