Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. மகிந்தவின் கையாளாக இருந்தவர் அரசதரப்பு சாட்சியாக மாறி இருப்பதால் இந்த கொலை பற்றி மேலதிக தகவல்களை வழங்கலாம்.
  3. சரி பொதிகள் வந்து சேர்ந்தனவா? உள்ளே இருந்த சாமான்கள் கருவாட்டு பொதிகள் எல்லாம் இருந்ததா? இவற்றையுமல்லவா எழுதியிருக்க வேண்டும்?
  4. இதில் என்ன சந்தேகம்? நேரடியாக தலைவர்மாருடனே தொடர்பு கொள்வது நல்லது தானே.
  5. உண்மையில் பேச்சுவார்த்தைக்காகவே தான் தாக்குதல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதா? நான் நினைத்தேன் படைக் கட்டுமானங்கள் வந்து சேரும்வரை இழுத்தடிக்கிறார் ரம் என்று.
  6. அமெரிக்கா இஸ்ரேல் மேற்கொள்ளும் எந்தப் போரையும் எந்த நடவடிக்கைகளையும் இவர்களால் மட்டுமல்ல எந்த அமைப்பாலும் கட்டுப்படுத்த முடியாது.
  7. Today
  8. தெரிந்துதான் நுளம்புத்தொல்லை அதிகரித்து விட்டது. அதை சொல்ல இந்தச்சபை அப்பப்போ கூடி பேசுகிறது.
  9. Yesterday
  10. ஓம் அறிவித்துள்ளார் 😂 செய்தி ஊடகங்களும் சிலரும் தவறான தகவல்கள் வெளியிட்டாலும் பேச்சுவார்த்தைகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கின்றது என்றும் சொல்லியுள்ளார்
  11. 2. கடன்கார கடவுள்கள் ------------------------------------ பணம் கொட்டும் தெய்வம் என்றால் திருப்பதியே உடனேயே நினைவில் வரும். அங்கு நாங்கள் தலைமுடியையும் கொடுத்து, காணிக்கையாக திருப்பதி ஏழுமலையானுக்கு ஏராளமாக அள்ளியும் கொடுக்கின்றோம். மனிதர்கள் தான் கடவுளுக்கு கொடுக்கின்றார்கள், அதை வேறு மனிதர்களே எடுக்கின்றார்கள் என்று நினைக்கின்றேன். இந்தியாவில் மொழிவாரியான மாநிலங்கள் உருவாகும் போது, சென்னையை தமிழ்நாடும், திருப்பதியை ஆந்திராவும் எடுத்துக் கொண்டதாகச் சொல்லுகின்றார்கள். சரியான முடிவை தமிழர்கள் அன்று எடுத்திருக்கின்றார்கள். சினிமா மோகம் அவ்வளவாக தமிழர்களை அன்று ஆட்டிப் படைக்கவில்லை போல. ஒரு காலத்தில் கொழும்பில் இருந்த மயூராபதி அம்மன் கோவிலில் வேண்டப்பட்ட ஒருவரே பொறுப்பில் இருந்தார். அங்கு அப்பொழுது போயிருக்கின்றேன். அவரே மிகவும் வசதியானவர். அந்தக் கோவிலும் வசதியாகவே இருந்தது. இந்தியர்களும், ஈழத் தமிழர்களும் பெருமளவில் புலம் பெயர்ந்ததால் உலகெங்கும் கோவில்கள் ஆரம்பிக்கப்பட்டன. பல செல்வாக்காக இருந்தன அல்லது அப்படியான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருந்தார்கள். 'வட அமெரிக்காவில் முதன் முதலாக பஞ்சமுக ஆஞ்சநேயர்...............' என்று கூட ஒரு விளம்பரத்துடன் ஒரு கோவில் இங்கே எனக்கு அருகில் ஆரம்பிக்கப்பட்டது. அந்த விளம்பரத்தின் பின்னேயே ஆஞ்சநேயருக்கு ஐந்து முகங்கள் இருப்பது எனக்கு தெரியவந்தது. அவருக்கு தனியாக கோவில் இருப்பது கூட அப்பொழுது தான் தெரியவந்தது. பின்னர் இலங்கையிலும் ஆஞ்சநேயர் கோவிலைக் கண்டேன். மனைவியின் மார்க்கம் பெரும்பாலும் முழுமுதற் கடவுள்களைச் சுற்றியே இருந்தபடியால், இப்படியான பல கோவில்களின் உள்ளே செல்லும் சந்தர்ப்பங்கள் அமையவில்லை. இலங்கைத் தமிழர்கள் இங்கு கணிசமான அளவில் அப்போதும் இருந்தார்கள், இப்போதும் இருக்கின்றார்கள். ஆனால் சிறு சிறு குழுக்களாகவே பழகி வருகின்றார்கள். படிப்பு,வசதி, அதனால் அவர்கள் நினைத்துக் கொள்ளும் அந்தஸ்து போன்ற காரணங்கள் இங்கு குழுக்கள் உருவாகுகின்றன என்று நினைக்கின்றேன். நாங்கள் இலங்கை தமிழர் ஆரம்பித்த கோவிலுக்கு போகாதது இங்கிருக்கும் பலருக்கு ஒரு விசயமாக இருக்கவில்லை. பலருக்கு என்னைத் தெரிந்திருக்கவே வழியில்லை. ஆனால் நாங்கள் பழகிக் கொண்டிருக்கும் கூட்டத்தில் அது ஒரு பேசுபொருள் ஆகியது. நாங்கள் நாலு பேர்கள் சேர்ந்தால் பொதுவாகவே எங்களிடம் பேசுவதற்கு புதிது புதிதாக விடயங்கள் இருப்பதில்லை. கூட்டத்தில் பலரும் ஒரே தொழிலைச் செய்பவர்களாக இருந்தால் அந்த தொழில் பற்றிப் பேசிக் கொள்வார்கள். ஒரு பல்கலைக்கழகத்தில் இருந்து வந்தவர்கள் என்றால் அந்தக் கதைகள் திரும்ப திரும்ப வரும். இப்படி ஒரு திசையில் மட்டுமே பேச்சுகள் இருக்கும். நடுவில் சம்பந்தம் இல்லாத ஒருவர் வந்து மாட்டுப்பட்டு விட்டால், அடுத்த தடவை அவர் நிச்சயம் வரமாட்டார். எங்கள் ஆட்களின் முயற்சிகளை ஆதரிக்கவில்லை என்பதே பொதுவான குற்றச்சாட்டு. எல்லா விடயங்களிலும் இதே குற்றச்சாட்டு உண்டு. ஆரம்பிக்கப்படும் முயற்சிகளின் அடிப்படை நோக்கத்திலேயே சந்தேகம் வந்தால், எப்படி அவற்றை ஆதரிக்கமுடியும்? முயற்சிகள் மிகவும் பழமையானவையும், தேய்ந்து போனவையாகவும் இருந்தாலும் ஆதரவு என்று மற்றவர்களும் போய் நிற்க முடியாதுதானே. ஒருவர் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கின்றார் என்றால், இன்று அதை எப்படி ஆதரிக்கமுடியும். இல்லை, இங்கிருந்து ஆரம்பித்து, மேலே போகலாம் என்று காரணம் சொல்லப்படுவதும் உண்டு. ஆனால் மீண்டும் மீண்டும் இங்கேயே ஆரம்பித்தால், இங்கேயே நின்று கொள்ளவே சாத்தியங்கள் உள்ளன. அப்படித்தான் நடந்து கொண்டும் இருக்கின்றன. நாங்கள் அங்கே அதிகமாக போகா விட்டாலும், அந்தக் கோவில் விளம்பரமாகவே நடந்தது. நல்ல நாட்கள், பெரு நாட்கள் என்று கொண்டாடப்பட்டன. சிலரின் வாழ்வில் அது ஒரு அங்கம் ஆகியது என்று தான் சொல்லவேண்டும். கலை வளர்க்கின்றோம், கலாச்சாரத்தை கடத்துகின்றோம் என்றும் நல்ல பக்க விளைவுகள் இருப்பதாகச் சொல்லிக் கொண்டார்கள். பின்னர் திடீரென ஒரு நாள், அந்தக் கோவில் பெரும் கடனில் மூழ்கியிருக்கின்றது என்றார்கள். திருப்பதி, மயூராபதி அளவுக்கு இல்லாவிட்டாலும், ஓரளவாவது இலாபம் அவர்களுக்கு கிடைக்கும் என்பதே என் எண்ணமாக இருந்தது. கடன் என்பது அதிர்ச்சியாகவே இருந்தது. கடவுளே கடனில் இருப்பார் என்பது நான் நினைத்திருக்காத ஒன்று. அவர் மீது இவர், இவர் மீது அவர் என்று குற்றச்சாட்டுகள் பொதுவெளியிலும் வைக்கப்பட்டது. சிலர் பிரிந்து போய் இன்னொரு கோவிலை ஆரம்பித்தனர். இந்தக் கோவிலும் சில நாட்கள் இயங்கி, இறுதியில் மூடப்பட்டது என்று நினைக்கின்றேன். ஐயர் இங்கிருந்து அங்கு போனார் அல்லது வேறு எங்கோ போனார் என்று ஞாபகம். அங்கே இருந்த கடவுளின் விக்கிரகங்கள் என்ன ஆயின என்று நான் யாரையும் கேட்கவில்லை. இரண்டாவது தடவை மின்னல் தாக்குவது போல இன்னொரு சம்பவம் நடந்தது. ஊரில் உள்ள கோவில் ஒன்றின் திறப்புகளை வங்கி எடுத்துச் சென்று விட்டதாக ஒரு தகவல் சொன்னார்கள். ஒரு மண்டபம் கட்ட வங்கியில் கடன் எடுத்திருந்ததகவும், அதை திருப்பிச் செலுத்தாததால் வங்கி இப்படிச் செய்தது என்றும் சொன்னார்கள். ஊரையே காக்கும் தெய்வம் என்று தான் ஊரில் எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்படியுமா நடக்கும் என்று ஆச்சரியமும், அதைவிட அதிக வருத்தமும் ஏற்பட்டது. சிவனே என்று அவர்களின் பாட்டுக்கு இருக்கின்ற கடவுள்களை மனிதர்கள் சும்மா இருக்க விடமாட்டார்கள் போல. பின்னர் இன்னும் பல இதே போன்ற கோவில் கதைகள் கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா இப்படி உலகெங்கும் இருந்து வந்தன. தமிழ்ப் படங்கள் சில வெற்றிப் படங்களாகவும், பலதும் தோல்விப் படங்களாகவும் ஆவது போல, கோவில்களும் வெற்றி தோல்விகளை சந்தித்து கொண்டிருக்கின்றன. ஆனாலும், அதே திரைக்கதைகளுடன், அதே உற்சாகத்துடன் புதிது புதிதாக ஆரம்பிக்கின்றார்கள், சினிமாக்களையும் கோவில்களையும். பொதுவாகவே மனிதர்களுக்கு மறதி அதிகம் என்பதாலும், எதையும் பின்னிருந்து முன்னாக ஒரு காலக் கோட்டில் இணைத்துப் பார்க்கும் பொறுமை இருப்பதில்லை என்பதாலும், இதுவரையிலும் இல்லாத புது முயற்சிகளாகவே இவை எப்போதும் பார்க்கப்படுகின்றன. (தொடரும்.................)
  12. உங்களின் வசதிப்படி போட்டியை நடாத்துங்கள். நான் நினைக்கிறேன், ஈஸ்டர் 4 நாட்கள் விடுமுறையுடன் சேர்த்து நீங்கள் எங்கேயோ குடும்பத்துடன் விடுமுறைக்கு செல்கிறீர்கள் போல 🤔
  13. கள்ளு குடிப்பது தமிழர்களது உணவு உரிமை என்று முழக்கமிட்ட சீமானா குடிப்பவர்கள் வாக்கு வேண்டாம் என்று சொன்னார் 😂
  14. இனி வரும் காலங்களில் அடுப்பு,நெருப்பு இல்லாத சமையல்களே அன்றாட வாழ்க்கைக்கு வரும் போல் இருக்கின்றது. செய்முறை இணைப்பிற்கு நன்றி புரட்சியர்👈👍
  15. அண்ணன் சொன்னது டாஸ்மார்க் சரக்கு அடிபவர்களுக்கு மட்டுமே. அண்ணன் வெளிநாட்டு றெமி மார்ரின், ஜொனி வோக்கர் அடிப்பவராச்சே. ஆகவே வாக்களிக்கலாம்.
  16. உக்ரேன் தன் எதிரியாக கருதும் ரஷ்யாவுடன் மட்டும் பேச்சுவார்த்தை நடத்தி போர் அனர்த்தங்களை தவிர்க்க வேண்டும்.இதற்குள் மூன்றாம் தரப்பு மூக்கை நுழைக்க விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.முக்கியமாக ஜேர்மனி , போலந்து,இங்கிலாந்து. உக்ரேன் போர் விட்டுக்கொடுப்புகளுடன் முடிவிற்கு வந்தால் உக்ரேனுக்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கும் நல்லதே. அத்துடன் ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் அனைத்தும் நீக்கப்பட வேண்டும். இது பொருளாதார ரீதியாக அனைத்து நாடுகளுக்கும் பெரும் பயனை தரும்.
  17. நான் பார்த்த அளவில் நுளம்பெண்ணை அடிக்கக்கூட இந்த அமைப்புக்கு அதிகாரம் இல்லை.
  18. என்னது......இவ்வளவு தூரம் மினைக்கெட்டு வந்தும் உங்களை சந்திக்கவில்லையா? வன்மையான கண்டனங்கள்.🤣 அமெரிக்காவுடன் சுங்கவரி முறுகல் தொடங்கியதும் முதலில் தென்னமெரிக்க நாடுகளுக்கு சென்று பல வர்த்தக ஒப்பத்தங்களை செய்ய தொடங்கிய பயணம் ஆசிய நாடுகள் அரபுநாடுகள் சீனா ஊடாக அவுஸ்ரேலியாவில் விரதம் முடித்திருக்கிறார்கள்😂.இதில் கொடுமை என்னவென்றால் அமெரிக்காவை மீறி எதையும் செய்ய மாட்டார்கள். அமெரிக்கா எந்த நாட்டின் மீது பொருளாதார தடைகளை போடுகின்றதோ அதை ஐரோப்பிய ஒன்றியமும் சின்ன அண்ணன் பெரீய பிரித்தானியாவும் கடைப்பிடிப்பார்கள்.😄 கண்டது கிண்டது எல்லாத்துக்கும் பொருளாதார போட்டு பழகின கூட்டம் இப்ப மாட்டுப்பட்டு இருப்பது ஈரானிடம். செம காமெடி இல்ல😁
  19. இல்லை. அவசரத்தில் குத்து போட மறந்து விட்டேன்😂. பிழைதான். #குத்துங்க எசமான் குத்துங்க😂 நேற்றும், இன்றும், நாளையும்… அதை ஐ நா என அழைத்தால் என்ன… நைனா என அழைத்தால் என்ன… இப்படி ஒரு அமைப்புக்கு என்றும் ஒரு அதிகாரமும் இருக்க போவதில்லை.
  20. Donald J. Trump @realDonaldTrump As per Iranian Government request, please let this statement serve to represent that I am pausing the period of Energy Plant destruction by 10 Days to Monday, April 6, 2026, at 8 P.M., Eastern Time. Talks are ongoing and, despite erroneous statements to the contrary by the Fake News Media, and others, they are going very well. Thank you for your attention to this matter! President DONALD J. TRUMP மேலும் 10 நாள்களுக்கு எரிபொருள் நிலை மீதான (ஈரானின்) தாக்குதலை நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப், அமெரிக்க சந்தை முடிவில் அறிவித்துள்ளார்.(Short squees?)
  21. நீங்களும் கூகிள் மொழி மாற்றி பயன்படுத்துவது போல உள்ளது.🤣 உ . மா . யு என ஏழுதலாமே ?
  22. இந்தச் சபையின் தலைவர் ஒரு அதிகாரமில்லாத தலைவர். இந்தச் சபையால் ஒரு பிரயோசனமும் இல்லை.எந்தப் போரையும் இவர்களால் நிறுத்த முடியாது.
  23. அமெரிக்கா, தவிர்ந்த மேற்கு நாடுகள் உக்கிரேனிய இராணுவ தொழினுட்பத்தில் கொண்டுள்ள நம்பிகையினையும், பல் துருவ உலக ஒழுங்கில் ஐரோப்பிய அமைப்பினுடன் கை கோர்க்கும் நாடுகளின் உக்கிரேன் முதன்மைத்துவம் மையப்படுத்தப்படுகிறது. அண்மையில் அவுஸ்ரேலியாவிற்கு கனடிய பிரதமர் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தலைவரின் வருகையும் அதன் பின்னணியில் தங்குதடையற்ற வர்த்தகம் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  24. நன்றி சோதரி சுமேரியரே! உங்கள் மகிழ்ச்சி என்னையும் பற்றிக்கொண்டது. உங்கள் தந்தை மதிப்புக்குரிய நாகலிங்கம் அவர்களின் இறுதி நிகழ்வில் உங்களைச் சந்தித்த பின்பு இப்போதுதான் தொடர்புக்கான பாதையை எமது யாழ்களம் வகுத்துத் தந்துள்ளது. களத்திற்கு நன்றிசெலுத்தி உங்களது பதிவையும் பார்த்தேன் தமிழ் அப்படியே இளமை மாறாது துள்ளி விளையாடுகிறது. உறவுகளும் வாசகர்களும் மகிழ உங்கள் உடல்நலமும் பாதுகாத்துத் தொடர்ந்து யாழில் எழுதுங்கள்.🙌
  25. அவசரத்துக்கு செய்யக்கூடிய சாம்பார் ..........! 😂
  26. உக்ரைனுக்கு நீண்ட தூரம் சென்று தாக்கும் டாரஸ் ஏவுகணைகளை வழங்குவதில் எந்தப் பயனும் இல்லை - ஜெர்மனியின் மெர்ஸ். போர்க்களத்தில் கீவ் அடைந்துள்ள தொழில்நுட்ப முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, உக்ரைனுக்கு நீண்ட தூரம் செல்லக்கூடிய டாரஸ் கிரூஸ் ஏவுகணைகளை வழங்க வேண்டிய அவசியம் இனி இல்லை என ஜெர்மன் பிரதமர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் கருதுகிறார். அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு, உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணைகளை வழங்குமாறு மெர்ஸ் ஜெர்மன் அரசாங்கத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியிருந்தார். இதேபோன்ற கோரிக்கைகள் கீவிலிருந்தும் வந்தன, ஆனால் பெர்லின் ஏவுகணைகளை வழங்க மறுத்துவிட்டது. நாடாளுமன்றத்தில் ஆற்றிய தனது உரையில், உக்ரைன் நீண்ட தூர ஆயுதங்களைத் தானே உற்பத்தி செய்வதால், உக்ரைனியப் படைகளுக்கு டாரஸ் ஏவுகணைகளை வழங்குவதில் இப்போது எந்தப் பயனும் இல்லை என்று மெர்ஸ் கூறினார். "ஜெர்மனி வழங்கக்கூடிய ஒப்பீட்டளவில் குறைவான எண்ணிக்கையிலான டாரஸ் குரூஸ் ஏவுகணைகளை விட உக்ரைனின் நீண்ட தூர ஆயுதங்கள் மிகவும் செயல்திறன் மிக்கவை" என்றும் அவர் குறிப்பிட்டார். தேர்தலுக்கு முன்பு கீவ்விற்கு நீண்ட தூர ஏவுகணைகளை வழங்குமாறு விடுத்த தனது அழைப்புகளையும் அவர் தெளிவுபடுத்தினார். அந்த நேரத்தில், உக்ரேனியர்களிடம் ஒப்படைக்கக்கூடிய அளவிற்கு, ஜெர்மன் ஆயுதப் படைகளிடம் (புண்டஸ்வேர்) போதுமான செயல்பாட்டு நிலையில் டாரஸ் ஏவுகணைகள் இருப்பதாகத் தான் கருதியதாக மெர்ஸ் கூறினார். https://www.pravda.com.ua/eng/news/2026/03/25/8027157/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.