Jump to content

யாழில். உயிர்கொல்லி தேள்கள்: உயிரி ஆயுதமாக புலிகள் பயன்படுத்தியிருக்கலாம் என சந்தேகம்


Recommended Posts

பதியப்பட்டது

யாழில். உயிர்கொல்லி தேள்கள்: உயிரி ஆயுதமாக புலிகள் பயன்படுத்தியிருக்கலாம் என சந்தேகம்

 

யாழ்ப்பாணம் மற்றும் அதனை அண்டிய பகுதியில் உயிர் கொல்லி தேள்கள் காணப்படுவதாக சிங்கள தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் எப்போது கண்டிராத வெள்ளை நிறத்திலான மிகவும் கொடி விஷத்தைக் கொண்ட தேள் வகையொன்று யாழ்ப்பாணத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த தேள் கொட்டினால் மரணம் ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. போர் இடம்பெற்ற காலத்திலும் அதன் பின்னரும் இந்தத் தேள் கொட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் துரித அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

இந்த தேள் வகை இந்தியாவின் மஹாராஸ்டிரா மாநிலத்தில் அதிகமாக காணப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த தேள் வகைகளை உயிரி ஆயுதமாக பயன்படுத்தியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த தேள் வகைகளை இந்திய அமைதி காக்கும் படையினர் கொண்டு வந்திருக்கலாம் என பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.ஏ.எம். குலரட்ன சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

1991ஆம் ஆண்டில் முதல் தடவையாக வெள்ளை தேள் கொட்டிய சம்பவம் பதிவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். வெள்ளைத் தேள் கொட்டியதனால் சிலர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=3523

Posted

இதென்ன அநியாயமா இருக்கு?? :D

என் அண்ணர் அப்பவே ஒருக்கால் வெள்ளைத்தேளால் கடி வாங்கினவர்.. :o

என்ன.. கடிச்ச தேள் தான் பாவம்.. :unsure: செத்துப்போச்சு.. :wub:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நானும் ஒருக்கா, தென்னோலையை நனையப்போட்டு, எடுத்துக் கிடுகு பின்னேக்கை, எனக்கும் ஒன்றிரண்டு தரம் கடிச்சிருக்கு! :o

 

white-scorpion.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதில் பெரும்பாலான வெள்ளைத்தேள்கள்.... இந்திய அமைதிப்படை ஈழத்திற்கு வரும் போது... அவர்களின் தளபாடங்களுடன் சேர்ந்து வந்ததாக... அன்றைய பத்திரிகைகளில் செய்தி வந்தது. எதுக்கும்... வெள்ளைத் தேளில், டி.என்.ஏ பரிசோதனை செய்து பார்த்தால்... உண்மை புலப்படும். :rolleyes:  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழில் வெள்ளை தேள்: இந்திய அமைதிப் படை 'உயிரி ஆயுதமாக' கொண்டு சென்றதாக புது சர்ச்சை!


யாழ்ப்பாணம்: இலங்கையின் யாழ்ப்பாணம் மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் உயிரைக் கொல்லும் 'வெள்ளை தேள்கள்' எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. யாழ்ப்பாணத்துக்கு இந்திய அமைதிப் படை சென்ற காலத்தில்தான் இந்தியாவில் இருந்து இந்த வெள்ளை தேள்களும் கொண்டுவந்துவிடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


யாழ்ப்பாணத்தில் எப்போதும் இல்லாத வகையில் வெள்ளை நிறத்திலான மிகவும் கொடிய விஷத்தைக் கொண்ட தேள்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த தேளினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதால் இது எப்படி திடீரென வந்தது என்ற கேள்வி எழுந்திருக்கிறது.


இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் அதிகமாக காணப்படக் கூடிய இந்த வெள்ளை தேள்களின் படையெடுப்பு குறித்து பல்வேறு கருத்துகள் வெளியாகி இருக்கின்றன.


இலங்கையின் பேராதனைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் குலரத்ன கருத்து தெரிவிக்கையில், இந்திய அமைதி காக்கும் படையினர் இவற்றை கொண்டு வந்திருக்கலாம் எனக் கூறியிருப்பது சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. மேலும் 1991-ஆம் ஆண்டு தான் முதல் முறையாக வெள்ளை தேள் கொட்டிய சம்பவம் யாழ்ப்பாணத்தில் பதிவானது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.


இந்திய அமைதிப் படையினர் 'உயிரி ஆயுதமாக' வெள்ளைத் தேளை பயன்படுத்தினரா? என்ற சர்ச்சைக்கு இது விதை போட்டிருக்கிறது.


நன்றி தற்ஸ்தமிழ்.


மேலே உள்ள இணையத்தில் செய்தி இப்படியிருக்க... பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர், புலிகள் மேல் குற்றம் சாட்டுகின்றார்.
இதனை யொத்த செய்தி, இந்திய அமைதிப்டை வந்த காலத்தில்.... யாழ் களத்திலும், இணைக்கப்பட்டிருந்தது... நல்ல ஞாபகம் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிங்களவன் மனசுக்கு எந்த வகை

உயிரினம் கடித்தாலும்..
இரண்டு எழுத்தே நினைவில்

நிற்கும்..."புலி"
 

white-scorpion.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.