Jump to content

காமம் அதில் காதல் இல்லை..காதல் அதில் காமம் இல்லை


Recommended Posts

பதியப்பட்டது

<span style='font-size:30pt;line-height:100%'><span style='color:blue'>காமம் அதில் காதல் இல்லை

காதல் அதில் காமம் இல்லை</span>

வீட்டின் முன்புறம் இருந்து பார்த்தால் மாடி வீடு போல தெரிந்தாலும் அங்கே இரண்டு அறைகள்தான் மீதமெல்லாம் மொட்டை மாடி அதில் ஒருபுறம் மாமரக்கிளை வளைந்து தண்ணீர் தொட்டிக்கு குடை பிடிப்பதுப்போல் இருக்கும்.வீட்டிற்க்கு உள்ளே ஒரு அறையில் இருந்து பார்த்தால் கீழே முன்புறம் தெருவே பளிச்சென தெரியும்.இப்போ இந்த வீட்டுக்கு என்னாச்சு?, அது தான் நான் தங்கியிருக்கும் வீடு. கீழே வீட்டுகாரர் அவர் மனைவி நான்கு வயது பையன் என்று சிறு குடும்பம் மிகவும் அமைதியாக இருக்கும்.நான் வழக்கமாக விடியல் காலை 6.30 மணிக்கு எந்திருச்சு பக்கத்தில உள்ள டீக்கடை போகும்போது கீழ் வீட்டு அண்ணி ( அவரு அண்ணா அதனால் இவுங்க அண்ணி கணக்கு சரியா) கோலம் போடுவார்கள் என்னை கண்டவுடன் உதட்டோரமாக சிரிதாக ஒரு சிரிப்பு சிரிப்பார்கள் பதிலுக்கு நானும் புன்முறுவல் ஒன்று செய்துவிட்டு டீகுடிக்க போய்விடுவேன். எப்படியோ ஒருவருடம் ஓடிப்போச்சு இந்த வீட்டிற்க்கு வந்து. இரண்டு அல்லது மூன்று முறை அண்ணி மிகவும் சந்தோசமாக இருந்ததை பார்த்திருக்கிறேன் ஒருவராம் நீடிக்கும் அப்புறம் மிகவும் சாந்தமாக இருப்பார்கள்,அந்த அண்ணா எப்போதாவது மேலே வந்து இரவு நெடுநேரம் இருப்பார் விரக்தியாக ஏதாவது பேசிக்கொண்டு இருப்பார் பிறகு அங்கேயே படுதுறங்கி விடுவார். இன்னிக்கு அண்ணி மீண்டும் மிக சந்தோசமாக இருப்பது தெரிந்தது, மாடிப் படியிறங்கி வரும்போது அவர் ஏதேபாடல் முனுமுனுத்தபடி கோலம் போடுவதை பார்க்க அழகா இருந்தது, தலை குளித்து வெள்ளை துண்டு தலையில் சுறியிருக்கும் விதமே ஒரு அழகுதான்,அவருடைய மாநிறத்துக்கு மஞ்சள் மெலிதாக பூசியிருந்தது மினுமினுப்பாக இருந்தது ,சிறிய வட்டமாக குங்குமம் அதற்க்கு கீழ் மெல்லியதாக கோடுபோல திருநீர், வெளிர்மஞ்சள் சேலையில் காலையில் மங்களகரமான அவர் முகத்தில் விழித்தது மனதில் ஒரு மகிழ்ச்சி வந்தது,

"என்ன அங்கேயே நின்னுட்டீங்க ஒ படிக்கட்டுல கோலமா டப்பா இருக்கா, இருங்க நகத்தி வச்சிடுரேன்" என்று கேட்டுக்கொண்டே படியிறங்க வழிசெய்து கொடுத்துவிட்டு "கோலம் எப்படி இருக்கு"?என்றார்

இதை சற்றும் எதிர்பார்க்காத நான் ம்ம் ரொம்ப நல்லா இருக்கு எங்க அம்மாவும் இப்படிதான் மயில் கோலம் போடுவாங்க என்றேன்

"அட கோலத்தோட பேரெல்லாம் தெரியுமா" என ஆச்சரியமாக கேட்டு பிறகு "என்ன உங்க அண்ணா இன்னும் தூங்குறாறா?" என்று என்னிடம் கேட்டார்.

நான் பாக்கலியே மேல தூங்குறாரா என்று அவரையே திருப்பி கேக்க

அவர் வாய் விட்டு சிரித்துவிட்டார்.

"இருக்குறது ரெண்டு ரூம் அதுலயெ என்னா நடக்குதுன்னு தெரியலையா?

ராத்திரி வீட்டுக்கு எங்க மாமா வந்தாங்க கொஞ்சநேரம் பேசிக்கிட்டு இருந்துட்டு மேல படுத்துக்க வந்துட்டார்" என்று சொல்லிவிட்டு அய்யோ மாமா எழுதிட்டார் என்று சொல்லிகொண்டு வேகமாக வீட்டுக்குள் போய்விட்டார்.

எனக்கு என்னவோ மனம் பலசிந்தனைக்கு போய்வந்தது,அண்ணியுடய மாமா வரும்போது அண்ணா மேலே படுக்கவந்துருவார் விரக்தியாக பேசிகொண்டிருப்பதும் அப்போதுதான். அண்ணியும் அந்த நேரத்திலதான் ரொம்ப சந்தோசமாக இருக்கார் ரொம்ப யேசிச்சுக்கிட்டே ரெண்டு டீ ரெண்டு சிகரெட்டு அடிச்சுட்டு வீட்டுக்குவர அண்ணா முழிச்சுட்டார்ன்னு தெரிஞ்சது,அவருடய மகன் அவருக்கு காபி வைத்துவிட்டு ஓடிவிட்டான்,தந்தையிடம் அவனுக்கு பெரிதாக ஒட்டுதல் கிடையாது இவருக்கும் மகன்மீது பாசம்துளிகூட கிடையாது காய்ச்சல் வந்தபோதுகூட டாக்டர்கிட்ட கூட்டிக்கிட்டு போனது அவர் மனைவிதான் இவர் வேறுவேளை இருப்பதாக சொல்லிவிட்டு வெளியே போய்விட்டார்.அன்று மாடியில் இருந்து பார்த்த எனக்கு வினோதமாக இருந்தது இன்று அது குழப்பத்தை அதிகரித்தது.சரி இதுக்குமேல் இதுபற்றி யோசிக்க வேண்டாம் என முடிவுக்கு வந்தவனாக குளிக்க போனேன்.குளித்துக்கொண்டிருக்

Posted

கதை எப்பிடியோ-சொல்ல தெரியல !

சிவனடியார் கதைதானே - போனா போகுது!

ஏன் சினேகிதி - தனி திறமை உள்ள நீங்க

சொந்த படைப்புக்களையே தொடர்ந்து தந்தாலென்ன ?

என்போன்றவர்கள் எதிர்பார்ப்பது- அதனைதான் - உங்களிடமிருந்து! 8)

Posted

ஆ....என்ன இப்பிடி சொல்லிப்போட்டீங்கள் :oops: :oops:

Posted

இணைப்பக்கு நன்றி சினேகிதி

வர்ணன் அண்ணா சொன்ன மாதிரி உங்கட சொநத படைப்புகளையும் தரலாமே. :P

Posted

கதை நல்லா இருக்கு. சந்தேகப்படும் ஆண்களுக்கு உகந்த கதை. ஆனால் பல எழுத்து பிழைகள் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ke ke ke கதை நன்னா இருக்கு....

கணவனுட்ட உண்மைய சொல்லி இரந்தா எதுக்கு சந்தேக படப்போறாரு..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வித்தியாசமான கதை, சுண்டல் சொன்னமாதிரி முதலே அவருக்கு சொல்லியிருக்கலாம் தானே?? சொல்வதில் என்ன பிரச்சினை??

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுண்டல், விஸ்ணு சொல்வது போல கணவருக்கு முதல் சொல்லி இருக்கலாம் தானே. எழுத்துக்கள் பெரிதாக இருப்பதினால் வாசித்து முடிந்தவுடன் கண்கள் கூசுகின்றன.

Posted

இது எனது நண்பர் ஒருவர் எழுதிய கதை. கருத்துகளுக்கு நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.