24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா: சுகாதார விதிமுறைகளை மீறிய உணவு நிலையங்களுக்கு எதிராக வழக்கு
வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா: சுகாதார விதிமுறைகளை மீறிய உணவு நிலையங்களுக்கு எதிராக வழக்கு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பட்டத் திருவிழாவின் போது சுகாதார விதிமுறைகளைப் பேணத் தவறிய 24 உணவு கையாளும் நிலையங்களுக்கு எதிராகப் பொது சுகாதார பரிசோதகரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த தைப்பொங்கல் தினத்தன்று வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் நடைபெற்ற பட்டத் திருவிழாவின் போது, மருத்துவச் சான்றிதழ் இன்றி உணவைக் கையாண்டமை, திண்மக்கழிவுகளைத் திறந்த வெளியில் வீசியமை, அனுமதிக்கப்பட்ட உணவுத்தரக் கொள்கலன்களைப் பயன்படுத்தாது பிளாஸ்டிக் கொள்கலன்களைப் பயன்படுத்தியமை, முகச்சவரம் மற்றும் தனிநபர் சுகாதாரம் பேணாமல் உணவைக் கையாண்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதனடிப்படையில் ஐஸ்கிரீம் வாகனங்கள், பஞ்சு மிட்டாய் உற்பத்தியாளர்கள், காரச் சுண்டல் வண்டிகள் மற்றும் பானி பூரி விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட 24 உணவு நிலையங்களுக்கு எதிராக, வல்வெட்டித்துறை நகர சபையின் பொதுச்சுகாதார பரிசோதகர் பா. தினேஷ், பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் இன்று வழக்குத் தாக்கல் செய்தார். குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, 24 உரிமையாளர்களில் 19 பேர் மன்றில் முன்னிலையாகி, தம் மீதான குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டனர். இதனையடுத்து, குறித்த 19 உரிமையாளர்களையும் கடுமையாக எச்சரித்த மன்று, அவர்களுக்கு மொத்தமாக 4 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா தண்டம் விதித்தது. அதேவேளை, மன்றில் இன்று முன்னிலையாகாத ஏனைய 05 உரிமையாளர்களையும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmkr6x3ny04byo29nxw86k2co
-
யாழ். சுழிபுரத்தில் வெளியேறிய இராணுவம்
யாழ். சுழிபுரத்தில் வெளியேறிய இராணுவம் யாழ். - சுழிபுரம் பகுதியில் கடந்த 30 ஆண்டு காலமாக முகாமிட்டு இருந்த இராணுவத்தினர் நேற்றிரவு அந்த முகாமை விட்டு முழுமையாக வெளியேறியுள்ள இராணுவத்தினர் சங்கானை படை முகாமுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இராணுவத்தினர் அந்த இடத்தை விட்டு வெளியேறுவது குறித்து, கடிதமொன்றை 513வது காலாட்படை பிரிவின் கட்டளை தளபதி சில தினங்களுக்கு முன்னர் சங்கானை பிரதேச செயலாளர் கவிதா உதயகுமாரிடம் கையளித்தார். அதேநேரம், பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள இராணுவ முகாமும் அகற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த பகுதியில் நீண்டகாலமாக முகாமிட்டு குடியிருந்த இராணுவத்தினர் அராலி பகுதியில் உள்ள இராணுவ முகாமிற்கு மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பண்டத்தரிப்பு படை முகாமானது 100 அடி நீளத்தை கொண்டதால் அதனை அகற்றுவதற்கு, காலம் தேவை என்பதால் அவர்கள் அங்கிருந்து வெளியேற சற்று தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (M) https://www.tamilmirror.lk/செய்திகள்/யாழ்-சுழிபுரத்தில்-வெளியேறிய-இராணுவம்/175-371486
-
பரபரப்பு: குருநாகல் விகாரையில் முன்னாள் ஜனாதிபதியின் ‘இரகசிய’ சொகுசு அறை அம்பலம்!
பரபரப்பு: குருநாகல் விகாரையில் முன்னாள் ஜனாதிபதியின் ‘இரகசிய’ சொகுசு அறை அம்பலம்! adminJanuary 23, 2026 குருநாகலில் உள்ள பிரபல விகாரை ஒன்றில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படும் அதி சொகுசு அறை குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்களை அங்கிருந்த பௌத்த தேரர் ஒருவர் வெளியிட்டுள்ளார். குளிரூட்டப்பட்ட வசதி, விலை உயர்ந்த மெத்தைகள் மற்றும் சொகுசுத் தளபாடங்களுடன் இந்த அறை வடிவமைக்கப்பட்டுள்ளது. அறைக்குள் இருந்து யாரும் அறியாத வண்ணம் வெளியேறுவதற்கு எனத் தனியாக ஒரு சிறிய கதவு அமைக்கப்பட்டுள்ளது. நுழைவாயிலில் உள்ள இரும்பு கேட்டை மூடிவிட்டால், உள்ளே வாகனம் இருப்பதோ அல்லது ஆட்கள் இருப்பதோ வெளியில் இருப்பவர்களுக்குத் தெரியாது. மகிந்த ராஜபக்ச இரவு நேரங்களில் தங்குவதில்லை. ஆனால், அவசரமாக வந்து பல மணிநேரம் தங்கியிருந்து தனது இரகசிய விடயங்களில் ஈடுபடுவார். ‘ஹசினி’ என்ற பெண்ணும் அங்கு வந்து தங்குவதாகக் குறிப்பிட்ட தேரர், அந்த கிராமத்து மக்களுக்கே இப்படியொரு அறை இருப்பது தெரியாது எனத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, அந்த விகாரையில் உள்ள அனைத்துக் கட்டடங்களையும் மகிந்த ராஜபக்சவே திறந்து வைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2026/227331/
- Today
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
படித்தவர்கள் பேச்சில் "நான்" எனும் அகம்பாவம் கண்டேன். அவர்கள் படித்த படிப்பிற்கும் பேசும் பேச்சுக்கும் சம்பந்தமேயில்லை என உணர்ந்தேன்.
-
📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –
சிவஞானத்தின் ஆதங்கத்திலும் ஒரு நிஞாயம் இருக்கிறது. முன்பொருதடவை முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் ஒரு மக்கள் பேரணி நடத்தப்பட்டது. அப்போ ஊடகவியலாளர் ஒருவர் அதுபற்றி சுமந்திரனிடம் வினவியபோது; தாங்கள் அதில் பங்கு பற்றப்போவதில்லையென்றும் மக்களை பங்குபற்றும்படி கேட்டுக்கொள்வதில்லை என்றும் பதில் வழங்கினார். ஆனால் மக்கள் அலையலையாய் திரண்டிருந்தனர். பின்னாளில் பொதுமக்கள் பேரவை ஏற்பாடு செய்திருந்த பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையில் பேரணியில் புகுந்து தன்னை முதன்மைப்படுத்தினார், அதன்பின் கடற்தொழிலாளர் எதிர்ப்பு போராட்டத்திலும் அதனோடு தொடர்பு படாத தொப்பியணிந்து ஷோ காட்டினார். அவர் நினைத்தது பேரணி, கடையடைப்பு என்று அறிவித்தால்; அது யார் அறிவித்தாலும் மக்கள் திரள்வர் என்று நினைத்து கடையடைப்பிற்கு அழைப்பு விடுத்தார். அது பிசுபிசுத்து போனதுடன் எதிர்ப்பும் வெளிப்பட்டது. மக்கள் கோமாளிகளல்ல. அவர்களுக்குரிய காலம், காரணம், அழைப்பு விடுபவரின் நேர்மை, நோக்கம் தெரிந்தே பங்குபற்றுவதா வேண்டாமா என முடிவு செய்வர். இப்போ, தென்னிலங்கையில் இருந்து ஒரு ஜனாதிபதி பொங்கல் கொண்டாட வரும்போது, மக்கள் எதிர்ப்பு ஏதும் செய்யாமல் கூடிக்கொண்டாடியது அவர்களுக்கு வெறுப்பேற்றத்தான் செய்யும். என்ன செய்வது? காற்றுள்ளபோதே தூற்றியிருக்கலாம், இப்படி வாயால் புலம்பிக்கொண்டு திரிய வேண்டியிருந்திருக்காது.
-
📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –
ஆசை, தோசை, அப்பளம், வடை…. 😁 😂 🤣 “நந்தவனத்தில் ஓர் ஆண்டி, அவன்…. நாலாறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக் கூத்தாடி, கூத்தாடி போட்டுடைத்தாண்டி.” இது… சுத்துமாத்து சுமந்திரனுக்காகவே எழுதிய பாடல். 😂 பைத்தியக்காரன் கதைப்பதை எல்லாம், சீரியசாக எடுக்கக் கூடாது. 🤣 இவர், அனுர அரசில் பிரதம மந்திரி பதவிக்கும் ஆசைப் பட்ட ஆள். 😁 அதுதான்…. சென்ற தேர்தலில், கோவணத்தையும் உருவி விட்டு… வீட்டில் குந்த வைத்திருக்கிறார்கள். 😁 😂 🤣
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- நகைச்சுவைக் காட்சிகள்
குளிர் கால பாவங்கள்..- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சிரிக்க மட்டும் வாங்க
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- சிரிக்கலாம் வாங்க
- தமிழகத்திலும் ஈழத்திலும் தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
.- பொங்கல் சிரிப்புகள்.
- கொஞ்சம் ரசிக்க
- 📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –
அநுர அரசில் அமைச்சுப் பதவியை ஏற்கத் தயாராகும் எம்.ஏ.சுமந்திரன் அநுர தலைமையிலான புதிய அரசில் அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் வந்தால் அதனைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார். யாழ். (Jaffna) ஊடக அமையத்தில் நேற்று (31.10.2024) நடத்திய ஊடக சந்திப்பின் போது அமைச்சுப் பதவிகள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், முன்னைய காலத்தில் நாங்கள் அமைச்சுப் பதவிகளை எடுக்கக்கூடாது, ஒரு நிலையான தீர்வு வருகின்ற வரைக்கும் மத்திய அரசில் நாங்கள் பங்குபெறக் கூடாது என்கின்ற கருத்துக்கள் நிலவின. கட்சியினுடைய கொள்கை ஆனால், அது கட்சியினுடைய கொள்கை என்று சொல்ல முடியாது. ஏனென்றால் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் அமைச்சுப் பதவிகளை எடுத்த ஒரு காலகட்டமும் இருந்திருக்கிறது. ஆகவே, அப்படியான ஒரு சூழ்நிலை வருகின்ற போது நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அந்த நேரத்தில் தான் ஒரு தீர்மானம் எடுக்க வேண்டும். எனினும் என்னுடைய சொந்த நிலைப்பாடு செல்லையா குமார சூரியரைப் போலவோ அல்லது லக்ஸ்மன் கதிர்காமரைப் போலவோ அல்லது டக்ளஸ் தேவானந்தாவைப் போலவோ தனி ஒரு அமைச்சராக அமைச்சரவையில் போய் சேருவதென்பது மக்களுக்கு நன்மை பயக்காது. அமைச்சுப் பதவி ஆனால், முருகேசு திருச்செல்வம் போல் கட்சி சார்பாக – கட்சியினுடைய தீர்மானமாக மக்களும் அதனை ஏற்றுக் கொண்டு அமைச்சரவையில் சேர்ந்தார். ஆனால், அமைச்சராக இருந்தும் நடைமுறைப்படுத்த முடியவில்லை எனத் தெரிந்த உடனேயே கட்சியின் கட்டளைப்படி அரைவாசிக் காலத்திலேயே அமைச்சுப் பதவியை அவர் பதவிவிலகல் செய்து வெளியே வந்தார். அது வித்தியாசமான ஒரு விடயம். எங்களுடைய மக்களையும் கட்சியையும் பிரபலப்படுத்தி இரண்டோ, மூன்று பேர் அமைச்சரவையில் சேர்ந்திருந்து செயற்பட்டு எங்களுக்கான தீர்வுகளைப் பெறுவதென்பதும் நாங்கள் கண்கொண்டும் பார்க்க மாட்டோம். அப்படியான தெரிவு எங்களுக்குக் கிடையாது என்ற நிலைப்பாட்டில் இருக்கக்கூடாது என எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran ) தெரிவித்துள்ளார். https://www.athirady.com/tamil-news/news/1740963.html- 📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –
என்னா ...சாரே ...நம்ம யாழ் சுமந்திரன் விசுவாசிகளுக்கு கோபம் வரப்போகுதே...பார்த்து..பார்த்து- என்னை அரசியலில் இருந்து ஓரங்கட்ட முடியாது – எஸ்.சிறிதரன்
பார் சிறி, நீங்கள் அரசாங்கம் காட்டும் இடத்தில் எல்லாம் கையோப்பம் இட்டால் ஏன் அரச கட்டுபாட்டில் உள்ள திணைக்களம் உங்களை விசாரிக்க போகிறது. பார் சிறி, இதை இப்போதும் விலக்காமல் மேற்பார்வை செய்வது அனுர அரசல்லவா? இது மட்டும் போதுமே - பிரதமருக்கு எதிராக வாக்களிக்க? இராணுவ அதிகாரிக்கு ஆதரவு கொடுத்தீர்களா இல்லையா? நீங்கள் உங்களுக்கும், குடும்பத்துக்கும் மட்டுமே உரியவர். நசுவல் கள்ளன், அமசடக்கி.- Yesterday
- 📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –
இவ்வளவு நடந்த பின்னும், ஆறஅமர்ந்து தமது தவறுகளை சீர்தூக்கி பார்த்து திருந்தும் எண்ணம் இல்லை, மக்களை குறைகூறுவதும் வெற்றியடைந்தோருக்கு சேறடிப்பதும் வறட்டு கௌரவம் பேசுவதும் அவர்களது முட்டாள்தனத்தை காட்டுகிறது. டக்கிலஸை கட்டியணைக்கிறார்கள், ஸ்ரீதரனுக்கு சேறடிக்கிறார்கள். பின், அனுரா கட்சி தங்கள் கட்சி நிலவரங்களை விமர்சிக்கிறார்களாம். இவர்களே தங்கள் கட்சிக்காரரை விமர்சித்தால் கேட்கிறவர்களும் விமர்சிக்கத்தானே செய்வார்கள், அல்லது உண்மையா என தேடத்தான் செய்வார்கள்.- என்னை அரசியலில் இருந்து ஓரங்கட்ட முடியாது – எஸ்.சிறிதரன்
புலவர் பாலபத்ர ஓணாண்டி இவரை ஒரு பெயர் சொல்லி அழைத்தவர் அந்த பெயர் மறந்துவிட்டது அதன் அர்த்தம் தந்திரமான கள்வர் இவர். நல்ல தந்திரமாக ஏமாற்றுவார் பிடிபடும் நிலைவந்தால் உணர்ச்சி கதைகள் பேசி பேய்காட்டடிவிடுவார். யுத்தம் முடிவடைந்ததில் இருந்து திட்டமிட்டு கோடீஸ்வரரானவர்- பனிப்போருக்குப் பிறகு 30 ஆண்டுகால நீடித்த சமத்துவமின்மைக்குப் பிறகு, முதலாளித்துவத்தின் அடுத்த பெரிய தோல்வியாக AI இருக்கலாம் என்று பிளாக்ராக்கின் பில்லியனர் தலைமை நிர்வாக அதிகாரி எச்சரிக்கிறார்.
பெரும்பான்மையான அடிமட்ட மக்களே இந்த சமூக சமத்திவமின்மையினை புரியாமல் ஆதரிக்கும் நிலை காணப்படுகிறது, பாதிப்பக்கள் காலத்திற்கேற்ப மாறுபடுகிறது.- பனிப்போருக்குப் பிறகு 30 ஆண்டுகால நீடித்த சமத்துவமின்மைக்குப் பிறகு, முதலாளித்துவத்தின் அடுத்த பெரிய தோல்வியாக AI இருக்கலாம் என்று பிளாக்ராக்கின் பில்லியனர் தலைமை நிர்வாக அதிகாரி எச்சரிக்கிறார்.
பனிப்போருக்குப் பிறகு 30 ஆண்டுகால நீடித்த சமத்துவமின்மைக்குப் பிறகு, முதலாளித்துவத்தின் அடுத்த பெரிய தோல்வியாக AI இருக்கலாம் என்று பிளாக்ராக்கின் பில்லியனர் தலைமை நிர்வாக அதிகாரி எச்சரிக்கிறார். உலக பொருளாதார மன்றத்தில் தனது தொடக்க உரையின் போது, பிளாக்ராக் தலைமை நிர்வாக அதிகாரி லாரி ஃபிங்க், பனிப்போரைப் போலவே, இன்றைய AI ஏற்றம் செல்வ இடைவெளியை அதிகரிக்க அச்சுறுத்துகிறது என்று கூறினார். · ஃபார்ச்சூன் · கிறிஸ்டியன் போக்ஸி/ப்ளூம்பெர்க்—கெட்டி இமேஜஸ் சாஷா ரோகல்பெர்க் புதன், ஜனவரி 21, 2026 காலை 4:51 GMT+11 ·6 நிமிடம் படித்தது இந்தக் கட்டுரையில் : ஸ்டாக்ஸ்டோரி சிறந்த தேர்வு எம்.எஸ்.எஃப்.டி. +3.69% பி.எல்.கே. -1.06% AMZN (அமெஸ்) +2.07% கூக் -0.60% சுவிட்சர்லாந்தின் டாவோஸில் உலகப் பொருளாதார மன்றத்தை பிளாக்ராக் தலைமை நிர்வாக அதிகாரி லாரி ஃபிங்க் தொடங்கி வைத்து, உலகளாவிய உயரடுக்கிற்கு ஒரு கடுமையான செய்தியை வழங்கினார்: AI இன் கட்டுப்பாடற்ற வளர்ச்சி உலகின் உழைக்கும் மற்றும் தொழில்முறை வர்க்கங்களை நசுக்கும் அபாயம் உள்ளது. அதற்கு அப்பால் , குளிர் யுத்தத்திற்குப் பிறகு 30 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு முதலாளித்துவத்தின் அடுத்த பெரிய தோல்வியாக இது இருக்கலாம் என்றும், இது சமூகத்தில் சராசரி மனிதனுக்கு வழங்கத் தவறிவிட்டது என்றும் அவர் எச்சரித்தார். செவ்வாயன்று ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் மற்றும் உலகளாவிய தலைவர்களின் கூட்டத்தில் தனது தொடக்க உரையில் , உலகின் மிகப்பெரிய சொத்து மேலாளரின் பில்லியனர் முதலாளி - பெரும்பாலும் வால் ஸ்ட்ரீட்டின் " பிரபஞ்சத்தின் மாஸ்டர்ஸ் " என்று அழைக்கப்படுகிறார் - அதிகாரத்தில் இருப்பவர்கள் AI இன் எதிர்காலத்தைப் பற்றி விவாதிக்கும்போது, அவர்கள் உலகின் பெரும்பான்மையை விட்டு வெளியேறும் அபாயம் உள்ளது, கடந்த தலைமுறையின் பெரும்பகுதியைப் போலவே. "பெர்லின் சுவர் வீழ்ச்சிக்குப் பிறகு, மனித வரலாற்றில் இதற்கு முன் எந்தக் காலத்தையும் விட அதிகமான செல்வம் உருவாக்கப்பட்டுள்ளது, ஆனால் முன்னேறிய பொருளாதாரங்களில், அந்த செல்வம் எந்தவொரு ஆரோக்கியமான சமூகமும் இறுதியில் நிலைநிறுத்தக்கூடியதை விட மிகக் குறுகிய மக்களுக்குச் சென்றுள்ளது" என்று ஃபிங்க் கூறினார். தனது வருடாந்திர பிளாக்ராக் கடிதங்கள் மற்றும் டாவோஸில் வருடாந்திர வருகைகளைப் பயன்படுத்தி, மிகவும் முற்போக்கான வகையான முதலாளித்துவத்திற்கான நிகழ்ச்சி நிரலை நிர்ணயித்த ஃபிங்க், சில சமயங்களில் ESG மற்றும் பங்குதாரர் முதலாளித்துவத்தின் முகமாக "விழித்தெழுந்தவர்" என்று கூடக் கூறியுள்ளார், 1990 களில் இருந்து மிகப்பெரிய செல்வ உருவாக்கத்தின் ஆதாயங்கள் சமமாகப் பகிரப்படவில்லை என்று எச்சரித்தார். மேலும் AI வளர்ச்சியையும் செயல்படுத்தலையும் முன்னோக்கி இயக்கும் முதலாளித்துவ சித்தாந்தம் ஊதியம் பெறும் பெரும்பான்மையினரின் இழப்பில் வரக்கூடும் என்று அவர் மேலும் கூறினார். "ஆரம்பகால ஆதாயங்கள் மாதிரிகளின் உரிமையாளர்கள், தரவுகளின் உரிமையாளர்கள் மற்றும் உள்கட்டமைப்பு உரிமையாளர்களுக்குப் பாயும்," என்று ஃபிங்க் கூறினார். "வெளிப்படையான கேள்வி: உலகமயமாக்கல் நீல காலர் தொழிலாளர்களுக்கு செய்தது போல், வெள்ளை காலர் தொழிலாளர்களுக்கு AI செய்தால் மற்ற அனைவருக்கும் என்ன நடக்கும்? இன்று நாம் அதை நேரடியாக எதிர்கொள்ள வேண்டும். இது எதிர்காலத்தைப் பற்றியது அல்ல. எதிர்காலம் இப்போதுதான்." முதலாளித்துவம் குறித்த ஃபிங்கின் கடந்தகால விமர்சனங்கள் உலகப் பொருளாதார மன்றத்தின் நிறுவனர் கிளாஸ் ஸ்வாப்பிற்குப் பதிலாக ஆகஸ்ட் 2025 இல் இடைக்கால இணைத் தலைவராக நியமிக்கப்பட்ட ஃபிங்க், முதலாளித்துவத்தை மறுவடிவமைப்பதை நீண்ட காலமாக ஆதரித்து வருகிறார், இது தன்னைப் போன்ற பெரிய சொத்து மேலாளர்களின் பொறுப்பாகக் கருதுகிறார். சுற்றுச்சூழல், சமூக மற்றும் பெருநிறுவன ஆளுகை (ESG) முதலீட்டின் முக்கியத்துவத்தைப் பற்றி ஃபிங்க் முன்னர் குரல் கொடுத்தார் , மேலும் காலநிலை மாற்றம் நிதியை மறுவடிவமைப்பதாகவும் , நெருக்கடியை நிவர்த்தி செய்ய நிர்வாகிகள் தங்கள் மூலதனத்தை மறுஒதுக்கீடு செய்ய வேண்டிய கட்டாயத்தை உருவாக்குவதாகவும் வாதிட்டார் . டாவோஸ் உச்சிமாநாட்டிற்கு முந்தைய நாள் வெளியிடப்பட்ட முதலீட்டாளர்களுக்கு 2022 ஆம் ஆண்டு எழுதிய கடிதத்தில் , பங்குதாரர்களுக்கு மட்டுமல்ல, ஊழியர்கள், நுகர்வோர் மற்றும் பொதுமக்களுக்கும் சேவை செய்ய ஒரு வணிகத்தின் ஆணையின் "பங்குதாரர் முதலாளித்துவத்தின்" மாதிரியை ஃபிங்க் வலியுறுத்தினார். டாவோஸில் ஃபிங்கின் புதிய முதன்மையானது, ஸ்க்வாப் இல்லாமல் முதன்முறையாக உள்ளது, உலக பொருளாதார மன்றத்தில் $1 மில்லியனுக்கும் அதிகமாக செலவழித்ததாக குற்றச்சாட்டுகள் , அத்துடன் பணியிட முறைகேடு மற்றும் ஆராய்ச்சி அறிக்கை கையாளுதல் ஆகியவற்றின் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து. நிறுவனங்கள் மற்றும் நாடுகளின் பெருகிய வளர்ச்சியை விட, அதன் ஊழியர்கள் மற்றும் குடிமக்களின் பொருளாதார நலனிலும் அக்கறை கொண்டிருப்பதைக் காட்டுவதன் மூலம், கூட்டம் அதன் சட்டபூர்வமான தன்மையை ஓரளவு நிரூபிக்க வேண்டியதன் அவசியத்தை பிளாக்ராக் தலைவர் வலியுறுத்தினார். "நாங்கள் இங்கு பேசுவதால் அதிகம் பாதிக்கப்பட்ட பலர் இந்த மாநாட்டிற்கு ஒருபோதும் வரமாட்டார்கள்," என்று ஃபிங்க் கூறினார். "அது இந்த மன்றத்தின் மைய பதற்றம். டாவோஸ் என்பது அனைவருக்கும் சொந்தமான ஒரு உலகத்தை வடிவமைக்க முயற்சிக்கும் ஒரு உயரடுக்கு கூட்டம்." 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பிளாக்ராக் சில ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கிய பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்க இலக்குகளில் பலவற்றைத் திரும்பப் பெறுவதாக அறிவித்த போதிலும், ஃபிங்க் மீண்டும் ஒருமுறை தனது கவனத்தைப் பயன்படுத்தி தலைவர்களை தங்கள் முதலாளித்துவ உணர்வுகளை மாற்ற அழைப்பு விடுத்துள்ளார், இந்த முறை அவர்கள் AI எதிர்காலத்தை எவ்வாறு கற்பனை செய்கிறார்கள் என்பதில். AI ஏற்றத்தின் விலை கடந்த ஆண்டு AI துறையில் ஒரு பெரிய வளர்ச்சிப் பெருக்கத்தை எட்டியது, மார்னிங்ஸ்டார் ஆய்வாளர்கள் அமேசான் , ஆல்பாபெட் மற்றும் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட 34 AI பங்குகளின் குழு 2025 ஆம் ஆண்டில் 50.8% அதிகரித்ததாகக் கண்டறிந்தனர் . AI நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கடந்த ஆண்டில் தங்கள் செல்வம் உயர்ந்ததைக் கண்டுள்ளனர், ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி , கடந்த ஆண்டு நிகர மதிப்பில் சராசரி அதிகரிப்பு 50 பணக்கார அமெரிக்கர்களில் கிட்டத்தட்ட 10 பில்லியன் டாலராக இருந்தது. உதாரணமாக, கூகிள் இணை நிறுவனர் லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோர் 2025 ஆம் ஆண்டில் முறையே 101 பில்லியன் டாலர்கள் மற்றும் 92 பில்லியன் டாலர்கள் பணக்காரர்களாக இருந்தனர். இருப்பினும், இந்த ஆதாயங்கள் பணக்காரர்களில் சிலருக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக பிளாக்ராக் தலைமை நிர்வாக அதிகாரி குறிப்பிட்டார், இது பணக்காரர்கள் பணக்காரர்களாகும் K-வடிவ பொருளாதாரத்தைக் குறிக்கிறது, அதே நேரத்தில் ஏழைகள் தொடர்ந்து போராடுகிறார்கள்: சுருக்கமாக, அமெரிக்கர்களில் கீழ் பாதி பேர் AI பந்தயத்தில் பணம் சம்பாதிக்கவில்லை. மின்சார விலைகளை நிர்ணயிக்கும் பயன்பாடுகளின் அரசியலில் ஃபிங்க் இறங்கவில்லை என்றாலும், AI ஏற்றத்தை இயக்கும் தரவு மையங்களை ஆதரிக்க ஏழைகள் உண்மையில் அதிக பில்களை செலுத்துகிறார்கள் என்று தெரிகிறது. பெடரல் ரிசர்வ் தரவுகளின்படி, ஏழை மக்கள்தொகை பங்குச் சந்தை செல்வத்தில் சுமார் 1% வைத்திருக்கிறது , அதாவது சுமார் 165 மில்லியன் மக்கள் $628 பில்லியன் பங்குகளை வைத்திருக்கிறார்கள். மாறாக, பணக்கார குடும்பங்களில் முதல் 1% பேர் கார்ப்பரேட் ஈக்விட்டிகளில் கிட்டத்தட்ட 50% வைத்திருக்கிறார்கள். பனிப்போருக்குப் பிந்தைய சகாப்தத்தை வெடிக்கும் சமத்துவமின்மையின் ஒன்றாக ஃபிங்க் வரைவது, 21 ஆம் நூற்றாண்டில் பெருகிய முறையில் பிரதான நீரோட்டமாக மாறிய ஒரு காலத்தில் ஒரு தனித்துவமான பார்வையின் முக்கிய நீரோட்டத்தைக் குறிக்கிறது. பிரான்சிஸ் ஃபுகுயாமாவின் தி எண்ட் ஆஃப் ஹிஸ்டரி அண்ட் தி லாஸ்ட் மேன் எழுதியது போல, கம்யூனிசத்தின் மீதான மேற்கத்திய வெற்றி முதலாளித்துவத்தின் இறுதி வெற்றியாகக் காணப்பட்டாலும், வரலாறு உண்மையில் தொடர்கிறது. " சீன குணாதிசயங்களுடன் " சோசலிசம் மற்றும் முதலாளித்துவத்தின் இணைப்பின் மூலம், சீனா ஒரு பொருளாதார வல்லரசாக முன்னோடியில்லாத வகையில் உயர்ந்துள்ளது, அதே போல் ஃபிங்க் குறிப்பிட்ட சமத்துவமின்மையும் கதையை சிக்கலாக்கியுள்ளது. பனிப்போருக்குப் பிந்தைய உலக ஒழுங்கின் உள் விமர்சகர் ஆண்ட்ரூ பேஸ்விச் ஆவார், அவர் ஒரு இராணுவ வீரரும் வரலாற்றாசிரியருமான ஆவார், அவர் 1989 இல் சோவியத் யூனியனின் சரிவை "உள் எரிப்பு இயந்திரத்திலிருந்து வேக வரம்பை அகற்றுவதற்கு ஒப்பானது" என்று ஒப்பிட்டார். பேஸ்விச்சின் 2020 புத்தகம் தி ஏஜ் ஆஃப் இல்லுஷன்ஸ்: ஹவ் அமெரிக்கா ஸ்க்வாண்டர்டு இட்ஸ் கோல்ட் வார் விக்டரி , செவ்வாயன்று ஃபிங்க் ஆதரவளித்த ஒரு காலத்தில் ஒரு முக்கிய கண்ணோட்டத்தின் ஆரம்பகால வெளிப்பாடாகும். தொழிலாளர்களுக்கு AI இன் வளர்ச்சி என்ன அர்த்தம் இதேபோல், தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சியில் யார் பங்கு வகிக்கிறார்கள் என்பதற்கு அப்பால், தொழிலாளர்கள் மீதான AI ஏற்றத்தின் அபாயங்கள் நீண்டுள்ளன. நோபல் பரிசு பெற்றவரும் "AI இன் பிதாமகன்" ஜெஃப்ரி ஹின்டன் முன்பு எச்சரித்தபடி, சிலருக்கு ஏற்படும் இந்த செல்வப் பெருக்கம் , தொழில்நுட்பத்தால் இடம்பெயர்ந்து போகும் வெள்ளை காலர் தொழிலாளர்களின் இழப்பில் வரும் . "உண்மையில் நடக்கப்போவது என்னவென்றால், பணக்காரர்கள் தொழிலாளர்களை மாற்றுவதற்கு AI ஐப் பயன்படுத்தப் போகிறார்கள்," என்று ஹின்டன் செப்டம்பரில் கூறினார். "இது மிகப்பெரிய வேலையின்மையையும் லாபத்தில் மிகப்பெரிய உயர்வையும் உருவாக்கப் போகிறது. இது ஒரு சிலரை மிகவும் பணக்காரர்களாகவும், பெரும்பாலான மக்களை ஏழைகளாகவும் மாற்றும். அது AI இன் தவறு அல்ல, அது முதலாளித்துவ அமைப்பு." சில நிறுவனங்கள் ஏற்கனவே லாபத்தை அதிகரிக்க பணியாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதில் சாய்ந்துள்ளன, அவற்றில் நிறுவன-மென்பொருள் நிறுவனமான இக்னைட் டெக் அடங்கும். ஃபார்ச்சூன் மதிப்பாய்வு செய்த புள்ளிவிவரங்களின்படி, 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தலைமை நிர்வாக அதிகாரி எரிக் வாகன் தனது ஊழியர்களில் கிட்டத்தட்ட 80% பேரை பணிநீக்கம் செய்தார் . தொழில்நுட்பத் துறையில் ஒரு திருப்புமுனையின் போது இந்த குறைப்புகள் நடந்ததாக வாகன் கூறினார், அங்கு AI ஐ திறம்பட ஏற்றுக்கொள்ளத் தவறியது ஒரு நிறுவனத்திற்கு ஆபத்தானது. பின்னர் அவர் அந்தப் பதவிகள் அனைத்திற்கும் மீண்டும் பணியமர்த்தப்பட்டார், இன்று மீண்டும் அதே தேர்வை எடுப்பார் என்று அவர் ஃபார்ச்சூனிடம் கூறினார் . ஃபிங்கின் கூற்றுப்படி, ஒரு வெள்ளை காலர் பணியாளர் தொகுப்பை நிலைநிறுத்துவது, உலகின் மிகவும் சக்திவாய்ந்த நபர்கள், இதுவரை தங்களுக்குப் பெரும்பாலும் பயனளிக்கும் முதலாளித்துவத்தின் விமர்சனங்களை மீறும் ஒரு செயல்படுத்தக்கூடிய திட்டத்தை உருவாக்குவதைப் பொறுத்தது. "நாளைய வேலைகள் பற்றிய சுருக்கங்களுடன், ஆனால் இந்த ஆதாயங்களில் பரந்த பங்கேற்புக்கான நம்பகமான திட்டத்துடன், இது ஒரு சோதனையாக இருக்கப் போகிறது," என்று ஃபிங்க் கூறினார். "முதலாளித்துவம், பார்வையாளர்கள் அதைப் பார்ப்பதற்குப் பதிலாக, அதிகமான மக்களை வளர்ச்சியின் உரிமையாளர்களாக மாற்றும் வகையில் உருவாகலாம்." https://finance.yahoo.com/news/blackrock-billionaire-ceo-warns-ai-175156035.html- என்னை அரசியலில் இருந்து ஓரங்கட்ட முடியாது – எஸ்.சிறிதரன்
@ஏராளன் இவ்வாறான அரசியல்வாதிகளை எப்படி மக்கள் தொடர்ந்தும் தெரிவு செய்கிறார்கள்?- ஐரோப்பிய ஆணைய ஆவணம் 2027 ஆம் ஆண்டுக்குள் உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ஓர்பன் கூறுகிறார்.
இந்த 1.5 ரீலியன் செலவீடு பற்றிய இந்த திட்டம் மாதிரி வரைபடிப்படையிலேயே உள்ளதாக கூறுகிறார்கள், 2040 வரையான செலவீடாக இருக்கும் என நம்புகிறேன் (சரியான தகவல்கள் வெளிவராதமையால் தகவல் பிழையாக இருக்கலாம்). அடுத்த 7 ஆண்டுகளுக்கு 186 பில்லியன் ஐரோப்பிய ஒன்றிய பாதீடு அதிகரிக்கலாம் என கருதுகிறார்கள், இதில் பெரும் பங்கினை ஜேர்மன், பிரான்ஸ் போன்ற நாடுகள்தான் பொறுப்பேற்க வேண்டிய நிலை உள்ளது. ஒருங்கினைப்பு நிதியினை தற்போது பெறும் சில நாடுகள் அதற்கான தகுதியினை இழக்கலாம். அதே போல் விவசாய மானியம் பெறும் நாடுகள் அதில் பெரும்பங்கினை உக்கிரேனுக்காக விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- நகைச்சுவைக் காட்சிகள்