24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
நல்ல சமாரியன் (அல்லது) யூதன்
யாழில் உள்ள பலர் யூத வெறுப்பாளர்கள் என்பதை நான் அறிவேன். அதன் பின்னால் உள்ள காரணங்களையும் நான் புரிந்து கொள்கிறேன். முரண் நகையாக, அதே ஆட்களில் சிலர் இலங்கை முஸ்லிம்கள் மீது பொது பல சேன செய்த அட்டூழியங்களை நான் எதிர்த்த போது என்னை பழித்தவர்களாக இருந்தனர். மேலும் சிலர் யசீதிகள் மீது ஐசில் செய்த அட்டூழியங்களை கண்டும் காணதவராய் இருந்தனர். ஐம்பதை தொடப்போகும் எனக்கு, வாழ்க்கை கற்றுத்தந்த முக்கிய பாடங்களில் ஒன்று, இந்த உலகில் நாம் அறச்சீற்றம் கொள்வது கூட தேர்ந்த எம் நிலைப்பாடுகளின் அடிப்படையில் மட்டுமே என்பதே. நான் கூட 2009 மேயில் அடைந்த மன உளைச்சல் போல் வேறு எந்த போருக்கும், மனித அழிவுக்கும் அடையவில்லை. ஆனால் உயிருக்கு ஆபத்து என வரும் போது இனம், மதம், நிறம் பார்க்காமல் உதவும், அப்படி உதவுபவர்களை தடக்கி விழுத்தும் எண்ணம் தவறு என்ற புரிதல், மனித தன்மை இன்னும் தமிழர்களிடம் எஞ்சி உள்ளது. அல்லது உள்ளது என நான் நம்ப விரும்புகிறேன். நிற்க, அண்மையில் யூத தன்னார்வ நிறுவனம் ஒன்றின் 5 முதலுதவி வண்டிகள் இலண்டனில் விசமிகளால் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த தன்னார்வ அம்பூலனன்ஸ் சேவை யூதர்களால் நடத்தப்பட்டாலும் அது எல்லோருக்கும்மானது. சில வருடங்கள் முன் வட மேற்கு இலண்டனில்…வீதியால் போகும் போது நடைபாதையில் ஒரு நடுத்தர வயது ஆசிய பெண் தடுக்கி விழுந்தார், என் கண்முன்னே. அது பிரெக்சிற்ரால் இலண்டனில் ஓட்டுனர் தட்டுப்பாடு இருந்த காலம். 999 ஆம்புலன்ஸ்சுக்கு அடித்தால், வண்டி அனுப்ப 3 மணி நேரம் எடுக்கும் என்றார்கள். அந்த பெண் வலியால் கதறி கொண்டு இருக்கிறார். அவரை விழுந்த இடத்தில் இருந்து அரக்க கூடாது அது உடைவுகளை மேலும் சிக்கலாக்கும் என்பது எனக்கு முதலுதவி பயிற்சி சொல்லி தந்த பாடம். விழுந்த காலமோ குளிர் மைனசில் இருக்கும் காலம். தரையில் கிடப்பதும் ஐஸ் கட்டியில் கிடப்பதும் ஒன்றேதான். மேலும் 999 க்கு அழைப்பை எடுக்கிறேன். அவர்களுக்கும் விபரீதம் விளங்கினாலும் எதுவும் செய்ய முடியாத நிலை. அப்போது இன்னொரு வெள்ளை இன பெண் நாயோடு வந்தார். என்ன என என்னிடம் விபரங்களை கேட்டு விட்டு, பட பட என தன் போனில் இருந்து அம்பூலனசுக்கு போன் அடித்தார். 5 நிமிடத்தில் அம்பூலனஸ் வந்தது. வீழ்ந்து கிடந்த ஆசிய பெண்ணை தூக்கி கொண்டு ஆஸ்பத்திரிக்கு போனது. யார் இவர்கள் என கேட்டேன், தனியார் அம்பூலன்ஸ் எண்டால் செலவை யார் ஏற்பது என எண்ணியபடியே… இது ஒரு யூத தன்னார்வ அமைப்பு. மத, இன அடையாளம் இன்றி யார் உதவி என அழைத்தாலும் வருவார்கள் என சொல்லி சென்றார் அந்த பெண்மணி. அந்த 5 அம்பூலன்ஸ்தான் அண்மையில் இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகளால் தீக்கிரையானது. (எதுவும் கற்பனை அல்ல)
-
அமெரிக்காவுடனான பாதுகாப்பு உறவை கைவிட்டு ரஷ்யா அல்லது சீனாவுடன் வளைகுடா நாடுகள் கைகோர்க்குமா?
👍 ஓம் சரியாக சொல்லியிருக்கிறார்
-
அமெரிக்கா பின்வாங்கினாலும், ஈரானுக்கு எதிரான போரை நிறுத்தக்கூடாது - இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர்
பெரிய அழிவை பார்க்காமல் விடமாட்டர்கள் போலுள்ளது☹️
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
- Today
-
டெக்சாஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய வெடிப்பு
ஏற்கனவே சீனாக்காரன் வேற அமெரிக்காவுக்கு மேலால பலூன் விட்டு நீளம் அகலம் பாத்திட்டான்....
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: “முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்” – கம்மன்பில சவால்
2019 ம் ஆண்டு நடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல், அதன்பின் இரண்டு முறை ஆட்சி மாற்றம் நடந்துள்ளன, கள்ளனும் சேர்ந்து தேடுதல் நடத்துவதுபோல் ஒவ்வொரு அரசும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி ஒப்புக்கு விசாரணை நடத்தின. அப்போதெல்லாம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியை வெளிப்படுத்தாமல் ஏன் வரும் 31 ம் திகதிவரை காத்திருக்கிறார்? சரி, அனுரா இவரை கைது செய்யப்போகிறார் என்றால், இன்றைக்கே அந்த சூத்திர தாரியை அறிவிக்கலாமே, ஏன் காலம் தாழ்த்துகிறார் இந்த உளறுவாயன்? யாரையாவது கைது செய்தால், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி விசாரித்தார்களா என்று ஏன் இவர் விசாரிக்கிறார், பதறுகிறார்? இவர், சானி அபயசேகர, ரவி செனவிரத்தின ஆகியோரை குற்றம் சாட்டிவிட்டால் உண்மையான குற்றவாளிகள் தப்பி விடலாமென நினைக்கிறார். அவர்களை ஏன் முந்தைய அரசுகள் விசாரித்திருக்கலாமே. இப்போ இவர் குற்றவாளியை வெளிப்படுத்த வேண்டும் அல்லது குற்றவாளியை மறைத்த குற்றத்திற்காக இவர் கைது செய்யப்படவேண்டும். நுணலும் தன் வாயால் கெடும். புலி புலி என்றவன் கதையாய் இவர் தன் வாயாலேயே மாட்டப்போகிறார்.
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
திருமாவுக்கு 8 சீட். படிந்தது பேரம்.
-
தம்பரும் , இரானும் யுத்த நிறுத்தத்திற்கு தயார்
49 வருசமாக, கருணா குரூப், நந்தி கடல் ஈரானில் சரி வரவில்லை. நீங்கள் சொல்வது போல் இன்னும் பிரச்சினையை தூண்டி, சமாதானம் பேசினோம் சரிவரவில்லை எனவே அழித்தொழிப்பதை தவிர வேறு வழியில்லை என அழிக்க திட்டமாக இருக்கலாம். அது அணுகுண்டா அல்லது ஏனைய நாடுகளை அணியில் சேர்க்கும் முயற்சியா தெரியவில்லை. ரஸ்யா ஈரானை பேச்சுக்கு போகுமாறு கேட்டுள்லதாம்.
-
தம்பரும் , இரானும் யுத்த நிறுத்தத்திற்கு தயார்
புரிந்தது புரியாதனவற்றிற்கு அப்பால் , உலக ஒழுங்குகளை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் ( பெயர் எப்படி இருந்தால் என்ன இலுமினாட்டியோ என்னவோ ) அவர்களுக்கு , கட்டுப்பாட்டு மையம் மாறிக்கொண்டிருக்கும் நிலைமை புரிந்து கொண்டிருக்கும் போலிருக்கு . 45 இல் அணுகுண்டு போட்டமாதிரி இப்பவும் செய்யாட்டி அது மாறத்தான் போகுது . எனவே கட்டுப்படுத்தப்பட்ட முறையில் போடத்தான் வேணும் . இவங்கள் முந்திக்கொண்டு விடுவாங்களோ எனும் நிலவரமும் இருக்கு . டோடல் சம் - இப்போதைக்கு ஜகா வாங்கி , "சமாதானப் பேச்சுவார்த்தை " போய் , சில "கருணா " & கொம்பனிசை உருவாக்கி , பின்னர் நந்திக்கடல் செல்வது . அது தான் பிளானா இருக்கும் . எல்லா இடமும் நந்திக்கடல் சரிவருமோ தெரியவில்லை பஸ்ஸுகளுக்குள்ள அவங்களே எத்தனை குண்டு வச்சாங்களோ , அவங்களுக்கு தான் தெரியும்
-
அமெரிக்காவுடனான பாதுகாப்பு உறவை கைவிட்டு ரஷ்யா அல்லது சீனாவுடன் வளைகுடா நாடுகள் கைகோர்க்குமா?
சீனாவை பற்றிய உங்கள் பார்வை சரியானதே. அதை விட மிக சரியானது உங்கள் “அமெரிக்காவே மேல்” என்ற கூற்று. இதை சொல்லப்போய்த்தான் யாழில் என்போன்றோருக்கு மேற்கின் அடி வருடி பட்டம் சூட்டப்பட்டது. உலக நியதி என்பது எப்போதும் வல்லான் வகுப்பதே சட்டம் என்பதே. குறிப்பாக அளவில், இராணுவ வல்லமையில் சிறிய ஆனால் வளத்தில் பெரிய யூ ஏ ஈ, கத்தார் போன்ற நாடுகள்… ஏதாவது ஒரு தூரத்தில் உள்ள வலிய நாட்டை நம்பி இருக்க வேண்டும், அல்லது ஈரான் போன்ற அருகில் இருக்கும், மதம் கலாச்சாரம், மொழியால் வேறுபட்ட நாட்டால் விழுங்கப்பட வேண்டும். 1945 ற்கு பின் இப்படியான சிறிய நாடுகள் அமெரிக்கா, ரஸ்யாவில் தங்கி இருந்தன…. 1990 க்கு பின் ரஸ்யாவில் தங்கி இருப்பது பயனற்றது என்றாகியது… 2026 இல் அமரிக்காவில் தங்கி இருப்பதும் அப்படியே என்ற நிலை வருகிறது… ஆகவே சிறிய நாடுகள் அடுத்த பாதுகாவலரை நாட வேண்டியதுதான். ரோமோ, இஸ்தான்புல்லோ, இலண்டனோ, மாஸ்கோவோ, வாசிங்டனோ, பேய்ஜிங்கோ…. உலகில் எப்போதும் ஒரு நாட்டாமை இருந்தே ஆகும். அந்த நாட்டாமைக்கு கப்பம் கட்டி விட்டு பிரதிபலனாக பாதுகாப்பை கோரும் சிறிய நாடுகளும் எப்போதும் இருக்கும். சந்தர்ப்பம் கிடைத்தால் இந்த சிறிய நாடுகளை விழுங்க துடிக்கும் அயல்நாடுகளும் இருக்கும். அதேபோல் இந்த அடிப்படை யதார்த்தம் புரியாமல், இப்போ மேற்கை எதிர்ப்பவர்கள் போல் அப்போ ரோமை, இஸ்தான்புல்லை, இலண்டனை எதிர்தவர்களும் இருந்தார்கள்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 28 அகவை - சுய ஆக்கங்கள்எனக்கே இப்ப நினைக்கப் பயமாய்ததான் இருக்கு. 🤣- கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 28 அகவை - சுய ஆக்கங்கள்போர்ச் சூழல் என்பதானாலேயே முகவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. மாற்றப்படி அவர்களே எல்லாம் செய்து தருவார்கள். எல்லா நிறுவனங்களும் பணத்தை பயணர்களுக்கு மீளக் கொடுக்கும்போது உந்த ஏஜெண்டுகள் பெரும்பகுதியை தாம் எடுத்துக்கொண்டு மிகுதி சொற்ப தொகையையே எமக்குத் தருவார்கள். ஆனால் நாம் காப்புறுதி செய்திருந்தால் அதிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். தேவை என்றால் கோட் என்ன கோட்டையையே மாற்றத்தான் வேண்டும்.😂- கருத்து படங்கள்
- கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 28 அகவை - சுய ஆக்கங்கள்நானும் சாதாரணமாக நேரடியாகத்தான் விமானச் சீட்டை வாங்குவது. இம்முறை அவர்களிடம் வாங்குவதைவிட ஏஜெண்ட்டிடம் மலிவாக இருந்ததனால் வாங்கியது. அத்தோடு ஏஜென்டிடம் வாங்கும்போது இருமடங்கு பொதிகள் கொண்டுசெல்லலாம்.- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நல்ல நல்ல ரொம்ப நல்ல நாடு ........ படம்: அல்லி பெற்ற பிள்ளை . ........ சீர்காழி கோவிந்தராஜன் ......! 😂- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : பூஜைக்கு வந்த மலரே வா பூமிக்கு வந்த நிலவே வா பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த பொன் வண்ண மேனி சிலையே வா பெண் : மலர் கொள்ள வந்த தலைவா வா மனம் கொள்ள வந்த இறைவா வா கையோடு கொண்டு தோளோடு சேர்த்து கண் மூட வந்த கலையே வா ஆண் : கோடை காலத்தின் நிழலே நிழலே கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா ஆடை கட்டிய ரதமே ரதமே அருகில் அருகில் நான் வரவா பெண் : அருகில் வந்தது உருகி நின்றது உறவு தந்தது முதலிரவு இருவர் காணவும் ஒருவராகவும் இரவில் வந்தது வெண்ணிலவு பெண் : மலர் கொள்ள வந்த தலைவா வா மனம் கொள்ள வந்த இறைவா வா கையோடு கொண்டு தோளோடு சேர்த்து கண் மூட வந்த கலையே வா ஆண் : செக்கச் சிவந்த இதழோ இதழோ பவளம் பவளம் செம்பவளம் தேனில் ஊறிய மொழியில் மொழியில் மலரும் மலரும் பூமலரும் பெண் : எண்ணி வந்தது கண்ணில் நின்றது என்னை வென்றது உன் முகமே இன்ப பூமியில் அன்பு மேடையில் என்றும் காதலர் காவியமே ......! --- பூஜைக்கு வந்த மலரே வா ---- தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை கண்டித்து மட்டக்களப்பில் போராட்டம்.!
தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை கண்டித்து மட்டக்களப்பில் போராட்டம்.! Vhg மார்ச் 23, 2026 தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை கண்டித்து போராட்டம்.! வடகிழக்கில் தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை கண்டித்து நேற்று (23.03.2026)ஆம் திகதி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடகிழக்கு பெண்கள் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்திபூங்காவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு காந்திபூங்காவிலிருந்து ஊர்வலமாக வந்து படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபிக்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மக்கள் தேவைகளுக்கு குரல்கொடுப்பதை விடுத்து இனங்களிடையே இழிவுபடுத்தும் கருத்துகளை சமூக ஊடகங்களிலும், ஊடகங்களிலும் தமிழ் அரசியல்வாதிகள் வெளிப்படுத்துவதை நிறுத்தவேண்டும் என இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன்போது பல்வேறு கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பிரதமர், சபாநாயகர், நாடாளுமன்ற செயலாளர், பெண்கள் விவகார அமைச்சர், மனித உரிமை ஆணைக்குழு ஆகியவற்றிற்கு அனுப்பவதற்கான மகஜர் ஒன்றும் வாசிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டின் சமூக ஒற்றுமை, ஜனநாயக பண்புகள் மற்றும் மக்கள் பாதுகாப்பை நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள அரசியல் பிரதிநிதிகள், சமீபத்தில் பொதுத் தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியிட்ட கருத்துக்கள் குறித்து எங்களது ஆழ்ந்த கவலையையும் கடுமையான கண்டனத்தையும் வலியுறுத்துகிறோம். ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் மனித மரியாதைக்கு எதிரான சொற்கள் பயன்படுத்தப்படுவது எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இத்தகைய வெறுப்பு தூண்டும் பேச்சுக்கள் சமூகங்களுக்கிடையேயான நம்பிக்கையையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைப்பதோடு மட்டுமல்லாமல், பிரதேச மற்றும் இன அடிப்படையிலான பிளவுகளை தீவிரப்படுத்துகின்றன. இது நாட்டின் அமைதிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் நேரடி அச்சுறுத்தலாகும். மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், மக்களின் பிரச்சினைகளை பொறுப்புடன், நாகரிகத்துடன் முன்வைத்து தீர்வுகளை உருவாக்க வேண்டியவர்கள். ஆனால், அதற்கு பதிலாக வெறுப்பு, இழிவு மற்றும் பிரிவினை உணர்வுகளை தூண்டும் கருத்துக்களை வெளியிடுவது அரசியல் பொறுப்பின்மையின் வெளிப்பாடாகும். இத்தகைய செயல்கள் ஜனநாயக மரபுகளுக்கும் அரசியல் நாகரிகத்திற்கும் நேரடி அவமதிப்பாகும். மேலும், அரசியல்வாதிகள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தும் போதெல்லாம் ஆதிக்க சிந்தனைகளை பிரதிபலிக்கும் வகையிலான மொழியையும் அணுகுமுறையையும் முற்றாக கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். மக்கள் மத்தியில் சமத்துவம், மரியாதை மற்றும் பரஸ்பர புரிதலை வளர்க்கும் உரைகள் மட்டுமே அரசியல் உரையாடலின் அடிப்படையாக அமைய வேண்டும். இவ்வாறான பொறுப்பின்மை கொண்ட பேச்சுக்கள் தொடர்ந்தால், சமூகத்தில் இனவாதம், பிரதேசவாதம் மற்றும் பகைமை மனப்பான்மை ஆழப்படுத்தப்படும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு மட்டுமல்லாமல், குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகக் குழுக்கள் மனஅழுத்தத்திற்கும் அச்சத்திற்கும் உள்ளாகின்றனர். எனவே, அனைத்து அரசியல் தலைமைகளும் உடனடியாக தங்களது பொது உரைகளில் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். இன, பிரதேச, மொழி அடிப்படையிலான இழிவுபடுத்தல், அவதூறு மற்றும் வெறுப்பு பேச்சுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறோம். அத்துடன், இனம், பிரதேசம், மொழி, சாதியம் மற்றும் ஆணாதிக்க சிந்தனை ஆகியவற்றின் அடிப்படையில் உருவாகும் அவதூறான மற்றும் வெறுக்கத்தக்க நடத்தைகளை கண்காணிக்கவும், அவற்றைத் தடுக்கவும், தண்டிக்கவும் கூடிய தெளிவான மற்றும் வலுவான நாடாளுமன்ற நடைமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். மேலும், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் தங்களது உள்கட்டமைப்பு கொள்கைகள் மற்றும் ஒழுக்க விதிகளை உருவாக்கும் போது, இவ்வாறான வெறுப்பு பேச்சுக்களைத் தடுக்கும் உறுதியான வழிகாட்டுதல்களை இணைத்துக் கொள்ள வேண்டும். இத்தகைய கொள்கை மாற்றங்கள், நிலையான சமூக மாற்றத்திற்கும் நீடித்த சமூக அமைதிக்கும் அடித்தளமாக அமையும். https://www.battinatham.com/2026/03/blog-post_501.html- இரகுவரனும் இரவிக்கை நாடாவும் .
பக்கத்தில "வீதியோரம் " இருக்கு அங்கும் உங்கள் நடைப்பயிற்சியை கொஞ்சம் செய்யலாமே .........! 😘- பெண்களே அறிமுகமில்லாத வாகனங்களில் பயணிப்பதைத் தவிருங்கள் - கிழக்கு மாகாண பெருங்குற்றவியல் தடுப்புப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி
பெண்களே அறிமுகமில்லாத வாகனங்களில் பயணிப்பதைத் தவிருங்கள் - கிழக்கு மாகாண பெருங்குற்றவியல் தடுப்புப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி By Batticaloa கிழக்கு மாகாணத்தில் பெண்களின் பயணப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், கிழக்கு மாகாண பெருங்குற்றவியல் தடுப்புப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் பல முக்கிய விழிப்புணர்வு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார். அண்மையில் இலங்கையை உலுக்கிய பாழ்ங்கிணறு படுகொலைச் சம்பவங்களைத் தொடர்ந்து, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு அவர் இந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளார். பொறுப்பதிகாரி மேனன் விடுத்துள்ள அறிவுறுத்தலில் குறிப்பிட்டுள்ளதாவது - ஆபரணங்கள்: பெண்கள் பொது இடங்களுக்குச் செல்லும் போது, பெறுமதிமிக்க தங்க நகைகளை அநாவசியமாக வெளிப்படையாக அணிவதைத் தவிர்க்க வேண்டும். பயணம்: முன்பின் தெரியாத முச்சக்கர வண்டிகள் (Auto) உள்ளிட்ட அறிமுகமில்லாத வாகனங்களில் ஏறுவதைத் தவிர்க்க வேண்டும். முடிந்தவரை அறிமுகமான வாகனங்களைப் பயன்படுத்தவும். குழுவாகச் செல்லுதல்: பெண்கள் தனித்துப் பயணிப்பதைத் தவிர்த்து, குழுவாகவோ அல்லது உறவினர்களுடனோ பயணங்களை மேற்கொள்வது பாதுகாப்பானது. உங்களது பயண விபரங்களை நெருங்கிய உறவினர்களிடம் முன்கூட்டியே பகிர்ந்து கொள்ளுங்கள். உணவு மற்றும் பானங்கள்: அந்நியர்கள் வழங்கும் உணவுப் பொருட்கள் அல்லது பானங்களை எக்காரணம் கொண்டும் உட்கொள்ள வேண்டாம். மயக்கமருந்து கொடுத்து நகைகளைப் பறிக்கும் சம்பவங்கள் குறித்து அதிக அவதானத்துடன் இருக்க வேண்டும். அவசர உதவி: ஏதேனும் ஆபத்தான அல்லது சந்தேகத்திற்கிடமான சூழல் ஏற்பட்டால், உடனடியாக 119 எனும் பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்தைத் தொடர்பு கொள்ளவும். நெருக்கடி கால நடைமுறைகள்: தற்போதைய எரிபொருள் நெருக்கடி மற்றும் பொருளாதாரச் சூழலைக் கருத்திற்கொண்டு அவர் மேலும் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். தனிப்பட்ட வாகனங்களைத் தவிர்த்துப் பொதுப் போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்துதல் சிறந்தது. ஒரே பயணத்தில் பல வேலைகளைத் திட்டமிட்டு முடிப்பதன் மூலமும், அத்தியாவசியப் பொருட்களை அருகிலுள்ள கடைகளில் கொள்வனவு செய்வதன் மூலமும் பயணங்களைக் குறைக்கலாம். முடிந்தவரை கல்வி வகுப்புகள் மற்றும் அலுவலகப் பணிகளை இணையதளம் (Online) வாயிலாக மேற்கொள்ள முயற்சிப்பது காலத்திற்குப் பொருத்தமானது. குறுகிய தூரங்களுக்கு நடைபயணம் அல்லது மிதிவண்டிகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டின் எரிபொருள் வளத்தைப் பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். https://www.battinews.com/2026/03/blog-post_270.html- யாழில். எரிபொருள் விநியோகம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்
யாழில். எரிபொருள் விநியோகம் தொடர்பில் விசேட கலந்துரையாடல் adminMarch 24, 2026 யாழ்ப்பாணத்தில் சீரான எரிபொருள் விநியோகம் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலக அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் சீரான எரிபொருள் விநியோகமானது சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஒரே சீரான பொறிமுறை ஊடக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக உரிய அறிவுறுத்தல்கள் பிரதேச செயலாளர்களுக்கு மாவட்ட செயலர் வழங்கினார். அத்துடன் அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொழும்பில் இருந்து எடுத்து வருதல், உள்ளூர் உற்பத்திப் பொருட்களை வெளி மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லுதல், விவசாயம் மீன்பிடி போன்ற அத்தியாவசிய தேவைப்பாடுகளுக்கு எரிபொருள் சீராக விநியோகத்தினை வழங்குதல் தொடர்பாகவும், மேலதிக எரிபொருள் விநியோகம் தொடர்பாக உரிய மேலதிக வழிகாட்டுதல்களைப் பெற்று வழங்குவது தொடர்பாகவும் மாவட்ட செயலரால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. இக் கலந்துரையாடலில் மேலதிக செயலர்கள், பிரதம கணக்காளர், பிரதம பொறியியலாளர், திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள் கலந்து கொண்டனர். https://globaltamilnews.net/2026/230940/- வலி. தெற்கில் பிரமாண்ட உள்ளக விளையாட்டரங்கு – அடுத்த வருட இறுதிக்குள் பணிகளை முடிக்க முயற்சி
வலி. தெற்கில் பிரமாண்ட உள்ளக விளையாட்டரங்கு – அடுத்த வருட இறுதிக்குள் பணிகளை முடிக்க முயற்சி adminMarch 24, 2026 வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் 120 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் வலிகாமம் தெற்கில் புதிய உள்ளக விளையாட்டரங்கு அமைக்கப்படவுள்ளதாக வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த திட்டம் தொடர்பாக பிரதேச செயலகத்தில் பணியாற்றும் விளையாட்டுத்துறை உத்தியோகஸ்தர்கள், பிரதேச விளையாட்டுத்துறையுடன் தொடர்புடையவர்கள் மற்றும் துறைசார் வல்லுநர்களுடன் கலந்துரையாடி முதல் கட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், ஏப்ரல் மாதம் நடுப்பகுதியில் கேள்வி கோரல்கள் (tenders) நடைபெறவுள்ளதாகவும், அதன் பின்னர் கட்டுமானப் பணிகள் ஆரம்பித்து அடுத்த ஆண்டுக்குள் திட்டத்தை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறினார். இந்த உள்ளக விளையாட்டரங்கில் மேசைப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், இறகுப்பந்தாட்டம் (Badminton) மற்றும் கரப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுகளுக்கான திடல்கள் அமைக்கப்படவுள்ளன. அதோடு கரம் மற்றும் சதுரங்கம் போன்ற விளையாட்டுகளுக்கான பயிற்சி நிலையங்களும் ஏற்படுத்தப்படவுள்ளன. மேலும், ஒரே நேரத்தில் சுமார் 1000 பார்வையாளர்கள் அமர்ந்து போட்டிகளை காணக்கூடிய பார்வையாளர் இருக்கைகளும் அமைக்கப்படவுள்ளன. இதனுடன் இணைந்து சிறுவர் பூங்கா மற்றும் நீச்சல் பயிற்சிக்கான நீச்சல் தடாகமும் அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். https://globaltamilnews.net/2026/230931/- மணல்காட்டில் சுற்றுலாவிகள் மீது தாக்குதல் மேற்கொண்ட காவல்துறையினா் - இருவர் வைத்தியசாலையில்
மணல்காட்டில் சுற்றுலாவிகள் மீது தாக்குதல் மேற்கொண்ட காவல்துறையினா் - இருவர் வைத்தியசாலையில் adminMarch 24, 2026 யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதியில் நடந்த ஒரு சர்ச்சையான சம்பவத்தில், காவல்துறைக் குழுவொன்று தமது உத்தியோகபூர்வ வாகனத்தில் சுற்றுலா சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. அங்கு அவர்கள் உணவு சமைத்து மது அருந்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, அதே இடத்திற்கு சுற்றுலா சென்ற மற்றொரு குழுவுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் பின்னர் கைக்கலப்பாக மாறி, அதில் இருவர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் ஈடுபட்டிருந்த காவல்துறையினா் மதுபோதையில் இருந்ததுடன், பொது இடத்தில் ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும், அவர்கள் உத்தியோகபூர்வ வாகனத்தை தனிப்பட்ட பயணத்திற்குப் பயன்படுத்தியதும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக காவல்துறை திணைக்கள மட்டத்தில் விரிவான விசாரணை நடத்தி, பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. https://globaltamilnews.net/2026/230924/- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
அது அதற்கு முந்திய பதிவில் நீங்கள் கள்ளனுக்கு முட்டு கொடுத்ததால் வந்த எதிர்வினை.- உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: “முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்” – கம்மன்பில சவால்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: “முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்” – கம்மன்பில சவால் Published By: Vishnu 24 Mar, 2026 | 05:19 AM (இராஜதுரை ஹஷான்) உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியை மார்ச் 31 ஆம் திகதி வெளிப்படுத்துவதை தடுக்கும் வகையில் மார்ச் 27 ஆம் திகதி என்னை கைது செய்ய அரசாங்கம் முயற்சிக்கிறது. முடிந்தால் கைது செய்யுங்கள் என்று அரசாங்கத்துக்கு சவால் விடுக்கிறேன். சானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோர் எவ்வாறு உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்துக்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்தார்கள் என்பதை மார்ச் 31 ஆம் திகதி ஆதாரத்துடன் வெளிப்படுத்துவேன் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியை மார்ச் 31 ஆம் திகதி பகிரங்கப்படுத்துவதற்கு உதய கம்மன்பில மார்ச் 27 ஆம் திகதி வெளியில் இருக்க வேண்டும் என்று அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார். அவ்வாறாயின் மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் என்னை கைது செய்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. நான் இதுவரை காலமும் எந்த மோசடி மற்றும் துர்நடத்தைகளிலும் ஈடுபடவில்லை.அரசுக்கு சொந்தமான ஒரு பேனை கூட வீட்டுக்கு கொண்டு செல்லவில்லை. ஆகவே முடிந்தால் மார்ச் 27 ஆம் திகதி என்னை கைது செய்யுங்கள் என்று அமைச்சரவை பேச்சாளருக்கு சவால்விடுக்கிறேன். இந்த அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளை நான் தொடர்ச்சியாக வெளிப்படுத்துகிறேன். என்னை கைது செய்வதற்கு இதுவரையில் 06 முறை முயற்சித்து தோல்வியடைந்த நிலையில் தற்போதும் அரசாங்கம் அதே முயற்சியை தொடர்கிறது. உரிய காரணிகள் ஏதும் இல்லாமல் என்னை கைது செய்வதற்கும் முயற்சிக்கப்படுகிறது. பிள்ளையான் கைது செய்யப்பட்டு ஒரு வருடகாலமாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். நீதிமன்றத்துக்கு கூட இதுவரையில் முன்னிலைப்படுத்தப்படவில்லை. தற்போது சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளார். அவரை பார்ப்பதற்கும், அவருக்கு வீட்டில் இருந்து உணவு கொண்டு வந்து கொடுப்பதற்கும் அவரது வீட்டாருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் 2019 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட இப்ராஹிமிற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ரவி செனவிரத்ன மற்றும் சானி அபேசேகர ஆகியோர் அரச மரியாதையளித்து கவனித்துள்ளார்கள்.2019 ஆம் ஆண்டு ரமழான் பண்டிகையின் போது இப்ராஹிமின் குடும்பத்தாரின் அனுசரணையுடன் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தடுப்புக் காவலில் இருந்த அனைவருக்கும் நட்சத்திர ஹோட்டலில் இருந்து பிரியாணி வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரியாணி விடயத்தை நான் செவிவழி கதையாக சொல்லவில்லை.நாமல் அத்தநாயக்க என்ற பொலிஸ் உத்தியோகததர் 2020.12.18 ஆம் திகதியன்று குண்டுத்தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி சத்தியமளித்து இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அறிக்கையில் '108' ஆவது பக்கத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பிரியாணி விடயத்தை மறுக்கும் ஆளும் தரப்பினர் அறிக்கையில் 108 ஆவது பக்கத்தை புரட்டிப்பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பயங்கரவாதிகளுக்கு அரச மரியாதை வழங்கப்படுகின்ற நிலையில், இராணுவ அதிகாரிகள் அரசியல் நோக்கங்களுக்காக சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள். நான் உள்ளே இருந்தாலும், வெளியில் இருந்தாலும் மார்ச் 31 ஆம் திகதி புத்தகம் வெளியாகும். குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி பகிரங்கப்படுத்தப்படுவார். இலங்கையில் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் புலனாய்வாளர்களுக்கு எவ்வித்திலும் சட்டபாதுகாப்பு கிடையாது. ' சொனிக், சொனிக்' என்பது இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்குள், இஸ்லாமிய அடிப்படைவாதியை போன்று சென்று தகவல் திரட்டிய புலனாய்வு அதிகாரியாவார்.Beaches & Islands சொனிக், சொனிக் என்பது யார் என்ற இரகசியத்தை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் தற்போதைய பிரதானி சானி அபேசேகர வெளிப்படுத்துகிறார். இந்த செயற்பாடு அமெரிக்காவில் 10 ஆண்டுகள் சிறைச்செல்லக் கூடிய குற்றமாகும்.ஆனால் இலங்கையில் சானி அபேசேகரவுக்கு பதிலாக, சொனிக், சொனிக் சிறைச்சென்றுள்ளார்.Beaches & Islands சானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோர் எவ்வாறு உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்துக்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்தார்கள் என்பதை மார்ச் 31 ஆம் திகதி ஆதாரத்துடன் வெளிப்படுத்துவேன். இதனால் தான் அரசாங்கம் தற்போது கலக்கமடைந்து என்மீது பழிசுமத்துகிறது என்றார். https://www.virakesari.lk/article/241783 - கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.