Jump to content

ரிசானாவின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாவை நன்கொடையாக வழங்கினார் ஜனாதிபதி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
rizana_family_donation-seithy-20130122-1

சவுதி அரேபியாவில் சிரச்சேதம் செய்யப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மூதுரைச் சேர்ந்த இலங்கை பணிப்பெண் ரிசானா நபீக்கின் குடும்பத்தாருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 10 லட்சம் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இத்தகவலை தெரிவித்துள்ளது. ரிசானா நபீக்கின் குடும்பத்தினரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அலரி மாளிகையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை சந்தித்துள்ளார்.

  

இதன்போதே, பணிப்பெண் ரிசானா நபீக்கின் குடும்பத்திற்கு 10 இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கப்பட்டது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் தெரிவித்தார். அத்துடன் ரிசானா நபீக்கின் சகோதரருக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் திருகோணமலை மாவட்ட அலுவகத்திலும் தொழில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

 

இந்த நியமன கடிதமும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் இந்த சந்திப்பின்போது கையளிக்கப்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக் மேலும் தெரிவித்தார். இந்த சந்திப்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் டிலான் பெரேரா, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் மற்றும் திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

 

rizana_family_donation-seithy-20130122-2

 

http://www.seithy.com/breifNews.php?newsID=74375&category=TamilNews&language=tamil

Posted

மகிந்த அரசியல் இலாபத்திற்காக வைத்த இந்த உயிரின் விலை - பத்து இலட்சம் ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பத்து இலட்சத்தை கொடுத்து இஸ்லாமியர்களின் நன்மதிப்பை பெற முயல்கின்றார் மகிந்தர் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்கொடையின் அர்த்தம் என்ன?



அதாவது நன்கொடை என்ற சொல்லின் அர்த்தம் என்ன?

Posted

பொருளாதார அரசியல் காரணமாக இந்த நன்கொடை.


சரிந்து வரும் சிங்கள நாட்டின் பொருளாதார சுமை மேலும் பாரமாக கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த நன்கொடை எப்படி என்றால் வழி தேங்காயை எடுத்து தெருப்பிள்ளையாருக்கு உடைத்த கதைமாதிரி 

Posted

இதை சவுதி இளவரசரின் கையில் கொடுத்து அதை படத்திற்கு திரும்ப வாங்கி, பின்னர் அதை தாயார் மறுத்தார் என்று கூறி...... :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.